அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள், “இரண்டு பண்புகளில் தவிர வேறு எதிலும் பொறாமை கொள்ளலாகாது/ ஒருவர் தமக்கு இறைவன் அளித்த செல்வத்தை அறப்பணியில் அர்ப்பணித்தல்/ மற்றொருவர் தமக்கு இறைவன் அளித்த ஞானத்தால்/ (மக்களின் பிரச்சினைகளுக்குத்) தீர்ப்பு வழங்கிக்கொண்டும்/ (பிறருக்கு) அதைக் கற்பித்துக்கொண்டும் இருத்தல்.“ (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரீ)
நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்,”எவன் மக்களின் பணத்தை (அல்லது பொருட்களைத்) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகின்றானோ அவன் சார்பாக அல்லாஹ்வே அதனை திருப்பிச் செலுத்துவான். எவன் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி அதை (ஏமாற்றி) அழித்து விடும் எண்ணத்துடன் கடன் வாங்குகின்றானோ அல்லாஹ்வும் அவனை அழித்து விடுவான்.“ (அறிவிப்பாளர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரீ)
“அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு (உஙகளால் அநீதிக்கு ஆளாவனவர் இறைவனிடம் உஙகள் அநீதியைக் குறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாகப் பிரார்த்தனை புரிபவதைப் பற்றி) அஞ்சுங்கள். ஏனெனில்/ அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை“ என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் முஆத் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களை யமன் நாட்டுக்கு (ஆளுநராக) அனுப்பி வைத்த போது கூறினார்கள். (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரீ)
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரிடம்/ அவர்களுக்குத் தான் கொடுத்த (ஒட்டகத்தை)தைத் திருப்பித் தரும்படி கேட்டார். அப்போது நபி صلى الله عليه وسلم அவர்களிடம் அந்த மனிதர் கடுமையாகப் பேசினார். ஆகவே/ நபித் தோழர்கள் அவரை தண்டிக்க விரும்பினார்கள். அப்போது நபி صلى الله عليه وسلم அவர்கள் தம் தோழர்களை நோக்கி/ “(அவரை தண்டிக்க வேண்டாம்.) விட்டு விடுஙகள். ஏனெனில்/ ஒருவர் தனக்குக் கடன் தர வேண்டியவரிடம் கடுமையாகப் பேச உரிமையுண்டு. அவருக்காக ஓர் ஒட்டகத்தை வாஙகி அவரிடமே கொடுத்து விடுஙகள் என்று கூறினார்கள். நபித் தோழர்கள்/ அவருக்குத் தர வேண்டியது ஒட்டகத்தின் வயதை விட அதிக வயதை உடைய ஒட்டகம் தான் எஙகளிடம் இருக்கின்றது என்று கூறினார்கள். அதற்கு நபி صلى الله عليه وسلم அவர்கள்/ அதையே வாங்கி அவருக்குக் கொடுத்து விடுங்கள். ஏனெனில்/ உங்களில் எவர் நல்ல முறையில் கடனைத் திருப்பிச் செலுத்துகின்றாரோ அவரே உஙகளில் சிறந்தவர்“ என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரீ)
அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்,”நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர மக்களின் பொறுப்பாளர்ஆவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண்/ தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன்/ தன் பொறுப்புகளுக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். பெண்/ தன் கணவனின் வவீட்டாருக்கும்/ அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி ஆவாள. அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். ஒருவருடைய பணியாள் தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே! உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்புபக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்.” (நூல்: புகாரீ – ஹதீஸ் எண் : 7138)