“நிச்சயமாக ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. அதனைக்கொண்டு அவை பெருமையடைகின்றன. என்னுடைய உம்மத்தினரின் அழகும் சிறப்பும் குர்ஆனாகும்” என்று ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் அருளியதாக அன்னை ஆயிஷா ரளியல்லாஹ¤ அன்ஹா அறிவிக்கிறார்கள் – அல் ஹதீஸ்.
“நீங்கள் அல்லாஹ¤த்தஆலாவிடம் திரும்பச் செல்வதற்கும் (அவனிடம் நெருங்குவதற்கும்) (உதவியாக) அவனிடமிருந்து வந்த குர்ஆன் ஷரீiஃபத் தவிர வேறு சிறந்த பொருளைப் பெற்றுக் கொள்ள முடியாது” என்று பெருமானார் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் அருளியதாக ஹஜ்ரத் அபூ தர்தா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். – அல் ஹதீஸ்
“கியாம நாளில்” அல்லாஹ¤த்தஆலாவிடம் சிபாரிசு செய்வதில் குர்ஆனைவிடச் சிறந்தது எதுவும் இல்லை: நபியுமில்லை, மலக்குமில்லை வேறெவருமில்லை” என்று ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் அருளியதாக ஹஜ்ரத் ஸயீத் இப்னு ஸலீம் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். – அல் ஹதீஸ்