Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

அன்று இடித்தவர்கள், இன்று பரிகாரம் தேடுகிறார்கள்! (2)

Posted on January 11, 2009July 2, 2021 by admin

கேள்வி: உங்கள் நண்பர், அவர் தந்தையின் இஸ்லாம் பற்றி கூறினீர்கள். நீங்கள் இஸ்லாத்தை தழுவியதைப்பற்றி கூறுங்களேன்?

பதில்: முஹம்மது உமர் இஸ்லாத்தை ஏற்ற நிகழ்ச்சி நான் இஸ்லாத்தை ஏற்ற நிகழச்சியின் முதல் பகுதிதான். இதோ நான் இஸ்லாத்தை ஏற்றதை கூறுகிறேன்! கேளுங்கள்.

9-மார்ச் 1993-ல் எனது தந்தை திடீரென மாரடைப்பால் மரணித்து விட்டார். பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டதும் அதில் நான் பங்கெடுத்ததும் அவரை மிகவும் பாதித்திருந்தது. அவர் ஏன் தாயரிடம்,

“இறைவன் நம்மை ஏன் முஸ்லிமாக படைக்கவில்லை?

முஸ்லிம் குடும்பத்தில் பிறந்திருப்பின் குறைந்த பட்சம் அநீதம் இழைக்கப்பட்டவர்களில் நானும் ஒருவனாகியிருப்பேனே?

அநீதி இழைக்கும் கூட்டத்தாரில் நம்மைபிறக்கச் செய்து விட்டானே?” என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார்.

மேலும் தான் இறந்த பிறகு தனது இறுதி சடங்கில் நான் கலந்து கொள்ளக்கூடாது என்றும்,

தனது சடலத்தை அநீதம் செய்யும் கூட்டத்தாரின் வழமை போல் எரிக்கக் கூடாது

ஹிந்துக்களின் அடக்கஸ்தலங்களுக்கும் எடுத்துச் செல்லக்கூடாது.

மண்ணில் புதைத்துவிடுங்கள் அல்லது தண்ணீரில் மூழ்கடித்து விடுங்கள் என்று தமது ஆசையை வெளிப்படுத்துயிருந்தார். (மறுமையில் இவர்களின் நிலை  என்ன என்பதை அல்லாஹ் ஒருவனே அறிவான்)

எங்களது வீட்டினர் அவரது ஆசைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்தனர். எட்டு தினங்களுக்குப் பிறகே அவரது மரணச் செய்தியை கேள்விப்பட்ட நான் மிகவும் நொடிந்துவிட்டேன். என் உள்ளம் நொறுங்கிவிட்டது.

“அவர் இறந்த பிறகுதான் பாபரி மஸ்ஜிதை இடித்தது எனக்கு அநீதியாகப்பட்டது எனது பெருமை அனைத்தும் கைசேதமாக தெரிந்தது.”

நான் மிகவும் மனம் வெதும்பி எனது இல்லம் சென்றடைந்தபோது எனது தாய் என் தந்தையின் கவலையை பிரஸ்தாபித்து அழுது கொண்டிருந்தார்;. ஒரு சிறந்த தந்தையை துன்புறுத்தி கொன்றுவிட்டாயே! நீ ஒரு மனுஷனா? என்று இழத்துரைத்தார். இதன் பின் வீட்டிற்கு செல்வதை நிறுத்திக் கொண்டேன்.

யோகேந்தர்பாலுடன் சந்திப்பு

ஜுன், 1993-ல் முஹம்மது உமர் (யோகேந்தர்பால்) ஜமா அத்திலிருந்து பானிபட் வந்து என்னை சந்தித்தார். தனது சம்பவங்கள் அனைத்தையும் எடுத்துக் கூறினர். இரண்டு மாதங்களாக வானிலிருந்து ஆபத்து ஏதும் எனக்கு இறங்கிடுமோ என்று பயந்தேன். தந்தை இறந்த கவலையும் பாபரி மஸ்ஜித் இடிப்பும் என்னை வாட்டி வதைத்தன. முஹம்மது உமரின் சம்பவம் கேட்டு மேலும் கலக்கம் அடைந்தேன்.

ஜுன், 23ஆம் தேதி மௌலானா கலீம் சித்தீகி அவர்கள் சோனிபட் வரவிருப்பதாகவும் அவர்களை சந்தித்து அவர்களுடன் சில நாட்கள் தங்குவது தான் சிறந்தது எனவும் முஹம்மது உமர் மிகவும் வலியுறுத்தி கூறினார். நான் மௌலானாவை சந்திக்க திட்டமிடலானேன் எனினும் நான் சென்றடைவதில் காலதாமதம் ஏற்பட்டுவிட்டது எனக்கு முன்பாகவே முஹம்மது உமர் சென்று என்னை பற்றிய முழு விபரத்தையும் மௌலானாவிடம் தெரியப்படுத்திவிட்டார்.

நான் மௌலானாவிடம் சென்ற போது மிகவும் அன்புடன் வரவேற்றார்கள். மேலும் யோகேந்தர்பாலுக்கு அல்லாஹ் தண்டனை அளித்தது போல் நீங்கள் செய்த பாவத்திற்கும் அல்லாஹ் தண்டனை அளித்திருக்க முடியும். அதே சமயம் இவ்வுலகில் தண்டனை கிடைக்காவிட்டாலும் மறுமையின் தண்டனை நிரந்தரமானது அத்தண்டனை எப்படியிருக்குமென உமது சிந்தனைக்கே எட்டாது என்றார்கள்.

முஸ்லிமாவதே தீர்வு:

ஒரு மணி நேரம் மௌலானவுடன் அமர்ந்த பின் “இறை வேதனையிலிருந்து தப்ப முஸ்லிமாகுவதே தீர்வு என தீர்மானித்தேன்” மௌலானா இரண்டு நாட்கள் பயணத்தில் செல்லவிருப்பதை அறிந்து நானும் உடன் வருகிறேன் என்றேன். அவர்களும் சம்மதித்தார்கள். டில்லி, ஹரியானா, கூர்ஜா ஆகிய இடங்கள் சென்று ‘புலத்’ வந்தோம் இதற்கிடையில் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள நான் தயாராகிவிட்டேன். இந்த எனது எண்ணத்தை சகோதரர் உமரிடம் கூறிய போது அவரும் சந்தோஷப்பட்டு மௌலானவிடம் தெரிவித்தார்.

“அல்ஹம்துலில்லாஹ்! ஜுன் 25, 1993 அன்று லுஹர் தொழுகைக்குப்பின் புனித இஸ்லாத்தை தழுவினேன். மௌலானா எனக்கு முஹம்மது ஆமிர் என்று பெயரிட்டார்கள்.

தொழுகை மற்றும் அடிப்படை விஷயங்களை தெரிந்து கொள்ள என்னை புலத்தில் தங்கியிருக்க மௌலானா ஆலோசனை அளித்தார்கள் எனது மனைவியும், சிறு குழந்தையும் தனியாக இருப்பதை கூறியபோது எனக்காக ஒரு வீட்டையும் ஏற்பாடு செய்தார்கள். நான் சில மாதங்கள் புலத்தில் குடும்பத்துடன் தங்கி எனது மனைவிக்கும் இஸ்லாத்தை எடுத்துச் சொன்னேன். அல்ஹம்து வில்லாஹ்! மூன்று மாதத்தில் என் மனைவியும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.

கேள்வி: உங்களது தாய் உங்கள் மீது வருத்தத்தில் இருந்ததால் நீங்கள் இஸ்லாத்தைத் தழுவியதைப் பற்றி என்ன கூறினார்?

பதில்: நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை கூறிய போது மிகவும் சந்தோஷமடைந்து இப்போது தான் உன் தந்தையின் ஆத்மா சாந்தியடையும் என்று கூறினார். அதே வருடம் என் தாயாரும் இறைவன் அருளாள் முஸ்லிமாகிவிட்டார்.

கேள்வி: உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன?

பதில்: “அல்லாஹ்வுடைய மஸ்ஜிதை இடித்ததற்கு பகரமாக பாழடைந்த மஸ்ஜிதுகளை நான் புதுப்பிக்க வேண்டும். சகோதரர் உமர் புதுப்பள்ளிகளை உருவாக்க வேண்டும்” என்று நாங்கள் இருவரும் உறுதி எடுத்துக் கொண்டோம். மேலும் இப்பணியில் ஒருவருக் கொருவர் துணையாக இருந்து வாழ்நாளில் மஸ்ஜிதுகளை உருவாக்கவும், 100 மஸ்ஜிதுகளை புதுப்பிக்கவும் இலக்கு நிர்ணயித்தோம்.

அல்ஹம்துலில்லாஹ்! டிசம்பர் 6-2004க்குள்- இந்தப்பாவி ஹரியானா, பஞ்சாப், டில்லி, மீரட், கேன்ட் ஆகிய இடங்களில் பாழடைந்த அபகரிக்கப்பட்ட 13 மஸ்ஜித்களை புனர் நிர்மாணம் செய்துள்ளேன். சகோதரர் உமர் என்னையும் விஞ்சி 20 மஸ்ஜித்களை கட்டி முடித்து 21வது மஸ்ஜிதுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார்.”

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 6 அன்று நான் பாழடைந்த ஒரு மஸ்ஜிதில் தொழுகையை ஆரம்பிக்க வேண்டும். சகோதரர் உமர் புதுப்பள்ளிக்கு அடிக்கல் நாட்ட வேண்டும் என்றும் முடிவு செய்துள்ளோம். அல்ஹம்துலில்லாஹ்! எந்த வருடமும் எங்களுக்கு தவறவில்லை. எனினும் 100 என்ற இலக்கு தூரமாகவே உள்ளது. இவ்வாண்டு 8 பள்ளிகள் பற்றி பேச்சுவார்த்தை நடக்கிறது. சில மாதங்களில் அங்கும் தொழுகை ஆரம்பிக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

சகோதரர் உமர் என்னைவிட ஆரம்பத்திலிருந்தே முன்னிலையில் உள்ளார் எனது பங்கும் அவருக்குரியதே என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் என்னை இருளிலிருந்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததே அவர்தான்.

தற்சமயம் நான் ‘ஜுனியர் ஹைஸ்கூல்’ நடத்தி வருகிறேன். இஸ்லாமிய போதனைகளுடன் ஆங்கிலவழிக் கல்வியும் உள்ளது.

கேள்வி: நீங்கள் முஸ்லிமான பிறகு உங்களது தாயார் முஸ்லிமாகிவிட்டார்கள் சரி. உங்கள் குடும்பத்தில் வேறு யாரும் இஸ்லாத்தை ஏற்றுள்ளார்களா?

பதில்: எனது மூத்த சகோதரரின் மனைவி நான்கு வருடங்களுக்கு முன் மரணித்துவிட்டார். நான்கு சின்னஞ்சிறு குழந்தைகள் அவரக்குண்டு. அதில் ஒரு குழந்தை ஊனம். எனக்கு பிறகே அண்ணணுக்கு திருமணம் நடந்தது. எனது அண்ணி சிறந்த பெண்ணாகவும் முன்மாதிரி மனைவியாகவும் நடந்து கொண்டதினால் அவரது மரணத்தால் எனது அண்ணன் மிகவும் பாதிக்கப்பட்டார். அவரது பிள்ளைகளை என் மனைவியே பராமரித்து வந்தார். என் மனைவியின் இச்சேவையினால் எனது அண்ணன் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

நான் அவருக்கு இஸ்லாமிய அழைப்பு விடுத்தேன் என் தந்தையின் மரணத்திற்கு நான் காரணமாக இருந்ததால் அவர் என்னை நல்ல மனிதராகவே கருதவில்லை.

ஸஹாபாக்கள் செய்தது போன்ற தியாகம்

நான் என் மனைவியிடம் “நம் பிள்ளைகள் பெரிய பிள்ளைகள் என் சகோதரர் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் உள்ளார். எனவே நான் உன்னை விவாகரத்து செய்து நீ இத்தா காலம் முடிந்தபின் என் சகோதரர் முஸ்லிமாக தயாராகிவிட்டால் அவரை நீ திருமணம் செய்துகொள். இது இருவரின் வெற்றிக்கும் வழிகோலாகும் என்றேன்”.

ஆரம்பத்தில் சம்மதிக்காத எனது மனைவி விளக்கிக் கூறியவுடன் ஏற்றுக்கொண்டார். எனது அண்ணனிடமும் நீங்கள் முஸ்லிமாகி குழந்தைகளின் வாழ்க்கைக்காக எனது மனைவியை திருமணம் செய்து கொள்ளுங்கள். அவன் தன் பிள்ளைகளைப் போன்று உங்கள் பிள்ளைகளை கவனித்துக் கொள்வாள் என்றேன் ஊராரை பயந்து தயங்கிய என் சகோதரரும் பிறகு சம்மதித்தார்.

பிறகு என் மனைவியை தலாக் கூறிவிட்டேன். இத்தா கழிந்த பிறகு என் சகோதரருக்கு கலிமா சொல்லிக்கொடுத்து அவருடன் திருமணமும் செய்து வைத்தேன். அல்ஹம்துலில்லாஹ்! அவர் இப்போது சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். எனது குழந்தையும் அவருடனேயே வசிக்கிறது.மௌலானா அவர்களின் ஆலோசனைப்படி புதிதாக இஸ்லாத்தை ஏற்ற வயதான ஒரு பெண்ணை நான் திருமணம் செய்து அல்ஹம்துலில்லாஹ்! சந்தோஷமாக வாழந்து வருகிறோம். (சுப்ஹானல்லாஹ்! ஈமானில் உறுதியிருந்தால் இன்றும் ஸஹாபாக்களின் மலைக்க வைக்கும் தியாகங்களை மீண்டும் பிரதிபலிக்க முடியும் என்பதை முஹம்மது ஆமிர் உணர்த்தி விட்டார்.)

கேள்வி : நீங்கள் முஸ்லிம் சகோதரர்களுக்கு கூற விரும்புவதென்ன?

