Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

ஆபத்தான அஜினா மோட்டோ (AJINA MOTO)!

Posted on February 14, 2009July 2, 2021 by admin

டாக்டர் கங்கா

சாம்பார், மீன் குழம்பு, ஃபிரைடு ரைஸ் என்று எல்லா உணவுகளின் ருசியையும், வாசனையையும் அதிகரிக்கப் பயன்படும் ஒரு டேஸ்ட் மேக்கர் அஜினமோட்டோ.. இன்று ஹோட்டல் உணவு மட்டுமல்லாமல் வீடுகளுக்குள்ளும் தன் ராஜ்ஜியத்தை விரித்திருக்கிறது அஜினமோட்டோ.

தொடர்ந்து அஜினமோட்டோ எடுத்துக்கொண்டால் உடல் நலம் பாதிக்கப்படும் என்று சொல்லப்படுகின்றது. இந்த அஜினமோட்டோவால் உடம்புக்கு நமக்கு அப்படி என்னதான் பிரச்னை?

அதென்ன அஜினமோட்டோ?

உணவில் வாசனையை அதிகப்படுத்துவதற்காக நாம் பயன்படுத்தும் ஒருவித வேதிப்பொருள் தான் இந்த அஜினமோட்டோ (Ajinomoto). உங்களுக்கொன்று தெரியுமா? அந்தக் காலத்திலெல்லாம், žனர்களும் ஜப்பானியர்களும் உணவில் வாசனையை அதிகப்படுத்திக் கொள்ள ஒரு வகையான கடல்பாசியை உபயோகித்தார்கள்.

இந்தக் கடல் பாசியில் தான் வாசனையை மேம்படுத்த உதவும் மோனோஸோடியம் குளுட்டோமேட் அதாவது M.S.G. என்ற வேதிப்பொருள் இருப்பது தெரியவந்தது.

சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு அஜினமோட்டோ(Ajinomoto) என்ற கம்பெனி இதை வியாபார ரீதியாக தயாரிக்க ஆரம்பித்தது. நாளடைவில் அஜினமோட்டோ என்ற பெயரே இந்த வேதிப்பொருளுக்கும் நிலைத்து விட்டது.

மோனோ சோடியம் குளுட்டோமேட்

இந்த குளுட்டோமேட்டை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். நமது மூளை வளர்ச்சிக்குத் தேவையான குளுட்டோதயான் மற்றும் காமா அமினோ புட்ரிக் அமிலம் போன்றவற்றைத் தயாரிக்க இது உதவுகிறது. அதே போல் இது, மூளை நரம்புகள் வேலை செய்யவும் ஓரளவு உதவுகிறது.

அப்புறம் என்ன? அஜினமோட்டோவிலும் இந்த மோனோ சோடியம் குளுட்டோமேட் இருக்கிறது. அது உடலுக்கும் நல்லதுதானே என்கிறீர்களா? அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே… அதிக அளவில் இந்த எம்.எஸ்.ஜி. நம் உடலில் சேர்ந்தால் அது மூளையின் ஹைப்போ தலாமஸ் என்ற முக்கியமான ஒரு பகுதியைப் பாதித்து விடும்!

வியாபார ரீதியான அஜினமோட்டோவில் என்னவெல்லாம் இருக்கிறது?

இதில் 78% குளுடாமிக் அமிலமும் 22% சோடியமும் உள்ளது. இந்த குளுடோமேட் என்பது பால், பால் பொருள்கள், கறி, மீன் மற்றும் காய்கறிகளில் காணப்படுகின்ற ஒரு அமினோ அமிலம். நமது உடலில் கூட இந்த அமினோ அமிலம் இயற்கையாகவே உற்பத்தி செய்யப்படுகிறது.

MSG அதிகமானால் நம் உடலுக்கு என்னென்ன பிரச்னைகள் வரலாம்?

நமது உணவுப் பழக்க வழக்கங்களின் கட்டுப்பாடு நமது மூளையில் உள்ள ஹைபோ தாலமஸ் என்ற பகுதியில் உள்ளது.

MSGன் வாசனையால் ஹைபோதாலமஸ் தூண்டப்படுகிறது

இன்சுலின், அட்ரினலின் போன்றவை சுரப்பதையும் அதிகப்படுத்துகிறது.

இவை அதிகமாக உணவு சாப்பிடத் தூண்டுபவை.

எனவே அதிக உணவால் முதலில் நம் எடைதான் கூடும்!

மூளையில் சிரோடோனின் என்ற பொருளின் அளவு குறைந்து, தலைவலி, மனச்சோர்வு, டிப்ரஷன், உடல் சோர்வு, உணவுக்கு ஏங்குதல் போன்றவை ஏற்படுகிறது.

எம்.எஸ்.ஜி. நமது உணவில் உள்ள துத்தநாகம் நம் உடலில் சேர்வதைக்குறைக்கிறது. தூக்க குறைபாடு ஏற்படுகிறது.

தூக்கக் குறைவால்-மூளையில் டோபாமின் (Dopamine) அளவு குறைந்து, அதன் விளைவாக ஞாபக சக்தி குறைந்து, கவனக்குறைவும், திட்டமிட்டு செயல்படும் திறனும் குறைகிறது.

அதிகமான குளுடாமிக் அமிலம் (Glutamic acid) உயிரின் முக்கிய அணுவான DNA (Deoxyribonucleic acid) என்ற மூலப் பொருளையே பாதிக்கிறது என்கிறார்கள்.

இது உடனடியாக நடப்பதில்லை. பாதிப்பின் அறிகுறிகளும் உடனே வெளிப்படுவதில்லை. மெது மெதுவாக தொடர் பாதிப்பு ஏற்படுகிறது.

உடல் எடை அதிகரிப்பு, நடத்தை விபரீதங்கள், கவனக்குறைவு போன்றவை அதிகரிப்பதே இதன் சில அறிகுறிகள்.

சோதனைச் சாலை எலி போன்றவற்றை விட MSG ஏற்படுத்தும் தாக்கம் மனிதர்களுக்கு சுமார் 5-மடங்கு அதிகம்! அதிலும் கருவில் உள்ள சிசுக்களுக்கும் சிறு குழந்தைகளுக்கும் பாதிப்பு மிக அதிகம். தாயின் ரத்தம் மூலம் கருவில் உள்ள குழந்தையின் மூளையைத் தாக்கி மூளை வளர்ச்சியைப் பாதிக்கிறது.

தீவிரவாதச் செயல்கள், உணர்ச்சிகள் நிலையில்லாமை, கவனக் குறைவு ஆகியவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இதன் பாதிப்பு வேறுபடுகிறது.

பாதிக்கும் அளவு, நேரம் போன்றவையும் வேறுபடுகிறது. MSG கலந்த உணவைச் சாப்பிட்ட சில நிமிடங்கள் முதல் 2-3 நாட்களுக்குப் பிறகு கூட அறிகுறிகள் ஏற்படலாம்.

உடனே தெரியும் அறிகுறிகள் எனில், வயிற்று வலி, மூட்டு வலி, நாக்கு வீங்குதல் போன்றவை நரம்பு செல்களும் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றன.

அமெரிக்காவின் உணவு மருந்து கட்டுப்பாடு நிறுவனம் தினம் 3 கிராம் வரை MSG பாதுகாப்பானது என்று நிர்ணயித்துள்ளது. ஆனால் சிலருக்கு ஒரு கிராமுக்கு குறைவாக உணவில் சேர்த்தாலே நச்சு அறிகுறிகள் வெளிப்படுகின்றன.

தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரத்தைப் பார்த்து குழந்தைகள் ஆசையாக வாங்கி சாப்பிடும் ரெடிகுக் நூடுல்ஸ‘ல் மிகவும் அதிகமாக MSG உள்ளது. எனவே குழந்தைகள்தான் இதன் தாக்கத்திற்கு மறைமுகமாக ஆளாகிறார்கள்.

ஃபாஸ்ட் புட் (Fast Food) மையங்களில் விற்பனையாகும் அனைத்து உணவு வகைகளிலும் MSG உள்ளது. வாசனை மற்றும் ருசிக்காக அந்த உணவு சாப்பிடும் இன்றைய டீன் ஏஜ் பருவத்தினர் தங்களுக்கு ஏற்படப் போகும் ஆபத்தை உணராமல் ஆடிப்பாடிக் கொண்டு உண்டு களித்துக் கொண்டிருப்பதுதான் வேதனைக்குரிய விஷயம்.

எந்தெந்த பொருட்களில் எம்.எஸ்.ஜி. அதிகமிருக்கிறது?

பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள்

சோயா புரதத்தால் தயாரிக்கப்படும் பொருள்கள். (உதாரணத்திற்கு சோயா சாஸ்)

கார்ன் மால்ட், ஈஸ்ட், பார்லி மால்ட்.

சூப் பவுடர்கள்.

thanks regards : koodal.com

www.nidur.info

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 10 = 18

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb