கடன்
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவித்தார்கள். “இறைவா! கப்ருடைய வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். தஜ்ஜாலின் குழப்பத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். வாழும் போதும் மரணிக்கும் போதும் ஏற்படும் குழப்பத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். பாவங்களைவிட்டும் கடனைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்று நபி அவர்கள் தொழுகையில் துஆச் செய்தவார்கள். ‘தாங்கள் கடனைவிட்டும் அதிமாகப் பாதுகாப்புத் தேடும் காரணம் என்ன?’ என்று ஒருவர் நபி அவர்களிடம் கேட்டபோது ‘ஒரு மனிதன் கடன் படும்போது பொய் பேசுகிறான்; வாக்களித்துவிட்டு அதை மீறுகிறான்” என்று நபி அவர்கள் விளக்கமளித்தார்கள். (நூல்: புகாரி)
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள். ஜுஹைனா கூட்டத்தைச் சார்ந்த ஒரு பெண்மணி நபி அவர்களிடம் வந்து, ‘என் தாய் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்து அதை நிறைவேற்றாமல் இறந்துவிட்டார். அவர் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா?’ என்று கேட்டதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். ‘ஆம்! அவர் சார்பாக நீ ஹஜ் செய், உன் தாய்க்குக் கடன் இருந்தால் நீ தானே அதை நிறைவேற்றுவாய். எனவே, அல்லாஹ்வின் கடன்களை நிறைவேற்றுங்கள், கடன்கள் நிறைவேற்றப்படுவதற்கு அல்லாஹ் அதிகம் உரிமை படைத்தவன்” என்றார்கள். (நூல்: புகாரி)
“எவன் மக்களின் பணத்தை (அல்லது பொருட்களைத்) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அவன் சார்பாக அல்லாஹ்வே அதனைத் திருப்பிச் செலுத்துவான். எவன் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி அதை (ஏமாற்றி) அழித்து விடும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அல்லாஹ்வும் அவனை அழித்து விடுவான்.’ என அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார். (நூல்: புகாரி)
அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள்.
ஒருவர் அல்லாஹ்வின் தூதரிடம், அவர்களுக்குத் தான் கொடுத்த (ஒட்டகத்)தைக் திருப்பித் தரும்படி கேட்டார். அப்போது நபி அவர்களிடம் அந்த மனிதர் கடுமையாகப் பேசினார். எனவே, நபித் தோழர்கள் அவரை தண்டிக்க விரும்பினார்கள், அப்போது நபி அவர்கள் தம் தோழர்களை நோக்கி, விட்டு விடுங்கள்; ஏனெனில், ஒருவர் தனக்குக் கடன் தர வேண்டியவரிடம் கடுமையாகச் பேச உரிமையுண்டு. அவருக்காக ஓர் ஒட்டகத்தை வாங்கி அவரிடமே கொடுத்து விடுங்கள்” என்று கூறினார்கள்.
நபித்தோழர்கள், ‘அவருக்குத் தர வேண்டிய ஒட்டகத்தின் வயதை விட அதிக வயதை உடைய ஒட்டகம்தான் எங்களிடம் இருக்கிறது” என்று கூறினார்கள். அதற்கு நபி அவர்கள், ‘அதையே வாங்கி அவருக்குக் கொடுத்து விடுங்கள். ஏனெனில், நல்ல முறையில் கடனைத் திருப்பிச் செலுத்துகிறவரே உங்களில் சிறந்தவர்” என்று கூறினார்கள். நூல்: புகாரி
ஒருவர் மரணித்துவிட்டார். அவரிடம் (கப்ரில் வைத்து)இ ‘நீ (உலகில் என்ன (நன்மையைச்) சொல்லி (செய்து) வந்தாய்?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘நான் மக்களிடம் கொடுக்கல் வாங்கல் செய்து வந்தேன். கடன் தொகையை வசூல் செய்யும்போது வசதி உள்ளவருக்கு அவகாசம் கொடுத்து வந்தேன். வசதியற்றவரை மன்னித்து (அவரின் கடனைத் தள்ளுபடி செய்து) வந்தேன்” என்று கூறினார். (அவரின் இந்த நற்செயல் அங்கீகரிக்கப்பட்டு) அவருக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டது. என ஹுதைஃபா ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள். நூல்: புகாரீ
அன்பளிப்பு
o நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நான் ஓர் அன்பளிப்பைக் கொண்டு சென்றேன். அப்பொழுது அவர்கள் நீர் இஸ்லாத்தைத் தழுவி விட்டீரா? என்று வினவினர். அதற்கு நான் இல்லை என்றேன். அப்பொழுது அவர்கள் ”நிச்சயமாக நான் இணை வைப்பவர்களுடைய அன்பளிப்பையும் நன்கொடையையும் ஏற்பதை விட்டும் தடை செய்யப்பட்டுள்ளேன்” என்று கூறினர் (அறிவிப்பவர்: இயான் இப்னுஹிமாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல் அபூதாவூத், திர்மிதீ)
o நிச்சயமாக ஒரு காட்டரபி நபி صلى الله عليه وسلم அவர்களுக்கு ஓர் ஒட்டகத்தை அன்பளிப்பாக அனுப்பினார். அதற்குப் பகரமாக நபி صلى الله عليه وسلم அவர்கள் அவருக்கு ஆறு ஒட்டகங்களை அன்பளிப்புச் செய்தனர். எனவே அவர் சினந்து கொண்டார். ஆனால் இச்செய்தி நபி صلى الله عليه وسلم அவர்களுக்குத் தெரியவரவே அவர்கள் அல்லாஹ்வை புகழ்ந்து அவனைத் துதி செய்துவிட்டு பின்னர், நிச்சயமாக, இன்னார் எனக்கு ஓர் ஒட்டகத்தை அன்பளிப்புச் செய்தார். எனினும் நான் அவருக்கு அதற்குப் பகரமாக ஆறு ஒட்ட்கங்களை அன்பளிப்பு செய்தேன். ஆனால் அவர் அதற்காகச் சினந்து கொண்டார். எனவே நான் (இனிமேல்) குறைஷிகளிடமிருந்தோஇ அன்ஸாரிகளிடமிருந்தோஇ ஸகஃபீகளிடமிருந்தோ, தவ்ஸீகளிடமிருந்தோ அன்றி வேறு எவரிடமிருந்தும்) அன்பளிப்பை ஏற்றுக் கொள்வதில்லை என்று முடிவு செய்துவிட்டேன் என்று கூறினர்.(அறிவிப்பவர்: அபூஹுரைரா َضِيَ اللَّهُ عَنْ நூல் ஸூனன்)
o நபி صلى الله عليه وسلم அவர்களின் திண்ணைப் பள்ளி மாணக்கர்களான ஸுஃப்பாவாசிகளில் சிலருக்கு நான் எழுத்துக் கலையையும் குர்ஆனையும் கற்றுக் கொடுத்தேன். எனவே அவர்களில் ஒருவர் எனக்கு வில் ஒன்றை அன்பளிப்பாக அனுப்பி வைத்தார். அப்பொழுது நான், என்னிடம் பொருள் இல்லாததால் அதைக் கொண்டு அல்லாஹ்வின் வழியில் அம்பு எய்துவேன் என்று கூறி பின்னர், அவர்களிடம் சென்று அல்லாஹ்வின் தூதரே! நான் ஒருவருக்கு குர்ஆனை கற்றுக்கொடுத்து வந்தேன். அவர் என்னிடம் பொருள் இல்லாததால் நான் அதைக் கொண்டு அல்லாஹ்வின் வழியில் அம்பு எய்வேன் என்று கூறினேன். அதற்கு அவர்கள், நரக நெருப்பு வளையம் உம்முடைய கழுத்தில் போடப்பட வேண்டும் என்று நீர் விரும்பினால் அதை நீர் ஏற்றுக் கொள்ளும் என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: உபாதா இப்னு ஸாபித் َضِيَ اللَّهُ عَنْ நூல் அபூதாவூத்)
