அல்லாஹ்வின் அற்புதப்படைப்பு ஒட்டகம்
AN EXCELLENT ARTICLE
விஞ்ஞானத்தினால் நிருபிக்கப்பட்ட உண்மைகளாக ஒரு சில விஷயங்கள் இருக்கிறது. அவைகள் குர்ஆனுடைய வசனங்களோடு ஒத்துப்போகும். ஆனால் விஞ்ஞானம் தன்னால் விளக்க முடியாததை அல்லது தனக்கு விளங்காததை தியரி (Theory) என்ற பெயரில், அதாவது ஊகப்படுத்தி கற்பனை மூலம் விளக்க முயற்சிக்கும். (தியரி என்ற அப்படிப்பட்ட ஊகங்கள் குர்ஆனுடைய வசனங்களோடு ஒத்துப் போகும் வரை தியரியை நம்பாதீர்கள். ஏனென்றால் தியரி பொய்த்துப் போகலாம். ஆனால் குர்ஆனுடைய வசனங்கள் ஒரு காலமும் பொய்க்காது.)
அந்த தியரியை சொல்பவர் இறை நம்பிக்கையுள்ளவராக இருந்தால் அந்த தியரி நாளடைவில் நிருபிக்கப்பட்டு உண்மையாகிப்போகும். தியரியை சொல்பவர் இறை நம்பிக்கை அற்றவராக இருந்தால் அந்த தியரி பொய்யாக்கப்பட்டு பரிகாசிக்கப்படும். இது எழுதப்படாத சட்டமாகும் இது போன்ற இறை நம்பிக்கையற்ற விஞ்ஞானிகளால் கூறப்பட்ட நிறைய தியரிகள் குப்பையாகிப் போனது.
உதாரணத்திற்கு, ஐசக் நியூட்டனை எடுத்துக்கொள்வோம். அவர் இறை நம்பிக்கையுள்ளவர். ஈர்ப்புவிசை((GRAVITY))யை கண்டுபிடித்துக் கூறினார். அதாவது இந்த பிரபஞ்சத்தில் ஒன்றை ஒன்று ஈர்க்கிறது. அது அந்த பொருட்களின் எடையையும் தூரத்தையும் பொருத்து அமையும் என்றார். அவருடைய தியரியின்படி பூமியில் 65 கிலோ எடையுள்ள ஒரு பொருள் நிலவில் 11 கிலோ எடையாக இருக்கும். ஏனென்றால் நிலவின் எடை பூமியின் எடையில் 81ல் ஒரு பாகம் ஆகும். நிலவிற்கு சென்ற மனிதனால் அது உண்மை என்று நிருபிக்கப்பட்டது. அவருடைய தியரி உண்மையாகிப்போனது.
இறைவன் இல்லை என்று கூறிக்கொண்டு ஒரு கூட்டம் கிளம்பியது. சார்லஸ் டார்வின் என்பவர் அதில் குறிப்படத்தக்கவர்;. அவரின் தியரி என்ன கூறுகிறது என்றால் உலகில் தோன்றிய அத்தனை உயிரினங்களும் இறைவனால் படைக்கப்பட்டது அல்ல! எல்லாம் தற்செயலாக தோன்றியவை என்கிறது. இறை நம்பிக்கையற்;ற இவர்களால் கூறப்படும் அந்த தியரி நாளுக்கு நாள் மரண அடி வாங்கி வருகிறது.
அவர்களின் தியரிப்படி ஒன்றிலிருந்து தான் ஒன்று தோன்றியது என்றால் அதாவது நாயிலிருந்து தான் நரி தோன்றியது என்றால், பாதி நரியாகவும், பாதி நாயாகவும் உள்ள ஒரு மிருகம் இருந்ததற்கு அடையாளமாக எலும்புக் கூடோ அல்லது படிவமோ கிடைத்திருக்க வேண்டும். குரங்கிலிருந்து தான் மனிதன் பிறந்தான் என்றால் பாதி குரங்கு, பாதி மனித உருவம் கொண்ட ஏதாவது ஒன்று கிடைத்திருக்க வேண்டும். இப்படி இரண்டுக்கும் இடைப்பட்ட ஆதாரம் எந்த மிருகத்திற்கும் இது வரை கிடைக்கவில்லை. எனவே எதை எதையோ கூறிக் கொண்டு தத்தளிக்கும் அந்த தியரியை விட்டு விட்டு, குர்ஆன் என்ன சொல்கிறது என்று பார்போம்.
