51) பெண்கள் எதற்காக பர்தா அணிய வேண்டுமென இறைவன் கூறுகிறான்?
‘அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும்’ (33:59)
52) அல்லாஹ்வின் வசனங்களைக் கொண்டு தீர்ப்பளிக்காதவர்கள் யார் என குர்ஆன் கூறுகிறது?
‘எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொணடு தீர்ப்பளிக்க வில்லையோ
,அவர்கள் நிச்சயமாக காபிர்கள் தாம்’அல் மாயிதா(5:44)
53) மார்க்கத்தில் பல பிரிவுகள் குறித்து குர்ஆன் கூறுவது என்ன?’
இறைவனின் தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னரும் யார் தங்களுக்குள் பிரிவையுண்டு பண்ணிக் கொண்டு மாறுபாடாகி விடடார்களோ அவர்களைப் போன்று ஆகிவிடாதீர்கள்.அத்தகையோருக்கு கடுமையான வேதனையுண்டு’ஆல இம்ரான்(3:105)
54) கருக்கலைப்பு, குடும்பக்கட்டுப்பாடு குறித்து இறைவன் கூறுவது என்ன?’
வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொலைச் செய்யாதீர்கள்:நாமே உங்களுக்கும் ஆகாரமளிக்கின்றோம்:அவர்களுக்கும் அளிப்போம்’அல் அன் ஆம்(6:151)மற்றும் பனீ இஸ்ராயீல்(17:31)
55) வானவர்களுக்கு இறக்கைகள் உண்டா?
வானவர்களுக்கு இறக்கைகள் உண்டு. 35:1 (அல் ஃபாத்திர்)
56) ஏழு இரவுகள் எட்டு பகல்களும் தொடர்ந்தார்போல் எந்த சமூகத்திற்கு வேதனை இறக்கப்பட்டது?
ஆது சமுகத்தாருக்கு. (69:6,7) (அல் ஹாக்கா)
57) முஃமினான ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறுவது குறித்து குர்ஆன் என்ன கூறுகிறது?
‘எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள பேதைப் பெண்கள் மீது அவதூறு கூறுகிறார்களோ அவர்கள் நிச்சயமாக இம்மையிலும்,மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்:இன்னும் அவர்களுக்கு கடுமையான வேதனையுமுண்டு’அந் நூர்(24:23)
58) இறைவனால் பெயர் சூட்டப்படட நபிமார்கள் யாவர்?
யஹ்யா (அலை).மர்யம் (19:7), ஆல இம்ரான்(3:39) மற்றும் ஈஸா(அலை) (3:45)
59) குர்ஆனில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் வரும் வானவர்கள் பெயர் என்ன?
மாலிக் அலைஹிஸ்ஸலாம்அஜ் ஜுக்ருஃப்(43:77)மற்றும் மீக்காயீல்(அலை)அல்பகரா(2:98)
60) ஹுதமா என்று இறைவன் எதைக் குறிப்பிடுகிறான்?
ஹுதமா-எரிந்துக் கொண்டிருக்கும் அல்லாஹ்வின் நெருப்பு:அது உடலில் பட்டதும் இதயங்களில் பாயும்:ஹுமஜா(104-4,5,6,7)
61) ஹாவியா என்று இறைவன் எதைக் குறிப்பிடுகிறான்?
ஹாவியா-அது சுட்டு எரிக்கும் நரகத்தின் தீக்கிடங்காகும்.அல் காரிஆ(102-8,9,10,11)
62) ஜக்கூம் என்று இறைவன் எதைக் குறிப்பிடுகிறான்?
ஜக்கூம்-இது நரகத்தில் உள்ள கள்ளி மரமாகும்:நரகவாசிகளின் விருந்தாகும்:அம்மரம் நரகத்தின் அடித்தளத்திலிருந்து வளரும்:அதன் பாளைகள் சைத்தான்களின் தலைகளைப் போல் இருக்கும்.அஸ் ஸாஃப்ஃபாத்(37:61-66)மற்றும் அத் துகான்(44:43-46), 56:52
63) திருக்குர்ஆனில் உள்ள மிகப்பெரிய ஆயத்து எது?
அல்பகரா (2:282)
64) சிலந்திப் பூச்சிக்கு உதாரணமாக அல்லாஹ் யாரை குறிப்பிடுகிறான்? ஏன்?
சிலந்திப் பூச்சிக்கு உதாரணமாக அல்லாஹ் அல்லாதவற்றை தங்களுக்குப் பாதுகாப்பாளர்களாக எடுத்துக் கொள்பவர்களை குர்ஆனில் கூறுகிறான்.மேலும் இந்த வசனத்தில் சிலந்திப் பூச்சியின் வீடு வீடுகளில் எல்லாம் மிக மிக பலஹீனமாகயிருப்பதைப் போல்,இவர்கள் தங்களுக்கு பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்டவர்கள்(அவுலியாக்கள்,ஷைய்கு மார்கள்,பீர் மார்கள்,மஸ்தான்கள்)போன்றவர்களும் உங்களுக்கு உதவ முடியாத அளவுக்கு மிக மிக பலஹீனமானவர்களே! என்பதை தெளிவு படுத்துகிறான்.(அன் கபூத்(29:41)
65) கழுதைக்கு உதாரணமாக அல்லாஹ் யாரை குறிப்பிடுகிறான்?
கழுதைக்கு உதாரணமாக,தவ்ராத் வேதம் கொடுக்கப் பெற்றும் அதன்படி நடக்காதவர்களை குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான். (அல் குர்ஆன் ஜும்ஆ(62:5).மேலும் வெறுக்கத்தக்க குரல் வளம் உடையோருக்கும் கழுதையைஉதாரணமாக கூறுகிறான். (31:19)
66) தீமையான செயல் புரிபவர்கள் மரண தருவாயில் பாவ மன்னிப்பு கோருவது குறித்து இறைவன் கூறுவது என்ன?’
இன்னும் எவர்கள் தீவினைகளைத்(தொடர்ந்து)செய்து கொண்டேயிருந்து,முடிவில் அவர்களை மரணம் நெருங்கிய போது, ‘நிச்சயமாக இப்பொழுது நான்(பாவங்களுக்காக வருந்தி)மன்னிப்புத் தேடுகிறேன்’என்று கூறுகின்றார்களோ,அவர்களுக்கும்,எவர் காஃபிர்களாகவே மரிக்கிறார்களோ அவர்களுக்கும் பாவமன்னிப்பு இல்லை,இத்தகையோருக்குத் துன்பம் கொடுக்கும் வேதனையையே நாம் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.’ 4:18 (அந் நிஸா)
67) உங்களுக்கு தெரியாத ஐந்து விஷயங்கள் என்று சூரத்துல் லுக்மான் முலம் இறைவன் குறிப்பிடுபவை எவை?
1) கியாம நாள் 2)மழை இறங்குவது 3)கர்பங்களில் உள்ளவை 4)நாளைய தினம் தான் சம்பாதிப்பதை 5)எந்த பூமியில் தாம் இறப்போம். -லுக்மான் (31:34)
68) அஸ்ஸப்ஃவுல் மஸானி என அழைக்கப்படும் சூரா எது?
நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம்அவர்கள் சூரத்துல் பாத்திஹாவிற்கு அஸ்ஸப்ஃவுல் மஸானி(திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்கள்)எனப் பெயரிட்டுள்ளார்கள்(ஆதாரம்:புகாரி)
69) குர்ஆனின் இதயம் என சிறப்பிக்கப்பட்ட சூரா எது?
சூரத்துல் யாசின் (36 வது அத்தியாயம்)
தொடர்ச்சிக்கு கீழுள்ள “NEXT” ஐ “கிளிக்” செய்யவும்