“நோன்பு துறப்பதை விரைவுபடுத்தும் வரை மக்கள் நன்மையில் நிலைத்திருப்பார்கள்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என ஸஹ்ல் இப்னு சவுத்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
“ஆரம்பநேரத்தில், (விரைவாக) நோன்பைத் துறப்பவனே என்னுடைய அடியார்களில் என்னிடம் அதிக அன்பிற்குரியவன் ஆவான்” என்று அல்லாஹ் கூறுகிறான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என, அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார். திர்மிதீ
“ஸஹர் செய்யுங்கள் (சாப்பிடுங்கள்) ஏனெனில், அதில் பரக்கத் (அருள்வளம்) உள்ளது” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என, அனஸ் இப்னு மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
“உங்களில் எவரேனும் நோன்பைத் துறந்தால், அவர் பேரிச்சம்பழத்தைக் கொண்டு நோன்பு துறக்கட்டும். அது அவருக்குக் கிடைக்கவில்லை எனில், தண்ணீரைக் கொண்டு நோன்பு துறக்கட்டும். ஏனெனில், அது தூய்மையானது” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
“அவர்கள் கூறினார்கள் என சுலைமான் இப்னு ஆமிர் அள்ளப்பிய்யி ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத், நஸாயீ, திர்மிதீ, மற்றும் இப்னு மாஜா. இப்னு குஸைமா, இப்னு ஹிப்பான் மற்றும் ஹாம்மில் இது ஸஹீஹ் என்னும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது
“எவர் நோன்பிருக்கும் நிலையில் மறதியாக உண்ணுகிறாரோ, பருகுகிறாரோ அவர் தம்முடைய நோன்பைப் பூர்த்தியாக்கிக் கொள்ளட்டும். (நோன்பை முறித்து விட வேண்டாம்). ஏனெனில், அல்லாஹ்வே அவரை உண்ணச் செய்தான்டி பருகச் செய்தான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
“எவர் ரமளான் மாதத்தில் மறதியாக நோன்பை முறித்து விட்டாரோ, அவர் மீது களாவும் இல்லைடி பரிகாரமும் இல்லை” என்று ஹாம்மில் இடம் பெற்றுள்ளது. மேலும் இது ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
“எவருக்கு (நோன்பு நோற்ற நிலையில்) அவரையும் மீறி வாந்தி வந்ததோ அவர் மீது (நோன்பு)களா இல்லை. இன்னும் எவர் (நோன்பு நோற்ற நிலையில் வேண்டுமென்றே வாந்தி எடுத்து விட்டாரோ, அவர் மீது (நோன்பு)களாவாகும்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என, அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, மற்றும் இப்னு மாஜா
“அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களே! நான் பயணத்திலும் நோன்பு நோற்க சக்தி பெற்றவனாக இருக்கிறேன். அதனால் என் மீது குற்றமாகுமா?” என்று நான் கேட்டதற்கு, ”இது அல்லாஹ்விடம் இருந்து வந்துள்ள சலுகையாகும். எவர் அதை எடுத்துக் கொண்டாரோ அவர் சிறப்படைந்தார். இன்னும் எவர் நோன்பு நோற்க விரும்பினாரோ அவர் மீது குற்றமில்லை” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஹம்ஸா இப்னு அம்ர் அல் அஸ்லமீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார். முஸ்லிம். ஹம்ஸா இப்னு அம்ர்رَضِيَ اللَّهُ عَنْهُ கேட்டதாக ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா வாயிலாக புகாரி, முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது.
ஒரு மனிதர் நபி அவர்களிடம் வந்து, ”அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களே! நான் அழிந்து விட்டேன்” என்று கூறியதற்கு, ”எது உன்னை அழித்தது?” என்று நபி அவர்கள் கேட்டார்கள். ”ரமளானில் என் மனைவியுடன் உறவு கொண்டு விட்டேன்” என்று கூறினார். ”உன்னால் ஒர் அடிமையை விடுதலை செய்ய இயலுமா?’‘ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள். அவர், ”இயலாது” என்றார். ”அப்படியானால், அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க இயலுமா?” என்று கேட்டார்கள். அதற்கும் ”இயலாது” என்றார். பின்னர் (அங்கேயே) அமர்ந்து கொண்டார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒரு தட்டு கொடுக்கப்பட்டது. அதில் பேரிச்சம் பழங்கள் இருந்தன. (அதை அவரிடம் வழங்கி) ”இதை தர்மம் செய்வீராக!” என்றனர். அதற்கவர், ”எங்களை விட ஏழைகளுக்கா? இந்த மதீனாவிற்குள் எங்களை விட ஏழைகள் எவரும் இல்லையே?” என்றார். அதைக் கேட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது கடைவாய்ப் பற்கள் தெரியுமளவிற்குச் சிரித்தார்கள். ”நீர் சென்று உமது குடும்பத்தாருக்கு இதை வழங்குவீராக!” என்றும் கூறினார்கள் என அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார். அஹ்மத், புகாரி, முஸ்லிம், அபூதாவூத், நஸயீ, திர்மிதி, மற்றும் இப்னு மாஜா.
“தன் மீது நோன்பு கடமையாக இருக்கும் நிலையில் எவர் இறந்து விடுகிறாரோ அவருடைய நோன்பை அவருடைய பொறுப்பாளர் நோற்கட்டும்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என, ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார்கள். புகாரி, முஸ்லிம்