அதிலிருந்து இது தோன்றியது, இதிலிருந்து அது தோன்றியது என்று மற்ற மிருகங்களைப் பற்றியெல்லாம் ஏதாவது சிரிப்பை ஏற்படுத்தும் விளக்கமாவது கொடுக்கும் அந்த தியரி, ஒட்டகம் எந்த மிருகத்திலிருந்து நிலையை அடைந்தது? என்பதற்கான சரியான விளக்கத்தை இன்று வரை கொடுக்க முடியாமல் தலையை பிய்த்துக் கொள்கிறது.
இந்த பிரபஞ்சத்தில் உள்ள படைப்புகள் அனைத்தும் இறைவன் ஒருவன் இருப்பதை தௌ;ளத் தெளிவாக காட்டுகிறது. இந்த ஒட்டகம் ஒன்றே போதும். அதை நிரூபிக்க, பாலைவனத்து அரபிகளால் 160க்கும் அதிகமான செல்லப் பெயர்களால் அழைக்கப்படும், முக்கியமான பெயராக இறைவனின் பரிசு என்று அழைக்கப்படும் இந்த அதிசயப் பிராணி உணவும், நீரும் கிடைக்கும் பொழுது அதை திமிலாக்கி கொள்கிறது (சுமார் 45கிலோ எடை இருக்கும் அதில் அதிகமாக கொழுப்பு இருக்கும்.) எதற்காக என்றால் தேவை காலத்திற்காக. உணவோ, நீரோ கிடைக்காத காலத்தில் அதன் திமிலின் கொழுப்பில் உள்ள ஹைட்ரஜனோடு அது சுவாசிக்கும் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை கலந்து நீராகவும், உணவாகவும் மாற்றிக் கொள்கிறது.
உணவு மட்டும் கிடைத்தால் போதும் நீரின் தேவையில்லாமல் ஒரு மாதம் காலம் பயணம் செய்யும். உணவோ, நீரோ கிடைக்காவிட்டால் கூட இரண்டின் தேவையில்லாமல் ஒரு வார காலம் பயணம் செய்யும். குளிர் காலங்களில் ஆறு மாத காலம் வரை கூட நீர் அருந்தாமல் வாழும். நீர் கிடைத்தால் 100 லிட்டர் தண்ணீரை 10 நிமிடங்களுக்குள் குடித்து விடும். குடிக்கும் நீரை இரத்தத்தின் சிகப்பு அனுக்களில் ஏற்றிக் கொள்கிறது அதற்காக அணுக்கள் அதன் உண்மையான அளவை விட 200 மடங்கு விரிந்து இடமளிக்கிறது (மற்ற மிருகங்கள், மனிதர்களுக்கு ஒரு மடங்கு விரிந்தால் போதும் வெடித்து விடும்) மேலும் இரப்பையில் உள்ள நீர் அறைகளிலும் (WATER CELLS) நீரை ஏற்றிக் கொள்கிறது. மனிதனாகட்டும், மிருகமாகட்டும் எல்லாவற்றிற்கும் இர்த்தத்தின் சிகப்பு அணுக்கள் வட்ட வடிவமாக (சுழுருNனு) இருக்கும். ஆனால் ஒட்டகத்திற்து மட்டும் முட்டை வடிவத்தில் (ROUND) இருக்கும்.
ஒட்டகம் ஒரு மாதம் நீர் அருந்தாமல் இருந்தால் கூட உடல் எடை 3மூமட்டும் குறையும். சாகாது. ஆனால் மனிதர்களுக்கு 72 மணி நேரம் நீரில்லாமல் போனால் உடல் எடையில் 8மூ குறைந்து மரணத்திற்கான ஏற்பாடு ஆரம்பித்து விடும். மனிதர்களுக்கு உடல் எடையில் 12மூ நீர் குறைந்தாலே போதும் கதை முடிந்துவிடும் ஆனால் ஒட்டகம் 40மூ இழந்தால் கூட எந்த பாதிப்பும் இல்லாமல் வாழும்.
குட்டிப் போட்டு பாலூட்டும் (மனிதன் உட்பட) பிராணிகளில் நீரிழைப்பை தாங்கி கொள்வதில் ஒட்டகத்திற்கு நிகராக வேறு எதுவுமில்லை. நீரிழப்பினால் வறட்சி ஏற்படும் சமயத்தில் மற்ற பிராணிகளின் மற்றும் மனிதன் இரத்தம் பாகு நிலைக்கு வந்து விடும். அதனால் இரத்த ஓட்டத்தின் வேகம் வெகுவாக குறைந்து விடும். அதன் காரணத்தால் வாழ தேவையான இதமான சூட்டை தோலுக்கு அளிக்க முடியாமல் எகிறும். பிறகு சூட்டினால் வெடிப்பு மரணம் (EXPLOSIVE HEAT DEATH) நிகழ்ந்து விடும். ஆனால் ஒட்டகத்திற்கு மட்டும் அப்படி நேராது. ஏனென்றால் உடல் திசுக்களில் உள்ள நீர் மட்டும் குறையாது. நீரில்லாமல் இதன் இர்த்தத்தில் நீர் அளவு குறையாது. நீரில்லாமல் நீண்ட நாள் வறட்சி ஏற்பட்டு, நீண்ட இடைவெளிக்குப்பிறகு நீர் அருந்தினால், அது குறைந்த அளவாக இருந்தால் கூட மற்ற பிராணிகளுக்கு (மனிதன்) நீர் போதை (Water Intoxication) ஏற்பட்டு இறப்பு நிகழந்துவிடும். ஆனால் ஒட்டகம் வறட்சிக்குப் பிறகு நூற்றுக்கணக்கான லிட்டர் தண்ணீரும் குடிக்கும். சாகவும் செய்யாது.
வெயிலின் சூடு 104 டிகிரியை அடைய வேண்டும்;. அப்போது தான் ஒட்டகத்துக்கு வியர்வையே வரும். அதுவரை வியர்க்காது. அதன் உடல் அளவிற்கு அதிகமான வியர்வை சுரப்பிகள் இருக்கவேண்டும். ஆனால் மிகவும் குறைவாக இருப்பது ஒரு தனித்தன்மையே ஆகும். மற்ற பிராணிகள் (மனிதன்) உடல் சூட்டை வியர்த்து குளிர்வித்துக் கொள்ளும். ஆனால் ஒட்டகம் மட்டும் பகல் காலங்களில் வெப்பத்தை 12 டிகிரி வரை சேர்த்து வைத்துக் கொள்ளும். அதனால் அதன் சூட்டை வியர்க்க வைத்து வெளியேற்றாமல் (வியர்ப்பது நீருக்கு நஷ்டம்) இரவின் குளிரான காற்றை பயன்படுத்தி வெளியாக்கி வடுகிறது.
ஒட்டகத்திற்கு இருப்பது போல் சக்தி வாய்ந்த சிறுநீரகம் வேறு எதற்கும் கிடையாது. நம்முடைய சிறுநீரில் அதிகபட்சமாக தாது கழிவுகள் 8 சதமும் 92 சதம் நீரும் இருக்கும். ஆனால் ஒட்டகத்தின் சிறு நீரில் 40 சதத்திற்கும் அதிகமான கழிவுகளும், குறைவான நீரும் இருக்கும் அந்த அளவிற்கு குறைவான நீரைக் கொண்டு கழிவை வெளியேற்றும் சத்தி வாய்ந்தது அதன் சிறுநீரகம். (நம்முடையதாக இருந்தால் வேலையை நிறுத்தி இருக்கும்) மிகவும் குறைந்த அளவு சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ளது ஒட்டகம். அதன் உடம்பில் புரோட்டின் என்ற சத்து குறைய ஆரம்பித்தால் சிறுநீரில் வெளியாகும் யூரியா என்ற கழிவின் அளவை குறைத்துக் கொண்டு அதை (Microbial Synthesis) புரோட்டீனோடு கலந்து சக்தியாக மாற்றி விடுகிறது அதன் உள் உறுப்புகள்.
மற்ற பிராணிகளின் (மனிதன்) மலம் காய்வதற்கு குறைந்தபட்சமாக இரண்டு நாட்கள் வேவைப்படும். ஆனால் ஒட்டகத்தின் மலத்தை போட்ட ஒரு சில மணி நேரத்தில் பற்றவைத்து விடலாம், என்ற அளவிற்கு நீரே கலக்காமல் சக்கையை மட்டும் வெளியேற்றும் சக்தி வாய்ந்தது ஒட்டகம். பசுமலம், சிறுநீர் வழியாக 20 லிட்டர் நீரை ஒரு நாளைக்கு வெளியேற்றுகிறது. ஆனால் ஒட்டகம் 1 லிட்டர் நீரை கூட இழப்பதில்லை.
நம்முடைய மூச்சை ஒரு கண்ணாடியில் மேல் விட்டு நோக்கினால் அங்கே ஈரம் படர்வதை காணலாம். (நாம் 1-லிட்டர் காற்றை சுவாசித்து வெளியேற்றினோம் என்றால் 16 மில்லி கிராம் நீரை இழந்திருப்போம்) ஆனால் ஒட்டகத்தின் மூச்சில் ஈரம் மிகவும் குறைவாக இருக்கும். ஏனென்றால் மற்ற எதற்குமில்லாத விசே~ மூக்கமைப்பு தான் இதன் காரணம். அதன் மூக்கிற்குள் அமைந்திருக்கும் இடுக்கான திசு அமைப்புகள். அது சுவாசித்து வெளியேற்றும் காற்றில் உள்ள ஈரத்தில், மூன்றில் இரண்டு பகுதியை வெளியேறி விடாமல் தடுத்து விடுகிறது. மேலும் அதன் மூக்கிலிருந்து வழியும் சளியைக் கூட அதன் மூக்கின் அமைப்பு உதட்டின் மேல் வெடிப்பு வழியா மீண்டும் வாய்க்குள் அனுப்பிவிடுகிறது. பல மைல்களுக்கு அப்பால் உள்ள நீரை கூட மோப்ப சத்தியால் அறிந்து கொள்ளும் சக்தி வாய்ந்தது அதன் மூக்கு.
கடுமையான வெப்ப காலங்களில் உண்பதைக் குறைத்துக் கொண்டு உடலை இதமாக வைத்துக்கொள்கிறது. நிழல் கிடைத்தால் உடனே பயன்படுத்திக்கொள்ளும். நிழல் இ;ல்லையென்றால் சூரியனை நோக்கி ஒடலை வைத்துக் கொள்ளும். ஏனென்றால் குறைவான வெயில் மட்டும் அதன் உடலில் படும்படியாக அதன் உடலமைப்பே அதற்கு நிழலை ஏற்படுத்திவிடுகிறது. அதற்கு காரணம் நீண்ட முட்டை வடிவிலான அதன் உடலமைப்பாகும்.
ஒட்டகங்கள் கூட்டங்களாக ஆகிக் கொண்டு ஒன்றை ஒன்று நெருக்கிக் கொள்ளும் அது எதற்காக என்றால் உடல் சூட்டை சுற்றும் புற காற்றின் சூட்டை விட குறைவாக வைத்துக் கொள்வதற்காகவாகும். ஆதன் சூட்டை வியர்வையின் உதவியில்லாமல் வெளியேற்ற உதவுவதோடு வெளி சூட்டையும், வெயிலின் தாக்கத்தையும் உடம்பிற்குள் செல்லாமல் தடுத்து விடுகிறது. அதாவது ரோமமும், தோலும் சிறந்த வெப்ப தடுப்பானாக பயன்படுகிறது. வெயிலின் வெப்பம் 150 டிகிரி என்றால் அதன் தோல் சூடு 75 டிகிரியாக இருக்கும்.
மற்ற மிருகங்கள் குளம்புகளைக் கொண்டு நடக்கும். ஆனால் ஒட்டகம் அதன் வெடித்த இரு குளம்புகளைக் கொண்டு நடக்கும். (அதன் பாத அமைப்பிற்கு சரியான உதாரணம் Snow Shoes ஆகும்) அதன் இரு குளம்புகளும் விரிந்து கொள்ளும் காரணத்தால் 500 கிலோ வரை எடையுள்ள ஒட்டகம் 450 கிலோ வரை சுமையை சுமந்துக் கொண்டு மணலில் கால்கள் புதைந்து விடாமல் ஓட முடிகிறது. (நாம் ஒரு சில அடிகள் பாலைவனத்து மணலில் நடந்தாலே போதும் நாக்கு தள்ளி விடும்.) பிராணிகள,; மனிதர்கள் அனைத்திற்கும் கால்களில் இரண்டு மடக்கும் மூட்டு இணைப்புகள் (Anklejoint) மட்டும் இருக்கும். ஆனால் ஒட்டகத்திற்கு மட்டும் மூன்று இணைப்புகள் இருக்கும். அதனால் தான் ஒட்டகத்தால் எளிதாக பாலைவன மணலின் மேடு பள்ளங்களில் ஏறி இறங்க முடிகிறது.
