Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

தொடரும் இஸ்ரேலின் அராஜகம்

Posted on December 30, 2008 by admin

إِنَّ الَّذِينَ فَتَنُوا الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ ثُمَّ لَمْ يَتُوبُوا فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ الْحَرِيقِ

 “நம்பிக்கை கொண்ட ஆண்களையும்,  பெண்களையும் துன்புருத்தி விட்டு பின்னர் பாவமன்னிப்புக் கோராதவர்களுக்கு நரகத்திகன் வேதனை இருக்கிறது அவர்களுக்கு பொசுக்கும் வேதனை உண்டு.“ திருக்குர்ஆன் 85:10.

அநியாயம் இழைக்கும் ஒரு சமுதாயத்தை இறைவன் முழவதுமாக அழிக்க நாடினால் அந்த சமுதாயத்தை அவர்களுடைய வழிகேட்டிலேயே விட்டு அநியாயமும், அட்டூழியமும் செய்து குற்றத்தை அதிகப்படுத்த விடுவான்.

அத்துடன் அவர்கள் மீதான அவனுடையப; பிடி இறுகுவதற்கான காலக்கெடுவையும் விதித்து விடுவான். அதுவரை அவர்களால் முடிந்தவரை அத்து மீறிக் கொண்டே இருப்பார்கள்.

அவனது இறுதிப்பிடிக்கு முன் அந்த சமுதாயத்திற்கு படிப்பினைக்காக பஞ்சத்தை ஏற்படுத்துவான் அதிலும் அவர்கள் படிப்பினைப் பெறாவிடில் தனது பிடியை இறுக்குவான் அதிலிருந்து அவர்கள் மீள முடியாது.

அவனுடைய அந்தப் பிடிக்குள் இறுகி அந்த சமுதாயம் சிக்கி சின்;னாப்பின்னமாகி அதனுடைய நிலைமை தலைகீழாகப்புரண்டுவிடும். ….அவர்கள் விஷயத்தில் தீங்கு செய்வதற்கு அல்லாஹ் அவசரப்பட்டிருந்தால் அவர்களின் காலக்கெடு அவர்களுக்கு முடிக்கப்பட்டிருக்கும் நமது சந்திப்பை நம்பாதவர்களை அவர்களது அத்து மீறலில் விட்டு விடுவோம்.10:11

இராக், ஆப்கான், பலஸ்தீனப் பகுதிகளுக்குள் அத்து மீறி சென்று அப்பாவி மக்களின் மீது குண்டுகளை வீசியும்> துப்பாக்கியால் சுட்டும் வீழ்த்துகின்றவர்களின் சொந்த நாட்டு மக்களுடைய இன்றைய நிலை என்னத் தெரியுமா ?

வெளியிலிருந்து வந்து யாரும் அவர்களின் மீது குண்டு வீசவோ> துப்பாக்கியால் சுடவேண்டிய அவசியமோ இல்லாத அளவுக்கு தங்களைத் தாங்களே சுட்டு மடித்துக் கொள்ளும் அவல நிலையை இறைவன் ஏற்படுத்தினான்.

அமெரிக்காவில் ஏற்பட்ட வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சியினால் அமெரிக்கர்களின் கடன் அதிகரித்து அதை அடைக்;க முடியாமல் வீடுகளை இழந்து வீதிக்கு வர வெட்கப்பட்டவர்கள் தங்களைத் தாங்களே துப்பாக்கியால் சுட்டு மடித்துக் கொண்டனர் இது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

இறைவன் அவர்கள் மீது ஏற்படுத்திய இந்தப் பஞ்சத்தின் மூலம் படிப்பினைப் பெற்று பிற சமுதாயத்தை நசுக்குவதிலிருந்து பின் வாங்கவில்லை எனில் இறைக்கட்டளைப் படி அவர்கள் மீது இறைவனுடையப பிடி இறுகுவதை யாரும் தடுக்க முடியாது.

அரபு நாடுகளிடமிருந்து ஏராளமான நிதியுதவி அமெரிக்காவுக்கு சந்து வழியாக அனுப்பப்படுவதினாலும்> ஏற்கனவே அரபு நாட்டு எண்ணெய் ஏற்றுமதியில் இலவச விகிதாச்சார பகல் கொள்ளையினாலும் அமெரிக்காவுக்கு முட்டுக் கொடுத்து நிருத்தப்பட்டுள்ளது.

