பாக்தாத்: இராக்கின் தொலைக்காட்சி நிருபர் முன்தஜர் அல் ஜைதி (வயது 29) அமெரிக்க வரலாற்றில் மகா மோசமான அதிபராக உலக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புஷ்ஷை செருப்பால் அடித்தாலும் அடித்தார் ஒரே நாளில் அவர் அரபுலக ஹீரோவாக ஆனதில் ஆச்சர்யமில்லை. ஆனால்; அதற்கு அவர் பயன்படுத்திய செருப்புமல்லவா வரலாறு படைக்க போகிறது! ஆம்! சவூதியிலுள்ள ஒருவர் அதை 1 கோடி அமெரிக்க டாலருக்கு (சுமார் ரூபாய் 48 கோடிக்கு) வாங்குவதற்கு தயாராக இருப்பதாக அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீது ஷூக்களை வீசி உலகையே தன் பக்கம் திரும்ப வைத்து விட்ட டிவி நிருபர் முன்தஜர் அல் ஜைதி இராக் மக்களின் ஹீரோவாகி விட்டார். இராக் முழுவதும் முன்தஜரை பாராட்டிக் கொண்டிருக்கிறது.
பிளவுபட்டுக் கிடந்த அரபுகளை இந்த செருப்படி சம்பவம் ஒன்றுபடுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை குறிப்பாக சிரியா நாட்டு அரசு தொலக்காட்சி திரும்பத்திரும்ப ஒளிபரப்பி முன்தஜரின் துணிச்சலைப் புகழ்ந்து அவருக்கு நன்றி மேல் நன்றியாக தெரிவித்துள்ளது.
எகிப்திலிருந்து வெளியாகும் ‘அல் பதீல’ நாளிதழில் அமெரிக்க கொடியில் இடம்பெறும் நட்சத்திரங்கள் செருப்புகளாக மாறியுள்ளன. ‘
வீடியோ கேம்
இவைகளையெல்லாம் தூக்கி சாப்பிடும் விதமாக சம்பவம் நடந்த 24 மணி நேரத்துக்குள் இந்த சம்பவத்தை ஒட்டி ‘ஆன் லைன் வீடியோ கேம்’ விளையாட்டுகள் வெளியாகி கலக்கிக் கொண்டிருக்கின்றன. சாதாரணமாக வீடியோ கேம்களில் எதிரியை சுடுவதற்கு துப்பாக்கியால் குறிபார்த்து சுடுவது போல் இந்த விளையாட்டில் விளையாடுபவர்கள் புஷ்ஷை நோக்கி செருப்பை வீச வேண்டும். செருப்பு எத்தனை முறை புஷ்ஷின் மீது படுகிறதோ அத்தனை பாயின்ட் கிடைக்கும். இப்போதைக்கு இந்த விளையாட்டு நிமிடத்துக்கு நிமிடம் உலகெங்கும் பிரபலமாகி வருகிறது. (அநேகமாக அரபுகளுக்கு மட்டுமின்றி வெனிசுலாவின் அதிபருக்கும் இந்த விளையாட்டு ரொம்பவும் பிடிக்கும் என்று நம்பலாம்.). ஆக, முன்தஜர் அல் ஜைது, புஷ்ஷின் மீது தனது வெறுப்பைக் காட்ட இரண்டு முறை செருப்பு வீசினார் என்றால் வீடியோ கேம் ரசிகர்கள் இனி லட்சக்கனக்கான முறை புஷ்ஷின் பிம்பத்தின் மீது செருப்பு வீசி தங்கள் வெறுப்பை தனித்துக் கொள்ள வாய்ப்பாக இந்த சம்பவம் அமைந்து விட்டது.
28 வயதாகும் முன்தஜர் அல் ஜய்தி, பாக்தாத்தைச் சேர்ந்த அல் பாக்தாதி என்ற தொலைக்காட்சி சேனலின் நிருபராகப் பணியாற்றி வருகிறார்.
இச்சம்பவம் குறித்து அமெரிக்க எதிர்ப்பு அமைப்பான சதர் இயக்கத்தைச் சேர்ந்த லிவா சுமீசம் என்பவர் கூறுகையில், ஒவ்வொரு இராக்கியின் மனதிலும் என்ன ஓடுகிறதோ, அதைத்தான் முன்தஜர் வெளிப்படுத்தியுள்ளார். நமது நாட்டை ஆக்கிரமித்துள்ள ஒரு நாட்டின் அதிபரைப் பார்த்தால் இராக் மக்கள் என்ன செய்ய நினைப்பார்களோ அதைத்தான் முன்டாசர் செய்துள்ளார் என்றார்.
இதற்கிடையே, முன்தஜரின் செயல் நாட்டை அவமதித்து விட்டதாகவும், இதற்காக முன்டாசர் பணியாற்றும் டிவி நிறுவன உரிமையாளர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் ஈராக் அரசு கோரியுள்ளது. ஆனால் அல் பாக்தாதி நிறுவனமோ, மன்னிப்பு கேட்க முடியாது, முன்டாசரை விடுதலை செய்யுங்கள் என்று அரசிடம் தெரிவித்து விட்டது. “முண்டாசருக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் அது சர்வாதிகாரச்செயலாக கருதப்படும்” என்றும் டி.வி.சேனல் அதிபர் கூறி இருக்கிறார்.
அல் பாக்தாதி அலுவலகத்தில் பணியாற்றும் முன்தஜரின் சக ஊழியர்கள் சிலர் கூறுகையில், சான்ஸ் கிடைத்தால் புஷ் மீது ஷூவை வீசுவேன் என்று பல மாதங்களாகவே கூறிக் கொண்டிருந்தார் முன்டாசர். தற்போது சொன்னபடி செய்து விட்டார்.
ஆரம்பத்தில் அவர் ஏதோ கோபத்துடன் சொல்கிறார் என்றுதான் நினைத்தோம். சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அவர் ஷூ வீசுவதை திட்டமிட்டு வந்தது இப்போது உறுதியாகி விட்டது.
இந்த செயலின் மூலம் அமெரிக்காவை அசிங்கப்படுத்தி விட்டார் முன்டாசர். அமெரிக்க வீரர்களுக்கும், அமெரிக்க மக்களுக்கும், புஷ்ஷுக்கும் இது மிகப் பெரிய அடி என்று அவர்கள் தெரிவித்தனர்.
இந்தநிலையில் பாக்தாத், சதர் சிட்டி என இராக்கின் முக்கியமான நகரங்களில் எல்லாம் முண்டாசரை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டங்கம் நடந்தன. சதர் சிட்டி நகரில் அமெரிக்க எதிர்ப்பு மதகுரு மொக்தாதா அல் சதர்ரின் தலைமையகம் இருக்கிறது. இங்கு நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்தபோது, அந்த வழியாக சென்ற அமெரிக்க ராணுவ வாகனங்கம் மீது எதிர்ப்பாளர்கள் ஷூக்களை வீசினார்கள். நஜப் நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது அமெரிக்க எதிர்ப்பு முழக்கங்கள் விண்ணை பிளந்தன.
அரபு நாடுகளிலும் முண்டாசருக்கு ஆதரவு பெருகுகிறது. புஷ் மீது ஷூ வீசியது, அவருககு கிடைத்த சிறந்த விடைபெறும் முத்தம் ஆகும். இதன் மூலம் இராக்கியர்களும், மற்ற அரபுக்களும் எந்த அளவுக்கு புஷ்சை வெறுக்கிறார்கள் என்பதை இந்த சம்பவம் சித்தரிப்பதாக ஜோர்டான் நாட்டு பத்திரிகை ஆசிரியர் மூசா பார்ஹோமுக் தன் பத்திரிகையில் எழுதி இருக்கிறார்.
மற்ற அரபு நாடுகளில் இருந்தும் அவரை விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது. அரபு மக்களின் பொதுவான எண்ணத்துக்கு முண்டாசர் வடிவம் கொடுத்து இருக்கிறார் என்றும் அவரை விடுதலை செய்யவேண்டும் என்றும் லெபனான் நாட்டு பேராசிரியர் ஆசாத் அபு கலீல் கூறி இருக்கிறார். அவர் தன் இணையதளத்தில் இதை குறிப்பிட்டு இருக்கிறார்.