o ஒருவர் நன்கொடை நல்கிவிட்டோ அல்லது சன்மானம் அளித்து விட்ட பின்னர் அதனையவர் திரும்பப் பெற்றுக் கொள்வது அவருக்கு ஆகுமானதல்ல. ஆனால் தந்தை தன் மைந்தனுக்கு அளித்து விட்டதைத் திரும்பப் பெருவது ஆகுமானதாகும். மற்றோர் அறிவிப்பின்படி, எவர் தாம் அளித்த நன்கொடையையோ அல்லது தாம் கொடுத்த சன்மானத்தையோ திரும்பப் பெறுவாராயின் அவர், வாந்தி எடுத்து விட்டுப் பின்னர் தம் வாந்தியைத் தின்னும் நாயைப் போலாவார் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினர். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் َضِيَ اللَّهُ عَنْ, இப்னு உமர் َضِيَ اللَّهُ عَنْ நூல் ஸூனன்)
o நிச்சயமாக என் தந்தை என்னை நபி அவர்களிடம் அழைத்துச் சென்று, நாயகமே நிச்சயமாக நான் இந்த என்னுடைய மகனுக்கு ஓர் அடிமையை நன்கொடையாக அளித்தேன் என்று கூறினார். அதற்கவர்கள், இவ்விதமாகவே உம்முடைய எல்லா மக்களுக்கும் நன்கொடை அளித்திருக்கின்றீரா? என்று வினவினர். அதற்கு என் தந்தை இல்லை என்று மறுமொழி பகர்ந்தார். (அது கேட்ட) நபி صلى الله عليه وسلم அவர்கள், அவ்விதமாயின் அவ்வடிமையைத் திரும்பப்பெற்றுக் கொள்ளும் என்று கூறினர். (அறிவிப்பவர்: நூமான் இப்னுபஷீர் َضِيَ اللَّهُ عَنْ நூல் முஅத்தா, அபூதாவூத், திர்மிதீ, நஸயீ)
நபி صلى الله عليه وسلمஅவர்கள் எனக்கு நன்கொடைகள் அளித்து வந்தனர். அப்பொழுது நான் என்னைவிட அதிக தேவையுள்ளவர்களுக்கு இவற்றை அளியுங்கள் என்று கூறினேன். அதற்கு அவர்கள் இவற்றை ஏற்றுக்கொள்ளும் அன்றி, நீர் கோராமலும் நீர் விரும்பாமலும் எந்தப் பொருளையும் நீர் ஏற்றுக்கொள்ளும்; ஆனால் இவ்விதமாக எந்தப் பொருள் மீது நீர் நாட்டம் வைக்காதீர் என்று கூறினர். (அறிவிப்பவர்: இப்னுஸ் ஸயீத் அவர்கள் உமர் َضِيَ اللَّهُ عَنْ மூலமாக அறிந்து நூல் புகாரீ, முஸ்லிம்)
o ஒருவருக்கொருவர் அன்பளிப்புச் செய்து கொள்ளுங்கள். ஏனெனில் நிச்சயமாக அன்பளிப்பு, உள்ளத்தின் கசடுகளை அகற்றிவிடும். மேலும் எந்த அண்டை வீட்டாரும் தம்முடைய அண்டை வீட்டாரை இழிவாகக் கருத வேண்டாம் அவர் ஆட்டின் குழம்புத் துண்டை அன்பளிப்பாக அனுப்பிய போதினும் சரி என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினர்.
o நபி صلى الله عليه وسلم அவர்கள் அன்பளிப்பை ஏற்றுக் கொண்டதுடன் அதற்குப் பகரமாக அன்பளிப்பும் அனுப்பி வந்தனர்” என்று ஆயிஷா َضِيَ اللَّهُ عَنْ அவர்கள் கூறினர். (அறிவிப்பவர்: அபூஹுரைரா َضِيَ اللَّهُ عَنْ நூல் அபூதாவூத்இ திர்மிதீ)
o நபி صلى الله عليه وسلم அவர்களுக்கு கிஸ்ரா (எனும் ஈரான் நாட்டு மன்னர்) அன்பளிப்பு அனுப்பினார். அதனை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். அன்றி, (மற்ற) அரசர்களும் நபி صلى الله عليه وسلم அவர்களுக்கு அன்பளிப்பை நபி صلى الله عليه وسلم அவர்கள் ஏற்றுக் கொண்டனர். (அறிவிப்பவர்: அலீ َضِيَ اللَّهُ عَنْ நூல் திர்மிதீ)
o ”ஒருவருக்காக எவரேனும் பரிந்துரைத்து (சிபாரிசு செய்து) அதற்காக அவர் தமக்குப் பரிந்துரைத்தவருக்கு அன்பளிப்புச் செய்து அதனை அவர் ஏற்றுக் கொள்வாரானால் நிச்சயமாக அவர் பெரும்பாலும் வட்டியின் தலை வாயிலில் நுழைந்தவராவார்” என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினர். (அறிவிப்பவர்:அபூ உமாமா َضِيَ اللَّهُ عَنْநூல் அபூதாவூத்)