இது எவ்வளவு நாள் நீடிக்கும் இறைவன் விதித்த காலக்கெடு வந்து விட்டால் அரபு நாடுகள் மட்டுமல்லாது மொத்த உலகமே தங்களது பொருளாதாரத்தைக் கொட்டி முட்டுக் கொடுக்க முயன்றாலும் முடியாது. “உமது இறைவனின் பிடி கடுமையானது.“ திருக்குர்ஆன் 85:12

அமெரிக்காவுடைய இன்றைய இந்த நிலமையைக் கண்டு உலகில் எந்த மக்களும் ஐயோப் பாவமே! என்று சொல்ல வில்லை. காரணம் அவர்களுடைய “ஹிரோஷிமா“ மீது அணுகுண்டு வீசியதிலிருந்து இன்றைய பலஸ்தீன தாக்குதல் வரை மக்கள் அவர்களுடைய அடாவடித் தனத்தைக் கண்டு வருவதால் அவர்களின் மீது அனுதாபம் ஏற்படவில்லை.

அமெரிககாவினுடைய அடுத்த கோர முகம் தான் இஸ்ரேல் என்பதை யாரும் மறுக்க முடியாது. அந்த இரட்டை கோரமுகத்தையும் இறைவன் அழித்தொழிக்கும் காலம் விரைவில் வரும்.

அதற்காக நாம் ஒவ்வொருவரும் இறைவனிடம் அழுது மன்றாடி இறைஞ்சுவதிலிருந்து பின் வாங்கி விட வேண்டாம்.

இறைவன் அறிந்தவன். இறைவன் மீது பொறுப்பு சாட்டுங்கள்

தொடர்ந்து இரண்டு நாட்களாக அநியாயமாக கொல்லப்பட்ட பலஸ்தீன சகோதர, சகோதரிகளுடைய மறுமை வாழ்க்கைக்காக பிரார்த்தியுங்கள்.

அஸ்ஸலாமு அலைக்கும் அஹ்லத் தியாரி, மினல் முஃமினீன வல் முஸ்லிமீன, வ இன்னா இன்ஷா அல்லாஹூ பிகும் லாஹிகூன (வயர்ஹமுல்லாஹூல் முஸ்தக்திமீன மின்னா வல் முஸ்தாஹிரீன) அஸாலுல்லாஹ லனா வலக்குமுல் ஆஃபியத்த

பொருள்:  விசுவாசிகள் மற்றும் முஸ்லிம்களிலுள்ள வீடுகளை உடையோரே! உங்கள் மீது ஸலாம் உண்டாவதாக! நிச்சயமாக நாங்களும் அல்லாஹ் நாடினால் உங்களோடு வந்து சேரக்கூடியவர்கள், (நம்மில் முந்தியவர்களுக்கும், நம்மில் பிந்துகிறவர்களுக்கும் அல்லாஹ் அருள் செய்வானாக! எங்களுக்கும், உங்களுக்கும் அல்லாஹ்விடம் சுகத்தைக் கேட்கிறேன். அறிவிப்பாளர்: புரைதா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நூல்: முஸ்லிம், இப்னுமாஜா

அவர்களுடைய திடீர் பிரிவால் வாடி வதங்கும் அவர்களுடைய பச்சிளங் குழந்தைகளுடைய எதிர் காலத்துக்காக இறைவனிடம் பிரார்த்தியுங்கள்.

அநீதியாளர்களை அல்லாஹ்விடம் ஒப்படையுங்கள் அல்லாஹ்வின் பிடி கடுமையானது

“உமது இறைவனின் பிடி கடுமையானது“. திருக்குர்ஆன் 85:12

“அவர்கள் தமது இறைவனின் கட்டளையை மீறினர். எனவே அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவர்களை இடிமுழக்கம் தாக்கியது. திருக்குர்ஆன் 51:44

அவர்கள் எழுந்து நிற்கவும் சக்தி பெறவில்லை, அவர்கள் உதவி பெறுவோராகவும் இல்லை.“ திருக்குர்ஆன் 51: 45

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

“நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.” திருக்குர்ஆன். 3:104

 

-அதிரை ஏ.எம்.பாரூக்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

24 − = 22

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb