Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

மன்னிப்பே இல்லாத மாபெரும் பாவம் – Part 2

Posted on October 30, 2008 by admin

வானங்களையும் பூமியையும் படைத்தவன் அல்லாஹ் என்று தான் அம்மக்கள் நம்பினார்கள்.  இருந்தும் அவர்களைத் தான் முஷ்ரிகீன்கள் (இணை வைப்போர்) என்று அல்லாஹ்  கூறுகிறான்.

“பூமியும், அதில் உள்ளோரும் யாருக்குச் சொந்தம்?  நீங்கள் அறிந்தால் (பதிலளியுங்கள்) என்று (முஹம்மதே)  கேட்பீராக! ‘அல்லாஹ்வுக்கே” என்று அவர்கள்  கூறுவார்கள். ‘சிந்திக்க மாட்டீர்களா?” என்று கேட்பீராக!

ஏழு வானங்களுக்கும் அதிபதி, மகத்தான அர்ஷுக்கும்  அதிபதி யார்? எனக் கேட்பீராக! ‘அல்லாஹ்வே” என்று  கூறுவார்கள்.

‘அஞ்சமாட்டீர்களா?” என்று கேட்பீராக!  ‘பாதுகாப்பவனும், (பிறரால்) பாதுகாக்கப்படாதவனும்,  தன் கைவசம் ஒவ்வொரு பொருளின் அதிகாரத்தை  வைத்திருப்பவனும் யார்? நீங்கள் அறிந்தால் (பதில் கூறுங்கள்)  என்று கேட்பீராக! ‘அல்லாஹ்வே” என்று கூறுவார்கள்.  எவ்வாறு மதிமயக்கப்படுகிறீர்கள்” என்று கேட்பீராக!  (அல்குர்ஆன்13: 88-89)

இவர்களைத் தான் முஷ்ரிகீன்கள் (இணை வைப்போர்)  என்று அல்லாஹ் கூறுகிறான். இவை யாவும் அல்லாஹ்வின் திரு  மறையே எடுத்து வைக்கும் ஆதாரங்களாகும். என்றாலும்   அந்த மக்கத்துக் காஃபிர்கள், அல்லாஹ்வைத்தான்  இறைவனாக ஏற்றுக் கொண்டவர்கள் என்பதை  எல்லோருக்கும் தெரிந்த மிகவும் எளிமையான ஆதாரத்துடன்  புரிந்துக் கொள்ள வேண்டுமா? இதோ!

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் பிறப்பதற்கு முன்பே  தாயின்வயிற்றில் இருந்த போதே- அவர்களின் தந்தை  அவர்கள் இறந்து விட்டார்கள் என்பது வரலாற்று உண்மை.

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்து வளர்ந்து, தமது  40 ஆம் வயதில்தான் இறைச் செய்தியைப் பெற்று ஏகத்துவம்  என்னும் ஓரிறைக் கொள்கையை வெளி உலகத்துக்கு கூறத்  தொடங்கினார்கள்.

ஆனால் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் பிறப்பதற்கு  முன்பே இறந்து விட்ட அவர்களின் தந்தையின் பெயர்  அப்துல்லாஹ் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.  அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பாட்டனார் அப்துல்  முத்தலிப் அவர்கள் தமது மகனுக்கு அப்துல்லாஹ் அதாவது  அல்லாஹ்வின் அடியார் என்று பெயர் சூட்டியிருப்பதிலிருந்தே  அந்த மக்கள் அல்லாஹ்வைத்தான் இறைவனாக  ஏற்றிருந்தார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறதல்லவா?

இருப்பினும் அந்த மக்களை முஷ்ரிகீன்கள் (இணை  வைப்போர்) என்று அல்லாஹ் கூறுகிறான். ஏனென்றால் அந்த  மக்கள், அல்லாஹ்வை ஏற்றுக் கொள்ள வேண்டிய விதத்தில்  ஏற்றுக் கொள்ளவில்லை. அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தான  சிறப்புத் தன்மைகளை தங்கள் முன்னோர்களில், நல்லோர்  பலருக்கும் பங்கு வைத்தனர்.

அல்லாஹ்வை வணங்கினர். அல்லாஹ்வுக்கு இணையாக  தமது முன்னோர்கள் வழிபட்ட சிலைகளையும் வணங்கினர்.  அல்லாஹ்வை அழைத்துப் பிரார்த்தித்தனர்.  அல்லாஹ்வுக்கு இணையாக தங்கள் முன்னோர்களில்,  நல்லவர்களாக வாழ்ந்து மறைந்த நல்லடியார்களையும்  அழைத்துப் பிரார்த்தித்தனர்.

அல்லாஹ்வுக்கு ஆற்றல் உண்டு என்று நம்பினர்.  அல்லாஹ்வுக்கு இணையாக தமது முன்னோர்களில் இறந்து  போய்விட்ட நல்லோர்களுக்கும் ஆற்றல் உண்டு என்று  நம்பின அல்லாஹ்வுக்கு அறுத்து பலியிட்டனர். அல்லாஹ்வுக்கு   இணையாக நல்லடியார்களின் உருவச் சிலைகளுக்கும் அறுத்து  பலியிட்டனர்.

