டாக்டர் D. முஹம்மது கிஸார் M.B.B.S., D.C.H.,
மஞ்சள் காமாலை என்பது இரத்தத்தில் உள்ள பிலிருபின் (Bilirubin) என்ற பித்த உப்பு அளவு அதன் சாதாரண அளவை தாண்டுவதால் ஏற்படும் தன்மை. இது ஒரு நோய் அல்ல மாறாக நோயின் அறிகுறி நார்மலாக பிலிருபின் (Bilirubin) அளவு இரத்தத்தில் 1மி.கிஃடெ.லிக்கு கீழ் இருக்க வேண்டும். இதை மூன்று வகையாக பிரிக்கலாம்.
1. கல்லீரல் பாதிப்பால் மஞ்சள் காமாலை:
(HEPATIC JAUNDICE)
இது கல்லீரல் நோயின் காரணமாக கல்லீரல் தனது வேலையை ஒழுங்காக செய்யாத தால் இரத்தத்தில் அதன் பித்த உப்பான அளவு கூடி மஞ்சள் காமாலை கண், நகம், தோல் ஆகியவற்றில் தெரிகிறது இதன் பாதிப்பு கல்லீரல் முற்றிலும் செயல் இழந்து விடுதல் வயிற்றில் தண்ணீர் தேங்குதல் போன்ற விளைவுகள் ஏற்படலாம்.
காரணம்:
1) வைரஸ் கிருமிகள் Hepatitis A, B, C, D, E
2) பாக்டீரியாக்கள்
3) சில வகை மாத்திரைகள் Hepatitis A, E நீர் மூலம் மலம் மூலம் பரவுகிறது. Hepatitis B, C, D, இரத்த மூலம் (இரத்தம் கொடுக்கும் போது பரவுகிறது) சுத்தப்படுத்தாத ஊசி ஒரு ஊசி பலருக்கு போடுதல் தாயின் மூலம் சேய் போன்றவற்றால் B, C, D காமாலை பரவுகிறது.
மாத்திரை : பாரசட்டமால் டெட்ராசைக்ளின் போன்றவை.
வைத்தியம் : கல்லீரலுக்கு வேலை தராமல் ஓய்வு கொடுப்பது கொழுப்பு எண்ணெய் போன்றவை தவிர்க்க வேண்டும். தேவையற்ற மாத்திரை எடுக்கக் கூடாது. அதிகமாக குளுக்கோஸ், கரும்பு சாறு, மோர் பானங்கள் அருந்த வேண்டும். கல்லீரல் பதப்படுத்தும் டானிக் சாப்பிடலாம் இதற்கான தடுப்பூசி இப்போது உள்ளது. மஞ்சள் காமாலை (A) தடுப்பூசி 2 வயதுக்கு மேல் 2 டோஸ் 6 மாத இடைவெளியில் மஞ்சள் காமாலை (B) தடுப்பூசி 3 டோஸ் 1 மாத இடைவெளியில் பிறந்த உடன் போட ஆரம்பிக்கலாம்.
2. பித்த நீர் செல்லும் பாதை அடைப்பால் வரும் மஞ்சள் காமாலை
(Obstructive Jaundice)
கல்லீரல் மற்றும் பித்தபையில் இருந்து பித்த நீர் பித்த குழாய் வழியாக குடலுக்கு செல்லும் வழியில் பித்த குழாயில் அடைப்பு காரணமாக வரும் மஞ்சள் காமாலை உடன் தோலில் சொறைச்சல் இருக்கும் மலம் களிமண் நிறத்தில் போகலாம் இதற்கான காரணங்களை பிறவியிலேயே பித்த குழாயில் அடைப்பு பித்த குழாய் வழியின் கட்டி மற்றும் பிறவி வேதியியல் குறைபாடுகள். இதற்கு தகுந்த பரிசோதனைக்கு பின் அறுவை சிகிச்சை அவசியம் இந்த மஞ்சள் காமாலை சாதாரண மஞ்சள் காமாலை போல உணவு பத்தியம் மாத்திரை மூலம் குணப்படுத்துவது கடினம்.
3. சிவப்பு அணுக்கள் சேதமடைவதால் வரும் மஞ்சள் காமாலை
(Haemolytic Jaundice)
இது (R, B, C) எனும் சிவப்பு அணுக்கள் சீக்கிரமாக சேதம் அடைவதால் வரும் காமாலை இதற்கு இரத்த சிவப்பு அணுக்கள் பரம்பரை சம்பந்தப்பட்ட குறைபாடுகளால் வருவது அரிதாகும். சில நேரம் மலேரியா போன்ற கிருமிகள் அதிகம் தாக்குதல் வரும் போது இந்த காமாலை வருகிறது. தவறாக இரத்தம் ஏற்றுவதால் கூட வரலாம்.
4. பச்சிளங் குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை
பிறந்த உடன் பச்சிளங் குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை வருவது இயல்பானதே இதற்கு (Physiological Jaundice) என்று பெயர்.
1) பிறந்து இரண்டாவது நாளில் மஞ்சள் காமாலை ஆரம்பித்து 4-5 நாளில் அதிகம் இருந்து 10வது நாள் குறைந்துவிடும்.
2) இரத்த டீடைசைரடிin அளவு 15 மி.கிராம் வரை செல்லலாம் இந்த மஞ்சள் காமாலை பற்றி கவலை இல்லை தானாகவே சரியாகி விடும். கொஞ்சம் அதிகம் இருந்தால் காலை வெயிலில் காட்டலாம்.
கவலைப்பட வேண்டிய மஞ்சள் காமாலை
அ) பச்சிளங்குழந்தைகளில்
1) மஞ்சள் காமாலை பிறந்த முதல் நாள் வந்தால் 2) மஞ்சள் கால் வரை பரவி இருந்தால் 3) இரண்டு வாரம் வரை குறையாமல் இருந்தால்
4) குழந்தை சோர்வுற்றுக் காணப்பட்டால் 5) தாய்க்கு இரத்த குருப் நெகடிவ் ஓ குருப் ஆக இருந்து 2வது அதற்கு மேல் பிரசவமான குழந்தை 6) பிறவி குறைபாடுள்ள குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை.
ஆ) பிறந்த முதல் நாள் மஞ்சள் காமாலைக்கு காரணம்:
1) இரத்த குருப் ஒவ்வாமை தாய்க்கு Negative Group சேய் Positive தாய் O Group வேறு குருப்
2) கர்ப்ப காலத்தில் கிருமிகளின் தாக்குதல்.
3) தாய் எடுத்த சில மாத்திரைகள்.
4) பிறவி இரத்த சிவப்பணு குறைபாடு.
இ) பிறந்த 3 வது நாளுக்கு மேல் வரும் மஞ்சள்
1) இரத்தத்தில் கிருமி தாக்குதல்.
2) பச்சிளங்குழந்தை கல்லீரல் கோளாறு.
3) பித்த நீர் போகும் வழியில் அடைப்பு.
4) மிக அரிதாக தாய்ப்பலால் (தாய்ப்பால் நிறுத்தக்கூடாது).
5) சிறு குடல் அடைப்பு.
6) பரம்பரை வேதியியல் குறைபாடு.
7) தைராய்டு குறைப்பாடு.
ஈ) பிறந்த 2வது நாள் முதல் 3வது நாளுக்கும் ஆரம்பமாகும் மஞ்சள்
காமாலை காரணம்:
1) இயல்பான மஞ்சள் காமாலை.
2) குறை மாத குழந்தைகளுக்கு வரும் மஞ்சள் காமாலை.
வைத்தியமுறை:
1) இயல்பான மஞ்சள் காமாலை குழந்தையை வெயிலில் காட்டினால் போதும் அல்லது டியூப் லைட் வெளிச்சத்தில் கீழ் வைக்கலாம்.
2) தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
3) தாய்க்கு Negative Group ஆனால், முதல் பிரசவத்திலே அதற்கான பிரத்யோக ஊசி போட வேண்டும்.
மருத்துவரின் அறிவுரைப்படி பரிசோதனை செய்து Photo therapy எனும் லைட் கீழ் கொடுக்கும் சிகிச்சை அல்லது இரத்த மாற்றும் சிகிச்சை பெறலாம். மேல் சொன்ன கவனமாக இருக்க வேண்டிய மஞ்சள் காமாலை தென்பட்டால் உடனே மருத்துவரை கலந்தாலோசிக்கவும் பரிசோதனை மற்றும் சிகிச்சை முறைகளைப் பற்றி முடிவு செய்வதில் உங்கள் மருத்துவரே சிறந்தவர். குறையாக குழந்தை மற்றும் எடை குறையுள்ள குழந்தைக்கு மஞ்சள் காமாலை ஏற்பட்டால் உடனே மருத்துவரை அவசியம் கலந்தாலோசிக்கவும்.
தடுப்புமுறை (எல்லா வயதினருக்கும்):
தண்ணீரை கொதிக்க வைத்து குடிப்பது 2 கழிவறை பயன்படுத்துவது 3 தடுப்பூசிகள் போட்டுக் கொள்வது Hepatitis B, Hepatitis A 4) ஊசி போடும் போது ஒவ்டிவாரு முறையும் புது Needle பயன்படுத்துவது 5) இரத்தம் ஏற்றும் போது கவனம் 6) தாய் கருவுற்றிருக்கும் போது சரியாக பேறுகால முன் பரிசோதனை செய்து அதற்கான இரத்த பரிசோதனை செய்து மருத்துவரின் அறிவுரையை நடைமுறை படுத்துவது.
டாக்டர் D. முஹம்மது கிஸார் M.B.B.S., D.C.H.,
சாமு சஜியா பேபி கிளினிக்
57, போர்ச்சுகீசியர் சர்ச் தெரு,
ஏழுகிணறு, சென்னை-600 001.
போன் : 2526 6464