முன்தஜரின் சகோதரர் திர்ஹாம் கூறுகையில், “முன்தஜருக்கு 29 வயதுதான் ஆகிறது. இன்னும் திருமணமாகவில்லை. இராக் ராணுவம் அவரை அடித்து உதைத்து இருக்கிறது. இதில் அவர் கைது முறிந்துவிட்டது. இடுப்பு எலும்புகளும் முறிந்தன. கண்ணுக்கு அருகேயும், கையாலும் ரத்தக்காயம் உள்ளது” என்று குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில், “அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமித்து இருப்பதையும், ஈரான்–இராக் மீது மறைமுகமாக செல்வாக்கு செலுத்துவதையும் முண்டாசர் வெறுத்து வந்தார்” என்றும் கூறினார்.
“அல்லாஹ் பெயரில் சொல்கிறேன். என் சகோதரன் தான் உண்மையான ஹீரோ. அவரை நினைத்து பெருமைப்படுகிறேன்” என்று முன்தஜரின் சகோதரி கூறினார்.
புஷ்ஷை செருப்பால் அடித்த மாவீரன்
தோழனே!
எல்லோரும்
கவலைப்படுகிறார்கள்
புஷ்ஷை நோக்கி
வீசிய செருப்பில்
குறி தவறி
போய்விட்டதே என்று…!
தோழனே!
இங்கே
பாதணி என்று
குறிப்பிடாமல்
செருப்பு என்றே
விளிம்புகிறேன்.
பாதணியை விட
செருப்பில்
வீரியம் தெறிப்பதால்..!
தோழனே!
உலகம் முழுவதும்
மக்கள் கவலைப்படுகிறார்கள்
குறி தவறிப்போய்விட்டதே என்று..!
இல்லை…. இல்லை…
ஒளிப்படத்தை
மீண்டும் பார்
புஷ் குனிந்து
கொள்ள
அமெரிக்க
தேசிய கொடியின்
மீதல்லவா பட்டு தெறித்தது…!
தோழனே!
எனக்கு கூட
ஓர் சிந்தனை
செருப்பை
வீசி பார்த்து
பயிற்ச்சி
எடுத்திருந்திருக்கலாமே என்று..!
தோழனே!
நீ ஆயுதத்தால்
தாக்கி இருந்தால் கூட
அவன் அன்றே
இறந்திருப்பான்.
செருப்படியால் அவனை
வாழும் பிணமாக
அல்லவா மாற்றிவிட்டாய்!
தோழனே!
பத்திரிக்கையாளர்களை
தீவிர சோதனை
செய்தது ஆயுதம்
வைத்திருக்கிறீர்களா என்று
ஆனால், அதை விட
அதிக வலிமையுடைய
எழுதுகோளையும், நாவையும்,
செருப்பையும் அல்லவா
உங்களுடன் எடுத்துச்
சென்றிருக்கிறீர்கள்!
தோழனே!
எனக்கும்
பாசீஸ மிருகங்களை
செருப்பால் அடிக்க
விருப்பமுண்டு.
ஆனால்
குறி தப்பாமல்
இருக்க இன்றே
பயிற்ச்சி
எடுக்க வேண்டும்!
குறி தவறினாலும்
பரவாயில்லை
பின்புறம் தேசீய கொடி
இருக்குமல்லவா?
தோழனே!
உனக்கொரு செய்தி
உன் வீரத்தை
இணையத்தில்
படித்த போது
மற்றொரு
செய்தியையும்
கண்டேன்
நடிகைக்கு கோயில்
கட்டுகிறார்களாம்.
என் சமூகத்திலும்
இளைஞர்கள்
உன்னைப் போல்
என்று செருப்பைத்
தூக்குவார்களோ
என்ற பெருமூச்சுடன்
வந்த சிந்தனையை
தவீர்க்க முடியவில்லை.
தமிழச்சி – www.tamilcircle.net