நன்மையும் தீமையும் சமமாகாது. மிகச்சிறந்த நன்மையைக் கொண்டு நீர் தீமையை தடுப்பீராக! அப்போது உம்முடன் கடும் பகைமை கொண்டிருந்தவர்கூட உற்ற நண்பர்களாய் ஆகிவிடுவதைக் காண்பீர். பொறுமை கொள்வோரைத்தவிர வேறு எவர்க்கும் இந்த குணம் வாய்க்கப் பெறுவதில்லை. பெரும் பேறு பெற்றவர்களைத்தவிர வேறெவர்க்கும் இந்த உயர் தகுதி கிட்டுவதில்லை. – அல்குர்ஆன் 41:34
Day: August 25, 2008
ஒன்றாக இணையும் சூரியனும் சந்திரனும்
ஒன்றாக இணையும் சூரியனும் சந்திரனும் சந்திரன் மற்றும் பூமியின் ஆயுள் காலம் பற்றி ஆராய்ச்சி நடத்திய விண்வெளி ஆராய்ச்சியாளாகள், ஒரு கால கட்டத்தில் சந்திரன், சூரியனுடன் ஒன்றினைந்து விடும் என்று கூறுகிறார்கள். இது பற்றிக் குர்ஆன் ஏதாவது கூறுகிறதா என்று பார்ப்போம்: இக்கேள்விக்கான விடைகாணும் முன் சூரியன் மற்றும் சந்திரன் பற்றி இன்றைய விண்வெளி ஆய்வாளர்கள் கூறுவதைச் சற்று பார்ப்போம். சூரியனின் தன்மைகள் : …
Writer Sujatha about Qur-an
திருக்குர்ஆன் பற்றி மறைந்த எழுத்தாளர் சுஜாதா பத்திரிக்கையாளர், பன்னூலாசிரியர்,கணிஞர், வசனகர்த்தா எனப் பன்முகம் கொண்ட, தமிழ்கூறும் நல்லுலகம் நன்கறிந்த சுஜாதா என்று அறியப்பட்டு சமீபத்தில் மறைந்த திரு.ரங்கராஜன் அவர்கள் எழுதிய ஓரிரு நாவல்களைப் படித்திருக்கிறேன். சுவாரஸ்யமான எழுத்துநடை, வியக்கவைக்கும் தகவல், முடிவில் பிரமிப்பு ஆகியவற்றால் தன் எழுத்துப் பணிகளில் தனக்கென தனிஇடத்தையும் தவிர்க்க முடியாத வாசகர் வட்டத்தையும் பெற்று சிறந்து விளங்கினார். குர்ஆனைப் படித்தவர்களெல்லாம் சிந்தனையாளர்களல்ல; ஆனால் சிந்தனையாளர்கள் குர்ஆனைப் பற்றி அறியாமலிருக்க முடியாது. ஆகவே தான்…
சுவனத்தில் பெண்கள்
சுவனத்தில் பெண்கள் அஷ்ஷெய்க் ஜியாவுத்தீன் மதனி சுவர்க்கத்தில் பெண்களின் நிலைமைகள் பற்றி அதிகமாக கேள்விகள் எழுப்பப்படுவதால் அது சம்பந்தமாக சில கருத்துக்களை ஆதாரபூர்வமாக அறிஞர்களின் கருத்துக்களிலிருந்து முன்வைக்க முனைகின்றேன். அல்லாஹ் அதற்கு அருள் செய்வானாக. 1. பெண்கள் அவர்களுக்கு சுவர்க்கத்தில் கிடைக்கும் இன்பங்கள், கூலிகள் பற்றி கேள்விகளைக் கேட்பது ஒரு குறையாக கணிக்கப்படமாட்டாது. ஏனனில் மனித உள்ளம் எப்போதும் தனது எதிர்காலம் பற்றியும் கடைசி முடிவு பற்றியும் தெரிந்து கொள்வதில்…
மாதவிலக்கு – ஓர் இஸ்லாமியப்பார்வை!
மாதவிலக்கு இயற்கையானது “மாதவிலக்கு என்பது ஆதமுடைய பெண் மக்களின் மீது அல்லாஹ் விதித்த ஒன்றாகும்” என்று இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லவம் அவர்கள் கூறினார்கள். மாதவிலக்கு (ஹைள்) என்பது பெண் பருவ வயதையடைந்தால் கர்ப்பப் பையிலிருந்து ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட நாட்களில் வெளியேறும் இரத்தத்தைக் குறிக்கும். குறித்த காலத்திற்கும் கூடுதலாகவும் வெளியாகக்கூடிய இரத்தம் ”உயர் இரத்தப் போக்கு” (இஸ்திஹாளா) எனப்படும். மாதவிலக்கு இரத்தமானது கர்ப்பப் பையின் ஆழத்திலிருந்து வெளியாகும். உயர் இரத்தப் போக்கானது கர்ப்பப்…
இளையதலைமுறை – பிரச்சனைகளும் தீர்வுகளும்
சகோதரி. ஹயா ரூஹி [ ஆளுமையையும் பண்பாடுகளையும் வளர்க்க வேண்டிய கல்வித் திட்டம் இன்று வெறும் தகவல் திணிப்பு பொம்மைகளை உருவாக்கி விட்டிருக்கிறது. வாழ்க்கை நதியின் போக்கை – நெளிவு சுழிவைக் கற்றுக்கொடுக்க வேண்டிய நவீனக் கல்விக் கோட்பாடு இன்று பொருளாதாரம் ஒன்றையே பிரதான இலக்காகக் கொண்டிருப்பது பெருமூச்சுக்குரிய விடயமாகும். எந்த விதமான நோக்கமும் இலக்கும் குறிக்கோளும் உயர்ந்த இலட்சியமும் இன்றி ஆழ்கடலில் தத்தளிக்கும் ஓடங்களாய் இளைஞர்களை செதுக்கி விட்டிருக்கும் நவீனக் கல்வி முறை…
இஸ்லாம் கூறும் எளிய தர்மம் – புன்னகை!
இஸ்லாம் கூறும் எளிய தர்மம் – புன்னகை! அபூ ஸாலிஹா புன்னகையின் சிறப்பும் அதன் பயன்களும் அதனைக் குறித்தப் பல மேற்கத்திய அறிஞர்களின் கூற்றுகளும் சமீப காலங்களில் புன்னகைக் குறித்து வெளியாகி வரும் மருத்துவ அறிக்கைகளும் அனைத்துச் சமூகங்களிலும், குறிப்பாக முஸ்லிம்களிடையேயும் வேகமாகப் பரவி வருகிறது. ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சமூகப் பிணைப்பை ஏற்படுத்தக் கூடிய ஓர் எளிய ஆனால் வசீகரமான உத்தியாக இப் புன்னகையைக் குறித்து இஸ்லாம் அழகிய…
“தண்ணீர்” – “தண்ணீர்”
“தண்ணீர்” – “தண்ணீர்” இஸ்லாத்தில், நீர் என்பது அல்லாஹ்வின் மிகப் பெரும் கொடையாகக் கருதப்படுகின்றது. அது தனிநபருக்கு மாத்திரம் உரியதல்ல. மனித சமுதாயம் முழுவதற்குமுரிய நீர் மற்றும் ஏனைய வளங்கள் அனைத்தினதும் பாதுகாவலர்கள், மனிதர்களே. நீர் விநியோகமானது இஸ்லாத்தில் மிகத் தெளிவான சட்ட நடைமுறையைக் கொண்டுள்ளது. பொதுப் பிரயோகத்தில், அதன் சட்டங்கள், அதனைப் பயன்படுத்தும் அனைத்து மக்களையும் அடிப்படையாகக் கொண்டவையாகும். நீர்ச் சட்டங்கள் அதன் மூலப்பொருளின் அடிப்படையில் வகுக்கப்பட்டுள்ளன. வளத்தின் அளவு, நீரின் வகை, மற்றும் அதன்…
சகோரத்துவம் பேணுவோம்
தாருல் ஹுதா, சென்னை அல்லாஹ்வை மட்டும் வணங்க வருபவர்களுக்கு இன்றுவரை அது பொதுவாகவே உள்ளது. அப்படித்தான் இருக்கவும் வேண்டும். பள்ளிவாசல்களை பற்றி அல்லாஹ் திருமறையில் பின்வருமாறு கூறுகிறான். நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்கே இருக்கின்றன. எனவே, (அவற்றில்) அல்லாஹ்வுடன் (சேர்த்து வேறு) எவரையும் நீங்கள் பிரார்த்திக்காதீர்கள். (அல்குர்ஆன் 72:18)அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, இவற்றைப் பாழாக்க முயல்பவனை விட, பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? இத்தகையோர் அச்சமுடனன்றி பள்ளிவாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள்,…
தேவை இறையச்சம்!
தேவை இறையச்சம்! நீடூர் எம். ஃபைஜூர் ஹாதி, துபை, அமீரகம் “அவன் தான் உங்களைப் பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கினான்; அவன் உங்களுக்குக் கொடுத்துள்ளவற்றில் உங்களைச் சோதிப்பதற்காக, உங்களில் சிலரைச் சிலரைவிடப் பதவிகளில் உயர்த்தினான் – நிச்சயமாக உம் இறைவன் தண்டிப்பதில் விரைவானவன். மேலும் அவன் நிச்சயமாக மன்னிப்பவன்; மிக்க கருணையுடயவன்” (ஆதாரம்: அல்குர் ஆன் 6 :165) நாட்டின் தலைவர்கள் முதல் கிராம தலைவர்கள் வரை பெருமையாக நினைக்கும் பதவியை பற்றி இறைவன் மிக…