மணலோடு சேர்ந்து காற்று வீசும் பொழுது நாம் ஜன்னலுக்கு திரை இடுவது போல் மூக்கை மூடிக்கொள்ளும் வசதியுள்ளது ஒட்டகம். அதன் காதுகளின் உள்ளேயும், வெளியேயும் அமைந்திருக்கும் முடிகள் மணலோ தூசியோ காதுகளுக்குள் சென்று விடாமல் தடுத்து விடுகிறது. அதன் இமையில் உள்ள நீண்ட சீப்பு போன்ற முடிகள் மணலிலிருந்து கண்ணிற்கு பாதுகாப்பு அளிக்கிறது. அதன் கண்ணிற்கு மேலே அமைந்துள்ள முகடு போன்ற எலும்பமைப்பும், புருவமும் பாலைவனத்து சூரியன் பிரகாசமான வெளிச்சம் கண்களைதாக்கி விடாமல் தடுத்து விடுகிறது. கண்களுக்கு கீழே உள்ள இமை போன்ற திரை அமைப்பு அளிக்கிறது. மேலும் பாலைவனத்து சூரியனின் வெளிச்சத்தை பாதியாக தடுத்து விடுகிறது ஆனால் பார்வையை மறைத்து விடுவதில்லை. அதன் தலையின் ஓரத்தில் கண்கள் அமைந்து இருப்பதால் தலையை திருப்பாமல் எல்லா இடத்தையும் ஒரே நேரத்தில் பார்க்கும் வசதியுள்ளது ஒட்டகம். பாலைவனத்தின் சூட்டில் கண்கள் காய்ந்து விடாமல் இருப்பதாற்காக அதிகமான நீரை சுரந்து கண்களை ஈரம் குறையாமல் வைத்துக் கொள்கிறது சுரப்பிகள்.
எங்கேயாவது தூரத்தில் உணவோ, நீரோ கிடைக்கும் பாலைவெளியில் அதை சிரமில்லாமல் தேடுவதற்கும் மரங்களில் உயரத்தில் உள்ள இலைகளை மேய்வதற்கும் அதனுடைய நீண்ட கழுத்து உதவுகிறது (12 அடி உயரத்தில் தலை இருக்கும்) மற்ற மிருகங்கள் மேயும் பொழுது தாவரங்களில் உள்ள ஈரம் சிதறும் அதைக்கூட சிதற விடாமல் மேயும் தன்மை கொண்டது ஒட்டகம்.
பாலைவனத்தில் அதிகமாக முட்செடிகள் தான் கிடைக்கும. அதை மேய்வதற்காக அழுத்தமான ரப்பர் போன்ற உதடுகள் கொண்டது ஒட்டகம். எந்த அளவிற்கு என்றால் அதன் உதட்டில்பட்டு முட்களே உடைந்து விடும். மேலும் விசே~ உதட்டமைப்பு நாக்கை நீட்டாமல் மேய உதவுகிறது. சராசரியாக 86 வயதைக் கொண்ட ஒட்டகம், நான் புலி, பசித்தாலும் புல்லை தின்னமாட்டேன் என்று பிடிவாதம பிடிக்காது. உணவு பஞ்சம் என்றால் எலும்பு, மீன் இறைச்சி, தோல், சில சமயங்களில் எஜமானனின் கூடாரத்தையே தின்று விடும்.
நான் பசுமாடு, புண்ணாக்கும் புல்லும் கொடுத்தால் தான் பால் தருவேன் என்ற கர்வம் ஒட்டகத்திடம் கிடையாது. கிடைத்ததை சாப்பிட்டுவிட்டு பத்து பசுமாடு கொடுக்கும் பாலை ஒரு ஒட்டகம் கொடுக்கிறது. பசுவின் உடல் சூடு ஒரு குறிப்பிட்ட அளவை தாண்டி விட்டால் பால் நின்று விடும். ஆகவே அதை கொட்டகையில் வைத்து அதன் மேல் நீரை ஊற்றியோ, அல்லது ஏர்கண்டிசன் செய்யப்பட்ட இடத்தில் வைத்தோ பராமரிக்க வேண்டும். ஆனால் ஒட்டகம் அப்படி அல்ல. பலநாட்கள் வெயிலிலேயே நின்றாலும் கூட பால் கொடுக்கும். பசுவிற்கு நிறைய தண்ணீர் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் ஒன்று பால் நின்றுவிடும் அல்லது பாலில் கொழுப்பு 30 சதவிதம் அதிகரித்து, பால் குடிக்க முடியாத நிலைமைக்கு மாறிவிடும். ஆனால் ஒட்டகம் அப்படி அல்ல கடுமையான கோடையில் கூட குறைந்த அளவு நீரை குடித்துவிட்டு தன் குட்டிக்கும் பாலை கொடுத்துவிட்டு 15லிருந்து 20 லிட்டர்வரை நமக்கும் பால் கொடுக்கும். மேலும் பத்து நாட்கள் வரை நீர் கிடைக்காவிட்டால் கூட அதே தரத்தில் அதே அளவு பாலை கொடுக்கும்.
ஒட்டகத்தின் பாலில் தனித்தன்மை வாய்ந்த இன்சுலின் உள்ளது இது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது. பசும் பால் அலர்ஜி உள்ளவர்கள் ஒட்டகப்பாலை பயப்படாமல் குடிக்கலாம் ஏனென்றால் இதில் உள்ள புரோட்டீன்கள் வித்தியாசமானது மேலும் இதில் பாக்டிரியா, வைரஸ் எதிரப்பு சக்திகள் (Bactericidal, Virucidal) இயற்கையாகவே அமைந்துள்ளது. மேலும் விஞ்ஞான ஆராய்ச்சிகள் இது Sever skin condition, Auto immune diseases, Psoriasis, Multiple Sclerosis போன்ற நோய்களையும் குணப்படுத்தும் என்று அறிவிக்கிறது. ஒட்டகப் பாலில் பசும்பாலை விட மூன்று மடங்கு வைட்டமின் ‘C’ அதிகம் உள்ளது. இது காய்கறிகள், பழங்கள் போன்றவை அரிதாக கிடைக்கும் பாலைவன மக்களுக்கு இறைவனின் அருட் கொடையாகும்.
இப்படியாக பலைவனத்திற்கு ஏற்ப அறிவுப்பூர்வமாக தன் உடலை ஒட்டகம் அமைத்துக் கொண்டது என்று சொல்வதை உங்களால் நம்ப முடிகிறதா? ஒட்டகத்திற்கு அறிவிருந்தால் நீரும், உணவும், தாரளமாக கிடைக்கும் இடத்தை நோக்கி ஓடியிருக்கலாமே! (மணிக்கு 5 கிலோ மீட்டர் வேகத்தில் ஒரு நாளைக்கு சுமார் 50 கீ.மீ பயணம் செய்யும்) முட்டாள் ஒட்டகம் பாலைவனத்தில் இவ்வளவு கஷ்டப்பட வேண்டிய தேவையிருக்காதே! சரி, அவர்களின் கூற்றுப்படி பாலைவன சூழ்நிலைக்கு ஏற்ப ஒட்டகம் தானாக பரிணாம வளர்ச்சி அடைந்தது என்றே வைத்துக் கொள்வேம். அதன் படி பார்த்தால் பாலைவனத்தில் வசிக்கும் மனிதன், இது வரை பாதி ஒட்டகத்தின் சிறப்பு தன்மைகளை பெற்றிருக்க வேண்டுமே! அல்லது அங்கு வாழும் ஆடாவது இது வரை ஒட்டகமாய் மாறிருக்கவேண்டுமே! அப்படி எதுவும் மாற்றங்கள் அங்கு வாழும் எதனிடத்திலும் ஏற்படவில்லை.
தானாக தோன்றியது, பரிணாம வளர்ச்கி என்று கூறும் இவர்கள் சிறு குழந்தைகளை போன்றவர்கள். அதனால் தானோ என்னவோ ஒன்றாம் வகுப்பு குழந்தைகளை கேட்பது போல் ‘ஒட்டகத்தை பார்க்க வில்லையா அது எப்படி படைக்கப்பட்டிருக்கிறது?” என்று கேட்கிறது குர்ஆன் (88:17). பரிணாம வளர்ச்சியா? படைக்கப்பட்டதா? எது அறிவுப்பூர்வமானது என்று உங்கள் அறிவை கேட்டுப்பாருங்கள். இறை மறுப்பாளர்களின் வார்த்தைகள் விபரமற்ற பிதற்றல்களாக ஆகிவிடுவதை எளிதில் உணராலாம்.
‘ஜஸாக்கல்லாஹ்’ – தொகுப்பு: முஹம்மது ஃபைரோஸ், கும்பகோணம்.