யார் ஸுப்ஹுத் தொழுகையை தொழுகின்றாரோ அவர் (அன்றைய தினம்) அல்லாஹ்வின் பொறுப்பிலிருக்கின்றார் என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
‘ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி“ என ஓதுகின்றாரோ, அவரின் பாவங்கள் கடல் நுரையளவு இருந்தாலும், அது மன்னிக்கப்படும் என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
‘லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்’ என்று கூறுவது சுவர்க்க பொக்கிஷங்களில் ஒரு பொக்கிஷமாகும் என நபி صلى الله عليه அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
ஒரு கவள உணவை உண்டுவிட்டு அல்லாஹ்வை புகழும் அடியானையும், ஒரு வாய் தண்ணீர் அருந்திவிட்டு அல்லாஹ்வை புகழும் அடியானையும் நிச்சயமாக அல்லஹ் பொருந்திக் கொள்கின்றான் என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
யார் என்மீது ஒரு தடவை ஸலவாத்து கூறுகின்றாரோ, அவருக்கு அல்லாஹ் பத்து தடவை ஸலவாத்து கூறுகின்றான் (அருள் புரிகின்றான்); என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். (புகாரி)
யார் தன்னுடைய இரு தாடைகளுக்கு மத்தியிலுள்ளதையும், இரு கால்களுக்கு மத்தியிலுள்ளதையும் (ஹராத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதாக) எனக்கு உத்தரவாதம் அளிக்கின்றாரோ, அவருக்கு சுவர்க்கத்தை வாங்கிக் கொடுப்பதற்கு நான் உத்தரவாதம் அளிப்பேன் என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)