பதில் : 1. முஸ்லிம்கள் தமது வாழ்வின் இலட்சியத்தை அறிந்து கொள்ள வேண்டும்.

2. இஸ்லாத்தை மனிதகுலத்திற்காக நம்மிடம் ஒப்படைக்கபட்ட அடைக்கலப்பொருளாகக் கருதி அதை முழு மனித சமுதாயத்திற்கும் சேந்த்து வைக்கவேண்டும்.

3. ஒரு சில இஸ்லாமிய விரோதிகளை பார்த்து மற்ற மக்களையும் அவ்வாறு எடை போடாதீர்கள். அவர்களிடம் பழிவாங்கும் எண்ணத்தை மேற்கொள்ளாதீர்கள்.

4. பாபர் மஸ்ஜித் இடிப்பில் கலந்து கொண்ட சிவசேனா, பஜ்ரங்தள் மற்றுமுள்ள ஹிந்து சகோதரர்களுக்கு இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம்கள் யார்? குர்ஆன் என்பது என்ன? மஸ்ஜித்தின் மகத்துவம் என்ன? போன்ற விபரங்கள் உண்மையான முறையில் தெரிந்திருக்குமேயானால் நிலைமையே வேறு ஒவ்வொரு ஹிந்து சகோதரரும் பள்ளியை கட்டும் எண்ணம் கொண்டிருப்பார். பள்ளியை இடிக்கும் பேச்சுக்கே இடமில்லாது போயிருக்கும் இது அனுபவப்பூர்வமான உண்மை.

5. பால் தாக்கரே, வினய் கட்டியார், உமா பாரதி, அசோக்சிங் கால் போன்ற உயர்மட்டத் தலைவர்களுக்கு இஸ்லாத்தின் உண்மை நிலை தெரிந்திருக்குமேயானால் நிச்சயமாக அத்தலைவர்களில் ஒவ்வொருவரும் தமது சொந்தப்பணத்தில் பாபர் மஸ்ஜிதை நிர்மாணிப்பதை தங்கள் வாழ்க்கையில் தங்களுக்குக் கிடைத்த மிகப்பெரும் பேறாக கருதியிருப்பர்.

6. நாட்டில் முஸ்லிம் விரோதிகளாக வலம் வருபவர்கள் 100கோடி ஹிந்துக்களில் ஒரு இலட்சம் கூட இருக்க மாட்டார்கள். ஒரு இலட்சம் என்பதே அதிகம் தான் 99 கோடியே 99 இலட்சம் மக்கள் என் தந்தையைப் போன்று மனிதநேய நண்பர்களாக, இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளை உளமாற நேசிப்பவர்களாகவே இருக்கின்றனர்.

என் தந்தை (ஃபித்ரத்) படைப்பால் முஸ்லிமாக இருக்க வில்லையா? முஸ்லிம்கள் அவருக்கு தீனை எடுத்துரைக்காததினால் நிராகரிப்பிலேயே இறந்துவிட்டார். இது என் மீதும் என் தந்தை மீதும் முஸ்லிம்கள் செய்த மிகப்பெரும் அநீதியல்லவா?

பாபர் மஸ்ஜிதை இடித்த என்னைவிட அநியாயக்காரர்கள் யாருமிருக்க முடியாது என்பது மறுக்கவியலாத உண்மை. ஆனால் என்னைவிட கொடுமைக்காரர்கள் யார் தெரியுமா? முஸ்லிம்கள்தான் அழைப்புப்பணியில் அவர்களின் அலட்சியம் பொடுபோக்கு என் பிரியமான தந்தையை நரகிற்கு தள்ளிவிட்டது.

7. மௌலானா கலீம் சித்தீகி அவர்கள் “இஸ்லாம் முஸ்லிம்கள் பற்றி அறியாத காரணத்தினால் தான் பாபர் மஸ்ஜிதை இடித்துள்ளனர்’ என்று கூறியது முற்றிலும் உண்மை.

ஆம்! நாங்கள் அறியாமையால் தான் இந்த அநியாயத்தை கையாண்டோம். ஆனால் முஸ்லிம்கள் அறிந்து கொண்டே அம்மக்கள் நரகம் செல்ல காரணிகளாக இருக்கின்றனர்.

என் தந்தை நிராகரிப்பில் மரணித்துவிட்டார் என்ற எண்ணம் இரவில் ஏற்பட்டுவிட்டால் என் தூக்கம் பறந்துவிடும் வாரக்கணக்கில் தூக்கம் வராது தூக்க மாத்திரை சாப்பிடும் நிலைக்கு தள்ளப்படுவேன்.

இந்த வேதனையை, வலியை முஸ்லிம்கள் உணர வேண்டுமே!

– from Manaarul Hudha , Tamil monthly.

www.nidur.info

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 1 = 4

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb