குழந்தைகளுக்கு சளிப்பிடிப்பதும் மூச்சு விட திணறுவதும் இயல்பான ஒன்றுதான். அதே நேரம் அடிக்கடி இந்த தொல்லைகள் தொடர்ந்தால் முறையான சிகிச்சை மிகவும் அவசியமாகிறது. பொதுவாக சளியுடன் கூடிய தொண்டை வலி பெரும்பாலும் டான்சில் அழற்சியாலேயே உண்டாகிறது.
பலமுறை சரியான மருந்துகளை கொடுத்த பேதிலும் இந்த தொல்லைகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். சில குழந்தைகள் மூக்கால் சுவாசிப்பதைவிட வாய்வழியாக சுவாசிப்பதைப் பழக்கமாக கொண்டிருக்கும். நாம் இதனை பழக்கம் என்று சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இதற்கு மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். இவை அனைத்தும் அடினாய்டு என்னும் அழற்சி நோய் காரணமாக இருக்கலாம்.
அடினாய்டு என்பது மூக்கிற்கும், மூச்சு ஆரம்ப குழலிற்கும் இடைப்பகுதியில் அமைந்துள்ள டான்சில் போன்ற அல்லது மூக்கின் உள் அறையின் மேல் பகுதியும் பின்புறப் பகுதியும் இணையுமிடத்தில் உள்ள நிணநீர் சதைக் கோளம் காணப்படும்.
இந்த அடினாய்டு குழந்தை வளர வளர சுருங்கி செயலிழந்துவிடும் தன்மை கொண்டது. இந்த அடினாய்டு அழற்சி மற்றும் வீக்கம் போன்ற தொல்லைகள் பெரும்பாலும் குழந்தைப் பருவத்திலேயே அதிகம் காணப்படுகிறது. அதாவது இரண்டிலிருந்து பத்து வயது வரைதான் இதன் தொல்லைகள் அதிகம். இவ்வாறு வீக்கமடைவதால் மூச்சுப் பாதை அடைபடுவதோடு, பல்வேறு வகையான தொல்லைகளுக்கு உட்பட நேரிடுகிறது.
அடினாய்டு அழற்சியை பொருத்தவரை முழு அழற்சி மற்றும் பகுதி அழற்சி என இரண்டு பிரிவாக கூறலாம். பகுதி அழற்சியை பொருத்தவரை அடினாய்டின் வீக்கம் முழுவதுமாக இருக்காது. இதனால் மூக்கு வழியாக சுவாசிக்க முடியும். முழு அடினாய்டு அழற்சியைப் பொருத்தவரை வீக்கத்தின் அளவு முழுவதுமாக அடைபட்டு சுவாசம் வாய்வழியாக இருக்கும். இதனால் மூக்கினுள் அடைத்து கொண்டு அதை வெளியேற்ற முடியாமல் குழந்தை மிகவும் சிரமப்படும். வரட்டு இருமல் காணப்படும். கழுத்தை திருப்புவதற்கு சிரமப்படும். மேலும் காதில் ஒரு விதமான வலியுடன் கூடிய அரிப்பு தோன்றும்.
இதனால் குழந்தைகள் காதுக்குள் எப்போதும் குடைந்து கொண்டே இருப்பார்கள். இந்த காதினுள் தோன்றும் அழற்சி அதிகமானால் குழந்தைகளுக்கு காது கேட்கும் திறன் சற்று மந்தமாக இருக்கும்.
மூக்கு வழி சுவாசம் தடைபட்டு முழு அடினாய்டு வீக்கத்தில் வாய்வழி சுவாசம் மட்டுமே காணப்படுவதால் டான்சில் வீக்கமடைந்து சிவந்து காணப்படுவதோடு தொண்டைவலி உணவு விழுங்குவதில் சிரமம், கரகரப்பான குரல் போன்ற தொல்லைகளும் தோன்றுகிறது. இந்த தொல்லைகளினால் குழந்தையால் சரிவர உணவு உட்கொள்ள முடியாத நிலை உண்டாகிறது. எனவே குழந்தை மிக குறைவான அளவு உணவை சாப்பிடுவதால் எடை குறைந்து விடுகிறது.
மேலும் தொடர்ந்து தொல்லை தரும் மூக்கடைப்பால் இரவில் தூக்கமின்மை, சைனஸ் உபாதைகள் போன்றவைகளால் குழந்தை உடல் ரீதியாக மட்டுமல்லாது மன ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்படுகிறது.
முன் மூச்சுக் குழலில் தோன்றிய அழற்சி உணவுக்குழல் தொல்லைகளுக்கு ஆரம் மெட் (Aurm met) என்ற மருந்தும் டான்சில் வீக்கம் நிணநீர் கோள்களில் வீக்கம், தொட முடியாத அளவிற்கு வலி, தொண்டையில் விழுங்க முடியாத நிலை, காய்ச்சல் போன்ற தொல்லைகளுடன் கூடிய அடினாய்டிற்கு ஆர்ஸ் அயோடம் (Ars lodum) என்ற மருந்தும், இடது புற டான்சில் வீக்கம், இடது புற மூக்கடைப்பு, இடது பக்க தலைவலி போன்ற பெரும்பாலும் இடது புற தொல்லைகளுடன் கூடிய அடினாய்டிற்கு லேக்கஸ’ஸ் (Lachesis) என்ற மருந்தும், கெட்டியான மஞ்சள் போன்ற சளியுடன் கூடிய மூக்கடைப்பு, வெளிச்சத்தில் உண்டாகும் தலைவலி, பகலில் பெரும்பாலும் அடினாய்டு உபாதைகள் அதிகம் காணப்பட்டால் நேட்ரம் கார்ப் (Natrum Carb) என்று மருந்தும் குணமாக்கவல்லலை.
இவைகள் மட்டும் அல்லாது உடல் அறிகுறிகளின் அடிப்படையில் நேட்ரம் ஆர்ஸ், சபடில்லா, சல்பர், ஆர்ஸ் ஆல்பம், டியூக்கியம் போன்ற மருந்துகளும் தேர்வு செய்து டாக்டரின் ஆலோசனையின் பேரிலேயே வீரியத்தை தேர்வு செய்து சிகிச்சை பெற வேண்டும்.
குழந்தைகள் என்றாலே அழகுதான். சிரிக்கும் போது பேரழகு, அதிலும் வாயில் விரலை வைத்து சிரிக்கும் அழகு தனியழகு. இப்படி நகம் கடித்தலும் விரல் சப்பும் பழக்கமும் குழந்தையினிடையே காணப்படும் மிகச் சாதாரணமான பழக்கம்தான். இது அநேகமாக எல்லா குழந்தையிடத்தும் காணப்படும் இது ஒன்றும் ஆபத்தான பழக்கமில்லை என்ற போதும் இப்பழக்கம் தொடர்வது நல்லதல்ல. மிக முக்கியமாக அக்குழந்தையின் மன வளர்ச்சிக்கு மட்டுமல்லாது பற்களின் வளர்ச்சிக்கும் தடையாக இருக்கிறது. அதிகப்படியாக இப்பழக்கம் இருக்குமேயானால் வளர்ந்த பற்களைக் கூட பாதிக்கிறது.
அதே போல் நகம் கடிக்கும் பழக்கம் குழந்தை கைகளை அசைக்க கற்றுக் கொள்ளும் போதே கற்றுக் கொள்ள ஆரம்பிக்கிறது. இந்த நகம் கடிக்கும் மற்றும் விரல் சப்பும் பழக்கங்களை பெருமளவில் ஆண்களை விட பெண்களே கொண்டுள்ளனர். இவ்விரண்டு பழக்கங்களுமே ஒன்றுக்கொன்று தொடர்புடையவைகளே. இந்த பழக்கம் உடையவர்கள் மிகவும் எளிதில் உணர்ச்சிவசமடையும் மனநிலை கொண்டவர்களாகவே இருப்பர்.
இந்த பழக்கத்திற்கு தூண்டுதல் அவர்களுக்குள்ளாகவே தோன்றுவதுண்டு. வாலிபப் பருவத்தில் இப்பழக்கம் சிலருக்கு தற்கொலை முயற்சி மற்றும் பாலியம் தூண்டுதலுக்கு துணைபுரிவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. மேலும் குழந்தைகளுக்கு இந்த பழக்கம் தன்னம்பிக்கை இன்மைக்கும், ஏக்கத்திற்கும் காரணமாகிறது. இந்த பழக்கம் நாளாவட்டத்தில் வயது அதிகமாக அதிகமாக அவர்களையே காயப்படுத்திக் கொள்ளும் அளவிற்கு மாறிவிடுகிறது. விரல் சூப்பும் பழக்கம் பெரும்பாலும் பதட்டத்தின் படபடப்பின் வெளிப்பாடாகவோ அல்லது பயந்த நிலையையோ வெளிக்காட்டும்.
