Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

பெண்ணை மற்றவர்கள் பார்க்கும் விதம்…!!!

Posted on October 2, 2008 by admin

பெண்ணை மற்றவர்கள் பார்க்கும் விதம்…!!!

[ பெண்களின் படைப்பு வினோதமானது அவளது அழகும், கவர்ச்சியும், நலினமும், ஆணைப் பொருத்தவரை தேவையானதாக இருக்கிறது. உலகம் முழுதும் அவள் வியாபாரப் பொருளாகிப் போனதற்கு காரணம் அவளது திறமையோ கல்வியோ அறிவோ அல்ல. அவளது உடல்தான் உடல் சார்ந்த கவர்ச்சிதான்.

ஒரு ஆணுடைய பார்வைக்கு முதல் கட்டம் பெண் என்பவள் கவர்ச்சிப் பொருள் தான். இந்தக் கருத்து சிலரை கோபமூட்டலாம். ஆனால் இதுதான் யதார்த்தம் இதுதான் உண்மை.

பெரும் பண முதலைகளின் பொருளாதார சுரண்டலுக்கு கருவியாக்கப்படுவது பெண்கள் தான். ஆண்களின் காம வேட்கையையும் வக்கிரத்தையும் நன்கு உணர்ந்த நிலையில் அதை ஊக்குவிக்கும் விதமாகத்தான் நவீனத்துவ வாதமும் பெண்ணின் உடையும் அமைந்துள்ளன.

பெண்களின் உடல் மீதான ஆண்களின் சிந்தனை எப்படியெல்லாம் தன் நிலையை வெளிப்படுத்துகிறது என்பதை உலக நடப்புகள் விளக்காமலில்லை.]

“பர்தா முஸ்லிம் பெண்களுக்கு கண்ணியத்தையும் பாதுகாப்பையும் வழங்குகிறதா..?” என்பது போன்ற கட்டுரைகளை வெளியிட்டு அதில் உலக நாடுகளில் முஸ்லிம் பெண்களுக்கு ஏற்படும் அவதியை – கொடுமையை அவ்வப்போது பலர் அக்கறையோடு வெளிபடுத்தி வருகின்றனர்.

அதுபோன்ற கட்டுரைகளின் தகவல்கள் உண்மையானவை என்றே வைத்துக் கொண்டு அவர்கள் எழுதும் கட்டுரையை அவர்களே மீண்டும் ஒரு முறை படிக்கட்டும். அங்கு பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமையை விட அதில் ஈடுபடும் ஆண்களின் புத்தி – அவன் படைப்பு எத்துனை வக்கிரமானவை என்பது புலப்படும்.

பெண் பற்றியும் அவள் உடைப் பற்றியும் அக்கறையுள்ள ஆண்கள் பேச துவங்கியுள்ளதால் ‘வெளிப்படையாக’ பல விஷயங்களை பேச வேண்டித்தான் உள்ளது.

பெண் தன்னைப் பொருத்தவரை அனைத்து வித நியாயமான உடற்கூறு, உளவியல் நியதியைப் பெற்றவள் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. தனக்கும் உணர்வுண்டு, அறிவு உண்டு, திறமையுண்டு, விருப்பு வெறுப்பு உண்டு, ஏக்கம் ஆசாபாசங்கள் அனைத்தும் உண்டு. கல்வித் தகுதியும் கற்றப்பின் நிர்வாகத் திறமையும் தனக்குண்டு என்பதை எடுத்துக் காட்டி ஆணுக்கு நான் எந்த வகையிலும் குறைந்தவளல்ல என்பதை நியாயபடபடுத்தலாம். ஏன் இங்கு கூட ஆணோடு தன்னை ஒப்பிடாமல் அவனைவிடவும் திறமை மிக்கவள் என்பதை நிரூபிக்கலாம்.

இதில் ஆயிரம் நியாயம் இருந்தாலும் கூட ஒரு ஆணுடைய பார்வைக்கு முதல் கட்டம் பெண் என்பவள் கவர்ச்சிப் பொருள் தான். இந்தக் கருத்து சிலரை கோபமூட்டலாம். ஆனால் இதுதான் யதார்த்தம் இதுதான் உண்மை.

அகில இந்திய வானொலி – தொலைக்காட்சி இயக்குனராகவும், ஆசிய பசிபிக் நாடுகளின் மலேஷிய செனடிக் திட்ட ஆலோசகராகவும் பணியாற்றிய ‘சித்ரா வைத்தீஸ்வரனி’டம் பெண்ணியம பற்றி ஒரு கேள்வி கேட்கப்படுகிறது.

