எலெக்ட்ரானிக்ஸ்- கம்யூனிகேஷனில் 92 சதவீதம் பேர்
சென்னை, ஆக. 25: வழக்கம்போல், இந்த ஆண்டும் எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் படிப்பில் அதிகமானோர் சேர்ந்துள்ளனர். மொத்தமுள்ள 18,624 இடங்களில் 17,527 பேர் சேர்ந்துவிட்டனர். இது 92.17 சதவீதம் ஆகும்.
படிப்பு வாரியாக சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை விவரம் (அடைப்புக் குறியில் சதவீதம்):
எலெக்ட்ரானிக்ஸ்-கம்யூனி.லி 1,7166 (92.17)
கம்ப்யூட்டர் சயன்ஸ்லி 1,5397 (87.85)
ஐ.டிலி11097 (80.59)
எலெக்ட்ரிகல்-எலெக்ட்ரானிக்ஸ்லி 9649 (79.25)
இந்த ஆண்டு பி.இ. காலியிடங்கள் குறைகின்றன
சென்னை, ஆக. 25: பி.இ., பி.டெக். ஆகிய பொறியியல் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான கவுன்சலிங் வரும் 29-ம் தேதி நிறைவடைகிறது.
இந்த ஆண்டு அரசு ஒதுக்கீட்டின் கீழ் மொத்தம் 82,049 இடங்கள் உள்ளன. இவற்றில் ஞாயிற்றுக்கிழமை மாலை வரை மொத்தம் 71,907 இடங்கள் நிரம்பிவிட்டன.
கடந்த ஆண்டு மொத்தம் 66,507 இடங்கள் இருந்தன. கலந்தாய்வில் 56,041 இடங்கள் நிரம்பின. மீதி, 10,511 இடங்கள் காலியாக இருந்தன.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையிலும் காலியிடங்களின் எண்ணிக்கை குறைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு பி.இ. அட்மிஷன் குறித்து மாணவர்களிடையே பல சந்தேகங்கள் ஏற்பட்டன. இதன் காரணமாக பெரும்பாலான மாணவர்கள் கலை அறிவியல் படிப்புகளில் சேர்ந்துவிட்டனர். இந்த ஆண்டு திட்டவட்டமாக பொறியியல் படிப்பில் சேருவது என்ற உறுதியுடன்தான் பல மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்தோரில் பெரும்பாலானோர் சேர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.
பல பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டதால், மாணவர்கள் தாங்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகிலேயே உள்ள பொறியியல் கல்லூரியில் சேருவது எளிதாகிவிட்டது. இதனால், கிராமப்புற மாணவர்கள் பலர் அருகில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
26 கல்லூரிகளில் காலியில்லை: திங்கள்கிழமை காலை நிலவரப்படி 26 பொறியியல் கல்லூரிகளில் அனைத்து இடங்களும் நிரம்பிவிட்டன. 111 கல்லூரிகளில் 95 சதவீதம் முதல் 99 சதவீதம் வரையிலான இடங்கள் நிரம்பிவிட்டன.
57 கல்லூரிகளில் 90 முதல் 94 சதவீத இடங்கள் நிரம்பிவிட்டன. 61 கல்லூரிகளில் 80 முதல் 89 சதவீத இடங்களில் மாணவர்கள் சேர்ந்துவிட்டனர்.
93 கல்லூரிகளில் 80 சதவீதத்துக்கும் கீழ் உள்ள இடங்களே நிரம்பியுள்ளன.
பொதுவாக மாணவர்களிடையே விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால், எந்தப் படிப்பைத் தேர்ந்தெடுப்பது, எந்தக் கல்லூரியில் சேருவது என்பது குறித்து முன் கூட்டியே திட்டமிட்டு வந்துவிடுகிறார்கள்” என்றார் ரைமண்ட் உத்தரியராஜ்.
623 பி.டி.எஸ். இடங்களுக்கு இன்று முதல் கவுன்சலிங்: 6,686 மாணவர்களுக்கு அழைப்பு
சென்னை, ஆக. 25: தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு இடங்களில் உள்ள 16 சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளின் 623 அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். காலியிடங்களுக்கு செவ்வாய்க்கிழமை (ஆக. 26) முதல் கவுன்சலிங் நடைபெறுகிறது.
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் ஆக. 27, ஆக. 28, செப்டம்பர் 1, செப்டம்பர் 2 ஆகிய தேதிகளில் கவுன்சலிங் நடைபெறுகிறது. மொத்தம் 6,686 மாணவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி கவுன்சலிங் நடைபெற்றபோது, சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் உள்ள 776 அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்களில் 153 மாணவர்கள் மட்டுமே சேர்ந்தனர்; இதையடுத்து பி.டி.எஸ். காலியிடங்களை நிரப்ப 5 நாள்களுக்கு மீண்டும் கவுன்சலிங் நடத்தப்படுகிறது. ஆண்டு கல்விக் கட்டணம் ரூ.75,000. சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 623 காலியிடங்கள் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன.
பி.எஸ்ஸி. (நர்சிங்) ரேங்க் பட்டியல் வெளியீடு
சென்னை, ஆக. 25: பி.எஸ்ஸி. (நர்சிங்), பி.ஃபார்ம்., பி.பி.டி. (ஃபிஸியோதெரப்பி), பி.ஓ.டி. (ஆக்குபேஷனல் தெரப்பி) மற்றும் பி.ஃபார்ம் இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கை ஆகிய படிப்புகளுக்கான ரேங்க் பட்டியலை மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
www.tnhealth.org என்ற சுகாதாரத் துறையின் இணைய தளத்தில் ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை புது கல்லூரி மாணவர் சங்கம் தொடக்கம்
சென்னை: சென்னை புது கல்லூரி (மாலை நேரம்) மாணவர் சங்கத் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சென்னை மாநகர காவல் ஆணையர் ஆர். சேகர் பேசும்போது, “மாணவர்கள் தங்களுக்கு என்று கட்டுப்பாடுகளை வகுத்துக் கொண்டு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுகளுக்கு நன்கு படிக்க வேண்டும்‘ என்றார்.
கல்லூரி நிர்வாகக் குழுத் தலைவர் கே. அமீனூர் ரகுமான் தலைமை தாங்கினார். தாளாளர் எச்.எம். சம்சுதீன் வாழ்த்துரை வழங்கினார்.
மாணவர் சங்கப் பொறுப்பாளர்கள் ஹசன் அப்துல் காதர், ஷர்மி அகமது ஆகியோர் விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். சிவில் சர்வீஸ் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வில்
தமிழகத்தில் 586 பேர் தேர்ச்சி
சென்னை, ஆக. 15: ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். சிவில் சர்வீஸ் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வில் தமிழகத்தில் 586 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
2008-09ம் ஆண்டுக்கான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். முதல்நிலைத் தேர்வு கடந்த மே மாதம் 15-ம் தேதி நடந்தது.
இத்தேர்வில் நாடு முழுவதும் மொத்தம் 3 லட்சம் பேர் பங்கேற்றனர். தமிழகத்திலிருந்து 12,746 பேர் தேர்வு எழுதினர். இத்தேர்வுக்கான முடிவு வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.
நாடு முழுவதும் மொத்தம் 16 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தைப் பொருத்த வரையில் 586 பேர் தேர்ச்சி அடைந்தனர். தேர்ச்சி பெற்றவர்கள் வரும் அக்டோபர் 17-ம் தேதி தொடங்கும் பிரதான (மெயின்) தேர்வில் பங்கேற்பர்.
காரைக்காலில் ஐம்பெரும் விழா
காரைக்கால், ஆக. 26: காரைக்காலில் கிங்மேக்கர் காமராஜர் மனித நேய அறக்கட்டளை சார்பில் ஐம்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.எச்.நாஜிம், அறக்கட்டளை சார்பிலான ஐஏஎஸ், ஐபிஎஸ் நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளைத் தொடங்கிவைத்து, அறக்கட்டளையின் மாத இதழை வெளியிட்டுப் பேசினார்.
அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு பயிற்சி வகுப்புகளில் பங்கேற்று பயிற்சியளித்த பேராசிரியர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
இவ்விழாவில் முதியோர்களுக்கு உதவித் தொகை, மாணவ மாணவிகளுக்கு விளையாட்டுக் கருவிகள், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீத வெற்றியை எட்டிய பள்ளிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தேசிய வலு தூக்கும் போட்டி: மயிலாடுதுறை இளைஞருக்கு வெள்ளி பதக்கம்
மயிலாடுதுறை, ஆக. 26: மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற தேசிய சீனியர் வலு தூக்கும் போட்டியில் மயிலாடுதுறையை சேர்ந்த வீரர் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.
அகில இந்திய அளவிலான சீனியர் வலு தூக்கும் போட்டிகள் நாக்பூர் தில்லிராஜா அரங்கில் அண்மையில் நடைபெற்றன.
இந்த போட்டியில் தமிழக அணியின் சார்பில் பங்கேற்ற நாகை மாவட்டம் மயிலாடுதுறையைச் சேர்ந்த டி. அருண் பங்கேற்றார்.
இவர் 60 கிலோ எடை பிரிவில் ஸ்குவாட் பிரிவில் 247.5 கிலோ, பென்ச் பிரஸ் பிரிவில் 145 கிலோ, டெட் லிப்ட் பிரிவில் 242.5 கிலோ ஆக கூடுதல் 635 கிலோ தூக்கி வெள்ளி பதக்கம் வென்றார்.