உதாரணமாக தொலைக்காட்சியில் திகில் நிறைந்த காட்சிகளை பார்க்கும் சிறுவன் விரல்களை வாயில் வைத்து சப்பியபடியே படபடப்போடு தொலைக்காட்சி பார்ப்பதை நாம் பார்த்திருக்கலாம்.
உளவியல் வல்லுநர்களின் ஆராய்ச்சியில் போதுமான அளவு தாய்ப்பால் கொடுக்கப்படாத குழந்தைகளுக்கு இந்த பழக்கம் அதிகமாக காணப்படுகின்றது என்று ஆராய்ந்துள்ளனர். மேலும் அன்னையின் போதுமான அரவணைப்பு இன்மை, சுற்றத்தின் அலட்சியப் போக்கு போன்ற குழந்தையின் வளர் சூழ்நிலையும் இப்பழக்கம் வளர காரணமாகிறது. அமைதியற்ற சூழ்நிலையில் வளரும் குழந்தைகள், ஆபத்தான வேலை செய்யும் பெற்றோர்களை பார்க்கும் குழந்தைகளுக்கு இந்தப் பழக்கம் வருகிறது. மித மிஞ்சிய விரல் சப்பும் பழக்கம் குழந்தையின் விரல்களில் புண்களைக் கூட ஏற்படுத்திவிடக்கூடும்.
இப்பழக்கம் நான்கு வயதிற்கு மேல் தொடர ஆரம்பித்தால் நிச்சயமாக பற்களை அதாவது பற்களின் வளர்ச்சியை பெரிதும் பாதிக்கும். மேலும் இந்தப் பருவத்தில் குழந்தையின் மனநிலையும் பாதிப்பிற்குள்ளாகிறது. மேலும் இது போன்ற பழக்கம் உள்ள குழந்தைகளுக்கு வயிற்றினுள் குடல்வாழ் நுண்புழுக்கள் காணப்படும். இப்புழுக்கள் இரவு நேரத்தில் மலவாய் வரை வந்து ஒரு விதமான அரிப்பை தோற்றுவிக்கும். இந்த நிலையில் குழந்தை விரல் வைத்து சொறியும் போது நகக் கண்களில் புழுக்களின் முட்டைகள் ஒட்டிக் கொள்ளும். பின்பு வாயில் விரலை வைக்கம்போது அவை வயிற்றினுள் சென்று பல்வேறு விதமான இன்னல்களுக்கு ஆளாக வேண்டியிருக்கும். இந்த குடல் புழுக்களின் விளைவால் குழந்தைகள் இரவில் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் ஏற்படும்.
இப்பழக்கத்தை மாற்ற வேண்டும். பெற்றோர்கள் குழந்தையின் பேரில் அதிக கவனமும், அக்கறையும் எடுத்துக் கொள்ள வேண்டும். குழந்தை வாயில் விரலை வைக்காமல் பார்த்துக் கொள்ளுதல் வேண்டும்.
குழந்தைகளுக்கு நிறைய தன்னம்பிக்கையூட்டும் வகையில் பல நிகழ்ச்சிகள், சுவாரசியமான கதைகளைக் கூறி மனதைத் திடப்படுத்த வேண்டும். குறிப்பாக தாழ்வு மனப்பான்மையையும், பயத்தையும் அகற்ற வேண்டும். நகங்களில் அழுக்கு சேராமலும், அடிக்கடி வெட்டி விடுதலும் வேண்டும்.
ஹோமியோபதி மருத்துவம் :
விரல்களை தொடர்ந்து கடித்துக் கொண்டிருந்தால் குறிப்பாக இரத்தம் வரும் வரை கடிக்கும் பழக்கம் மாறுவதற்கு ஆரம்டிரைபலம் என்று மருந்தும் குழந்தை முதல் பெரியவர் வரை விரல் சப்பும் பழக்கம் மாறுவதற்கு கல்கேரியா கார்ப் (Calcarea carb) என்று மருந்தும் உதவுகிறது.
இம்மருந்தினை ஹோமியோபதி மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே தேவையான வீரியத்தில் எடுத்து கொள்ள வேண்டும் என்பது மிகவும் அவசியமான ஒன்று.
நன்றி: டாக்டர். வி.எம். சசிகுமார்