IIM-இல் சேர்வதற்கான நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்பட்ட மாணவனிடம்,தேர்வாளர்,
“பத்து சுலபமானக் கேள்விகளைக் கேட்கவா? அல்லது ஒரேயொரு கடினமான கேள்வியைக் கேட்கவா? என்றார்.
மாணவனுக்கு சற்று குழப்பமாக இருந்தது. சில நொடிகள் கண்களைமூடி நன்கு யோசித்து”ஒரேயொரு கடினமான கேள்வியைக் கேளுங்கள்!”என்றான்.
தேர்வாளர்: உன் பதிலை வைத்தே உன்னை கல்லூரியில் சேர்ப்பதும் கேர்க்காததும் முடிவு செய்யப்படும். ஆகவே, நன்கு யோசித்து தெரிவு செய்!.
மாணவன்: நம்பிக்கையாகச் சொல்கிறேன்! ஒரேயொரு கடினமான கேள்வியைக் கேட்கலாம். என்றான்.
தேர்வாளர்: பகல் முதலில் வருகிறதா இரவு முதலில் வருகிறதா?
மாணவன்: பகல்தான் முதலில் வருகிறது
தேர்வாளர்: எப்படி?
மாணவன்: மன்னிக்க வேண்டும், நீங்கள் ஒரே ஒரு கேள்விதான் கேட்பதாக வாக்களித்தீர்கள். இரண்டாவது கடினமான கேள்வியை நீங்கள் கேட்கக் கூடாது.
உங்களிடமும் இது மாதிரியான சபாஷ் விசயங்கள் இருந்தால் பகிர்ந்து கொள்ளலாமே!
அனுப்ப வேண்டிய முகவரி: nidur.info@gmail.com