‘பெண்ணை மற்றவர்கள் பார்க்கும் விதம்’?.

அவர் பதிலளித்தார். ‘நான் பார்த்தவரை எல்லா சமுதாயத்திலும் முதலில் பெண்கள் “செக்ஸ் சிம்பல்” ஆகத்தான் பார்க்கப்படுகிறார்கள்’

இந்தப் பெண்மணி ஆஸ்த்ரேலியா, சிங்கப்பூர், சீனா, மலேஷியா, கொரியா, மெக்சிகோ, பிரான்ஸ் என்று பலநாடுகளுக்கு சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்துனை நாடுகளிலும் ஆண்களின் பார்வை பெண்களின் மீது பட்டவிதத்தைத்தான் அவர் பதிலாக வெளிபடுத்தியுள்ளார்.

பெண்களின் படைப்பு வினோதமானது அவளது அழகும், கவர்ச்சியும், நலினமும்இ ஆணைப் பொருத்தவரை தேவையானதாக இருக்கிறது. உலகம் முழுதும் அவள் வியாபாரப் பொருளாகிப் போனதற்கு காரணம் அவளது திறமையோ கல்வியோ அறிவோ அல்ல. அவளது உடல்தான் உடல் சார்ந்த கவர்ச்சிதான்.

பெரும் பண முதலைகளின் (இவர்கள் எந்த மதத்தை சார்ந்நதவராகவும் இருக்கலாம் அல்லது மதமோ கடவுளோ வேண்டாம் என்று கூறி தன் கல்வியையும் கலாச்சாரத்தையும் கடவுளாக ஏற்றுக் கொண்டவராகவும் இருக்கலாம்) பொருளாதார சுரண்டலுக்கு கருவியாக்கப்படுவது பெண்கள் தான்.

தாய்லாந்தின் சில உணவகங்களில் செய்யப்படும் விளம்பரங்கள்.’எங்கள் உணவகத்திற்கு நீங்கள் சாப்பிட வந்தால் கையையோ கத்தியையோ நீங்கள் வீணாக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. உங்கள் இருக்கையில் சாய்ந்து ஹாயான ரெஸ்ட் எடுங்கள். எங்கள் ஹோட்டல்களின் அழகிகள் உணவை உங்கள் வாயில் ஊட்டி விடுவார்கள். சாப்பிடுவதில் இத்துனை கிளுகிளுப்பா என்று நீங்கள் அசந்துப் போவீர்கள்.’

இதற்கு அடிப்படை காரணம் என்ன?

பெண்களின் உடல். அது சார்ந்த ஈர்ப்பு.

ஆண்களின் காம வேட்கையையும் வக்கிரத்தையும் நன்கு உணர்ந்த நிலையில் அதை ஊக்குவிக்கும் விதமாகத்தான் நவீனத்துவ வாதமும் பெண்ணின் உடையும் அமைந்துள்ளன.

பெண்களின் உடல் மீதான ஆண்களின் சிந்தனை எப்படியெல்லாம் தன் நிலையை வெளிப்படுத்துகிறது என்பதை உலக நடப்புகள் விளக்காமலில்லை.

IAS தேர்வு எழுதி அதிகாரியாக பொறுப்பேற்ற ரூபன் தியோல் பஜாஜ் அவர் கலந்துக் கொண்ட ஒரு விருந்தில் பஞ்சாப் மாநில டி.ஜி.பி கில்லும் கலந்துக் கொள்கிறார். சமயம் பார்த்து ஐயுளு அதிகாரியான அந்தப் பெண்ணின் பின்புறம் தன் கையால் தடவி விடுகிறார். ரூபன் ஒரு படித்த அதிகாரியாக இருந்ததால் இந்த பாலியல் சீண்டலை கோர்ட்வரை கொண்டு செனறு உலகிற்கு காட்டினார்.

DGP தண்டனைப் பெற்றது இங்கு சிறப்பு அல்ல. கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் மிகப் பெரிய பொறுப்பிலிருக்கும் ஒரு அதிகாரி இந்த கீழ்தரமான செயலில் ஈடுபடுகிறார் என்றால் என்ன காரணம்? பெண் மீதான ஈர்ப்பைத் தவிர வேறொன்றும் இருக்க முடியாது.

பெண்மீதான தன் மோகத்தை தீர்த்துக் கொள்ளும் முயற்சியில் தான் கற்பழிப்புகள். ஈவ்டீஸிங்கள், சீண்டல் கொடுமைகள் நடக்கின்றன. இதற்கு வழி தெரியாதவர்கள் வயதுக்குவராத சிறு குழந்தைகளை ஆசை வார்த்தை பேசி கூட்டி சென்று தன் இச்சையைத் தீர்த்துக் கொள்கிறார்கள்.

டாக்டர் பிரகாஷ், நடிகர் சுமன் உட்பட பிரபல்யங்கள், சங்கராச்சார்யார் – பிரேமனந்தா உட்பட ஆன்மீக குருக்கள். பலகாவலர்கள் இவர்கள் அனைவருமே பெண்களைப் பதம் பார்த்துள்ளார்கள்.

இப்படி கோடிக்கோடியான ஆண் வக்கிரங்களை சுட்டிக் காட்டலாம். இவை அனைத்துமே பெண்களின் மீதான ஆண்களின் ஈர்ப்புக்குரிய உதாரணங்கள்.

இதற்கெல்லாம் தீர்வு என்ன?

1) ஆண்களின் உணர்வுகளை சாகடித்து பேடிகளாக ஆக்க வேண்டும்.

2) மிகக்கடின தண்டனைகள் வழியாக இதை தடுத்து நிறுத்த வேண்டும்.

3) நிலைமைகளின் விளைவுகளை உணர்ந்து முடிந்தவரை பெண்கள் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

இதில் முதல் நிலையை தேர்ந்தெடுக்க சாத்தியமில்லை.

இரண்டாம் வழியில் குற்றங்கள் குறையலாம். தண்டனைகள் எப்படி இருக்க வேண்டும் என்ற விவாதத்தின் உள்ளே நாம் இங்கு நுழையவில்லை.

மூன்றாவது வழிதான் பாதுகாப்பிற்கு சிறந்த வழி. பெண் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று நாம் இங்கு குறிப்பிட்டுள்ளது வெறும் புர்காவிற்கு மட்டுமல்ல அது அனைத்துப் பாதுகாப்பையும் குறிக்கும். அதில் மேலதிக உடையும் அடங்கும்.

பெண்களின் மேலதிக உடை அடிமைத்தனம் என்று விமர்சிப்போர் (தன்னை முழுமையாக மூடிக் கொண்டு ஆட்சிப் புரிந்த – இன்றைக்கும் அதே நிலையில் உலவும் ஜெயலலிதாவை அடிமையின் சின்னமாகக் கொள்ளலாமா..) இளம் பெண்களிடம் இந்தக் கருத்தை கொண்டு செல்வதின் மூலம் சுதந்திரம் என்பதற்கான பொருளை ஆடைக்குறைப்பு என்ற அர்த்தத்தில் உணர்த்தி நிலைமையை இன்னும் பலவீனப்படுத்தி விடுகிறார்கள்.

தொடையும் புட்டமும் மார்பும் தெரிய உடை உடுத்தி உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்படுபவள் வேண்டுமானால் பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கலாம். அந்த மீடியாக்கலாச்சாரத்தால் கவரப்பட்டு அதேபோன்று உடை உடுத்தி சுதந்திரம் கொண்டாடும் பெண்களில் எத்துனைப் பேருக்கு பாதுகாப்பு வளையம் இருக்கிறது..?

மேலதிக உடை அடிமைத்தனம் என்று பல்லிலிக்கும் பல மேதலாவிகள்? அதையே முன்மொழிய துடிக்கும் நாகரீக? பெண்கள் இதற்கு ஒரு மாற்றுவழியை முன் மொழியட்டும் பார்க்கலாம்.

பெண் எந்த அளவிற்கு தன்னை ஆடையால் மறைத்துக் கொள்ளலாம் என்ன அளவு வைத்துள்ளீர்கள் என்று கேள்வியை நாம் அவர்களுக்கு வைத்துக் கொண்டிருக்கிறோம். எங்கிருந்தும் முறையான பதில் கிடைக்கவில்லை’ அதை ஆண்களாகிய நீங்கள் பேசத்தேவையில்லை. பெண்கள் – நாங்கள் பார்த்துக் கொள்வோம்’ என்று முழங்கும் பெண்களும் கூட இந்த அளவிற்கு மறைப்பதில் தான் பெண் சுதந்திரம் உள்ளது என்பதை சொல்லவில்லை.

பெண்ணின் ஆடை கழற்றுவதில் ஆண் வக்கிரம் பளிச்சிடுகிறது என்றால் அதையே சுதந்திரம் என்று பேசும் பெண்களே உங்களின் சுதந்திர சிந்தனை நல்ல சிந்தனைத்தான் போங்கள்.

நன்றி: இதுதான் இஸ்லாம்

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

53 − 50 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb