இரண்டு வருட வேலை அனுபவம் இருந்திருந்தால் இதற்கு விண்ணப்பிக்கலாம்
பொறியியல், தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் வணிகமேலாண்மையில் பட்டப்படிப்பு படித்து வைத்துக்கொள்வது பொதுவாக விரும்பத்தக்கது. முழுநேரப்படிப்பில் சேர முடியாததால் பகுதி நேர, தொலைதூர வழிமுறைகளில் அரசு சார்ந்த அல்லது தனியார் பல்கலை கழகங்களில் படிப்பார்கள். மேலாண்மை படிப்புகளுக்கு தனியார் நிறுவனங்கள் / பல்கலை கழகங்கள் அதிகக்கட்டணம் வசூலிக்கின்றன. அரசு சார்ந்த பல்கலைகழகங்களில் தரம்/பாடத்திட்டம் நன்றாக இருந்தாலும், முழுநேர படிப்பிற்கு போட்டி போடும் அளவுக்கு இல்லை.
இந்நிலையில் தொலைதூர வழியில் வணிகமேலாண்மை/நிர்வாக இயலில் மேற்படிப்பு படிக்க விரும்புவர்களுக்கு: சுவீடனில் பிலெக்கிஞ்ச் கல்லூரி (Blekinge Institute of Technology) தொலைதூர இணைய வழியில் வணிக மேலாண்மைப் படிப்பை வழங்குகிறது. இரண்டு வருட வேலை அனுபவம் இருந்திருந்தால் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஒரு வருடப்படிப்பிற்கு 60 ECTS மதிப்பீடுகளைத் தருகிறது. இதில் குறிப்பிடத்தக்க விசயம் என்னவெனில் 30 ECTS வைத்திருந்தால் சுவீடனில் வேலைக்கான கடவுச்சீட்டு(விசா) பெற்றுக்கொள்ள வழிமுறை உண்டு. பொதுவாக சுவீடனில் கல்வித்தரம் அமெரிக்கா/ஆஸ்திரேலியா/இங்கிலாந்து நாடுகளின் அளவுக்கு உண்டு. பலபடிப்புகளில் சுவீடனில் தரம் , கடுமையான பாடத்திட்டம் நமது அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
சென்றவருடம் 70 இடங்களுக்கு கிட்டத்தட்ட 2500 விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன. இப்படிப்பில் சேருவதற்குக் கட்டணம் ஏதும் கிடையாது. இதுவரை சுவீடனில் எந்த படிப்பிற்கும் கட்டணம் கிடையாது. ஆனால் அடுத்த ஆண்டு முதல் ஐரோப்பியர் அல்லாதவருக்கு கட்டணம் என சட்டம் இயற்றி விட்டார்கள். அடுத்த வருடம் இதே படிப்பிற்கு 3 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படலாம். ஆகையால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
MBA Programme 60 ECTS Fulltime In internet Autumn 09 என்பதைத் தேர்வு செய்து விபரங்களைப் பார்க்கலாம். – ஒரு வருடத்தில் இணையவழியில் முடிக்கலாம்.
MBA Programme 60 ECTS Part time In internet Autumn 09 – இது முடிக்க இரண்டு வருடம் ஆகும்.
விண்ணப்பிக்க இந்த சுட்டியைச் சொடுக்கவும்
இணையதளத்தில் விண்ணப்பிக்க கடைசி நாள் பிப்ரவரி 1.
சான்றிதழ்களை அனுப்ப கடைசி நாள் பிப்ரவரி 15
2009 செப்டம்பரில் படிப்புத் துவங்கும்.
ஸ்டுடரா தளம் மூலம் சுவீடன் பல்கலைக் கழகங்களில் மேற்படிப்புக்கு விண்ணப்பிக்கும் நாள் கடந்து விட்டாலும், பிலெக்கிஞ்ச் கல்லூரியின் தளம் வாயிலாக விண்ணப்பிக்கும் கெடு பிப்ரவரி 1 ஆம் தேதி வரை உள்ளது.
அதிக பட்சம் மூன்று படிப்புகள் வரை விண்ணப்பிக்கலாம். இணையத்தில் விண்ணப்பித்து விட்டு, பிப்ரவரி 15 ஆம் தேதிக்குள் தங்களது சான்றிதழ்களை தபாலில் அனுப்ப வேண்டும்.
சுவீடனில் மேற்படிப்பு படிக்க இந்திய அறிவியல்/பொறியியற்/தொழில்நுட்ப பட்டதாரிகளுக்கு ஆங்கிலத் தேர்வு இல்லை.
பிலெக்கிஞ்ச் கல்லூரி மென்பொருள் பொறியியலுக்கு பெயர் போனக் கல்லூரி.மென்பொருள் துறையில் பொறியியல் படிப்பு படிக்க விரும்புபவர்கள் இதனைத் தேர்வு செய்யலாம்.
பின்வரும் சுட்டியில் வழங்கப்படும் படிப்பின் விபரங்களும் விண்ணப்பிக்கும் சுட்டியும் உள்ளது.
http://www.bth.se/apply
Zazaakallaah khairan – sarfudin@hotmail.com [mailto:sarfudin@hotmail.com]