நம்மையும் இந்த உலகத்தையும் ஒரே இறைவன் தான் படைத்துள்ளான். இந்த உலகம் தானாகவே தோன்றியுது என்று சொல்வது அறிவுக்குப் பொருந்தாத செயல். யாராலும் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. உலத்தில் எந்தப் பொருளும் தானாக உண்டாகிவிட முடியாது. அப்படி இருக்கும் போது இவ்வளவு பெரிய உலகமும் அதில் உள்ள கோள்களும் கிரகங்களும் தானாகவே உண்டாகிவிட்டன என்று சொல்வது உண்மைக்குப் மாற்றமானது.
இந்த உலகத்தையும் இதில் உள்ள பொருள்களையும் உண்டாக்கிய ஒரு சக்தி இருக்கின்றது. அது மாபெரும் சக்தி. அந்த சக்தியைத்தான் அந்த ஆற்றலைத்தான் நாம் ‘இறைவன்’ என்று சொல்கிறோம். இறைவன் என்ற சொல்லைத் தான் அரபி மொழியில் ‘அல்லாஹ்’ என்று சொல்கிறார்கள்.
இந்த உலகம் எப்படி உண்டாகியிருக்கும்? இந்த உலகத்தை யார் படைத்திருப்பார்கள்? என்ற கேள்வி உலகத்தில் வசிக்கின்ற எல்லா மனிதர்களுடையு உள்ளத்திலும் எழுகின்றது. இந்த கேள்விக்கான பதிலை உலகில் உள்ள எல்லா பொருள்களும் அவனுக்கு தருகின்றன.
உன்னையும் எங்களையும் படைத்தது ஒரே ஒரு இறைவன் தான்!’என்று அவை அனைத்தும் சொல்லிக் கொண்டுள்ளன. இந்தக் கேள்விக்கான பதிலை மனிதன் வெளியே தேட வேண்டிய அவசியமேயில்லை. அவனுடைய உடம்பிலேயே இதற்கான பதில் இருக்கின்றது. அவனுடைய உள்ளமே இந்தக் கேள்விக்கான பதிலைச் சொல்லிக் கொண்டு உள்ளது.
உலகத்தில் இருக்கின்ற எல்லா மனிதர்களும் நீதியை நேசிக்கிறார்கள். நேர்மையை விரும்புகிறார்கள். உண்மையே பேச வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். மனிதனுடைய மனம் இவற்றை எல்லாம் இயல்பாகவே விரும்புகின்றது. அதைப் போலத்தான் மனிதனுடைய மனாதில் ஓர் இறைவனை வணங்க வேண்டும் என்ற எண்ணமும் இருக்கின்றது. எல்லா மனிதர்களுடைய உள்ளமும் ‘ஒரே இறைவனையே வணங்கு’ என்று சொல்லிக் கொண்டே உள்ளது.
குழந்தைகளைப் பாருங்கள், அவர்கள் பொய் பேசுவதில்லை. யாரையும் ஏமாற்ற நினைப்பதில்லை. உண்மையான மனதனைப் பார்க்க ஆசைப்பட்டால் குழந்தைகளைத்தான் பார்க்க வேண்டும். ‘பிறக்கின்ற குழந்தைகள் அனைத்தும் முஸ்லிம்களாகவே பிறக்கின்றன. அந்தக் குழந்தைகளுடைய தாய் – தந்தையர்தாம் அக்குழந்தைகளை யூதர்களாகவோ கிறிஸ்துவர்களாகவோ மாற்றுகிறார்கள்’ என்று இறைவனின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
ஒரே இறைவனையே வணங்கு! நம்மையும் இந்த உலகத்தில் உள்ள அனைத்துப் பொருள்களையும் படைத்து பாதுகாத்து வருகின்ற ஒரே இறைவனை வணங்குவது நம் அனைவரின் மீதும் கடமையாகும். நம்மைப் படைத்ததோடு நின்று விடாமல் நம்முடைய வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் இறைவன் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறான். இந்த உலகத்தையும் இதில் உள்ள அனைத்துப் பொருள்களையும் நமக்குப் பணிவிடை செய்வதற்காகவே படைத்துள்ளான். அப்படிப் பட்ட இறைவனை ஒரே அல்லாஹ்வை வணங்கி வழிபடுவது நம்மீது கட்டாயக் கடமையாகும்.
இறைவனுக்கும் நமக்கும் உள்ள ஒப்பந்தம்நமக்கும் நம்மைப் படைத்த இறைவனுக்கும் ஓர் ஒப்பந்தம் உள்ளது. அது என்னவென்று தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளதா?படைத்தவன் என்ற அடிப்படையில் நம்மையும் மற்ற எல்லா ஜீவராசிகளையும் உணவு கொடுத்து காப்பாற்றுவது இறைவன் மீது கடமையாகும். அதை அவன் தனக்குத்தானே கடமையாக ஆக்கிக் கொண்டுள்ளான்.
அதைப் போலவே அவனை மட்டுமே வணங்குவதும் அவனைத் தவிர வேறு யாரையும் இறைவனாக நினைக்கதமல் இருப்பதும் நாம் அவனுக்கு செய்தாக வேண்யெ கடமையாகும்.
இறைவனுடைய வழிகாட்டுதல் மனிதனைப் படைத்ததோடு நின்றுவிடாமல் அவன் இந்த உலகத்தில் எப்படி வாழவேண்டும் என்றும் இறைவன் வழிகாட்டியுள்ளான். அந்த வழிகாட்டுதலைத் தான் நாம் ‘இஸ்லாம்’ என்று சொல்கிறோம். அவனையே இறைவனாக ஏற்றுக் கொண்டு அவன் காட்டிய வழிமுறைப்படி இந்த உலகத்தில் நாம் வாழவேண்டும். அந்த வழிகாட்டுதலைச் சொல்லி கொடுப்பதற்காக ஒவ்வொரு நாட்டுக்கும், ஒவ்வொரு ஊருக்கும், இறைவனுடைய தூதர்கள் வந்துள்ளார்கள். தம்மோடு இறைவனுடைய வேதத்தையும் அவர்கள் கொண்டு வந்துள்ளார்கள்.
தான் படைத்த மனிதன் வழிதவறிப் போய்விடக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு காலகட்டத்திலும் அல்லாஹ் தொடர்ந்து தன்னுடைய தூதர்களை அனுப்பிக் கொண்டே வந்துள்ளான். இறைவனுடைய மிக்பெரிய கருணையாகும் இது!
ஓர் அடிமை எப்படி இருக்கவேண்டும்?
நாம் அல்லாஹ்வால் படைக்கப்பட்டவர்கள். அவனுடைய அடிமைகள். அவன் என்ன சொல்கிறானோ அதனை அப்படியே செய்யக் கடமைப்பட்டவர்கள்.
துன்னுடைய எஜமானன் சொல்வதை அடிமை செய்ய வேண்டும். எஜமானனுக்கு எதிராக தன்னுடைய இஷ்டப்படி செயல்படுபவன் நல்ல விசுவாசமான அடிமையாக இருக்க முடியாத. அவன் துரோகியாகவே கருதப்படுவான். நுல்ல அடிமை தன்னுடைய எஜமானனுடைய மனம் கோணாமல் நடந்துகொள்வான். அவன் விரும்பிய படியே எல்லா காரியங்களையும் செய்வான். அவனை சந்தோஷப் படுத்துவதையே தன்னுடைய வாழ்க்கையின் லட்சியமாக வைத்திருப்பான்.
அடிமை என்பதை அரபி மொழியில் ‘அப்து’ என்று சொல்கிறார்கள். நாம் அல்லாஹ்வுடைய அடிமைகள். அதாவது ‘அப்துல்லாஹ்கள்’, அப்துல்லாஹ், அப்துர்ரஹ்மான் என்ற பெயர்கள் அல்லாஹ்வுக்கு மிகவும் பிடிக்கும் என்று இறைவனின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லியுள்ளார்கள்.
ஓர் அடிமை தன்னுடைய எஜமானனுக்கு கட்டுப்பட்டு விசுவாசமாக இருக்கவேண்டும். அதனை நாம் ‘அடிமைத்தனம்’ என்று சொல்கிறோம். அரபியில் அடிமைத்தனம் என்பதை ‘இபாதத்’ என்று சொல்கிறார்கள்.
இபாதத் என்றால் என்ன?
இபாதத் என்றால் அடிமைத் தனம். ஒரு மnமை எப்படி இருக்கவேண்டுமோ அப்படி நாம் இருந்தால் தான் உண்மையான அடிமைகளாக நம்மை அல்லாஹ் அங்கீகரிப்பான். நாளெல்லாம் பொழுதெல்லாம் அவனுக்கு கட்டுப்பட்டு அவன் சொன்னதைக் கேட்டு நடக்க வேண்டும். நாமாக நம்முடைய மனம் சொல்கிறபடி நடக்க முயற்சி செய்யக் மூடாது. வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் இறைவனுக்கு கட்டுப்பட்டு வாழ்பவன் தான் உண்மையான அடிமை. அவனிடம்தான் முழுமையான அடிமைத்தனம் இருக்கின்றது.
அல்லாஹ்வின் வேதமான குர்ஆனில் இது தான் சொல்லப்பட்டுள்ளது.
‘மனிதர்களையும், ஜின்களையும் என்னை ‘இபாதத்’ செய்வதற்காக அன்றி வேறு எதற்காகவும் படைக்கவில்லை’ (அல்குர் ஆன். 51:00)
இபாதத் என்பதை நாம் தவறாக விளங்கி வைத்துள்ளோம். தொழுவது, நோன்பு வைப்பது, ஜகாத் கொடுப்பது போன்றவற்றையே நாம் இபாதத் என்று நினைக்கிறோம். இந்த குர்ஆன் வசனத்தில் ‘இபாதத் செய்வதற்காகத்தான் நான் மனிதனை படைத்துள்ளேன்’ என்று இறைவன் சொல்கிறான். இந்த மாதிரி தொழுவது, நோன்பு வைப்பது மட்டும் தான் இபாதத் என்றால் இதை 24 மணிநேரமும் செய்து கொண்டிருக்க முடியுமா? அன்றாடம் 24 மணிநேரமும் தொழுது கொண்டிருக்க முடியுமா? வாரம் ஏழு நாளும் மாதம் முப்பது நாளும் நோன்பு வைக்க முடியுமா? சம்பாதிக்கின்ற பணத்தை எல்லாம் ஜகாத் கொடுக்கமுடியுமா? கண்டிப்பாக நம்மால் இவ்வாறு செய்ய முடியாது. அப்படி என்றால் இபாதத் என்று பொதுவாக நாம் நினைத்துக் கொண்டிருப்பது தவறு என்று புரிகிறது.
சரி, இபாதத் என்றால் என்னதான் பொருள்?
நம்மைப் படைத்த இறைவன் நாம் எப்படி வாழவேண்டும் என்று வழிகாட்டியுள்ளான் என்று முதலிலேயே பார்த்தோம். நாம் எப்படி தூங்குவது, எப்படி எழுவது, எப்படி கழிப்பிடம் செல்வது? எப்படி பல் துலக்குவது என்று தொடங்கி எப்படி சம்பாதிப்பது? எப்படி செலவு செய்வது? எப்படி தொழில் நடத்துவது? எப்படி குடும்பம் நடத்துவது என்று எல்லாவற்றையும் இறைவன் கற்றுக் கொடுத்துள்ளான்.
அதைச் சொல்லிக் கொடுக்கத்தான் இறைவனின் தூதர்கள் வந்துள்ளார்கள்.
நம்முடைய வாழ்க்கையில் அவற்றை அப்படியே பின்பற்ற வேண்டும். பின்பற்றினால் தான் நாம் உண்மையான அடிமைகளாக இருக்கமுடியும்.
ஷைத்தான் எனும் விரோதிமுதல் மனிதர் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் படைத்து அவருக்கு எல்லா விஷயங்களையும் கற்றுக் கொடுத்து சிறப்பித்த போது அதை சகித்துக் கொள்ள முடியாத ஷைத்தான் ஆதமுடைய விரோதியாக மாறினான். ஆதமுக்கு மட்டுமல்ல, முழு மனித குலத்திற்கே விரோதியாக மாறினான்.
‘உன்னுடைய அடியார்களை உனக்குக் கட்டுப் படாதவாகளாக ஆக்குவேன். அவர்களை வழிதவற வைப்பேன். உன்னுடைய கோபத்துக்கு ஆளாக்குவேன். நரகத்திற்கு கொண்டு போய் சேர்ப்பேன்!’ என்று அவன் அல்லாஹ்விடமே சவால் செய்தான். அதற்கான கால அவகாசத்தை அல்லாஹ்விடமே கேட்டு வாங்கிக் கொண்டான.
‘உங்களை நேர்வழியில் செல்லவிடாமல் ஷைத்தான் தடுப்பான். வழிதவற வைப்பான். எனக்கு மாறு செய்யுமாறு தூண்டுவான். அவனுடைய பேச்சைக் கேட்டு நடந்தால் வழிகெட்டுப் போவீர்கள். நரகத்திற்கு போய் விடுவீர்கள்’ என்று அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம்மை எச்சரித்துள்ளான்.
சிலைகள் பிறந்த கதை!
நம்மை எப்படியாவது வழிகெடுக்க வேண்டும், அல்லாஹ்சுடைய கோபத்திற்கு ஆளாக்க வேண்டும் என்பது தான் ஷைத்தானடைய குறிக்கோள். நேராக நம்மிடம் வந்து இஸ்லாமைப் பின்பற்றாதீர்கள்! அல்லாஹ்வுடைய அவனுடைய தூதர்களுடைய பேச்சைக் கேட்காதீர்கள்!’ என்று சொல்லமுடியுமா? சொன்னால் தான் நாம் கேட்போமா? கேட்க மாட்டோம் அல்லவா? அதற்காக ஷைத்தான் ஒரு திட்டம் தீட்டினான். மனிதர்களிடம் வந்து சுற்றி வளைத்துப் பேசினான்.
மனிதர்களில் சான்றோர்களாக வாழ்ந்த நல்லடியார்கள் இறந்தவுடன், பிற மனிதர்களிடம் வந்து அவர்களைப் பற்றி விசாரித்தான். அ’அவர்கள் அனைவரும் இறையடியார்கள். இறைவனுடைய அன்பையும் நெருக்கத்தையும் சம்பாதித்துக் கொண்ட தூயவர்கள்’ என்று அவர்கள் பதில் சொன்னார்கள்.அப்படியென்றால், நீங்கள் அத்தகைய நல்லவர்களை அடிக்கடி நினைவு கூர்ந்து கொண்டே இருக்கவேண்டும் அல்லவா?’ என்ற கேள்வியை எழுப்பினான்.ஆம், நாங்கள் அடிக்கடி அவர்களை நினைத்துப் பார்த்துக் கொள்கிறோம்’ என்றார்கள் அவர்கள்.உங்களுடைய பிள்ளைகளிடம் அவர்களைப்பற்றி சொல்வது இல்லையா?’ என்று கேள்விக்கு தாவினான்.கண்டிப்பாக சொல்கிறோம். அவர்களைப் பற்றி அவர்களுடைய வாழ்க்கையைப் பற்றி எடுத்துக் கூறி அவர்களைப் போன்றே வாழவேண்டும் என்று போதிக்கிறோம்’ என்றார்கள் மக்கள்.வெறுமனே வார்த்தைகளால் சொல்வதைக் காட்டிலும் அவர்களுடைய உருவங்களை சித்திரங்களாக தீட்டி வைத்துக் கொண்டு அவற்றை எடுத்துக் காட்டி கூறினால் இன்னும் நன்றாக இருக்கும் அல்லவா? என்று ஒரு ஆலோசனையை முன் வைத்தான்.
அவனுடைய ஆலோசனையை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். உருவப்படங்களை வரைந்து வைத்துக் கொண்டார்கள். அவற்றைச் சுட்டிக் காட்டி தம்முடைய பிள்ளைகளிடம் அந்த நல்லடியார்களைப் பற்றிக் கூறத் தொடங்கினார்கள்.
அந்த சித்திர சீலைகள் கொஞ்ச நாட்களுக்குள் சாயம் மாறிப் போய் அழியத் தொடங்கின. மறுபடியம் வரைய வேண்டியிருந்தது. இப்படி அடிக்கடி அவற்றை வரையவேண்டிய கட்டாயத்திற்கு மக்கள் தள்ளப் பட்டார்கள். ‘நான் ஒரு நல்ல ஆலோசனையை தருகிறேன்’ என்று சொல்லியவாறு ஷைத்தான் மறுபடியும் வந்து சேர்ந்தான். ‘சித்திரங்களுக்கு பதிலாக நீங்கள் ஏன் சிலைகளை ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது?’ என்று அற்புதமான ஆலோசனையை வழங்கினான். ‘அவை சீக்கிரத்தில் அழியாது. சாயம் போய் விடுமோ என்று கவலைப்படவேண்டியதில்லை. சிறிய அளவில் செய்து வீட்டிலேயே வைத்துக் கொள்ளலாம்’ என்று செய்முறையையும் சொல்லித் தந்தான். மதிகெட்ட மக்கள் அவனுடைய பேச்சை நம்பி சிலைகளைச் செய்தார்கள்.
கொஞ்ச நாள் கழித்து மறுபடியம் ‘வழிகாட்ட’ வந்தான். ‘வீடுகளில் வைப்பதைவிட சிலைகளைக் கொண்டுபோய் வீதிகளில் வைத்தால் இன்னும் சிறப்பு. அடிக்கடி அவற்றைப் பார்க்க முடியும். பார்க்கும் போதெல்லாம் அவர்களுடைய ஞாபகம் நெஞ்சில் நிழலாடும். அவர்களைப் போன்றே மாறவேண்டும் என்ற உத்வேகம் பிறக்கும்’ என்றான். அவ்வாறே மக்கள் அவற்றைக் கொண்டுபோய் வீதிகளில் வைத்தார்கள். அந்தச் சிலைகளுக்கு முன்னால் நின்று அவர்களுடைய அருமைபெருமைகளை தம்முடைய குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார்கள்.
சிலைகள் பிறந்த கதை இதுதான்! இப்படித்தான் மனிதர்களிடையே சிலைவணக்கம் பரவியது.
நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களடைய காலத்தில் நடந்தது இது. அந்த மக்களை வழிப்படுத்த நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் தன்னுடைய தூதராக அனுப்பி வைத்தான்.
நம்முடைய நாட்டில் இன்றும் இப்படிப்பட்ட காட்சிகளைப் பார்க்க முடியும். சுpலைகளை வணங்காதே என்று சொன்ன பெரியாருக்கும் சிலை உள்ளது. பிறந்த நாள், இறந்த நாளின் போது பூக்களைச் சாற்றி ‘அஞ்சலியும்’ செலுத்தப்படுகின்றது.
இஸ்லாமும் ஜாஹிலிய்யத்தும்
மனிதன் உலகத்தில் இரண்டு விதங்களில் வாழலாம். ஒன்று இறைவனுக்கு கட்டுப்பட்டு வாழ்வது. அதற்குப் பெயர் இஸ்லாம். இன்னொன்று இறைவனுக்கு கட்டுப்படாமல் தன்னுடைய இஷ்டப்படி வாழ்வது. அதற்குப் பெயர் ஜாஹிலிய்யத்.
இறைவனுக்கு கட்டுப்பட்டு வாழ்வதுதான் நேர்வழி. ஆதன் மூலம் சொர்க்கம் கிடைக்கும். கட்டுப்பட்டு வாழாவிட்டால் வழிகேட்டுப் பாதையில் சென்றால் நரகம் கிடைக்கும்.
நேர்வழிக்கு வாருங்கள் என்றுதான் அனைத்து இறைத்தூதர்களும் அழைத்துள்ளார்கள். அவ்வழியில் போகாதே என்று ஷைத்தான் தடுத்துக் கொண்டே உள்ளான்.
நேர்வழியின் பக்கம் அழைப்பது முக்ஷமின்களுடைய வேலைஸ்ரீ அவ்வழியில் இருந்து விலக்குவது ஷைத்தான்களுடைய வேலை!
ஒன்றா, இரண்டா சிலைகள்மனிதனை நேர்வழியில் செல்லவிடக்கூடாது என்பதுதான் ஷைத்தானுடைய நோக்கம். எப்படியாவது எதையாவது செய்து மனிதர்களை நேர்வழியிலிருந்து வெளியே இழுத்துவிட வேண்டும் என்று அவன் கடும் முயற்சி செய்கிறான்.
மனிதர்கள் சிலைகளை வணங்குமாறு ஷைத்தான் செய்தான் என்று பார்த்தோம். எப்போதும் ஒரே சிலையை வணங்கச் செய்ய முடியுமா? வுத், ஸுவாக்ஷ,யஊஸ் என்பன நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் காலத்தில் மக்கள் வணங்கிய சிலைகளின் பெயர்கள். ஆந்த மக்கள் எல்லாம் அழிக்கப்பட்ட உடன் அந்த சிலைகளும் அழிந்துவிட்டன. கொஞ்சகாலம் கழித்து வேறு பகுதிகளில் வசித்த மக்களிடம் போய் ஷைத்தான் சிலைகளை அறிமுகப்படுத்தினான். அவை வெறு சிலைகள்.
இந்த குறிபிபட்ட சிலைகளையே மக்கள் வணங்கவேண்டும் என்படிதல்லாம் ஷைத்தானுடைய நோக்கம் கிடையாது. மனிதர்கள் அல்லாஹ்வுடைய வழியில் போகக் கூடாது என்பது ஒன்றுதான் ஷைத்தானுடைய நோக்கம்.
இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் காலத்தில் மக்கள் ‘நன்னார்’ என்ற சிலையை வணங்கினார்கள். முஹம்மது நபி ஸல்லலாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய காலத்தில் லாத், உஸ்ஸா, மனாத் போன்ற சிலைகளை வணங்கினார்கள். இந்தியாவில் சிவனையும், விஷ்ணுவையும் வணங்கினார்கள். அப்புறம் காளியை வணங்கினார்கள். அப்புறம் சிவனுக்கு கணேஷ் என்ற மகன் பிறந்தான். அவனை வணங்கினார்கள். தமிழ்நாட்டில் உள்ள சிவனுக்கு முருகன் என்ற மகனும் பிறந்தான். அவன் பிறந்ததே வடநாட்டில் உள்ளவர்களுக்கு தெரியாது. வேனை வணங்கினார்கள். சிலைகளை வணங்காதீர்கள். அது மூடநம்பிக்கை என்று பெரியார் ஈ.வெ.ராமசாமி பிரச்சாரம் செய்தார். அவருக்கும் மக்கள் சிலை வைத்தார்கள். கொஞ்சநாளில் அவருடைய பிறந்த நாளன்று மாலைகளை சூட்டத் தொடங்கினார்கள். இன்னும் கொஞ்ச நாளில் அவரையும் வணங்குவார்கள்.
நேர்வழி எது? வழி கேடு எது? என்பதை முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு முறை வரைபடம் ஒன்றை வரைந்து காட்டி விளக்கினார்கள். நேர்க்கோடு ஒன்றை வரைந்தார்கள். அதன் இரண்டு பக்கங்களிலும் சிறுசிறு குறுக்குக் கோடுகளை வரைந்தார்கள். நேர்க்கோடு என்பது நேர்வழி. இறைவனின் பக்கம் கொண்டு போய்ச் சேர்க்கின்ற வழி. குறுக்குக் கோடுகள் அனைத்தும் நேர்வழியை விட்டும் வெளியே இழுக்கின்ற ஷைத்தானுடைய முட்டுச் சந்துகள்.
இறைவனும் இறைத்தூதர்களும் காட்டிய முறைப்படி சற்றும் மாறாமல் இங்கும், அங்கும் விலகிவிடாமல் நேர் இலக்கில் தொடர்ந்து செல்வது தான் நேர்வழி. இது சொர்க்கத்திற்கு போய்ச் சேருகின்றது. இந்த வழியில் செல்லவிடாமல் தடுப்பது தான் ஷைத்தானுடைய வேலை. நீங்கள் பயணத்தை ஆரம்பித்த இடத்திலிருந்து உங்களை வழிகெடுக்க அவன் முயற்சிக்கிறான்.
ஒரு சிலரை ஆரம்ப கட்டத்திலேயே வழி கெடுத்து விடுகிறான். கொஞ்சம் பேரை சற்று தூரம் போகவிட்டு வழிகெடுக்கிறான். இன்னும் கொஞ்சம் பேர் உறுதியோடு பயணத்தைத் தொடருகிறார்கள். ரொம்ப தூரம் போனபிறகு அதையும் இதையும் செய்து அவர்களை வழிகெடுத்து விடுகிறான். இன்னும் கொஞ்சம் பேரோ கடைசிவரை வெற்றிகரமாக போய் விடுகிறார்கள். எல்லையைத் தொட்டு விடுவார்கள் என்ற நிலைமையில் அவர்களை ஷைத்தான் வென்றுவிடுகிறான்.
சிலைகளின் நவீன வடிவங்கள்
‘அல்லாஹ்வை வணங்காதே, சிலைகளை வணங்கு,’ என்று சொன்ன போது அந்தக் கால மக்கள் கேட்டார்கள். அல்லாஹ்வை விட்டுவிட்டு சிலைகளை வணங்கத் தொடங்கினார்கள். இந்தக் காலத்தில் போய் முருகனை வணங்கு. முனியம்மாவை வணங்கு என்று சொன்னால் யாராவது வணங்குவார்கள? கல்லால் ஆன சிலைகளை வணங்குவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை ஏறக்குறைய எல்லா மக்களும் உணர்ந்து இருக்கிறார்கள். சிலைகளை தெய்வமாக நினைத்து வணங்கி வருகின்ற இந்துக்கள் கூட அவற்றின் மீது நம்பிக்கை வைப்பதில்லை. தங்களுக்கு ஒரு கஷ்டம் வந்துவிட்டால் சிலைகளை கைவிட்டு விடுகிறார்கள்.
இருபதாம் நூற்றாண்டில் விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்து மனிதனுடைய அறிவு பல்வேறு விஷயங்களைப் பற்றியும் சிந்திக்கத் தொடங்கிவிட்டது. காக்கின்ற தெய்வம் முருகன் என்றால் அவன் உலக மக்கள் எல்லோரையும் காக்க வேண்டுமில்லையா? பழனியிலேயே குடி யிருந்தால் எப்படி? விஷ்ணு பகவான் அமெரிக்காவில் ஏன் அவதாரம் எடுக்கவில்லை? அங்குள்ள மக்களை எல்லாம் பிரம்மா படைக்கவில்லை? வேறு ஏதேனும் கடவுள் அவர்களை படைத்திருக்கிறாரா? அப்படி என்றால் அவர் யார்? என்றெல்லாம் இன்றைய இந்துக்கள் யோசிக்கிறார்கள்.
இப்படிப்பட்ட மக்களிடம் போய் ‘சிலைகளை வணங்குங்கள்!’ என்று ஷைத்தானால் சொல்ல முடியுமா? முடியாதல்லவா? ஆகையால், காலத்திற்கு ஏற்ற மாதிரி ஷைத்தான் வேறு ஒரு புதிய கொள்கையைக் கண்டு பிடித்தான்.
உலகத்தையும் உலகத்தில் வசிக்கின்ற ஜீவராசிகளையும் யாருமே படைக்கவில்லை!’ என்பதே அந்தக் கொள்கை! கடவுள் மறுப்புக் கொள்கை. சிலைகளை வணங்குவது மடத்தனம். அறியாமை என்று சொன்னவர்களும் அதைத் தீவரமாக எதிர்த்தவர்களும் கடவைள மறுத்தார்கள், நிராகரித்தார்கள். கடவுளைப் படைத்தவன் அயோக்கியன்’ என்றெல்லாம் பிரச்சாரம் செய்தார்கள். இந்த உலகத்தை யாருமே படைக்கவில்லை. அது தானாகவே தோன்றி விட்டது. உலகத்தில் உள்ள உயிரினங்களும், ஜீராசிகளும் சுயமாகத் தோன்றி படிப்படியாக வளர்ச்சி பெற்று பரிணாமம் அடைந்து மனிதன் போன்ற உயர்ந்த நிலையை அடைந்துள்ளன. கடவுளை நம்புவது பைத்தியக்காரத்தனம்!’ என்று கடவுள் மறுப்புக் கொள்கைக்காரர்கள் தொடர்ந்து பிரச்சாரம் செய்கிறார்கள்.
கடவுளை நம்பினால் வீட்டோடு வைத்துக் கொள்’கடவுள் நம்மைப் படைக்கவில்லை என்றாகிவட்ட பிறகு, கடவுளுடைய வேதம், கடவுளுடைய தூதர் என்று சொல்லி பிதற்றிக் கொண்ழருப்பதில் எந்த அர்த்தமும் கிடையாது. நாங்கள் சொல்வதை நீங்கள் நம்பவில்லை என்றால், நீ;ங்கள் வணங்கும் கடவுளை உங்களுடைய வீட்டோடு வைத்துக் கொள்ளுங்கள்! வீதிக்கு கொண்டு வராதீர்கள்! கடவுளுடைய சட்டம், கட வுளுடைய கட்டுப்பாடு என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்!’ எனறு அவர்கள் சொல்கிறார்கள். அதாவது ஷைத்தான் சொல்கிறான்.
விஞ்ஞானம் வளர்ந்துவிட்ட இந்தக் காலத்தில் கடவுள் மறுப்புக் கொள்கையை வளர்த்தால் தான் இறைவனுடைய வழியில் செல்லாமல் மக்களைத் தடுக்கமுடியும் என்பது ஷைத்தானுக்கு நன்றாகத் தெரியும். ஆகையால், இந்த இறை மறுப்புக் கொள்கைகளைப் பயன்படுத்தி கடவுள் நம்பிக்கை அற்றவர்களாக மக்களை ஆக்குவதில் அவன் பெருமளவு வெற்றி பெற்றுள்ளான் என்றுதான் சொல்ல வேண்டும்.
அப்படியும் மக்கள் கடவுள் நம்பிக்கையை கைவிடவில்லை என்றால், அதற்கும் ஒரு மாற்று ஏற்பாடு முன்வைக்கப்படுகிறது. ‘கடவுள் நம்பிக்கை என்பது தனிபநர் சார்ந்த விஷயம்! நீங்கள் கடவைள நம்புகிறீர்கள் என்றால், உங்களது நம்பிக்கையை வீட்டோடு வைத்துக் கொள்ளுங்கள். வீதிக்கு கொண்டு வராதீர்கள். மக்களோடான கூட்டு வாழ்க்கையில் சமூக வாழ்க்கையில் கடவுள் நம்பிக்கை கடைப்பிடிக்கப்படவேண்டும் என்று விரும்பாதீர்கள். சமூகம், அரசியல், பொருளாதாரம், சம்பாத்தியம், வருமானம், நாட்டு நிர்வாகம் போன்ற விஷயங்களில் கடவுளுக்கு எள்ளளவும் சம்பந்தமில்லை. இவற்றை எல்லாம் நாமே தீர்மானித்துக் கொள்ளலாம்!’ இதுதான் முன்வைக்கப்படுகின்ற வாதம்.
இந்த சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டு தான் இன்று உலகத்தில் உள்ள எல்லா கொள்கைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. மக்கள் பெரிதும் போற்றிக் கொண்டாடுகின்ற கொள்கைகளான ஜனநாயகம், தேசிய வாதம், மக்களாட்சி, பொது உடைமை என்று அனைத்து கொள்கைகளுக்கும் இது ஒன்றே அடிப்படை!. முஸ்லிம்களுடைய தவறான புரிதல் முஸ்லிம்களும் இதனை விளங்கிக் கொள்ளாமல் தவறிழைக்கிறார்கள். நாம் தான் சிலைகளை வணங்குவதில்லையே! தர்காக்களும் போவதில்லையே! என்று முஸ்லிம்கள் தங்களைத் தாங்களே மெச்சிக் கொள்கிறார்கள்.
சிலைகளை கும்பிடாமல் இருந்தால் ‘ஷிர்க்’ செய்யவில்லை என்றாகிவிடுமா? தர்காவுக்கு போகவில்லை என்றால் ‘ஷிர்க்’ செய்யவில்லை என்றாகி விடுமா? ‘ஷிர்க்’ என்றால் என்ன என்பதை முதலில் புரிந்து கொள்ளவேண்டும்.
ஷிர்க்’ என்றால் என்ன?
‘ஷிர்க்’ என்றால் அரபி மொழியில் ‘பங்கு’ என்று அர்த்தம். நீங்களும், உங்களுடைய நண்பர்களும் சேர்ந்து ஒரு கம்பெனியை ஆரம்பிக்கிறீர்கள். தமிழில் அதை ‘குழுமம்’ என்கிறோம். (குழுவாக ஆரம்பித்துள்ளதால்) அரபியில் அதை ‘ஷிர்க்கா’ என்கிறார்கள். பங்காளியை அதாவது பார்ட்னரை ‘ஷரீக்’ என்கிறார்கள். எல்லாரும் சமம் என்று கூறுகின்ற பொது உடைமைக் கொள்கையை (கம்யு{னிஸக் கொள்கையை) அரபியில் ‘இஷ்திராகிய்யா’ என்கிறார்கள்.
ஷரீஅத்தில் ‘ஷிர்க்’ என்றால்,
1. படைத்த இறைவனோடு இன்னொன்றை இணையாக்குவது என்று பொருள். அதாவது. . . . அல்லாஹ்வை விட்டுவிட்டு இன்னொருவனை இறைவனாக படைத்தவனாக கருதினால் இது ‘ஷிர்க்’
2. நம்முடைய வாழ்க்கைக்கு தேவையான வசதிகளையும் வாழ்வாதாரங்களையும் அல்லாஹ் அல்லாத இன்னொருவன் அளிப்பதாகக் கருதினால் அது ‘ஷிர்க்’
3. நன்மையையும் தீமையையும் தரக்ககூடிய சக்தி யாருக்காவது இருப்பதாக நினைத்தால் அது ‘ஷிர்க்’
4. அல்லாஹ் அல்லாத இன்னொரு சக்தி இருப்பதாக நம்பி அல்லது இன்னொருவருக்கு சக்தி இருப்பதாக நம்பி அவரையோ அதனையோ திருப்திப் படுத்த முயற்சி செய்தால் அது ‘ஷிர்க்’
5. அல்லாஹ் அல்லாத ஒரு சக்திக்கு முன்னால் தலை வணங்கினாலோ நேர்ச்சை செய்தாலோ துஆ கேட்டாலோ அது ‘ஷிர்க்’
6. அல்லாஹ்விடம் சிபாரிசு செய்யும் அளவுக்கு சக்தி இருக்கின்றது என்று யாரைப் பற்றியாவது நம்பினால் இது ‘ஷிர்க்’
7. இறந்து போன அவ்லியாக்கள், நல்லடியார்கள் நமக்காக அல்லாஹ்விடம் வாதாடுவார்கள் என்ற நம்பினால் அது ‘ஷிர்க்’
8. அதே போன்று அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமான ஆற்றலும் வல்லமையும் இன்னொரு பொருளுக்கும் இருப்பதாக நினைத்தால் அதுவும் ‘ஷிர்க்’
9. அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமான அதிகாரங்களை இன்னொரு பொருளுக்கு அளித்தால் அதுவும் ‘ஷிர்க்’
அல்லாஹ்வுடைய ஆணைகளையும் கட்டளைகளையும் புறந்தள்ளிவிட்டு இன்னொரு பொருளுக்கு கட்டுப்பட்டு நடந்தால் அதனுடைய கட்டளைகளுக்கு செவி சாய்த்தால் அதுவும் ‘ஷிர்க்’
10. அல்லாஹ்வுடைய கட்டளைகளை இப்போது கடைப்பிடிக்க முடியாது என்று ஒதுக்கிவிட்டு இன்னொரு பொருளின் கட்டளையை கடைப்பிடிக்க முன்வந்தால் அதுவும் ‘ஷிர்க்’
11. இறைவனின் தூதர் எடுத்துரைத்த இறைவனுடைய சட்ட திட்டங்களை இந்தக் காலத்தில் கடைப்பிடிக்க முடியாது. அவை இந்தக்காலத்துக்கு பொருந்தி வராதவை என்றுமுடிவு கட்டிவிட்டு வேறுவேறு கொள்கைகளை பின்பற்றத் தொடங்கினால் அதுவும் ‘ஷிர்க்’
ஷைத்தானுடைய திட்டம்
முஸ்லிம்களை வழிகெடுப்பது எப்படி? ஓட்டு மொத்த மக்கள் அனைவரையும் இறைவனுக்கு கட்டுப்படாமல் ஆக்கவேண்டும். இறைவனை ஏற்றுக் கொண்டு அவனுடைய வழியில் வாழ்கின்ற மக்களையும் வழிகெடுத்து வெளியில் கொண்டுவர வேண்டும்.. . . இதுதானே ஷைத்தானுடைய திட்டம். குறிக்கோள்.
முஸ்ரிம்களிடம் போய் சிலைகளை வணங்குங்கள் என்று சொல்ல முடியாது. வேறுவகையில் அவர்களை ‘டீல்’ பண்ண வேண்டும். ஆகையால், கொஞ்சம் கொஞ்சமாக முஸ்லிம்களிடையே ஷைத்தான் ‘தர்கா’ வழிபாட்டைப் புகுத்தினான். சிலைகளுடைய இடத்தில் அவ்லியாக்களைக் கொண்டுவந்து வைத்தான்.
ஒரு சில நாட்களிலேயே தர்கா வழிபாடு கூடாது ன்று நல்லடியார்கள், நல்ல முஸ்லிம்கள் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். தர்காவுக்கு போவது மிகப்பெரிய தீமை என்பதையும் இதை ஒருபோதும் இஸ்லாம் ஆதரிக்கவில்லை என்பதனையும் அந்த இறையடியார்கள் முஸ்லிம்களுக்கு தெளிவாக உணர்த்தினாhகள். இதனால் பெரும்பாலான முஸ்லிம்கள் தாங்கள் செய்து வந்த தீமையை உணர்ந்து நேர்வழிக்கு திரும்பினார்கள். நவீன சிலைகள் முஸ்லிம்கள் சிலைகளையம் வணங்குவதில்லை, தர்காக்களுக்கும் போவதில்லை. அவ்வளவுதான் இனிமேல் அவர்களை வழிகெடுக்கவே முடியாது என்று ஷைத்தான் சோர்ந்து போய் உட்கார்ந்து விட்டானா என்றால் அதுதான் கிடையாது.
நாம் ஏற்கனவே பார்த்தது போல, சிலைகளுடைய பெயர்கள் மாறிக் கொண்டே வந்துள்ளன. சிலைகளுக்கு பதிலாக மக்கள் தர்காக்களுக்கு போய் அவ்லியாக்களிடம் கையேந்தத் தொடங்கினார்கள். ஏதேனும் ஒருவகையில் அல்லாஹ்வை விட்டும் அல்லாஹ்வுடைய பாதையை விட்டும் மக்களை அப்புறப்படுத்தவேண்டும் என்பது தான் ஷைத்தானுடைய நோக்கம்.
தர்க்காக்களுக்கு போவதை முஸ்லிம்கள் நிறுத்திவிட்டால் ஷைத்தானும் தன்னுடைய முயற்சிகளை நிறுத்திவிடுவானா? அல்லது வேறு ஏதேனும் வழியில் முயற்சி செய்து அல்லாஹ்வுடைய பாதையில் இருந்து அவர்களை அகற்ற நினைப்பானா? நாம் கொஞ்சம் அக்கறையோடு யோசித்துப் பார்க்கவேண்டும்.
இந்த நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட நவீன கொள்கைகளான மக்களாட்சி, ஜனநாயகம், முதலாளித்துவம் போன்றவற்றை முஸ்லிம்களை வழிகெடுப்பதற்காக, ஷைத்தான் திறமையாக பயன்படுத்தி வருகிறான. ‘நிலப்பரப்பில் இன்று வணங்கப்படும் சிலைகளிலேயே கேடுகெட்ட சிலை தேசியவாதம் தான்!’ என்று மகாகவி அல்லாமா இக்பால் கூறியுள்ளார் என்பதனையம் நினைவில் கொள்ளவேண்டும்.
வழிபாடு என்றால் என்ன?
வழிபாடு என்றால் வழியில் செல்வது என்று அர்த்தம். ஒரே இறைவன் அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டு அவனுடைய வழியில் நம்முடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் ‘இறைவனுடைய வழியில் வாழ்கின்ற முஸ்லிம்கள் நாங்கள்’ என்று நம்மை நாம் சொல்லிக் கொள்ளலாம்.
இறைவனுடைய வழியில் வாழ்க்கையை அமைத்துக் கொள்வது என்றால் குடும்பம், தொழுகை, ஜகாத், சொத்து பகிர்மானம் போன்ற நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான விஷயங்களில் மட்டும் இறைவனுக்கு கட்டுப்பட்டு அவனுடைய வழியில் வாழ்ந்தால் போதுமா?
அல்லது நம்முடைய கூட்டு வாழ்க்கையிலும் ஒரே இறைவன் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு வாழவேண்டுமா? என்றொரு கேள்வி இங்கே எழுகின்றது.
அதாவது வியாபாரம் பொருளாதாரம், இஸ்லாமிய அழைப்பு பணி, அரசியல், பண்பாடு போன்ற துறைகளிலும் நாம் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட வேண்டுமா?
வாழ்க்கையின் எல்லா துறைகளிலும் எனக்கு கட்டுப்படுங்கள் என்று அல்லாஹ் சொல்கிறானா? இல்லை ஒரு சில காரியங்களை மட்டும் நான் சொன்னபடி செய்துவிட்டு மற்ற விஷயங்களில் உங்களுடைய இஷ்டப்படி வாழ்ந்து கொள்ளுங்கள் என்று பரிபூரண அனுமதியை அளித்துள்ளான என்று யோசித்துப் பார்க்கவேண்டும்.
வாழ்க்கையின் அனைத்து விஷயங்களிலும் இறைவனுடைய வழிகாட்டுதலின்படியே வாழ்ந்தாக வேண்டும், இறைவன் அதைத்தான் எதிர்பார்க்கிறான் என்றால் அதற்கு வழிகாட்டுகின்ற அதை செயல்படுத்துகின்ற ‘கூட்டமைப்பு’ ஒன்று இருந்தாக வேண்டும் அல்லவா?
இறைவனை ஏற்றுக் கொள்ளாத இறைவனே இல்லை என்று நிராகரிக்கின்ற ஒரு அமைப்பின் கீழாக ஒன்று திரண்டால் ஏக இறைவனான அல்லாஹ்வுக்கு எப்படி கட்டுப்பட்டு வாழமுடியும்?
இஸ்லாமும் ஜனநாயகமும் இரண்டு துருவங்கள் இஸ்லாம் என்றால் ஒரே இறைவனையே வழிபடவேண்டும். முழுக்க முழுக்க இறைவனுக்கே கட்டுப்பட வேண்டும். அவன் விரும்பிய வழியில் தான் நம்முடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவேண்டும். இப்படி கீழ்ப்படிபவனையே ‘முஸ்லிம்’ என்ற சொல் குறிப்பிடுகின்றது.
நாம் ஏற்கனவே பார்த்தது போல அவனை மட்டுமே வழிபடுவதோடு அவனுக்கு மட்டுமே அடிமைப்பட்டு இருக்கவேண்டும். நம்முடைய வாழ்க்கை தொடர்பான எல்லா காரியங்களிலும் அவனுக்கு மட்டுமே கட்டுப்பட வேண்டும். வீட்டில் மட்டுமல்லாமல் வீதியிலும் நாட்டிலும் நிர்வாகத்திலும், சமூகத்திலும் சட்டசபைகளிலும் தொழிற்கூடங்களிலும் சந்தைப்பேட்டைகளிலும் அவனுடைய சட்டதிட்டங்களின் படியே நம்முடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முயற்சி செய்யவேண்டும்.
ஜனநாயகம் என்றால்,அதிகாரம் மக்களுக்கே! என்பது ஜனநாயகத்தின் மையக் கொள்கை.
தங்களுக்கு தேவையான சட்டங்களை மக்களே இயற்றிக் கொள்வார்கள். அந்த சட்டங்களை நிறைவேற்ற ஒரு அரசாங்கத்தையும் நிறுவிக் கொள்வார்கள். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட அரசாங்கம் அந்த சட்டங்களை அமுல்படுத்தும். சட்டங்களில் மாற்றங்களையோ கூடுதல் குறைவையோ அவர்கள் செய்து கொள்வார்கள்.
இந்தக் கொள்கையை இஸ்லாம் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றது. இஸ்லாம் என்ன சொல்கின்றது என்றால்,
ஒன்று: ஒரு பொருளைப் படைத்தவனுக்குத் தான் அதைப்பற்றி முழு விபரங்களும் தெரியும். அதற்கு என்ன தேவை? அதை எப்படி இயக்கவேண்டும்? அதை எங்ஙனட் பயன்படுத்த வேண்டும்? என்கிற முழு விபரங்களும் உருவாக்கியவனுக்குத்தான் தெரியும்.
தங்களுக்குத் தேவையான சட்டங்களை இயற்றிக் கொள்கின்ற அறிவும், ஆற்றலும், மக்களுக்கு கிடையாது. முனிதனைப் படைத்தவன் அல்லாஹ். ஆகையால், அவன் ஒருவனுக்குத்தான் மனிதனுக்கு எது தேவை? எது தேவையில்லை? என்பது தெரியும்.
தங்களுக்குத் தேவையான சட்டங்களை இயற்றிக் கொள்கின்ற அறிவும், ஆற்றலும், மக்களுக்கு கிடையாது. முனிதனைப் படைத்தவன் அல்லாஹ். ஆகையால், அவன் ஒருவனுக்குத்தான் மனிதனுக்கு எது தேவை? எது தேவையில்லை? என்பது தெரியும்.
படைப்பாற்றலும், அதிகாரம் செலுத்துகின்ற வல்லமையும் அவனுக்கு மட்டும்தான் உள்ளது. இல்லையா? (அல்குர்ஆன் 7ஃ54)
இரண்டு: சட்டங்களை இயற்றக்கூடிய அருகதை மனிதர்களுக்கு இல்லை என்பதால் தான் அவர்கள் தான்தோன்றித்தனமாக கண்டபடி எல்லாம் சட்டங்களை இயற்றுவார்கள். இறைவனுடைய வழிகாட்டுதல் தேவையில்லை, நமக்கு நாமே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று மனிதன் தீர்மானித்தால் கண்டிப்பாக அவன் மனோ இச்சைகளின்படி செயல்படுவான். அதாவது, தன்னுடைய மனம் சொல்கின்றபடியே தன்னுடைய வாழ்வை அமைத்துக் கொள்வான்.
‘நிச்சயமாக மனிதனுடைய மனது தீமையானவற்றையே தூண்டுகின்றது’ என்று அல்குர்ஆன் கூறுகின்றது (அத்தியாயம் 12ஃ53). ஏனென்றால் உலகத்தினுடைய கவர்ச்சியும் ஷைத்தானுடைய தூண்டுதலும் அவனை அவ்வாறு செய்யவைக்கின்றன. அதன்படி செயல்பட்டு தன்னுடைய மனோயிச்சைகளின்படி நடப்பவனைப் பற்றி அல்குர்ஆன் என்ன கூறுகின்றது தெரியுமா?
மனோ இச்சைகளைக் கடவுளாக ஆக்கிக் கொண்டவர்கள் என்று குறிப்பிடுகின்றது. மனோ இச்சைகளை கடவுளாக ஆக்கிக் கொண்டவனைவிட கேடுகெட்டவன் யாருமே கிடையாது என்றும் குறிப்பிடுகின்றது.
மூன்று: சட்டமியற்றும் அதிகாரமும் ஹலால், ஹராம் போன்வற்றைத் தீர்மானிக்கும் அதிகாரமும் அல்லாஹ்வுக்கு மட்டுமே உள்ளன. அந்த அதிகாரங்களை மற்றவர்களுக்கு கொடுப்பவன் அல்லா1ஹ்வுடைய அதிகாரத்தை பங்கு வைக்கிறான். அதாவது ‘ஷிர்க்’ செய்கிறான். இறைவனுக்கு மட்டுமே சொந்தமான அதிகாரங்களை மற்றவர்களுக்கு வழங்கினால் அதற்குப் பெயர்தான் ‘ஷிர்க்’.
எப்படியாவது முஸ்லிம்களை இறைவனுக்கு எதிரான திசையில் திருப்பிவிட வேண்டும் என்று ஷைத்தான் அந்த கொள்கைகளை அழகானவையாகவும் பயனுள்ளவையாகவும் நமக்கு காட்டுகிறான். இன்னொரு பக்கம் இவற்றை பின்பற்றவில்லை என்றால் நம்மை அடியோடு ஒழித்துவிடுவார்கள் என்று பயமுறுத்துகிறான்.
