என் இறைவா! என்னையும், எனது பெற்றோரையும், நம்பிக்கை கொண்டு எனது வீட்டில் நுழைந்தவரையும், நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் மன்னிப்பாயாக! அநீதி இழைத்தோருக்கு அழிவைத் தவிர வேறு எதையும் அதிகமாக்காதே! (எனவும் நூஹ் (அலைஹிஸ்ஸலாம்) பிரார்த்தித்தார்)
கிருஸ்தவர்களிடம் இருக்கும் பைபிளிலும் நூஹ் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுடைய சரித்திரம் சொல்லப்பட்டிருப்பதால் ஜெர்மனியில் உள்ள கெட்லின்பர்க் (getlinburg ) மியூசியத்திலிருந்து தகவல்கள் பெறப்பட்டு கப்பலுடைய மாதிரியைப் பார்த்து சித்திரங்கள் வரைந்து ‘நோவா சரித்திரம்’ என்று அதி வேகமாக எழுதி இணையத்திலும், நூல் வடிவிலும் வெளியிட்டு கிருஸ்தவம் சத்திய மார்க்கம் என்று பரப்பினார்கள்.இறைவன் தனது திருமறைக் குர்ஆனில் நூஹ் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுடைய சரித்திரத்தை துல்லியமான விபரங்களுடன் சொல்வதற்கு முன்பே ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு அருளிய இன்ஜீலிலும் கூறி இருந்தான் ஆனால் ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை இறைவன் தன்னளவில் உயர்த்திக் கொண்டப் பிறகு அவர்களுடைய சமுதாயத்தினர் இறைவன் அருளிய இன்ஜீலை மனம் போனப்போக்கில் மாற்றி அமைத்தார்கள் தெய்வீக வசனத்தில் மனிதக் கரங்கள் உடுருவி சிதைவுக்குள்ளாகிப் போனதால் அதனுயைட தனித் தன்மையை இழந்து சிதைவுக்குள்ளானது.
சிதைவுக்குள்ளாகிப் போன இன்ஜீலிலும் கூட ஆங்காங்கே ஓறிரு இடங்களில் நூஹ் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுடைய வெள்ளப் பிரளயம் குறித்து எழுதப் பட்டுள்ளது. நோவா காலத்தில் பிரளயம் ஏற்பட்டு பாவிகள் அழிக்கப் பட்டார்கள் விசுவாசிகள் பேழை மூலம் இரட்சிக்கப்பட்டார்கள் பழைய ஆகமம் 6:9
அவ்வாறு சொல்லப் பட்டிருந்த போதும் அதை மட்டும் நம்பி அவர்கள் ஏகஇறைவனுடைய வல்லமையை பறைசாற்றக் கூடிய வெள்ளப் பிரளயத்தைப் பற்றி எந்தப் பிரச்சாரத்தையும் கிருஸ்தவ மிஷனரிகள் மேற்கொள்ளவில்லை காரணம் அவர்களுக்கு கப்பல் கண்டுப பிடிப்பதற்கு முன்பு அதில் நம்பிக்கை இல்லை.
ஆனால் முஸ்லிம் சமுதாயத்தைப் பொறுத்த வரை கப்பல் கண்டுப் பிடிப்பதற்கு முன்பே 1400 ஆண்டுகளுக்கு முன்னதாகவே ஏகஇறைவனுடைய வல்லமையை சான்று பகரக்கூடிய நூஹ் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுடைய காலத்து வெள்ளப் பிரளயத்தையும், அவர்களுடைய ஏகத்துவ பிரச்சாரப் பணியையும் திருமறைக் குர்ஆனில் ஏகஇறைவன் கூறிய தகவல்களைக் கொண்டு மட்டுமே அல்லாஹ்வின் தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்தில் முடுக்கி விடப்பட்ட பிரச்சாரப் பணி இன்று வரையிலும் தொய்வின்றி அண்ணலார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சமுதாயத்தவர்கள் செய்து வருகின்றனர்.
செய்தே ஆக வேண்டும் காரணம் விசாரனை நாளில் (மறுமையில்) நபிமார்களிடம் அவர்களுடைய பிரச்சாரப் பணியைப் பற்றி விசாரிக்கப் படும் பொழுது நூஹ் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுடைய பிரச்சாரப் பணிக்கு முஸ்லிம்களாகிய நாமே சாட்சியாளாராகவோம்.
‘அவ்வாறே உங்களை மக்களுக்கு சாட்சியம் சொல்வதற்காக நடுநிலையான சமுதாயமாக ஆக்கினோம் என்னும் புகழுயர்ந்த இறைவனின் (திருக்குர்ஆன் 02:143) வசனம் இதைத் தான் குறிக்கிறது. என்று இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள் ‘நடுநிலையான’ என்னும் சொல்லின் கருத்து ‘நீதியான’ என்பதாகும். ஆதார நூல்: புகாரி அறிவிப்பாளர்: அபூ ஸயீத் அல் குத்ரீ (ரளியல்லாஹு அன்ஹு) அவர்கள்.மறுமையில் நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் நம்மை அவர்களுடைய பிரச்சாரப் பணிக்காக சாட்சியாக்குவார்கள். நாமோ நூஹ் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுடைய காலத்தில் வாழ வில்லை! அதற்கும் பிறகு எத்தனையோ தலைமுறையினர் தோன்றி மறைந்து விட்டனர் நாமோ மிகவும் பின் தங்கிய இறுதி சமுதாயமாவோம் அவ்வாறிருக்கையில் எதனடிப்படையில் நூஹ் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுடைய பிரச்சாரப பணிக்கு சாட்சியாகவும்!
யாருக்காகவாவது நாம் சாட்சி சொல்வதாக இருந்தால் அவரைப் பற்றி, அவர் சார்ந்த பிரச்சனையைப் பற்றி ஓரளவாவது தெரிந்திருக்க வேண்டும் அவ்வாறு தெரிந்திருந்தால் மட்டுமே சாட்சி கூற முடியும்! இல்லை என்றால் சொதப்பி விடுவோம் அதனால் பாதிக்கப்பட்வருடைய மொத்த காரியமும் சிதைந்து விடக் கூடிய அபாயம் ஏற்படலாம்.
1. நூஹ் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் தங்களுடைய சமுதாய மக்களிடம் இறைவனிடம் ஒப்புக் கொண்ட பிரச்சாரப் பணியை முறையாக செய்தார்களா ? இல்லையா ?
2. ஒப்புக் கொண்ட பிரச்சாரப் பணியை எத்தனை ஆண்டுகள் செய்தார்கள்,
3. அவர்களுடைய பிரச்சாரப் பணியை மக்கள் ஏற்றுக் கொண்டார்களா? இல்லையா?
4. ஏற்றுக் கொள்ளாத மக்களிடமிருந்து அவர்கள் எவ்வாறு புறக்கனிக்கப் பட்டார்கள் ?
5. அவர்கள் மீது எவ்வாறு அத்து மீறல் நடத்தப் பட்டது?
6. அத்து மீறல்கள் எல்லைக் கடந்த போது அவர்கள் இறைவனிடம் எவ்வாறு பிரார்த்தித்தார்கள்?
7. அவர்களுடைய பிரார்த்தனையை இறைவன் எற்றுக் கொண்ட இறைவன் தன்னை மறுத்து தன் தூதர் மீதும், தன்னை நம்பியோர் மீதும் அத்து மீறியவர்களின் மீது என்ன மாதிரியான பேரழிவைக் கொடுத்தான்?
8. மேல்படி பேரழிவிலிருந்து தனது தூதரையும், தன்னை நம்பியோரையும் இறைவன் எதன் மூலம் தப்பிக்கச் செய்தான்?
போன்ற துல்லியமான தகவல்கள் உலகப் பொதுமறை திருமறைக் குர்ஆனில் மட்டுமே நிறைந்திருக்கிறது திருமறைக் குர்ஆனைப் புரட்டினால் விசாரனை நாளில் நூஹ் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுடைய பிரச்சாரப் பணிக்கு நடுநிலை சமுதாயமாகிய நாம் சாட்சியாளர்களாக முடியும்.
இறைவா! நீ இறக்கி அருளிய திமறைக்குர்ஆனிலிலிருந்து நூஹ் (அலைஹிஸ்ஸலாம்) அவர்ளுடைய பிரச்சாரப் பணி எவ்வாறு இருந்தது என்பதை நீ கூறிய விதம் நம்பினோம் அதையே இன்று உன்னிடம் சாட்சியாக்குகிறோம் என்றுக் கூறமுடியும்!
உலகில் வாழும் காலத்தில் திருமறைக் குர்ஆனைப் புரட்டவில்லை என்றால் விசாரணை நாளில் நூஹ்(அலை) அவர்களுக்கு நாம் சாட்சியாளர்களாக முடியாது (நவூது பில்லாஹ் ) அல்லாஹ் நம்மைக் காக்க வேண்டும்.
அறிவின் பொக்கிஷம் திருமறைக்குர்ஆனைப் புரட்டுங்கள்
1. அது உங்களை அறிஞர் ஆக்கும்,
2. அது மறுமையில் உங்களின் நன்னடத்தைக்கு சாட்சியாகும்,
3. உங்களைப் பெற்றெடுத்த தாயோ, தந்தையோ, நீங்கள் பெற்றெடுத்த உங்கள் பிள்ளைகளோ, உங்களுடன் பிறந்த உங்கள் சகோதரர்களோ உங்களுக்கு சாட்சி கூற முடியாத, பரிந்து பேச முடியாத அந்த நாளில் குர்ஆன் உங்களுக்காக இறைவனிடம் பறிந்துரைக்கும் .
மேற்கானும் நூஹ் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுடைய காலத்தில் நடந்த வெள்ளப் பிரளயத்தை குர்ஆனுக்கு முந்தைய வேதங்களிலும் ஏகஇறைவன் கூறி இருக்கிறான் ஹிந்துக்களுடைய பவிஷ்ய புராணத்திலும் கீழ்கானுமாறு கூறப்பட்டுள்ளது. ஆதம் அவர்களின் மக்களில் நியூஹ்வும் ஒருவராவார், நியூஹ் 500 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார் நியூஹ் விஷ்னு பக்தராவார், அவர் ஆழ்ந்த தியானத்திலிருக்கும் போது விஷ்னு கணவில் தோன்றி நியூஹ்வே! கேளும் இன்னும் ஏழு தினங்களில் ஜலப்பிரளயத்தின் மூலம் பெருங்கேடு வரவிருக்கிறது, நீரும் உம் மக்களும் மரக்கலம் மூலம் தப்பிக்கத் தயாராகுங்கள் விஷ்னுவின் பக்தரே! உம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் நீர் மேன்iமையுடையவராவீர். விஷ்னுவின் அறிவுரையை செவிமடுத்த நியூஹ் 300 அடி நீளத்திலும், 50 அடி அகலத்திலும் 300 அடி ஆளத்திலும் மரக்கலம் உருவாக்கினார் அதில் தன் குடும்பத்தினரையும், ஜோடி, ஜோடியாக மற்ற உயிரினங்களையும் ஏற்ற்pக் கொண்டு பயணமானார் விஷ்னு அவரைப் புகழ்ந்தார் 40 நாள் பெய்த மழையால் நிலமனைத்தும் நீர் பெருகியது 4 கடலும் ஒன்றாகியது (பவிஷ்ய புராணம்- பிரதிசரஹபர்வ)புகழ் பெற்ற சரித்திர எழுத்தாளர் சங்கர மேனன் அவர்கள் தன்னுடைய Voice beyond the centuries என்ற நூலில் ஜூதி மலையில் கண்டுப் பிடித்த ஏகஇறைவனுடைய அத்தாட்சியாகிய நூஹ் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் கட்டிய கப்பலைப் பற்றி கீழ்கானுமாறு குறிப்படுகிறார்.
மத்திய ஆசியாவில் உள்ள ஆர்மீனியா மலைத் தொடரில் ஏறத்தாழ 6000 அடி உயரமுள்ள ஒரு மலை உச்சியில் ஒரு கப்பலுடைய வில் போன்ற ஒரு சாதனம் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. நிலப்பரப்பிலிருந்து சற்று உயர்ந்தும் சற்று தடித்ததுமாகிய வில்லின் ஒரு முனைப் பாகமும் நிலமட்டத்திலிருந்து உயர்ந்தும் நடுப்பாகத்தினுள்; கல்லும், மண்ணும் நிறைந்தும் அடிப்பாகம் புதைந்தும் கிடந்தது. உள் பாகத்தில் நிறைந்து கிடந்த மண்ணையும், கல்லையும் தோண்டி எடுத்து மாற்றியபோது 18 அடி ஆளத்தில் வளைவின் அடிப்பாகம் கண்டு பிடிக்கப்பட்டது. ஏறத்தாழ 480 அடி நீளமும், 180 அடி அகலமுமாக தாமரை இதழ் போன்ற வளைவுடன் அது காட்சி அளிக்கிறது துருக்கி விடமானப் படையினர் தான் அதை கண்டு பிடித்தனர் பின்னர் அவர்கள் அதை ஆய்வு கூடத்திற்கு எடுத்துச் சென்று பாதுகாத்து வைத்துள்ளனர்.
வல்ல அல்லாஹ் உங்களையும், என்னையும் உலக முடிவுக்குப் பின் ஏற்படும் விசாரணை நாளில் நூஹ்(அலை) அவர்களுடைய பிரச்சாரப் பணிக்கு சாட்சியாளர்களாகவும், இறுதித் தூதர் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய கரங்களால் கவ்தர் நீரை பருகக்கூடிய பாக்கியசாலிகளாகவும் ஆக்கி அருள் புரிவானாக !
-adiraifarook