Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

விஷமாகும் பால்!

Posted on October 2, 2008 by admin

சீனாவில் கலப்படப்பாலை அருந்தி 53,000 குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பது அந்நாட்டு அரசை கடும் நெருக்கடிக்கு ஆளாக்கியுள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் உள்ள பால் பண்ணைகள், பால் நிறுவனங்களில் அந்நாட்டு அரசு அலுவலர்கள் நடத்திவரும் ஆய்வில் ஏகப்பட்ட கலப்படக்காரர்கள் சிக்கியிருக்கின்றனர். அவர்களுக்கான “சுருக்குக்கயிறு’கள் தயாராகிக்கொண்டிருப்பதாக பெய்ஜிங்கிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நம் நாட்டிலும் பெயரளவில் இத்தகைய ஆய்வுகள் அடிக்கடி நடப்பதுண்டு. இரு மாதங்களுக்கு முன் தமிழகத்திலும்கூட உணவு ஆய்வாளர்கள் குப்பைக்கிடங்குகளிலும் நீர்நிலைகளிலும் வாளி வாளியாக பாலை ஊற்றி அழித்தார்கள்.

கலப்படப் பால் எனக் கூறி கைப்பற்றப்பட்டு, அழிக்கப்பட்ட இந்தப் பாலின் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் முடிவுகள் வந்ததும் தவறிழைத்தோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அப்போது அறிவித்தனர் உணவு ஆய்வாளர்கள்.

ஆனால், மாதங்கள் ஆகியும் கடும் நடவடிக்கை அல்ல; சாதாரண நடவடிக்கை கூட எவர் மீதும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. “நாங்களும் இருக்கிறோம்’ என்று தங்கள் இருப்பைக் காட்டிக்கொள்வதற்காக எடுக்கப்படும் இத்தகைய கண்துடைப்பு நடவடிக்கைகள் நம் நாட்டில் சகஜமானவை!

ஆனால், பால் சமாசாரம் சாதாரணமானதல்ல. ஏனெனில், பாலில் தண்ணீரைக் கலந்த காலம் எல்லாம் மலையேறிவிட்டது. “யூரியா, உறிஞ்சுதாள், சோடியம் பை கார்பனேட், விலங்குகளின் கொழுப்பு, ஸ்டார்ச், சோப்பு தூள், ரசாயனக் கலவைகள்… இன்னும் என்னவெல்லாம் கலக்க முடியுமோ அவை அனைத்தும் பாலில் கலக்கப்படுகின்றன” என்கின்றனர் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துகள் துறையினர்.

பாலில் உள்ள பிரதான காரணிகளே 4.5 சத கொழுப்பு; 8.5 சத புரதம்தான். கொழுப்பையும் புரதத்தையும் கையாளும் தொழில்நுட்பம் வந்த உடனேயே பாலில் நிறைகட்டுவதற்காக கண்டதையும் கலக்கும் “தொழில்நுட்ப’மும் வந்துவிட்டது.

பால் கெட்டுப் போகாமலிருக்கவும் கொழகொழவென நுரைத்தத் தன்மையுடன் இருக்கவும் தங்களால் இயன்றளவு எதையெல்லாம் கலக்க முடியுமோ அதையெல்லாம் கலக்கின்றனர் பால் வியாபாரிகள்.

கறந்த பாலை குளிரூட்டப்பட்ட நிலையிலும்கூட அதிகபட்சம் 3 நாள்களுக்கு மேல் வைத்திருக்கக் கூடாது. ஆனால், 3 நாள்களிலிருந்து 7 நாள்கள் வரையிலான பாலைகூட சர்வ சாதாரணமாக விநியோகிக்கின்றன பால் நிறுவனங்கள்.

தங்களுடைய தில்லுமுல்லு வெளியே தெரியாமல் இருக்க “பாக்கெட்’டுகளில் அச்சடிக்கப்படும் நாளை, பின் தேதியிட்டு விநியோகிக்கின்றன.

இதெல்லாம் யாருக்கும் தெரியாமல் நடக்கும் காரியங்கள் அல்ல. பால் நிறுவனங்களில் பணியாற்றுவோரில் தொடங்கி அதை வாடிக்கையாளரிடம் சேர்க்கும் கடைக்காரர் வரை எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்த ரகசியங்களே.

ஆனாலும், எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்தே தவறுகள் அனுமதிக்கப்படுகின்றன. இரண்டு காரணங்கள். ஒன்று – பணம்; இன்னொன்று – அரசியல்!

உலகில் புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் பட்டியலில் இந்தியர்கள் முன்னணி வகிக்கிறார்கள். ஆண்டுதோறும் சராசரியாக 85,000 பேருக்கு புற்றுநோய் கண்டறியப்படுகிறது; 58,000 பேர் உயிரிழக்கின்றனர். இவர்களில் வாய், குடல், வயிற்றுப் புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமானது.

சுகாதரமற்ற – கலப்பட உணவுப் பொருள்களை நாம் உட்கொள்ளும்போது “ஹெலிகோ பாக்டர் பைலோரை’ எனும் பாக்டீரியாவை அவை உருவாக்குகின்றன. புகையிலை உருவாக்கும் பாதிப்புக்கு இணையான பாதிப்பை உருவாக்கும் பாக்டீரியா இது.

மதுவாலும் புகையிலையாலும் புற்றுநோயாளிகள் உருவாகும்போது அதை நோயாளிகளின் குற்றம் எனக் கருதி ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், பால் குடித்து புற்றுநோயால் ஒருவர் பாதிக்கப்படுகிறார் என்றால், அதற்காக அவர் சார்ந்திருக்கும் சமூகமும் அரசும் வெட்கப்பட வேண்டும். ஆனால், யாருமே தங்களுடைய குற்றங்களை உணர்வதில்லை.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள்; பூச்சிக்கொல்லிகளாலும் ரசாயன உரங்களாலும் விளைவிக்கப்பட்ட காய், கனிகள்; கலப்பட உணவுப் பொருள்கள், நச்சுத்தன்மை மிக்க குளிர்பானங்கள்; தடை செய்யப்பட்ட மருந்துகள்…

விஷத்தை உண்டு, விஷத்தைப் பருகி, விஷத்தால் வளர்வதால்தானோ என்னவோ விஷமாகிக்கொண்டே இருக்கிறோம் நாமும்!

தினமணி

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 3 = 10

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb