இது வாழ்வின்
நெறி முறை!
இது மாற்றாருக்கு
எளிதில்
பிடித்துவிடுவதில்லை!
பிடித்து விட்டால்
எவரும் அதை
விட்டு விடுவதில்லை!
இது தான் கொள்கை!
இப்படித்தான்
வாழ்தல் வேண்டும் எனும்
இறையும் மறையும்
காட்டிய வழிமுறை!
கடைபிடிப்போர்
மனிதராய் வாழ்ந்து
மூமினாய்
மறைவர்!
அன்பு
அறம்
தானம்
நல்லொழுக்கம்
முறையான
நேரம் தவறா
வழிபாடு
இவையே
இஸ்லாத்தின்
பயிற்சிகள்!
பாடங்கள்!
இறைவன்!
இருப்பதையே
ஏற்றுக்கொள்ளாத
காலம் ஒன்றிருந்தது!
இன்றோ
இருக்கும் கடவுளரில்
யார்?
கடவுள் தேடலிலேயே
காலம் கடந்து
கொண்டிருக்கிறது.
இது
பகுத்தறிவு மார்க்கம்!
மூட நம்பிக்கைகளுக்கு
இங்கு
இடமில்லை!
முஸ்லிம்கள்
மூடராய் இருப்பதில்லை!
மூடர்கள்
முஸ்லீமாய்
இருப்பதில்லை!
மது
மாது
சூது
போதைகள்
வட்டி
வேண்டாச் சேர்க்கை
ஊழல்
இவற்றுக்கு இங்கு
அறவே
இடமில்லை!
கட்டுப்பாடு
இருக்கும் இடமே
ஒழுக்கம் இருக்கும்!
ஒழுக்கம் கொண்டோர்
வாழ்வு
இனிதே
சிறக்கும்!
இனிய வாழ்வுதன்னை
இஸ்லாமும் கொடுக்கும்!
இம்மை மறுமை
இரண்டையும் பயக்கும்!!
-இமாம்.கவுஸ் மொய்தீன், ஜெத்தா.