ஆபாச பத்திரிகைகளும் அதன் விபரீதங்களும் – சவூதி ஃபத்வா
நவீன காலத்தில் வாழும் முஸ்லிம்கள் பல சோதனைகளுக்கு உட்பட்டுள்ளனர். குழப்பம் அனைத்து திசைகளிலும் அவர்களைச் சூழ்ந்துள்ளன. முஸ்லிம்களில் பெரும் பான்மையினர் அதில் வீழ்ந்து தத்தலித்துக் கொண்டிருக்கின்றனர். (மார்க்கத்தில்) வெறுக்கப்பட்ட காரியங்கள் தலை விரித்தாடுகிறது. மனிதர்கள் அல்லாஹ்வுக்கு எவ்வித பயமோ, வெட்கமோ, இன்றி மானக்கேடான காரியங்களைப் பகிரங்கமாக துணிந்து செய்கின்றனர்.
இதற்கெல்லாம் பிரதான காரணமாக விளங்குவது இறை மார்க்கத்தின் பொடு போக்கும் இறைவனது சட்ட வறையறைகளை மீறுவதும் சீர்திருத்தவாதிகளாக இருக்கும் பெரும் பான்மையான மக்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தை எடுத்து நடக்காததும், நன்மையை ஏவி தீமையை தடுக்காததுமாகும். குழப்பமான இச்சூழலிருந்து விடுதலை பெற இறைவனிடம் பாவ மன்னிப்புத் தேடுவதோடு அவனது கட்டளைகளை எடுத்து அவனது விலக்கல்களைத் தவிர்த்து நடந்து, அசத்திய வழியில் செல்லும் தீயோர்களின் கரங்களைப் பிடித்து சத்திய வழியில் இருத்துவதைத்தவிர முஸ்லிம்களின் ஈடேற்றத்திற்கான வேறு வழிகள் எதுவும் இருக்கவே முடியாது.
நவீன காலத்தில் குழப்பங்களின் அச்சாணியாக தீய வார்த்தைகளையும் அழிவின் வாடிக்கையாளார்களையும், செக்ஸ் தொழிலாளர்களையும், விசுவாசிகளிடையே தீமைகள் பரவி அதில் குளிர் காய்வோரையும் அல்லாஹ்வும் அவனது திருத்தூதரும் ஏவியதும் விலக்கியதுமாகக் காணப்படுவதை எதிர்த்துப் போராடத்தூண்டுகின்ற தீயோர்களையும் அவர்களின் ஆதரவில் நடந்தேறுகின்ற ஆபாசப் பத்திரிப்கைகளையும், மனித உணர்வுகளைத் தூண்டுகின்ற பாலியல் அம்சங்களைத் தன்னகத்தே தாங்கி நிற்கும் பல்வகை ஆபாச சஞ்சிகைகள் பத்திரிக்கைகளையும் குறிப்பிடலாம்.
ஆய்வின் முடிவில் இவைகள் அனைத்தும் தீமைகளுக்கான விளம்பர சாதனமாகவும் மனித உணர்வுகளைத் தூண்டும் ஊடகங்களாகவும் அல்லாஹ் ஹராமாக்கியவைகளை செய்யுமாறு ஊக்குவிக்கின்றவைகளாகவுமே இருக்கிறன.
இப்பத்திரிக்கைகளில் பின் வரும் தீமைகள் காணப்படுகிறது ..
1 அதன் அட்டையின் மேற்புறமும் உட்புறமும் ஆபாசப் படங்கள்.
2 அதனுள் நிர்வாண கோலத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ள பெண்கள்.
3 பாலியல் உணர்வுகளை தூண்டும் அசிங்கமான வார்த்தைகளும் வெட்கம் மானம் சூடு சொரணையற்ற வாசகங்கள், சமூக விழுமியங்கள் ஒழுக்க மாண்புகளைச் சிiதைக்கும் சிpங்கார வார்த்தைகள்.
4 அசிங்கமான ஆபாசக் கதைகள் கேடுகெட்ட தீய பாடகிகள் நடிகர் நடிகைகளின் பயனற்ற செய்திகள் உளறல்கள்.
5 பெண்களைப் போகப் பொருளாகச் சித்தரித்து நிர்வாண உலகிற்கு அவர்களை அழைத்துச் சென்று அவர்களின் உரிமைகளைப் பறித்து பெண் உரிமை என்ற ஆபாச மாயையில் அவர்களை விழச்செய்து அவர்களின் கௌரவ ஆடையான ஹிஜாபை (பர்தாவை)க்களையும் கோஷங்கள்.
6 இறை விசுவாசிகளான பெண்களை நிர்வாண வலையில் சி;க்க வைக்கும் பிரதான நோக்கில் நிர்வாண கோலத்துடன் காட்சிpத் தரும் பெண்களைக் காட்டி அவர்கள் ஏமாற்றவும், விபச்சாரிகள் நடத்தைக் கெட்ட பெண்கள் போல உருவாக்கவும் அன்பான அழைப்பு.
7 இவைகளில் (அன்னிய) ஆண் பெண்களுக்கிடையில் நடை பெறும் கழுத்திணைப்பு கட்டியணைப்பு முத்தம்கொடுத்தல் போன்ற அசிங்கமான காட்சிகள் தாராளமாகவே உண்டு.
8 வாலிபர்கள் மங்கையர்கள் போன்றோரின் பாலியல் உணர்வுகளை தூண்டும் வகையில் இடம் பெறும் கட்டுரைகள் அவர்களை தவறான பாலியல் வன்முறைக்கு இட்டுச்செல்லும் உபாதைகள்.அந்த நச்சுப் பத்திரிக்கைகளினால் இயற்கை வழியிலிருந்தும் தூய மார்க்கத்திலிருந்தும் தடம்புரண்டுக் கொண்டிருப்போர் தான் எத்துனைபேர்!!!
மேலும் அவைகள் மனித சிந்தனைகளில் இருந்து அதிகமான மார்க்க சட்டங்கள் களையப்படுவதற்கும் அவைகள் ஊடாக வெளியீடும் கட்டுரைகள் காவிpயங்கள் மூலம் அப்பழுக்கற்ற இயற்கை நெறியை விட்டும் மனிதர்களைத் தடம் புரளச் செய்வதிலும் பெரும் பங்கு வகித்துள்ளது. மனிpதர்களில் பெரும் பான்மையானோர் இறைகட்டளைகளை புறக்கணிப்பதற்கும் பாவத்தில் மூழ்குவதற்கும் வாலிபர்கள் பெரும்பாலானோர்களின் சிந்தனைகள் சிதைந்து பகுத்தறிவுகள் பாழ்படுவதற்கும் அவைகள் பலமான ஆதிக்கம் செலுத்தியிருக்கிறது.
சுருக்கமாகக் கூறுவதாயின் அப் பத்திரிக்கைகள் அனைத்திலும் பிரதான நோக்கம் பெண்ணின் உடலைப்படம் பிடித்துக்காட்டி அசிங்கமான கலாச்சாரத்தை அரங்கேற்றி மனிpதர்களை குழப்பத்தில் ஆழ்த்தி இஸ்லாமிய சமூக அமைப்பைச் சீரழிந்து, நன்மையை ஏவி தீமையைத் தடுக்காத – இறை மார்க்கத்திற்கு அணுவும் மதிப்பளிக்காத அதற்கு தலை சாhய்க்காத மிருக கலாச்சாரத்திற்கு தாரை வார்ப்பதாகும். இப் பரிதாபமான நிpலைதான் பெரும்பாலான சமூகத்திpல் காணப்படுகிறது. மட்டுமின்றி ஐரோப்பா போன்ற நாடுகளில் சி
pல பிரதேசங்களில் (நிர்வான நகரம்)என்ற பெயரில் (ஆபாசநகரங்கள்) உருவாக்கப்பட்டு பாலியல் வன்முறைக்கு அழைப்பு விடுமளவுக்கு நிலமைகள் மோசமடைந்துள்ளன.
இப்படி பெரும் ஆபாசங்களைத் தாங்கி வெளி வரும் பத்தரிக்கைகள் வியாபாரத் தளங்களில் விற்பனைச் செய்யப் படுவது பற்றி அறிஞர்கள், கல்வி மான்கள், மாணவர்கள், மார்க்கப் பற்றுடையோர் ஆகியோர் நமக்கு தாக்கல் செய்து அதற்கான தீர்வை வேண்டியதையடுத்து அவர்களுக்கும், நல்லுபதேசத்தை விரும்பும் நல்லுள்ளங்களுக்கும் பதிலளிக்கும் வகையில் –
சவுதி அரேபியாவின் ஃபத்வா, மற்றும் அறிவு ஆராய்ச்சிக்கான அறிஞர்கள் சபை பின் வரும் மார்க்கத் தீர்ப்பை வெளியிட்டுள்ளது.
