புது தில்லி: கான்டாக்ட் லென்ஸ்களை தொடர்ந்து பயன்படுத்தினால் கண்கள் விரைவில் பாதிப்புக்குள்ளாகும் என கண் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
கண்களின் நிறத்தை நீலம், பச்சை உள்ளிட்ட வண்ணங்களில் மாற்றிக்கொள்ளும் கலாசாரம் இளைஞர்கள் மத்தியில் வேகமாகப் பரவி வருகிறது. இவ்வாறு கான்டாக்ட் லென்ûஸ பயன்படுத்துவது ஆபத்து என்கின்றனர் கண் மருத்துவர்கள்.
கான்டாக்ட் லென்ஸ் பாதுகாப்பானதுதான். எனினும், அடிக்கடி கான்டாக்ட் லென்ûஸ மாற்றுவது சிலருக்கு ஒவ்வாமையை (அலர்ஜி) உண்டாக்கும். மூக்குக் கண்ணாடிக்கு மாற்றாகக் கான்டாக்ட் லென்ûஸ கருதுகிறார்கள். ஆனால், இது மாற்றல்ல. கண்ணாடிக்கு பதிலாகத் தொடர்ந்து கான்டாக்ட் லென்ûஸ பயன்படுத்தக் கூடாது.
18 வயது நிரம்பியவர்கள் மட்டுமே இதைப் பொருத்திக் கொள்ள முடியும். அதற்கு முன் லென்ஸ்கள் தரமானதுதானா என்பதை கண் மருத்துவர் மூலம் தெரிந்து கொள்ள வேண்டும். கான்டாக்ட் லென்ûஸ தொடர்ந்து பயன்படுத்துவது கண்களுக்கு நல்லதல்ல; ஏனெனில், கண்களுக்குள் ஆக்ஸிஜனை செல்லவிடாமல் லென்ஸ்கள் தடுக்கின்றன என்றார் சிறப்பு கண் மருத்துவர் எஸ்.பி. குமார்.
மற்றொரு கண் மருத்துவரான சஞ்சய் தவான், இது ஆபத்தானது மட்டுமல்ல, நோய் தொற்றையும் உண்டாக்கும் என்கிறார்.
விழிப்புணர்வு அவசியம்: கான்டாக்ட் லென்ûஸ தொடர்ந்து அணிவது, குறைந்த விலையில் கிடைக்கும் போலியான லென்ஸ்கள், தரமற்ற தயாரிப்புகள் போன்றவற்றால் கண்கள் விரைவில் பாதிப்புக்குள்ளாகும். எனவே, பொதுமக்கள் இதில் மிகுந்த விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்று கண் மருத்துவர்கள் பலரும் எச்சரிக்கின்றனர்.
சமீப ஆண்டுகளில் கான்டாக்ட் லென்ஸ் விற்பனை நல்ல வளர்ச்சி கண்டுள்ளது. இதற்கு இளைய தலைமுறையினரிடையே நல்ல வரவேற்பு உள்ளது. அழகுக்காக கான்டாக்ட் லென்ஸ் அணிவது அனைத்துத் தரப்பினரிடமும் பிரபலமாகி வருகிறது என்கின்றனர் இதன் விற்பனையாளர்கள்.