மருத்துவக் கல்விக்கு இலவச கல்வி உதவித்தொகை அறிவிப்பு
தஞ்சை மாவட்டம், பாபநாசத்தில் இயங்கிவரும் ராஜகிரி தாவூத் பாஷா கலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நிறுவனர், முனைவர் எம்.ஏ. தாவூத் பாஷா வெளியட்டுள்ள அறிவிப்பு:
ப்ளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று, தகுதி அடிப்படையில் தமிழகத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர அனுமதி கிடைத்தும் பொருளாதார வசதியின்மை காரணமாக மருத்துவக் கல்லூரியில் சேர இயலாத அனைத்து மாணவர்களுக்கும் எங்கள் அறக்கட்டளையின் சார்பில் கல்வி உதவித்தொகை வழங்க தயாராக உள்ளோம்.
இப்படிப்பட்ட மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். படிப்பிற்குரிய அரசால் விதிக்கப்பட்டுள்ள கல்விக் கட்டணத்தை, ஐந்தாண்டுகளுக்கும் வழங்க நாங்கள் தயாராக உள்ளோம். . ஆயினும் படிக்கும் காலத்தில் பல்கலைக் கழகத் தேர்வில் ஏதாவதொரு பாடத்தில் தோல்வியுற்றாலும் அதன்பின் இக்கல்வி உதவித்ததொகை நிறுத்தப்படும்.
தகுதி உடைய மாணவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
முனைவர். எம்.ஏ. தாவூத் பாட்சா, Ph.D
தலைவர் மற்றும் செயலர், RDB கல்வி நிறுவனங்கள்,
பாபநாசம் – 614205, தஞ்சை மாவட்டம். தமிழ்நாடு.
தொலைபேசி – (04374)222123, 221267, 9443151267
========================
முஸ்லிம் கல்வி மேம்பாட்டுக் குழுமம் – தமிழ்நாடு
Muslim Educational Promotion & Counselling Organisation of Tamilnadu (MEPCOT)
அறிவிப்பு
பொருளாதார வசதியில் தாழ்ந்த நிலையில் இருக்கும் மாணவ மாணவியருக்கு கல்விக்க உதவித்தொகை வழங்குகிறோம். உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
உதவித்தொகை வழங்கப்படும் துறைகள்: மருத்துவம், பொறியியல், இதழியல், செவிலியர் பயிற்சி, ஆசிரியர் பயிற்சி, தொழிற்கல்வி, டிப்ளமோ, கேட்டரிங்.
விண்ணப்பப் படிவம் கிடைக்க: சுயவிலாசமிட்ட ரூ. 10 த்திற்கு தபால் தலை ஒட்டிய 10.5 ஒ 22.5 செ.மீ. அளவுள்ள அஞ்சல் உறைகளை கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ள இறுதி நாள்: 30-08-2008
விண்ணப்பங்கள் அனுப்பும் முறை: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தோடு கீழ்க்கண்டவற்றையும் இணைத்து Labbaik Educational Trust முகவரிக்கு தபாலில் அனுப்பலாம்.
விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டியவை:
விண்ணப்பதாரரின் சமீபத்திய புகைப்படம்.
கல்லூரியில் சேர்ந்ததற்கான சான்றிதழ்.
மதிப்பெண் பட்டியலின் நகல்கள்.
ஜமாஅத் சான்றிதழ்.
உடல் ஊனமுற்றோர், பெற்றோரை இழந்தவர்கள், பெற்றோர் பள்ளிவாசலில் பணிபுரிபவராய் இருந்தால் அதற்குரிய அத்தாட்சிகளை இணைக்கவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர இறுதிநாள்:
15-09-2008
அனுப்ப வேண்டிய முகவரி:
Labbaik Educational Trust,p.o.Box. No. 3, Thirumangalam 625706. Tamilnadu.
குறிப்பு: விண்ணப்பங்களை சாதாரண தபாலில் அனுப்பவும். கோரியர், ரிஜிஸ்டர் தபால் மூலம் அனுப்புவதை தவிர்க்கவும்.