அல்லாஹ்வுக்கு நேர்ச்சை செய்தனர். அல்லாஹ்வுக்கு  இணையாக தம் இஷ்ட தெய்வங்களுக்கும் நேர்ச்சை  செய்தனர்.

அல்லாஹ்வைத் தான் வணங்கினர். தமது  முன்னோர்களில் நல்லவர்களாக வாழ்ந்து மறைந்த பெரியார்கள்  தங்களுக்காக அல்லாஹ்விடம் சிபாரிசு செய்வார்கள் என்று  நம்பினர். அல்லாஹ்விடம் தங்களை சமீபமாக்கி வைப்பார்கள்  எனக் கருதினர். இவற்றைத்தான் ஷிர்க் என்று அல்லாஹ்  கூறுகிறான்.

அல்லாஹ்வுக்குச் சமமாக மனிதர்களில் எவரையும்  கருதக் கூடாது என்பதும், அல்லாஹ்வுக்குச் சமமான ஆற்றல்  மனிதர்களில் எவருக்கும் இருப்பதாக நம்புவது கூடாது  என்பதும், அல்லாஹ்வுடைய அதிகாரத்தில் மனிதர்கள்  எவருக்கும் பங்கிருப்பதாக நினைப்பது கூடாது என்பதும்,  அல்லாஹ்வுடைய தனித் தன்மைகள் மனிதர்களில் எவருக்கும்  இருப்பதாக எண்ணுவது கூடாது என்பதும், மார்க்கம் அறியாத  பாமர முஸ்லிமுக்கும் தெரியும்.

இப்படியெல்லாம் முஸ்லிம்கள் எவரும் கருதுவதில்லையே  என்று தான் அனைவருமே கூறுவர். ஆம் உண்மை தான்.  எந்த ஒரு முஸ்லிமின் இதயத்திலும் எள்ளளவும் இப்படி ஒரு  எண்ணம் இருக்கமுடியாது என்பது உண்மை தான்.  இது தானே தவ்ஹீத் என்னும் ஏகத்துவக் கொள்கை!  இந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்டவர் தானே முஸ்லிமாக  இருக்க முடியும்? இதற்கு மாற்றமான எந்த ஒரு  கொள்கையையும் எந்த ஒரு முஸ்லிமும் கொண்டிருக்க  முடியாதே!

ஆனால் நம்மில் பலர், தம்மையும் அறியாமல்  தங்களுக்கே தெரியாமல் அல்லாஹ்வுக்குச் சமமாக  மனிதர்களில் சிலரைக் கருதிக் கொண்டிருப்தும்,  அல்லாஹ்வுக்குச் சமமான ஆற்றல் மனிதர்களில் சிலருக்கு   இருப்பதாக நம்பிக் கொண்டிருப்பதும், அதிர்ச்சி தரும்  உண்மைகளாகும்.

அறியாமல் செய்த தவறுகளை அல்லாஹ் மன்னிப்பான்  என்பது சரி தான்.ஆனால் அறிந்துக் கொள்வதற்கான சகல  வழிகளும் திறந்திருக்கும் போது- தெளிவான பாதை கண்  முன்னே பளிச்சிடும் போது கண்களை இறுக மூடிக் கொண்டு,  கரடு முரடான பாதையில் தான் பயணிப்பேன் என்று அடம்  பிடிப்பவர்களை அல்லாஹ் மன்னிக்க மாட்டான்.

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறினார்கள்:  நான் உங்களை வெள்ளை வெளேர் என்ற (தெளிவான)  பாதையில் விட்டுச் செல்கிறேன். அதன் இரவும் பகலைப்  போன்றது.

நமது கொள்கை கோட்பாடுகள், வணக்க வழிபாடுகள்,  சிந்தனை செயல்பாடுகள்,சரியானவை தானா? என்பதை  இறைமறை குர்ஆனின் அடிப்படையிலும், இறைத்தூதர்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களின் தெளிவான வழகாட்டுதல் அடிப்படையிலும், மறுபரிசீலனை செய்து பார்த்தால், நம்மில் பலர் தாங்கள்  எவ்வளவு பெரிய ஷிர்க் என்னும் வழிகேட்டில் போய்க்  கொண்டிருக்கின்றனர் என்பதைப் புரிந்துக் கொள்ளலாம்.  மன்னிப்பே இல்லாத அந்த மாபெரும் பாவத்திலிருந்து மீட்சி  பெறலாம்.

இறைத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறினார்கள்:

“நான் உங்களிடையே இரண்டை விட்டுச் செல்கிறேன்  அவ்விரண்டையும் பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம் வழி  தவறவே மாட்டீர்கள். (ஒன்று) அல்லாஹ்வின் திருமறை.  (மற்றொன்று) எனது வழி முறை.”  (அறிப்பவர்: இப்னு அப்பாஸ், நூல்: புகாரி)

அல்லாஹ்வின் திரு மறை குர்ஆனையும், சின்னஞ்சிறு  விஷயங்களைக் கூடத் தெளிவாக விளக்கும் ஆதாரப்  பூர்வமான நபி மொழித் தொகுப்புகளையும், அறிஞர்கள் நமக்கு  அருந் தமிழில் மொழி பெயர்த்துத் தந்துள்ளனர்.  இனி நமக்குத் தேவை சிந்திக்கும் ஆற்றல் மட்டும்  தான். அல்லாஹ் நமக்கு ஐம்புலன்களுடன் சேர்த்து  அறிவையும் தந்திருக்கிறான். அறிவைப் பயன்படுத்தி  சிந்திக்கவும் சொல்கிறான்.

“அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா?  அல்லது அவர்களின் உள்ளங்கள் மீது அதற்கான பூட்டுக்கள்  உள்ளனவா?”(அல்குர்ஆன்)

“இக் குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கியுள்ளோம்;  படிப்பின பெறுவார்உண்ட்டா?” (அல்குர்ஆன்)

நமது கொள்கை கோட்பாடுகளை, வணக்க  லழிபாடுகளை, அருள் மறை குர்ஆன் மற்றும் ஆதாரப் பூர்வமான  நபி மொழிகளின் அடிப்படையில் ஒப்பிட்டு ஷிர்க் என்னும்  இணை வைத்தல் எள்ளளவும் இல்லாமல் பார்த்துக் கொள்ள  வேண்டும். இல்லையேல் இவ்வுலகில் நாம் புரிந்த இறை  வணக்கங்கள் யாவும் விழலுக்கு இறைத்த நீராக வீணாகிப்  போகும்.

நம்மையும் அறியாமல் நமது இறை வணக்கத்தில், மற்றும்  அன்றாடப் பழக்க வழக்கங்களில், ஷிர்க் என்னும் கொடிய  பாவம் கடுகளவும் கலந்து விடாமல் கவனமாக இருக்க  வேண்டும். இல்லையேல் எல்லாமே பாழாகிப் போகும். மீள  முடியாத நரக நெருப்பில் ஊழியூழி காலம் உழன்றுக்  கொண்டிருக்க வேண்டியது தான். (அல்லாஹ் நம்மைக்  காப்பானாக).

நல்லவையும் தீயவையும் மார்க்கத்தில் தெளிவாக்கப்பட்டு விட்டன. இரண்டையும் பிரித்தறிய தெளிவான  வழிகாட்டுதல் இருக்கிறது. மார்க்க விஷயத்தில் ஒரு செயல்  நல்லதா- கெட்டதா என்பதை நம் விருப்பத்துக்கு முடிவு  செய்யக் கூடாது.

இறை வணக்கத்திலிருந்து இல்லற வாழ்க்கை வரை  ஆகுமானவற்றையும் ஆகாதவற்றையும், அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்    அவர்கள் நமக்குத் தெளிவாக விளக்கி விட்டார்கள். அதற்கு  மேலும் மார்க்க விஷயத்தில் நமது சுய அபிப்பிராயத்திற்கு  முடிவு செய்வது, அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களின்  தூதுத்துவத்தில் குறை காண்பதாகும். (அல்லாஹ் நம்மைக்  காப்பானாக)

தீமைகள் குறித்து சந்தேகத்திற்கு இடமின்றி குர்ஆனும்  ஹதீஸ்களும் நமக்கு விரிவாக விளக்கி விட்டன. அவற்றைத்  தெளிவாகப் புரிந்துக் கொண்டவர்கள், அவற்றிலிருந்து  முற்றிலும் விலகி, பாவத்திலிருந்து தம்மைக் காத்துக்  கொள்வார்கள், எனவே தீயவற்றைக் குறித்து நாம் அலசி  ஆராயத் தேவையில்லை.

ஆனால் நன்மைகள் என்ற பெயரில் தீமைகளை நியாயப்படுத்தி ஷைத்தான் நம்மை வழி கெடுப்பான். நன்மையான  காரியங்கள் என்ற பெயரில் நம்மிடையே வழக்கத்தில்  உள்ளவற்றில் தான் அதிக கவனமும் எச்சரிக்கையும் தேவை.  நல்ல பொருட்கள் என்று நம்பப் பட்டவைகளில் தான்  போலிகள் உருவாகி விற்பனைக்கு வரும்.

நல்லவர்களை வழி கெடுப்பதில் தான் ஷைத்தானுடைய  வெற்றி இருக்கிறது. ஏற்கனவே தனது கட்சியில் நிரந்தர  உறுப்பினர்களாக இருப்பவர்கள் குறித்து எந்தக் கட்சித்  தலைவரும் அதிக அக்கரைச் செலுத்துவதில்லை. புதிய  உறுப்பினர்களைச் சேர்ப்பதில்தான் கட்சித் தலைவரின் முழு  கவனமும் இருக்கும்.

இறைவனும், இறைத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும்  எவற்றையெல்லாம் ‘நன்மை” என்று நமக்கு அறிமுகம்  செய்தார்களோ அவை தான் நன்மை. அவை மட்டுமே  நன்மைகளாகும்  அவற்றைத் தவிர, வேறு எவரேனும் தம் சுய  விருப்பத்திற்கு ‘நல்லவை” என்று பட்டியலிட்டவை எவையும்  நல்லவையாகாது. பட்டியலிட்டவர் எவ்வளவு பெரிய  பண்டிதராயினும் சரியே.