‘இதைச் செய்யுங்கள்! இதனால் உங்களுக்கு மிகவும் பயன்கள் உண்டாகும்!’ என்று தான் ஒவ்வொரு முறையும் ஷைத்தான் சொல்கிறான். சொர்க்கத்தில் குடியிருந்த ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களையம் அவர்களுடைய மனைவியையும் அங்கிருந்து வெளியேற்ற நினைத்த ஷைத்தான் அவர்களிடம் போய் ‘இந்த மரத்தினுடைய பழங்களை சாப்பிட்டால் இங்கேயே நிரந்தராமாக இருப்பீர்கள். அதுமட்டுமல்ல, நீங்கள் வானவர்களைப் போன்று ஆகிவிடுவீர்கள்!’ என்று சொன்னான். வானவர்களைப் போன்று மாற யாருக்குத் தான் ஆசை இருக்காது? ஆதமும், ஹவ்வாவும் அந்த மரத்தின் பழங்களை சாப்பிட்டார்கள். அல்லாஹ்வுடைய கோபத்துக்கு ஆளானார்கள்.
எந்தக் காரியமாக இருந்தாலும், இதைச் செய்யுங்கள்! இதைச் செய்தால் நன்மை விளையும் என்று சொல்லித்தான் ஷைத்தான் நம்மை அழைக்கின்றான். ‘லாஜிக்’காக பல ஆதாரங்களை அடுக்கிக் கூறுகிறான். அவற்றை நாம் நம்பினால் அப்புறம் அவ்வளவுதான், தொலைந்தோம். எதுவாக இருந்தாலும் குர்ஆன் சொல்கின்றபடித் தான் யோசித்துப் பார்க்க வேண்டும்.
இத்தகைய வழிமுறைகளைப் பின்பற்றினால், பெரிய பெரிய பயன்கள், நல்விளைவுகள் கிடைப்பதாகவே வைத்துக் கொள்வோம். அவற்றை வைத்துக் கொண்டு என்ன செய்வது? கூடவே, அல்லாஹ்வுடைய கோபத்தையும் சாபத்தையும் அவை பெற்றுத் தருமே! அல்லாஹ்வுடைய கோபத்தையும், அவனுடைய சாபத்தையும் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு நமக்கு திராணியிருக்கின்றதா?
முஸ்லிம் உம்மாவின் உலகியல் நலன்களுக்காகவும் அவர்களுடைய பொருளாதார வளர்ச்சிக்காகவும் சமூக முன்னேற்றத்திற்காகவும் பாடுபடுவதாக நம்முடைய அமைப்புகள் சொல்லிக் கொள்கின்றன. இஸ்லாத்தை பணயம் வைத்துவிட்டு ஈமானை பலி கொடுத்துவிட்டு அப்புறம் எந்த முஸ்லிம்களுக்காக நாம் பாடுபடப் போகிறோம்?
ஒன்று, இஸ்லாமை நடைமுறைப்படுத்துவதற்காக முஸ்லிம்கள் கஷ்டப்படவேண்டும். இல்லையென்றால், முஸ்லிம்கள் உலகத்தில் நன்றாக வாழ்வதற்காக இஸ்;லாத்தைக் கண்டபடி வளைக்க வேண்டும். எதை நாம் செய்யப் போகிறோம்?
இரண்டாவதாக இந்த நவீன கொள்கைகளை ஏற்றுக் கொள்ளாமல் புறக்கணித்தால் நாம் நிறைய கஷ்டப்பட வேண்டியிருக்கும். இது மட்டுமல்ல, நம்முடைய வாழ்வியல் உரிமைகள் எல்லாம் பறி போய் விடும், என்றும் சொல்லப்படுகின்றது. இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் கண்டிப்பாக கஷ்டப்பட்டுத்தான் ஆகவேண்டும்.
இதை குர்ஆனே சொல்கின்றது. ‘ஆற்றலுக்கும் புகழுக்கும் உரிய அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டதற்காக அல்லாமல் வேறு எதற்காகவும் அவர்கள் கொடுமைப்படுத்தப் படவில்லை’ (அத்தியாயம் 85ஃ8). நாம் மேலே சொன்னபடி உண்மையான முஸ்லிம்களாக வாழ்ந்தால் லைசென்ஸ் கிடைக்காது. ரேஷன் கார்டு கிடைக்காது. அது கிடைக்காது, இது கிடைக்காது என்றெல்லாம் சில சகோதரர்கள் பயப்படுகிறார்கள். இவையெல்லாம் கிடைக்காது என்பதற்காக ஈமானை இழந்துவிட முடியுமா? இஸ்லாத்தை விட்டுக் கொடுக்க முடியுமா?
உங்களை உயிரோடு எரித்தாலும் கண்டந்துண்டமாக வெட்டினாலும் படுபயங்கராமாகச் சித்ரவதை செய்தாவும் ஈமானை – ஓரிறைக் கொள்கையை மட்டும் இழந்து விடாதீர்கள்,’ என்று அண்ணல் எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எச்சரித்து உள்ளார்களே! அதற்கு என்ன தான் அர்த்தம்?
அல்லாஹ்விடத்தில் கெடுகெட்டவன்! ‘மற்றவர்களுடைய உலக வாழ்க்கைக்காக தன்னுடைய ஆக்ஷகிரத்தை அழித்துக் கொண்டவன்தான் மறுமை நாளினல் அல்லாஹ்விடத்தில் மிகவும் கேடுகெட்ட அடியான் ஆவான்!’ என்று இறைவனின் தூதர் முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லியுள்ளார்கள்.மறுமைக்காக வாழ்க்கையை மனதில் கொண்டு இந்த உலக வாழ்க்கையை மனதில் கொண்டு இந்த உலக வாழ்க்கையை அதற்கு ஏற்றவாறு திட்டமிட வேண்டும். அதுதான் புத்தசாலித்தனம்!
அதற்குப் பதிலாக, இந்த உலக வாழ்க்கை ஒன்றை மட்டுமே மனதில் கொண்டு இறைவனும் இறைவனுடைய தூதரும் சொன்ன திசைக்கு நேர் எதிரான திசையில் நாம் பயணம் செய்யக் கூடாது.நாம் அல்லாஹ்வுடைய அடிமைகள், அவனை மட்டுமே வணங்கவேண்டும். அவனுடைய புகழ் ஒன்றையே நம்முடைய நாவுகள் போற்ற வேண்டும். அவனுடைய திருப்பெயரையும் அவனுடைய மார்க்கத்தையும் மேலோங்கச் செய்வது ஒன்றே நம்முடைய வாழ்க்கiயின் குறிக்கோளாக இருக்கவேண்டும். நாம் முறைப்படி அவனை வணங்கினால் தான் நம்முடைய உலகியல் பிரச்சனைகளுக்கு அவனிடத்திலிருந்து உதவிகளை எதிர்பார்க்க முடியும். அவனுக்காக, அவனுடைய தீனுக்காக எந்த தியாகத்தையும் செய்யலாம். ஆனால், எதற்காகவும் இஸ்லாத்தை பலி கொடுத்து விடக்ககூடாது. சிந்திக்க வைப்பதற்கும் நேர்வழி காட்டுவதற்கும் வல்ல இறைவன் போதுமானவன். வஸ்ஸலாம்.
அதிகாரம் மக்களுக்கல்ல! அதிகாரம் அல்லாஹ்வுக்கே!”
தொகுப்பு : சையது அப்துல்ரஹ்மான் உமரி,
வெளியீடு: கோவை தங்கப்பா
Posted By Mohamed Safair (A) Kovai Thangappa