யாரை அடிப்பது?
சுஜாதாவின் ஒரு நாவலில் நடுத்தர வயதுப் பெண்ணை ஒரு டீன் ஏஜ் சிறுவன் பாலியல் வன்முறை செய்கிறான். அவன் பிடிபட்டபிறகு அரசியல் செல்வாக்கினால் விடுதலையாகிறான்.
இதை சகித்துக் கொள்ள முடியாத போலீஸ் அதிகாரி, அந்தப் பெண்ணை அழைத்து லாக்கப்பில் இருக்கும் சிறுவனை விடுவிப்பதற்கு முன்னால் அவள் கையால் நாலு செருப்படியாவது தரும்படி சொல்கிறார்.
லாக்கப்புக்குள் சென்று அவனைப் பார்க்கும் அந்தப் பெண், அவனை அடிக்காமல் திரும்பி வந்துவிடுகிறார். ஏன் அடிக்கவில்லை என்று அதிகாரி கேட்கிறார்.
அந்தப் பெண் சொல்கிறார்- யாரை என்று அடிப்பது?
அந்தப் பையன் பார்த்த சினிமாக்களை எடுத்தவர்களையா?
அவன் படித்த கதைகளை எழுதியவர்களையா?
அந்தப் பையனை இப்படிப்பட்டவனாக ஆக்கிய இந்த சமூகத்தையா?
யாரை என்று அடிப்பது? என்று கேட்கிறார்.