நமது கொள்கைகளில், எண்ணங்களில், செயல்களில்,  சிந்தனைகளில், நமக்கே தெரியாமல் இணை வைத்தல்  என்னும் ஷிர்க் எந்த வகையிலெல்லாம் ஊடுருவி இருக்கலாம்  என்பதை ஒவ்வொன்றாக ஆராய்வோம்.

அண்ண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை  அல்லாஹ்வுக்குச் சமமாகக் கருதுவது ஷிர்க்  நம்பிக்கை (ஈமான்) கொண்டோருக்கு தங்களை விட  இந்த நபி (முஹம்மத்) தான் முன்னுரிமை பெற்ற்றவர்.  (அல்குர்ஆன் 33:6)

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் மீது நாம் அளவு கடந்த  அன்பு கொண்டிருக்கிறோம். நமது தாய் தந்தையை விட,  மனைவி மக்களை விட, உடன் பிறந்தோரை விட, உற்றார்  உறவினரை விட, ஏன் நமது உயிரை விடவும் மேலாக, நாம்  அவர்களை மதிக்க வேண்டும்.அப்படித் தான் நாம் அவர்களை  மதிக்கிறோம் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால், அல்லாஹ்வுக்குச் சமமாக அவர்களைக்  கருதுலதோ, அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தான தனித்  தன்மைகள் அண்ணல் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களுக்கு இருப்பதாக  நம்புவதோ கூடாது. அது ஷிர்க் ஆகும்.

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒரு நபித் தோழர்  வந்து, ‘அல்லாஹ்வும் அவனது தூதரும் நாடியபடி” என்று  கூறினார். உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், முதலில் அல்லாஹ்  நாடியபடி, அதன் பிறகு அவனது தூதர் நாடியபடி என்று தனித்  தனியாகக் கூறும்படி திருத்தினார்கள்.  மக்கள் எந்த வகையிலும் அல்லாஹ்வுக்குச் சமமாகத்  தம்மை ஆக்கி விடக் கூடாது, என்பதில் எச்சரிக்கையாக  இருந்தார்கள்.

நம்மில் எவருமே, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை  அல்லாஹ்வுக்குச் சமமாகக் கருதுவதும், அல்லாஹ்வுக்குச்  சமமான ஆற்றல் படைத்தவராகக் கருதுவதும் கிடையாதே!  என்று வாதிடலாம்.

ஆம் உண்மை தான். எந்த ஒரு முஸ்லிமின்  இதயத்திலும் அணுளவும் அப்படி ஓர் எண்ணமோ,  கொள்கையோ இல்லை என்பது உண்மை தான்.  ஆனால் நம்மில் பலரிடம், அவர்களையும் அறியாமல்  அப்படி ஒரு விபரீதக் கொள்கைக் குடி கொண்டிருப்பதை  அவர்கள் உணருவதில்லை. உணர்ந்து விட்டால் தங்களைத்  திருத்திக் கொள்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது புகழ்மாலை  பாடுகிறோம் என்று, பொருள் புரியாமல் பாடுகின்ற மவ்லிதுப்  பாடல்களிலும், பொழுது போக்காகப் பாடுகின்ற இஸ்லாமியப்  பாடல்கள் என்னும் இன்னிசை கீதங்களிலும், ஷிர்க்கான  கருத்துக்கள் மலிந்துக் கிடக்கின்றன.

அன்த ஷம்சுன் அன்த பத்ருன்  அன்த நூருன் ஃபவ்க நூரி –  நீங்களே சூரியன், நீங்களே சந்திரன், நீங்களே ஒளி,  ஒளிக்கும் மேல் ஒளி, என்னும் சுப்ஹான மவ்லிதின் வார்த்தை  ஜாலங்களில் மயங்கிப் போனவர்கள்,

“அல்லாஹ் வானங்கள் மற்றும் பூமியின் ஒளியாவான்”  (அல்குர்ஆன்) என்னும் திருமறை வசனத்தை  நினைவிற் கொள்ள வேண்டாமா?

வானங்கள் மற்றும் பூமியின் ஒளி, தானே என்று  அல்லாஹ் கூறும் போது அவனது அடியாரும் தூதருமாகிய நபி  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ‘ஒளிக்குமேல் ஒளி” எனக் கூறுவது  ஷிர்க் இல்லாமல் வேறு என்ன?

அன்த கஃப்பாருல் கதாயா வத் துனூபில் மூபிகாத்தி  பாவங்களை மன்னிப்பவர் நீங்களே! என்று அரபியில்  நீட்டி முழக்கிப் பாடுபவர்கள்,\

“அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவர் யார்?:  (அல்குர்ஆன் 3:35)என்று அதிகாரத்துடன் அல்லாஹ்  கேட்பதை எப்படி மறந்தார்கள்?

பாவங்களை மன்னிப்பவன் தன்னைத் தவிர யாரும்  இல்லை என்று அல்லாஹ் கூறும் போது, ‘அண்ணல் நபி  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பாவங்களை மன்னிப்பவர்” என்று சொல்வது  மன்னிக்க முடியாத குற்றமல்லவா?இது ஷிர்க் இல்லாமல் வேறு என்ன?

அரபிக் கவிதைகளின் அர்த்தம் தெரியாமல்,  ஆர்வமேலீட்டால், அப்படியே பாடியிருந்தாலும், பொருள் புரிந்த  பிறகேனும், இந்த ஷிர்க்கான பாடல்களையும்,  மவ்லிதுகளையும், விட்டொழிக்கா விட்டால், அல்லாஹ்வின்  தண்டனை மிகக் கடுமையாக இருக்கும். எச்சரிக்கை!

மவ்லிதுப் பாடல்களில் பரவிக் கிடக்கும் ஷிர்க்கான  கருத்துக்களைப் பட்டியலிட்டால், அதுவே ஒரு தனி நூலாக  விரியும். மவ்லிது கிதாபுகளில் காணப்படும் பெரும்பாலான  கருத்துக்கள் ஷிர்க்கானவை. உதாரணத்திற்கு மட்டுமே  ஒன்றிரண்டை தொட்டுக் காண்பித்தோம்.

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறினார்கள்: கிறிஸ்தவர்கள் மர்யமுடைய மகன் ஈசா அலைஹிஸ்ஸலாம்  அவர்களை வரம்பு மீறிப் புகழ்ந்தது போல், என்னை நீங்கள்  வரம்பு மீறிப் புகழாதீர்கள். அல்லாஹ்வின் அடியார் என்றும் தூதர்  என்றுமே கூறுங்கள்.  (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி)

இறைத் தூதர் என்னும் உயர்ந்த பதவியை விட   இறைவனின் அடியார் என்று தம்மைக் கூறுவதற்கே முன்னுரிமை  அளித்து, கிறிஸ்தவர்கள் ஈசா அலைஹிஸ்ஸலாம்அவர்கள் விஷயத்தில்  வரம்பு கடந்து விட்டதையும் உதாரணம் கூறி, ஷிர்க்கின் நிழல்  கூட விழாமல் எவ்வளவு தெளிவாக எச்சரித் திருக்கிறார்கள்.

இறை நேசர்களை இறைவனுக்குச்சமமாகக் கருதுவது ஷிர்க்.  அவ்லியாக்கள் என்னும் அல்லாஹ்வின் நேசர்கள்,  எல்லாக் கால கட்டத்திலும் வாழ்ந்திருக்கின்றனர். இப்போது  வாழ்ந்துக் கொண்டிருப்பவர்களிலும் எத்தனையோ இறை  நேசர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.

அல்லாஹ்வின் கட்டளையை அப்படியே ஏற்று, அவனது  திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அடியொற்றி தங்கள்  வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் அனைவருமே இறை நேசர்கள் தான்.

வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட  தர்காக்களில், அடக்கப்பட்டுள்ளவர்கள் மட்டும் தான், ‘இறைநேசர்கள்” என்று எண்ணி விடக் கூடாது. வெளி உலகுக்கு  வெளிச்சம் போட்டுக் காட்டாமலேயே, வாழ்ந்து மறைந்த  பண்பாளர்கள் எத்தனயோ?

பாரெங்கும் யாரெல்லாம் அப்படி இறை நேசர்களாக  வாழ்ந்து மறைந்தார்கள் என்பதை அல்லாஹ் மட்டுமே  அறிவான். அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உயரிய  குடும்பத்தாரும், உற்ற தோழர்களும், பாரெங்கும் இஸ்லாம்  பரவ பாடுபட்ட அனைவருமே, அவ்லியாக்கள் என்னும்  அல்லாஹ்வின் நேசர்கள் தான்.

அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு, உமர் ரளியல்லாஹு அன்ஹு, உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு, அலி ரளியல்லாஹு அன்ஹுபோன்றவர்களை விடச் சிறந்த இறை நேசர்கள் இருக்க முடியுமா?

இவர்களையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, யாரோ ஒரு  சிலரை மட்டும், அவ்லியாக்களாகக் கருதி, அவர்களுக்கு  மட்டுமே முக்கியத்துவம் அளித்து, அவர்களின் பெயரால்  கற்பனைக்கு அப்பாற் பட்ட கட்டுக் கதைகளை இட்டுக் கட்டி,  அவர்களைப் புகழ்வதாக நினைத்து, அவர்களின் தூய இறை  நேச வாழ்க்கையை களங்கப் படுத்துவது வேதனையிலும்  வேதனை.

அந்த அவ்லியாக்கள் என்னும் இறை நேசச்செல்வர்களை அல்லாஹ்வுக்குச் சமமான ஆற்றல்  படைத்தவர்களாகக் கருதுவதும், அல்லாஹ்வுக்கு மட்டுமே  உரிய தனித் தன்மைகள் அந்த இறை நேசர்களுக்கும்  இருப்பதாக நம்புவதும் ஷிர்க் ஆகும்.

எந்த மகானையும் யாருமே அல்லாஹ்வுக்குச் சமமாகக்  கருதுவதில்லையே! அவர்களின் அடக்கத் தலங்களுக்குச்  சென்று அவர்களை ஸியாரத் செய்வதைத் தவிர, அவர்களை  அல்லாஹ்வாகவோ அல்லாஹ்வுக்குச் சமமானவராகவோ  கடுகளவும் மனதால் கூட யாரும் நினைப்பதில்லையே! என்று  வாதிடலாம்.

ஆம் உண்மை தான். எந்த ஒரு முஸ்லிமின்  இதயத்திலும் இப்படி ஒரு எண்ணம் இருக்க முடியாது என்பது  உண்மை தான்.  ஆனால் அப்படிச் சொல்பவர்கள், தங்கள்  பேச்சுக்களையும், செயல்பாடுகளையும், எண்ணங்களையும்,  காய்தல் உவத்தலின்றி, நடு நிலையோடு சிந்தித்துப்  பார்த்தால், அவர்களது கொள்கையில் ஷிர்க் குடி  கொண்டிருப்பது அவர்களுக்குத் தெளிவாக விளங்கும்.

இறை நேசர்களை அழைத்துதுப் பிரார்த்த்திப்பது ஷிர்க்.

“அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ  அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே! நீங்கள்  உண்மையாளர்களாக இருந்தால், அவர்களை அழைத்துப்  பாருங்கள். அவர்கள் உங்களுக்கு பதில் தரட்டும்”.  (அல்குர்ஆன்)

“அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறிர்களோ அவர்கள்  உங்களுக்கு உதவிட இயலாது. தமக்கே அவர்கள் உதவிட  முடியாது”. (அல்குர்ஆன் 7:_97)

அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் அழைக்கக்  கூடாது என, அல்லாஹ்வின் திரு மறை தெளிவாகக்  குறிப்பிடும் போது, அவ்லியாக்கள் என்னும் அல்லாஹ்வின்  நேசர்களை அழைத்துப் பிரார்த்தித்தால், ஓடி வந்து  உதவுவார்கள் என நம்புவதுஷிர்க் இல்லாமல் வேறு என்ன?

இந்த வசனங்கள் அனைத்தும், மக்கத்துக் காஃபிர்கள்,  அல்லாஹ் அல்லாத தெய்வங்களை அழைத்துப்  பிரார்த்தித்தைத் தான் கண்டித்து அல்லாஹ் அருளிய  வசனங்கள் என்று, இறை நேசர்களை அழைத்துப்  பிரார்த்திப்போர் வாதம் புரிகின்றனர்.

இவ்விதம் வீண் விவாதம் புரிபவர்களின் வாயை  அடைக்கும் விதமாகத் திரு மறை குர்ஆன் மேலும் சில  வசனங்களின் மூலம் இன்னும் தெளிவு படுத்துகிறது. அந்த  வசனங்கள் இதோ!

“அல்லாஹ்வையன்றி யாரை அழைக்கிறார்களோ அவர்கள்  எதையும் படைக்க மாட்டார்கள்.;. அவர்களே படைக்கப் படுகின்றனர்”. (அல்குர்ஆன்_6:!0)

இதிலும் தெளிவு பெறாதவர்களுக்கு இன்னும் தெளிவாக  அல்லாஹ் விளக்குகிறான்.

“அவர்கள் இறந்தவர்கள். உயிருடன் இருப்போர் அல்லர்.  எப்போது உயிர்ப்பிக்கப்படுவோம் என்பதை அவர்கள் அறிய  மாட்டார்கள்.” (அல்குர்ஆன்)

‘எப்போது உயிர்ப்பிக்கப் படுவோம் என்பதை அவர்கள்  அறிய மாட்டார்கள்” எனக் குறிப்பிடுவது காஃபிர்கள் வணங்கிக்  கொண்டிருந்த கற்சிலைகளை அல்ல என்பதும் தர்காக்கள்  என்னும் கல்லறைகளில் மீளாத் துயில் கொண்டிருப் போரைப்  பற்றித் தான் என்பதும் இன்னுமா புரியவில்லை?

அல்லாஹ்வின் வசனங்களை அலட்சியம் செய்து விட்டு,  இன்னும் கெடுவேன் என்ன பந்தயம்? என்பது போல்  விதண்டாவாதம் புரிவோரும்,  இறந்து போய் மண்ணில் அடக்கப்பட்டு விட்ட,  அவ்லியாக்கள் என்னும் அல்லாஹ்வின் நேசர்களை அழைத்துப்  பிரார்த்திப்போரும், அதுவே சரி என்று நியாயம் கற்பிப்போரும்,  இதற்கு என்ன பதில் சொல்வார்கள்?  

இறை நேசர்கள் துன்பத்தைப் போக்குவார்கள் என நம்புபுவது ஷிர்க்.

“அல்லாஹ் உமக்கு ஒரு துன்பத்தை ஏற்படுத்தினால்,  அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. அவன்  உமக்கு ஒரு நன்மையை ஏற்படுத்த்தி விட்ட்டால், அவன்  அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்ற்றல் உடையவன்.”  (அல்குர்ஆன்)

“அல்லாஹ்வையன்றி நீங்கள் கற்பனை செய்தோரைப்  பிரார்த்தித்துப் பாருங்கள்! உங்களை விட்டும் கஷ்டத்தை  நீக்க்கவோ மாற்றவோ அவர்களுக்கு இயலாது என்று கூறுவீராக!”  (அல்குர்ஆன் 7:56)

மனிதர்களுக்கு ஏற்படும் துன்பத்தை அல்லாஹ்வைத்  தவிர வேறு யாருமே நீக்க முடியாது என்று அல்லாஹ் கூறும்போது, அவ்லியாக்கள் என்னும் அல்லாஹ்வின் நேசர்கள்,  துன்பத்தைப் போக்குவார்கள் என்றும், தீங்கிலிருந்துக்  காப்பாற்றுவார்கள் என்றும் நம்புவதும், இருட்டறையில்  இருந்துக் கொண்டு ‘குத்பிய்யத்” என்னும் கொடுமையை  அரங்கேற்றுவதும்,ஷிர்க் இல்லாமல் வேறு என்ன?

இறை நேசர்கள் குழந்தையைத்தருவார்கள் என நம்புபுவது ஷிர்க்

“வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே  உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான். தான்  நாடியோருக்குப் பெண்(குழந்தை)களை வழங்குகிறான். தான்  நாடியோருக்கு ஆண் (குழந்தை)களை வழங்குகிறான்”.(அல் குர்ஆன்)

“அல்லது ஆண்களையும் பெண்களையும் சேர்த்துஅவர்களுக்கு வழங்குகிறான்.தான் நாடியோரை மலடாக

ஆக்குகிறான். அவன் அறிந்த்தவன்.. ஆற்ற்றலுடையவன்.”

(திருக் குர்ஆன்)

ஆண் குழந்தைகளைத் தருவதும், பெண்

குழந்தைகளைத் தருவதும், இரண்டையும் சேர்த்துத்

தருவதும், குழந்தையைத் தராமல் இருப்பதும், அல்லாஹ்வின்

அதிகாரத்தில் உள்ளதாகும்.

அப்படியிருக்க, இறந்து போன இறை நேசர்கள் குழந்தை

வரம் தருவார்கள் என்று தர்காக்களில் தவம் இருக்கும்

தம்பதிகள் நம்புகிறார்களே!இது ஷிர்க் இல்லாமல் வேறு என்ன?

 

இறை நேசர்கள் பெயரால்நேர்ச்சை செய்வ்வது ஷிர்க்

“நீங்கள் எதையேனும் (நல்வழியில்) செலவிட்டாலோ,

நேர்ச்சை செய்தாலோ அல்லாஹ் அதை அறிகிறான். அநீதி

இழைத் தோருக்கு எந்த உதவியாளரும் இல்லை.”

(திருக் குர்ஆன்)

 

“இறைவா! என் வயிற்றில் உள்ளதை (குழந்தையை)

உனக்காக நேர்ச்சை செய்து விட்டேன். அது (உனக்காக)

முழுமையாக அர்ப்பணிக்கப்படும். (இதை) என்னிடமிருந்து

ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியுறுபவன், அறிந்தவன்,

என்று இம்ரானின் மனைவி கூறியதை நினைவூட்டுவீராக!”

(திருக் குர்ஆன் 3:35)

நேர்ச்சை என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே என்றும்,

மர்யம் (அலை) அவர்கள் பிறந்த போது அவரது தாய் செய்த

நேர்ச்சையை அல்லாஹ் ஏற்றுக் கொண்டதாகவும்

அல்லாஹ்வின் திரு மறை கூறுகிறது.

திருமணம் விரைவில் நடை பெறவும், குழந்தை பாக்கியம்

கிடைக்கவும், வெளி நாடு செல்ல விசா கிடைக்கவும்,

இன்னும் இது போன்று பல்வேறு நினைத்த காரியங்கள் நடக்க

வேண்டும் என்பதற்காக, பிற சமயத்தவர் தங்கள் குல

தெய்வங்களுக்கு நேர்ச்சை செய்வது போல் தர்காக்களுக்கு

நேர்ச்சை செய்யும் பாவிகளே!

அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய வேண்டிய நேர்ச்சையை

அவனது அடியார்களாகிய அவ்லியாக்கள் என்னும் இறை

நேசர்கள் பெயரால் செய்வதும், தர்காக்களில் தவம்

கிடப்பதும்,ஷிர்க் இல்லாமல் வேறு என்ன?

 

இறை நேசர்கள் பெயரால்அறுத்துதுப் பலியிடுவது ஷிர்க்

“தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி,

அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப் பட்டவை,

உங்களுக்குத் தடை செய்யப் பட்டுள்ளன”.

(திருக் குர்ஆன் 5:3)

அல்லாஹ் அல்லாதோருக்காக அறுத்துப் பலியிடுவதை

எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி தெளிவாக அல்லாஹ்

தடை செய்திருக்கும் போது அவ்லியாக்களுக்காக அறுப்பது,

ஷிர்க் இல்லாமல் வேறு என்ன?

அல்லாஹ் அல்லாதவரின் பெயர் கூறி அறுக்கப்

பட்டதைத் தான் விலக்கப்பட்டதாக இந்த வசனம் கூறுகிறது.

‘நாங்கள் அவ்லியாக்களுக்காக அறுத்தாலும், பிஸ்மில்லாஹி

அல்லாஹுஅக்பர் என்று அல்லாஹ்வின் பெயர் கூறித்தானே

அறுக்கிறோம்” என்று வாதிடலாம்.

இதோ! திரு மறையின் இன்னொரு வசனம் இன்னும்

தெளிவாக அறுத்துப் பலியிடுதல் அல்லாஹ்வுக்கு மட்டுமே

என்பதை வலியுறுத்துகிறது.