1 இது போன்ற ஆபாசமான பத்திரிக்கைகளை பிரசுரிப்பது ஹராமாகும். அது பொது பத்திரிக்கைகள் அல்லது பெண்களுக்கான விசேஷ பத்திரிக்கைகள் எதுவானாலும் சரியே அதனை வெளியீடுவோர் ‘எவர்கள் ஈமான் கொண்டுள்ளோரிடையே அத்தகைய மானக்கேடான காரியங்கள் பரவ வேண்டுமென பிரியப்படுகின்றாரோ நிச்சயமாக அவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நோவினை செய்யும் வேதனை உண்டு” (24:19)என்ற இறை கண்டனத்திற்கு ஆளாகுவர்.
2 இவ்வாறு ஆபாசப் பத்திரிக்கைகளில் காரியாலய உத்தியோகத்தர்களாக, ஆசிரியர்களாக நிருபர்களாக, செய்தி ஆசிரியர்களாக தொழில் புரிவதும், அச்சிட்டு வெளியிடுவதும் ஹராமாகும். மட்டுமல்லாது அது பாவத்திற்கு ஒத்துழைப்புக்கு நல்குவதாகும். ‘அல்லாஹ் அல்குர்ஆனில் நீங்கள் பாவமான காரியத்திலும் ஒருவரைப் பகைத்து வாழ்வதிலும் ஒருவருக் கொருவர் உதவியாளர்களாக இருக்க வேண்டாம், மேலும் அல்லாஹ்வை நீங்கள் பயந்து வாழுங்கள் நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டனை செய்பவன்” எனக் கூறுவதைக் கவனத்தில் கொள்ளவும்.
3 இதற்காக விளம்பரங்கள் செய்வதும் ஒத்துழைப்பு நல்குவதும் வாடிக்கையாளர்களாகச் சேர்ந்து பணிp புரிவதும் எவ்வகையிலும் கூடாது. இவ்வாறு மீறிச் செய்வோர் ‘எவன் ஒருவன் வழி கேட்டிற்காக வழி திறந்து கொடுக்கிpறானோ அவன் அப் பாவத்திற்கான முழுப்பொறுப்பையும் அதைப் பின்பற்றி யாரெல்லாம் வழிகெட்டார்களோ அவர்களின் பாவத்திற்கான பொறுப்பையும் சுமந்து கொள்வான்.” என்ற நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் எச்சரிக்கைக்கு பொறுப்பாகுவார்.
4 இப்பத்தரிக்கைகளை விற்பதும், இதில் கிடைக்கும் இலாபங்களைப் பெறுவதும்ஹராமாகும். இத்தொழிலில் ஈடுபடுவோர் அல்லாஹ்விடம் பாவமீட்சி பெறுவதும் இத்தீய சம்பாத்தியத்திலிருந்து ஒதுங்கிக் கொள்வதும் அவசியமாகும்.
5 அவைகளில் மார்க்க விரோத காரியங்கள் அடங்கியிருப்பதாலும், அதன் உற்பத்தியாளர்களின் நிதிநிலைமைகள் அதிகரிப்பதற்கும், அதன் விளம்பரங்களும், வெளியீடுகளும், செல்வாக்கும் பெருகுவதற்கும், அது உந்துசக்தியாக இருப்பதாலும், அவைகளை ஒரு முஸ்லிம் வாங்குவதும், சேமித்து வைப்பதும் ஹராமாகும். மேலும் ஒரு முஸ்லிம் தனது பொறுப்பிலுள்ள ஆண்,பெண் குழந்தைகள் இக்குழப்பத்தில் வீழ்வதிலிருந்து
அவர்களை பாதுகாக்கும் பொருட்டு அவைகளைப் பெறுவதற்கான வழிகளைச் செய்து கொடுப்பதிலிருந்தும் எச்சரிக்கையா இருத்தல்வேண்டும். தனது பொறுப்பிலுள்ளோர் பற்றி மறுமையில் விசாரிக்கப்படுவான் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
6 ஒரு முஸ்லிம் அல்லாஹ்வுக்குவழிபட்டு அவனதூதருக்கு கட்டுப்படும் நோக்கிலும், இக்குழப்பத்தில் இருந்து தூர விலகிக் கொள்வதற்காகவும், அவைகளில் காணப்படும் ஆபாசப்படங்களைபார்பது, ரசிப்பதிலிருந்தும் தனது பார்வையைத்தாழ்த்திக் கொள்வது அவசியமாகும்.
மனிதன் தன்னை பாவாத்திற்கு அப்பாற்பட்ட புனிதத்துவம் நிறைந்தவனாகத்தன்னில் வாதிடுவது அவனுக்கு உகந்ததல்ல. ஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்களில் ஓடுவதாக நபி(ஸல்) அவர்கள் கூறியிருப்பதை நினைவில் கொள்ளவும். இமாம் அஹ்மத்(ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள். (காமம்நிறைந்த) எத்தனையோ பார்வைகள் அதன் சொந்தக்காரர்களுக்கு எதிரான பலவிபரீதங்களை ஏற்படுத்தியிருக்கின்றது.
ஆகவே எவரின் இதயம் இந்த ஆபாசப் பத்திரிகைகள் மீது தொடர்புடையதாக இருக்கின்றதோ அவரின் இதயமும், வாழ்வும் சீர்குலைவது மட்டுமல்லாது, ஈருலகிலும் எவ்வித பயனுமற்ற ஒன்றின் பக்கம் அவனை அது இட்டுச் செல்லும். இதயத்தினதும் வாழ்கையினதும், சுபீட்சம் இறைவனுடன் ஏற்படுத்திக்கொள்ளும் தொடர்பிலும், இழிவுபடுவதிலும், அவனை நேசிப்பதிலுமே தங்கியிருக்கின்றது.
7 முஸ்லிம் பிரதேசங்களை ஆட்சிசெய்ய அல்லாஹ் யாருக்கு வழிசெய்து கொடுத்திருக்கின்றானோ அவர்கள் முஸ்லிம்களை இதுபோன்ற தீமைகளை விட்டு விடுமாறு உபதேசித்து நடப்பதும், குழப்பத்தையும், அதன் இறக்குமதியாளர்களையும், அம்மக்களை விட்டும் அகற்றுவதும், அவர்களின் இம்மை மறுமைக் காரியங்களில் அவர்களுக்கு ஊறு விளைவிப்பவைகளை அவர்களைவிட்டும் விலக்குவதும் கடமையாகும். இந்த அடிப்படையில் ஆபாச பத்திரிகைகளை அச்சியிடுவதும் வினியோகிப்பதும் அதன் தீமைகள் பொதுமக்களிடையே பரவுவதை விட்டும் தடுப்பதும் அல்லாஹ்வின் மார்க்கத்திற்கு செய்யும் உதவியும் விமோசனமும் ஈடேற்றமும் கிடைக்கும் வழியும் இப்பூமியில் இறையாட்சி (தொடர்ந்தும் ) ஏற்படுத்தி தருவதற்கான காரணிகளாகும். இதைத்தான் அல்லாஹ்வின் திருமறைவசனம் உறுதி செய்கின்றது.
‘அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கின்றானோ அவனுக்கு நிச்சயமாக அல்லாஹ் உதவி செய்கின்றான். நிச்சயமாக அல்லாஹ் வல்லமை மிக்கோனும் (யாவரையும்)மிகைத்தோனுமாக இருக்கின்றான். அன்றியும் இவர்கள் (எத்தகையோர் என்றால); இவர்கள் நாம் பூமியில் (ஆட்சி செய்யும்) இடத்தை ஏற்படுத்திக் கொடுத்தால் இவர்கள் தொழுகையை முறையாக கடைபிடிப்பார்கள். ஜக்காத்தும் கொடுப்பார்கள். நன்மையான காரியங்களை செய்யவும் ஏவுவார்கள். தீயமையை விட்டும் விலக்குவார்கள். மேலும் சகல காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே இருக்கின்றது.(அல்ஹஜ்:22:41)
அனைத்து புகழுக்கும் சொந்தக்காரன் அகிலங்களின் ரட்சகன் அல்லாஹ் ஒருவனே!!!
இவண்:- அறிவுஆராய்ச்சிமற்றும் ஃபத்வாக்குழு.
தலைவர்:- அப்துல்அஸீஸ் அப்துல்லாஹ் ஆலுஸ்ஷேக்.
உறுப்பினர்கள்: அப்துல்லாஹ்அப்துர்ரஹ்மான் அல்கத்யான். பக்ர்பின் அப்துல்லாஹ் அபூசைத். ஸாலிஹ்பின்பௌசான அல் பௌசான்.
ஆபாசப் பத்திரிக்கைகளும் அதன் விபரீதங்களும்
வெளியீடு: அறிவு ஆராய்ச்சி மற்றும் ஃபத்வாக்குழு (சவூதி அரேபியா)
தமிழில் : எம்.ஜே.எம். ரிஸ்வான், அழைப்பு மற்றும் வழி காட்டல் நிலையம்.