ஹஜ் செய்யும் முறை
இஹ்ராம் கட்டுவது :
ஒருவர் ஒரு இஹ்ராமில் ஹஜ்ஜையும் உம்ராவையும் செய்ய நாடினால் “லப்பைக்க ஹஜ்ஜன் வ உம்ரதன்” (ஹஜ்ஜையும் உம்ராவையும் நாடி இறைவா உன்னிடம் வந்து விட்டேன்) என்று கூற வேண்டும்.
ஹஜ்ஜை மட்டும் செய்ய நாடினால் “லப்பைக்க ஹஜ்ஜன்” என்று கூற வேண்டும். உம்ராவை மட்டும் செய்ய நாடினால் “லப்பைக்க உம்ரதன்” என்று கூற வேண்டும். இவ்வாறு கூறுவதே இஹ்ராம் ஆகும்.,
இதைத் தொடர்ந்து தல்பியா எனும் முழக்கத்தைச் சொல்ல வேண்டும். : “லப்பைக், அல்லாஹும்ம லப்பைக், லப்பைக் லாஷரீக லக லப்பைக், இன்னல் ஹம்த வன்னிஃமத லக வல்முல்க, லாஷரீக லக” நூல்: புகாரி 1549, 5915, சப்தத்தை உயர்த்த கூற வேண்டும். நூல்கள்: ஹாகிம், பைஹகீ
தவாஃப் அல்குதூம்’ செய்யும் முறை :
கஃபா ஆலயத்தை ஏழு தடவை சுற்றுவது ஒரு தவாஃப் ஆகும். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் “தவாஃப் அல்குதூம்’ செய்யும் போது மட்டும் முதல் மூன்று சுற்றுக்கள் ஓடியும் நான்கு சுற்றுக்கள் நடந்தும் தவாஃப் செய்தார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு , நூல்: புகாரி 1644, 1617, தவாஃப் செய்யும் போது (ஆண்கள்) தங்கள் மேலாடையை வலது தோள் புஜம் (மட்டும்) திறந்திருக்கும் வகையில் போட்டுக் கொள்ள வேண்டும். நூல்: திர்மிதீ 787, அபூதாவூத் 1607
ஹஜருல் அஸ்வத் அமைந்துள்ள மூலையி-ருந்து துவக்க வேண்டும்.: கஃபாவின் ஒரு மூலையில் ஹஜருல் அஸ்வத் அமைந்துள்ள மூலையி-ருந்து துவக்க வேண்டும். நூல்கள்: முஸ்-ம் 2213, 2214
தவாஃப் செய்யும் போது கூற வேண்டியவை :
ருக்னுல் யமானிக்கும், ஹஜருல் அஸ்வதுக்கும் இடையே “”ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனத்தன் வஃபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வகினா அதாபன்னார்” என்று சொல்ல வேண்டும். நூல்கள்: அஹ்மத் 14851, அபூதாவூத் 1616
ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவது :
ஹஜருல் அஸ்வதைத் தொட்டு கையை முத்தமிட்ட வேண்டும்.. புகாரி 1606 , நெருக்கம் அதிகமாக இருந்தால் கையால் அதைத் தொடுவது போல் சைகை வேண்டும். புகாரி 1612, 1613, 1632, 5293 ருக்னுல் யமானி என்ற மூலையையும் தொட்டு முத்தமிடுவது நபி வழியாகும். புகாரி 166, 1609
தவாஃப் செய்து முடித்தவுடன் இரண்டு ரக்அத்கள் தொழுவது அவசியம் : தவாஃப் செய்து முடித்தவுடன் “மகாமே இப்ராஹீம்’ என்ற இடத்தில் இரண்டு ரத்அத்கள் தொழுவது அவசியம். “மகாமே இப்ராஹீமில் தொழுமிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்” என்ற (2:125) வசனத்தை ஓதி இரண்டு ரக்அத்கள் தொழு வேண்டும். அத்தொழுகையில் “குல்யாஅய்யுஹல் காபிரூன்’ சூராவையும், “குல்ஹுவல்லாஹு அஹத்’ சூராவையும் ஓத வேண்டும். நூல்: முஸ்-ம் 2137 .
ஸஃபாவை அடைந்ததும்.:
“ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்களாகும்” என்ற (2:125) வசனத்தை ஓதினார்கள். “அல்லாஹ் எதை முத-ல் கூறியுள்ளானோ அங்கிருந்தே ஆரம்பிப்பீராக” என்று கூறிவிட்டு ஸஃபாவி-ருந்து அவர்கள் ஆரம்பித்தார்கள். அதன் மேல் ஏறி கஃபாவைப் பார்த்தார்கள். கிப்லாவை முன்னோக்கி “லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தா லாஷரீகலஹு, லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலாகுல்- ஷையின் கதிர், லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தா, அன்ஜஸ வஃதா, வநஸர அப்தா, லஹஸமல் அஹ்ஸப்ப வஹ்தா” என்று கூறி இறைவனைப் பெருமைப்படுத்தினார்கள். இது போல் மூன்று தடவை கூறினார்கள். அவற்றுக்கிடையே துஆ செய்தார்கள். பின்னர் மர்வாவை நோக்கி இறங்கினார்கள். அவர்களின் பாதங்கள் நேரானதும் (சம தரைக்கு வந்ததும்) “பதனுல் வாதீ’ என்ற இடத்தில் ஓடினார்கள். (அங்கிருந்து) மர்வாவுக்கு வரும் வரை நடந்தார்கள். ஸஃபாவில் செய்தது போலவே மர்வாவிலும் செய்தார்கள். நூல்கள்: முஸ்-ம் 2137
மினாவுக்குச் செல்வது:
துல்ஹஜ் மாதம் ஏழாம் நான் லுஹருக்குப் பின் இமாம் குத்பா உரை நிகழ்த்த வேண்டும். துல்ஹஜ் மாதம் எட்டாம் நாள் அன்ற “மினா’ எனுமிடத்துக்குச் செல்ல வேண்டும். அன்றைய தினம் லுஹர், அஸர், மஃரிப், இஷா ஆகிய தொழுகைகளையும் ஒன்பதாம் நாளின் பஜ்ரு தொழுகையையும் மினாவிலேயே நிறைவேற்ற வேண்டும். நூல்: முஸ்-ம் 2137 இங்கே நான்கு ரக்அத் தொழுகைகளை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும்., நூல்: புகாரி 1082, 1083, 1655, 1656
அரஃபா வுக்குச் செல்வது :
மினாவில் ஒன்பதாம் நாளின் சுபுஹ் தொழுகையை முடித்து விட்டு சூரியன் உதயமாகும் வரை தங்கி விட்டு “அரஃபா’வுக்குப் புறப்பட வேண்டும். அரஃபாவுக்குச் செல்லும் வழியில் “தல்பியா’ கூறிக்கொண்டும் “தக்பீர்’ கூறிக்கொண்டும் செல்ல வேண்டும். நூல்: புகாரி 970, 1659 அரஃபா நாளில் நோன்பு நோற்பது: அரஃபா நாளில் (ஒன்பதாம் நாளில்) நோன்பு நோற்பது சுன்னத் என்றாலும் ஹஜ்ஜுக்குச் சென்றவர்கள் அன்றைய தினம் நோன்பு நோற்பது தடுக்கப்பட்டுள்ளது. பார்க்க: புகாரி 1658, 1663, 5618, 5636
அரஃபாவில் தங்குவதன் அவசியம் :
அரஃபாவில் ஒன்பதாம் நாள் தங்காவிட்டால் ஹஜ் கூடாது. “”ஹஜ் என்பதே அரஃபா(வில் தங்குவது) தான்.நூல்கள்: நஸயீ 2966, 2994 திர்மிதீ 814 ஒன்பதாம் நாள் நண்பகலுக்குள் அரஃபாவுக்கு வந்து விடுவது நபிவழி., அரஃபா மைதானத்தில் குறிப்பிட்ட இடத்தில் தான் தங்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அரஃபா மைதானத்தின் எந்த இடத்திலும் தங்கலாம். நூல்: முஸ்-ம் 2138 அரஃபாவில் லுஹரையும் அஸரையும் ஜம்வு செய்து இமாம் தொழுவார் அதில் சேர்ந்து தொழ வேண்டும். அதற்கு முன் நிகழ்த்தப்படும் குத்பா உரையை செவிமடுக்க வேண்டும். நூல்: முஸ்-ம் 2137 பிரார்த்தனை செய்ய வேண்டும். நூல்: நஸயீ 2961
முஸ்த-ஃபாவுக்குச் செல்வது: அரஃபா மைதானத்தில் சூரியன் மறையும் வரை தங்கி விட்டு சூரியன் மறைந்ததும் முஸ்த-ஃபாவுக்குச் சென்ற மஃரிபையும், இஷாவையும் ஜம்வு செய்து தொழவேண்டும். அங்கே சுப்ஹ் வரை தங்கி சுப்ஹ் தொழ வேண்டும். நூல்: முஸ்-ம் 2137
மீண்டும் மினாவுக்குச் செல்வது :
முஸ்த-ஃபாவில் பஜ்ரைத் தொழுததும் “மஷ்அருல் ஹராம்’ என்ற இடத்தை அடைந்து கிப்லாவை முன்னோக்கி அல்லாஹு அக்பர் லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீகலஹு என்று கூறி) அல்லாஹ்வைப் பெருமைப் படுத்தி லாயிலாஹ இல்லல்லாஹு என்ற நன்கு வெளிச்சம் வரும் வரை கூற வேண்டும். நூல்: முஸ்-ம் 2137
மினாவில் செய்ய வேண்டியவை :
இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறைவனது கட்டளைப் படி தமது மகனைப் ப-யிட முன் வந்த போது ஷைத்தான் அவர்களுக்குக் காட்சி தந்தான். “ஜம்ரதுல் அகபா’ என்ற இடத்தில் அவன் மீது ஏழு தடவை சிறு கற்களால் எறிந்தார்கள். அதன் பிறகு “ஜம்ரதுல் உஸ்தா’ எனும் இடத்தில் மீண்டும் காட்சி தந்தான். அங்கேயும் ஏழு தடவை கற்களால் எறிந்தார்கள். அதன் பிறகு “ஜம்ரதுல் ஊலா’ எனுமிடத்தில் காட்சி தந்தான். அங்கேயும் ஏழு தடவை சிறு கற்களால் எறிந்தார்கள். பைஹகீ, ஹாகிம், இப்னு குள்ஸமா
ஏழு கற்களை எறிந்த பின் கிப்லாவை நோக்கி நின்று கொண்டு இரு கைகளையும் உயர்த்தி நண்ட நேரம் துஆச் செய்ய வேண்டும். (புகாரி 1753) எறியப்படும் கற்கள் விரல்களால் சுண்டி விளையாடும் அளவுக்குச் சிறிதாக இருக்க வேண்டும். (முஸ்-ம் 2289
குர்பானி கொடுத்தல் :
நபிகள் நாயகம்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் நூறு ஒட்டகங்களைக் குர்பானி கொடுத்துள்ளனர். ஆயினும் அது கட்டாயமானதல்ல. ஒருவர் ஒரு ஆட்டைக் குர்பானி கொடுப்பதே அவசியமாகும். அல்லது ஏழு பேர் சேர்ந்து கூட்டாக ஒரு மாட்டை அல்லது ஒரு ஒட்டகத்தைக் குர்பானி கொடுக்கலாம். நூல்: முஸ்-ம் 2128, 2323. (அல்குர்ஆன் 2:196)
அரசாங்கத்தில் பணம் செலுத்தி விட்டால் அரசே நம் சார்பாகக் குர்பானி கொடுக்கும் நடைமுறை இருக்கிறது. அதில் தவறேதும் இல்லை. ஏனெனில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் தம் சார்பாக அ- ரளியல்லாஹு அன்ஹு அவர்களைக் குர்பானி கொடுக்க நியமணம் செய்துள்ளனர். மேலும், ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்காகநபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களே குர்பானி கொடுத்துள்ளனர்.
தலை மழித்தல் :
பத்தாம் நாள் அன்று ஜம்ரதுல் அகபாவில் கல்லெறிந்ததும் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றில் எதையேனும் குர்பானி கொடுக்க வேண்டும். அதன் பிறகு தலை முடியை மழித்துக் கொள்ள வேண்டும். அல்லது குறைத்துக் கொள்ள வேண்டும். “இறைவா! மழித்துக் கொள்பவர்களை மன்னிப்பாயாக” என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறினார்கள். அப்போது நபித் தோழர்கள் “”முடியைக் குறைத்துக் கொள்பவர்களையும்” (மன்னிப்பாப்க என்று கூறுமாறு) கேட்டுக் கொண்டார்கள். “இறைவா! மழித்துக் கொள்பவர்களை மன்னிப்பாயாக” என்றே (மீண்டும்) கூறினார்கள். (மீண்டும்) நபித்தோழர்கள் “”முடியைக் குறைத்துக் கொள்பவர்களையும்” என்று கேட்டார்கள். அப்போது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள், குறைத்துக் கொள்பவர்களையும் (மன்னிப்பாயாக)” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர-) நூல்: புகாரி 1727 அவ்வாறு செய்ததும் அவர் இஹ்ராமி-ருந்து ஓரளவு விடுபடுகிறார். இஹ்ராம் கட்டியதால் அவருக்கு விலக்கப்பட்டிருந்த நறுமணம், தைக்கப்பட்ட ஆடைகள் போன்றவற்றை அவர் பயன்படுத்திக் கொள்ளலாம். மனைவியுடன் உடலுறவு கொள்வதைத் தவிர மற்ற அனைத்தையும் பயன்படுத்திக்கொள்ள இப்போது முதல் அவர் அனுமதிக்கப்படுகிறார்.
பெண்கள் தலை மழித்தல்:
“தலையை மழித்துக் கொள்வது பெண்களுக்குக் கிடையாது. (சிறிதளவு மயிரைக்) குறைத்துக் கொள்வதே அவர்களுக்கு உண்டு’ நூல்: அபூதாவூத் 1694
தவாஃப் அல் இஃபாளா :
பத்தாம் நாள் அன்று மினாவில் “ஜம்ரதுல் அகபா’வில் கல்லெறிந்து விட்டு குர்பானியும் கொடுத்து, தலையை மழித்த பின் மக்காவுக்குப் புறப்பட்டு மீண்டும் தவாஃப் அல் இஃபாளா எனும் தவாஃப் செய்ய வேண்டும். நூல்: முஸ்-ம் 2307
தவாஃப் அல் இஃபாளா செய்யும் முறை :
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் “தவாஃப் அல் குதூம்’ செய்யும் போது மூன்று தடவை ஓடியும் நான்கு தடவை நடந்தும் சுற்றியதாக முன்னர் கண்டோம். ஆனால் இந்தத் தவாஃபின் போது ஏழு சுற்றிலும் நடந்தே தான் செல்ல வேண்டும். நூல்கள்: அபூதாவூத் 1710, இப்னுமாஜா 3051 பெயர் குறிப்பிடப்பட்ட தவாஃபாக இருந்தாலும், உபரியாகச் செய்யும் தவாஃபாக இருந்தாலும் ஒவ்வொரு தவாஃபையும் முடித்த பின் இரண்டு ரக்அத்கள் தொழ வேண்டும். புகாரி 396, 1600,
ஸஃபா, மர்வாவுக்கிடையே ஸஈயும் செய்ய வேண்டும் :
இந்தத் தவாஃபை முடித்த பிறகு உடலுறவு உட்பட அனைத்தும் ஹலாலாகின்றது. இப்போது தான் முழுமையாக இஹ்ராமி-ருந்து ஒருவர் விடுபடுகிறார். இஹ்ராம் கட்டிய காரணமாக அவருக்குத் தடுக்கப்பட்ட யாவும் இப்போது முதல் ஹலாலாகின்றது. நூல்கள்: புகாரி 319, 1562, 4408
பெருநாள் தொழுகை கிடையாது :
பத்தாம் நாள் ஹாஜிகளுக்குப் பெருநாள் தொழுகை கிடையாது. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மினாவில் ஹஜ் பெருநாள் தினத்தில் தமது “அள்பா’ எனும் ஒட்டகத்தின் மீதமர்ந்து (குத்பா) உரை நிகழ்த்தியதை நான் பார்த்திருக்கிறேன். அறிவிப்பவர்: ஹிர்மாஸ் பின் ஸியாத் (ர-) நூல்கள்: அஹ்மத் 19218, அபூதாவூத் 1669
தவாஃபுல் விதாஃ :
மினாவில் கல்லெறிந்து முடிந்ததும் ஹஜ்ஜின் எல்லாக் கிரியைகளும் நிறைவுறுகின்றன. ஆயினும் இறுதியாக தவாஃபுல் விதாஃ என்று கூறப்படும் தவாஃபைச் செய்ய வேண்டும். விதாஃ என்றால் விடை பெறுதல் என்பது பொருள். விடை பெற்றுச் செல்லும் நேரத்தில் இந்த தவாஃப் செய்யப்படுவதால் இது தவாஃபுல் விதாஃ என்று கூறப்படுகின்றது. நூல்: முஸ்-ம் 2350, 2351
தவாஃபுல் இஃபாளாவைப் போன்றே இந்தத் தவாஃபும் செய்யப்பட வேண்டும். இதைச் செய்தவுடன் புறப்பட்டுச் சென்று விடலாம். ஹாஜிகள் செய்ய வேண்டியவற்றை வரிசையாக இது வரை நாம் அறிந்தோம்.
– P.ஜைனுல் ஆபிதீன் உலவி