‘எனவே உமது இறைவனைத் தொழுது அவனுக்காக

அறுப்பீராக! (திருக் குர்ஆன்)

தொழுகை என்னும் வணக்கம் எப்படி அல்லாஹ்வுக்கு

மட்டுமே உரியதோ, அது போல அறுத்துப் பலியிடுவதும்

அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது என்று அல்லாஹ்வின் திரு

மறை கூறுகிறது.

நாகூர், ஏர்வாடி என்று ஊர் ஊராகச் சென்று ஆடு

அறுக்க நேர்ச்சை செய்து பணத்தைச் செலவு செய்து

பாவத்தை விலை கொடுத்து வாங்கும் பாவிகளே! சிந்திக்க

மாட்டீர்களா?

அல்லாஹ் அல்லாதவருக்காக தொழுதால், அது ஷிர்க்

என்று தெளிவாகத் தெரிகிறது. தொழுகையும் நேர்ச்சையும்

தனக்குரியது எனக் கூறும் அல்லாஹ்வின் வார்த்தைகளை

அலட்சியப் படுத்தி விட்டு, அல்லாஹ் அல்லாதவருக்காக

அறுத்துப் பலியிட்டால்? அதுஷிர்க் இல்லாமல் வேறு என்ன?

 

அல்ல்லாஹ் அல்ல்லாதவருக்குஸஜ்த்தாச் செய்வ்வது ஷிர்க்

தொழுகை என்னும் அதிமுக்கியத்துவம் வாய்ந்த இறை

வணக்கத்தின் ஓர் அங்கமாகிய ஸஜ்தா என்னும் சிரம்

பணிதலைச் சிலர் அல்லாஹ் அல்லாத மற்றவர்களுக்குச்

செய்கின்றனர்.

“அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்து வணங்குங்கள்.”

(திருக் குர்ஆன்)

 

“இரவில் அவனுக்கு ஸஜ்தாச் செய்வீராக! நீண்ட இரவு

அவனைத் துதிப்பீராக!” (திருக் குர்ஆன்)

ஸஜ்தா என்னும் சிர வணக்கம் தனக்கு மட்டுமே

உரியது, என்று அல்லாஹ் உரிமை கொண்டாடும் போது,

பெரியார்களுக்கும், மகான்களுக்கும், இறந்து போன

நல்லடியார்களின் கப்ருகளுக்கும், ஸஜ்தாச் செய்கின்றனரே!

இது ஷிர்க் இல்லாமல் வேறு என்ன?

மார்க்கம் அறியாத பாமர மக்கள் சிலர் தங்கள் ஆன்மீக

வழிகாட்டிகளாகக் கருதும் ஷெய்கு மார்களுக்கு மரியாதை

செய்வதாக நினைத்துக் கொண்டு அறியாமையால் அவர்களின்

கால்களில் விழுந்து வணங்குகின்றனர்.

ஸஜ்தா என்னும் சிர வணக்கம் அல்லாஹ்வுக்கு மட்டுமே

உரியது என்பதை அந்தப் பாமர மக்கள் அறியாதிருக்கலாம்.

தங்கள் மரியாதையை வெளிப்படுத்த இதுவும் ஒரு வழி என்று

கருதி அந்த மக்கள் இச் செயலைச் செய்துகொண்டிருக்கலாம். ஆனால் அந்த ஷெய்கு மார்களுக்கு புத்தி

எங்கே போனது?

 

அறியாமையால் தங்கள் கால்களில் விழும் மக்களைத்

தடுத்து நிறுத்தாமல் அகம்பாவத்துடன் ரசித்துக்

கெண்டிருப்போர், நாளை மறுமையில் தாங்கள் இது குறித்து

விசாரிக்கப் படுவோம் என்பதை எப்படி மறந்தார்கள்?

பெற்றோரிடமும், பெரியார்களிடமும், அடக்கத்தையும்

பணிவையும் கடைப்பிடிக்க வேண்டும். இயலாத முதியோரை

கண்ணியப் படுத்த வேண்டும். ஆனால் அவுர்களின் கால்களில்

விழுந்து வணங்குவதற்கு மார்க்கத்தில் அனுமதியில்லை.

முஆத் ரளியல்லாஹு அன்ஹுஅவர்கள் தமக்குச் சிரம் பணிந்து

மரியாதை செய்ய முன் வந்த போது, அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்

அவர்கள் அதை அங்கீகரிக்க வில்லை என்பது மட்டுமல்ல

தடுத்து விட்டார்கள்.

 

“ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குச் சிரம் பணிவதை

நான் வெறுக்கிறேன். அது ஆகுமாக்கப் பட்டிருந்தால் மனைவி

கணவனுக்கு சிரம் பணிய அனுமதித்திருப்பேன்”என்று நபி

ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ்வின் திருமறை தெளிவாகக் கூறகின்றது

 

“இரவு, பகல், சூரியன், சந்திரன் ஆகியவை அவனது

சான்றுகளில் உள்ளவை. சூரியனுக்கோ சந்திரனுக்கோ

ஸஜ்தாச் செய்யாதீர்கள். அவனையே நீங்கள் வணங்குவோராக

இருந்தால் அவற்றைப் படைத்த அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச்

செய்யுங்கள்.” (திருக் குர்ஆன்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 4 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb