Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

ஹார்ட் அட்டாக்கும் முதல் உதவிகளும்

Posted on August 23, 2008 by admin

ஹார்ட் அட்டாக்கும், முதல் உதவிகளும்

     டாக்டர் A.ஷேக் அலாவுதீன் MD,(Alt.Med)ATCM(CHINA)       

ஹார்ட் அட்டாக் இந்த வார்த்தையே பயத்தை உண்டாக்கும், இதனால் ஏற்படும் பதட்டமோ பிரச்சனையை அதிகமாக்கும். நிதானமாக இக்கட்டுரையில் இருப்பது போல் செயல்பட்டால் ஹார்ட் அட்டாக்கிலிருந்து மிகவும் எளிதாக விடுபடலாம். (இன்ஷா அல்லாஹ்).

இதயம் இதன் அழகிய துடிப்புகளின் ஏற்ற இறக்கமே நோய்களின் விளக்கம். துடிப்புகளின் மவுனம் அதுதான் மரணம். இறைவன் நம்உடல் இயக்கத்திற்காக அளித்த ஓர் அற்புத தொழிற்சாலை. இதயம் அது தானாக இயங்குவதில்லை உடல் உறுப்புகள் பாதிப்பு அடையும் போது அவை தன் நிலையை மூளைக்கு தெரிவிக்க மூளை இதயத்திற்கு உத்திரவிடுகின்றது. இதயம் இரத்த ஓட்டம் மூலம் பாதிக்கப்பட்ட உறுப்புக்கு சக்திஅளித்து அதன் சக்தியை சமநிலைப்படுத்தி உறுப்பை சீராக இயங்க வைக்கின்றது.

பாதிப்படைந்த உறுப்பு அனுப்பும் தகவல் இதயத்திற்கு கிடைக்காமல் போனாலோ, இதயத்திற்கு தகவல் கிடைத்து இரத்தத்தை (சக்தியை) அனுப்பும்போது தடங்கல் ஏற்பட்டாலோ (இரத்த குழாய் அடைப்பு போன்ற காரணங்களால்) பல உறுப்புகள் பாதிப்படைந்த நிலையில் குறிப்பிட்ட ஒரு உறுப்புக்க போதுமான இரத்தத்தை அனுப்ப முடியாமல் போனாலே ஹார்ட் அட்டாக் ஏற்படுகிறது.

ஆனால் நவீன மருத்துவத்தில் இதயம் தானாகவே இயங்குவதாக நினைத்து அதன் வேகத்தைக் குறைக்க மருந்து, மாத்திரைகள் கொடுத்து நன்றாக இருக்கும் இதயத்தை அநியாயமாக கெடுத்துவிடுகின்றனர்.

நுரையீரல், பெருங்குடல், வயிறு, மண்ணீரல், இதயம், சிறுகுடல், சிறுநீரகம் (கிட்னி), சிறுநீர் பை, பித்தப்பை மற்றும் கல்லீரல் போன்றவைகள் மிக மிக முக்கியமான உடல் உறுப்புகள். மற்றவை அனைத்தும் இந்த உறுப்புகளை சார்ந்தவையே. இந்த உறுப்புகள் எவ்வாறு இதயத்தோடு சம்பந்தப்படுகிறது என்பதையும் எந்தெந்த உறுப்பு பாதிப்படைந்தால் எந்தெந்த நேரத்தில் ஹார்ட் அட்டாக் வரும், எந்த சூழ்நிலைகள் மற்றும் சந்தற்பங்களில் வரும் இதற்கான முதல் உதவி முறைகள் என்ன? எப்படி செய்வது என்பதை இன்ஷா அல்லாஹ் இத்தொடரில் நாம் தெரிந்துகொள்வோம்.

கல்லீரல் (Liver) பித்தப்பை (Gall Bladder) சம்பந்தப்பட்ட ஹார்ட் அட்டாக்:    

ஆரம்ப கால அறிகுறிகள்:

பித்தப்பை :

அதிகமாகக் கோபம் வரும், ஒரு பக்கத்தலைவலி, கண்களில் எரிச்சல், பித்தப்பையில் கல், வாய்வுப் புண், வாந்தி, வாய் நாற்றம், காதுவலி, அடிக்கடி ஏற்படும் ஜுரம், தொடையில் வெளிப்பக்கத்தில் ஆரம்பித்து கால் சுண்டு விரல் வரை வரும் வலி அதனால் நடக்க இயலாமை, வாயில் கசப்புச் சுவை, கிறுகிறுப்பு, காது அடைத்தல், மசலா அதிகம் சாப்பிடுபவர்களுக்கு பித்தப்பை பாதிப்பு அதிகம் ஏற்பட வாய்புண்டு, உடம்பில் ஏற்படும் எரிச்சலோடு கூடிய வலி, துணி உடம்பில் பட்டால் கூட எரிச்சல் உண்டாகும். கால் கைகளை படுக்கைக்கு வெளியே நீட்டி விட்டுக் கொண்டு தூங்குவார்கள்.

கல்லீரல் :

கண் நோய்கள், பசியின்மை, தலைவலி, கோபம், மஞ்சள் காமாலை, வயிற்றுவலி, மலச்சிக்கல், குழந்தைகளின் வளர்ச்சி பாதித்தல், வாந்தி, மன அழுத்தம், முதுகுவலி, சிறுநீர் பிரியாமை, ஹெரனியா, அடிவயிற்று வலி, இரவு 1 மணிக்கு தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டு பிறகு 3 மணிக்கு மீண்டும் தூங்க ஆரம்பித்தல், தூக்கத்தில் ஏற்படும் அரிப்பு, அலர்ஜி வரும் நேரம் : இரவு 11 மணியிலிருந்து 3 வரை.

மற்ற சூழ்நிலைகள்:

குடிகாரர்களுக்கும், விடிய விடிய கண்விழிப்பவர்களுக்கும், ஓய்வில்லாமல் செயல்படுபவர்களுக்கும், மேற்குறிப்பிட்ட நேரம் இல்லாமல் மற்ற நேரத்திலும் வரும்.

அவசர சிகிச்சை அளிக்க வேண்டிய இடம் : கை சுண்டு விரல் (ளஅயடட கiபெநச) நகத்தின் மேற்புறத்தில் உள் பக்க ஓரத்தில் ஆட்காட்டி விரலால் அழுத்தி லேசாக மசாஜ் செய்ய வேண்டும்.

இதயம் (Heart) சிறுகுடல் (Small Intestine) இதய மேல்உறை (Pericardium)

உடல் வெப்பம் (மூவெப்ப மண்டலம் -Triple Warmer) சம்பந்தப்பட்ட ஹார்ட் அட்டாக்:

ஆரம்ப கால அறிகுறிகள்:

இதயம்:

நெஞ்சுவலி, இதயத்திற்கு மேல் பகுதி தோள்பட்டை பகுதியில் ஏற்படும் வலி, போலியோ, அதிகமாக தாகம் எடுத்தல், சிறுநீர் மஞ்சள் நிறம், கை சுண்டு விரலில் உள்பக்க சைடில் ஆரம்பித்து அக்குள் வரை செல்லும் வலி, மஞ்சள் காமாலை, உள்ளங் கையில் சூடு அதிகமாகுதல், மனதில் பயம், நாக்கின் மேல் பகுதி சிகப்பு நிறமாகுதல், ஞாபக சக்தி குறைவு, மார்பு பகுதியில் தோன்றும் புண், மூச்சுவிட சிரமம், திடீர் வியர்வை, தூக்கமின்மை படபடப்பு, மணிக்கட்டு வலி, விரைவாகக் களைப்புத் தோன்றுதல், தூக்கத்தில் தொடர் கனவுகள், தூங்க ஆரம்பித்தவுடன் கனவும் ஆரம்பித்து விடும், நெருப்பு சம்பந்தப்பட்ட கனவுகள் தான் அதிகம் வரும்.

இதயமேல் உறை:

இதயத்தில் மேல்உறை பாதிப்புக்கு உள்ளாகும் போது நெஞ்சுவலி, படபடப்பு, மார்பு நெஞ்சுப் பகுதி அடைத்தது போலிருத்தல், மன அமைதியின்மை, முழங்கையில் ஏற்படும் வலி, உள்ளங்கையில் சூடு பரவுதல், கைகளில் ஏற்படும் தசைவலி, கடுமையான நெஞ்சுவலி, (இதயத் தசைகளில் இரத்தக் கசிவினால் ஏற்படும் நெஞ்சுவலி வலது முழங்கை வரை கடுமையாக இருக்கும்.) தலைவலி, தூங்கும் போது நெஞ்சு பாரமாக இருப்பது போல் உணர்வு, யாரோ அமுக்குவது போன்று உணர்வு இதனால் தூக்கத்தில் எழுந்து விடுதல்.

உடல் வெப்பம் (மூவெப்ப மண்டலம்):

உடம்பில் சில பகுதிகள் சூடாகவும் சில பகுதிகள் குளிர்ச்சியாகவும் இருப்பதற்கு இது தான் காரணம். உடம்பு முழுவதும் வெப்பத்தை சீர்படுத்தும். இது பாதிப்படைந்தால், காது மந்தம், காது செவிடு, காது இரைச்சல், கண்ணத்தில் வீக்கம், காதுகளில் வலி, முழங்கை வலி, தொண்டை வறட்சி, உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை அல்லது அதிக சூடு அல்லது அதிக குளிர்ச்சி ஏற்படுதல், தலை மிகவும் சூடாக இருப்பது. ஆடை மூடிய பகுதிகள் சூடாக இருப்பது, வயிறு உப்புதல், காற்று அடைத்தது போல் தசைகளில் வீக்கம், (விரல் கொண்டு அழுத்தினால் பள்ளம் ஏற்படும்), சிறுநீரை அடக்க முடியாமை, தூக்கத்தில் சிறுநீர் கழித்தல், நீர் கடுப்பு, வெளிச்சத்தில் தூங்க இவர்களுக்கு மிகவும் பிடிக்கும், சிறு வெளிச்சம் இவர்களுக்குத் தேவை.

சிறுகுடல்:

அடிவயிற்று வலி, காது பிரச்னைகள், கன்னம் வீக்கம், தொண்டைப் புண், மலச்சிக்கல், மலத்துடன் இரத்தம், கழுத்தில் சுளுக்கு, வயிறு உப்புசம், வாய்வுத் தொந்தரவு, அடிக்கடி ஏப்பம், வயிறு மந்தம், நெஞ்செரிச்சல், வாயில் புண்கள், வயிறு பெறுத்தல், சிறு குடலில் ஏற்படும் அஜீரணமே கெட்ட வாய்வுக்கு மூலகாரணம். மதியம் சாப்பிட்டவுடன் தூங்க நினைப்பவர்கள், சிறிது நேரமாவது மதியம் சாப்பிட்டவுடன் தூங்கியே ஆக வேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவரும் சிறுகுடல் பாதிக்கப்பட்டவர்களே. அக்குள், அக்குள் மடிப்புகளிலும் மார்புப் பக்கவாட்டிலும் இவர்களுக்கு சதை விழும். வரும் நேரம் : காலை 11 மணியிலிருந்து மதியம் 1 மணி வரை.

மற்ற சூழ்நிலைகள்:

இதயம், இதயமேல் உறை, சிறுகுடல், உடல் வெப்பம் இவையெல்லாம் வெப்பம் எனும் அடிப்படையை சார்ந்தவை இவைகளில் எவை பாதிக்கப்பட்டாலும் கீழ் குறிப்பிட்ட இடத்தில் சிகிச்சை அளித்தாலே போதும் இன்ஷா அல்லாஹ். சிறுகுடல் பாதிப்பால் வரும் ஹார்ட் அட்டாக் மதியம் 1 மணியிலிருந்து 3 மணிக்குள் வரும். இதயத்தால் பாதிப்பு ஏற்பட்டால் காலை 11 முதல் மதியம் 1 மணிக்குள் வரும். இதய மேல் உறையால் பாதிப்பு ஏற்பட்டால் இரவு 7 முதல் 9 மணிக்குள் வரும், உடல் வெப்பத்தால் (வுசipடந றயசநச) பாதிப்பு ஏற்பட்டால் இரவு 9 மணியிலிருந்து இரவு 11 மணிக்குள் வரும். இவற்றை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அவசர சிகிச்சை அளிக்க வேண்டிய இடம்:

சுண்டு விரலையும் மோதிர விரலையும் உள்ளங்கை பக்கம் மடக்குங்கள் உள்ளங்கையில் விரல்களுக்கு அருகிலிருக்கும் ரேகைக்கு ம் நடுரேகைக்கும் இரண்டு விரல்களுக்கும் இரண்டு ரேகைக்கும் இடைப்பட்ட இடத்தில் இருக்கும் சிறிய இடத்தில் அழுத்தம் கொடுத்து ஆட்காட்டி விரலால் கசக்கி விடுங்கள்.

வயிறு (Stomach) மண்ணீரல் (Spleen) சம்பந்தப்பட்ட ஹார்ட் அட்டாக்:

ஆரம்ப கால அறிகுறிகள்:

வயிறு:

அல்சர், வாய்வுத் தொல்லை, நாக்கு மஞ்சளாக மாறும், பற்களில் இரத்தக் கசிவு, கால் வலி, வாந்தி, முகவாதம், தொண்டை வறட்சி, இரத்தக் கசிவு நோய், கண் கீழ் இமை துடிப்பு, முகத்தில் தோன்றும் நரம்புவலி, வயிற்றுப் பொறுமல், பசியின்மை, கெட்ட கனவுகள், உணவிருந்தும் சாப்பிட முடியாமல் போவது போலவும் கனவுகள் உண்டாகும்.

மண்ணீரல்:

உடம்பில் அதிக எடை கூடுதல், அடிவயிற்று வலி, நாக்கில் ஏற்படும் விறைப்பு, மற்றும் வலி, வாய்வுகளால் ஏற்படும் வலி, மஞ்சள் காமாலை, வாந்தி, உடல் பலவீனம், உடல் பாரமாகத் தெரிதல், கால் பகுதிகளில் ஏற்படும் வீக்கம், வலி, காலை 10 மணிக்கு தூக்கம் வந்து அசத்தும், சாப்பிட்டவுடன் தூங்கச் சொல்லும் சோம்பேறித்தனத்தைக் கொடுக்கும், தூக்கத்தில் இருமல் வந்து தூக்கத்தைக் கெடுக்கும், இடுப்பில் பக்க வாட்டில் மடிப்புகளுடன் சதை உண்டாகும்.

வரும் நேரம் : காலை 7 மணியிலிருந்து 11 மணி வரை.

மற்ற சூழ்நிலைகள்:

சாப்பிடும் போது, அளவுக்கதிகமான மனவேதனையின் போது.

அவசர சிகிச்சை அளிக்க வேண்டிய இடம்:

கை மணிகட்டு ரேகை சுண்டு விரல் பக்கம் முடியும் இடத்தின் அருகே ஆட்காட்டி விரலால் அழுத்தி மசாஜ் செய்ய வேண்டும். (உள் எலும்பின் பக்கம்).

நுரையீரல் (Lungs) பெருங்குடல் (Large Intestine) சம்பந்தப்பட்ட ஹார்ட் அட்டாக்:

ஆரம்ப கால அறிகுறிகள்:

நுரையீரல்:

மூச்சுத் திணறல், இருமல், சளி, ஆஸ்துமா, கைகளில் கட்டை விரல் ஆரம்பித்து மார்பு மேல் முடியும் வலி, குசழணநn ளூழரடனநச என்னும் கைகளை அசைக்க முடியாத நிலை (பெண்களுக்கு அதிகம் வரும்), உடம்பில் உள்ள முடி கொட்டுதல் (தாடி, மீசை, புருவம் உள் உறுப்புக்கள்) மார்பகம் அடைத்தது போல் பாரமாக இருப்பது, தொண்டை காய்ந்து போதல், பேச முடியாத நிலை, டான்சில் கோளாறுகள், தோள்பட்டை வலிகள், தோல் வியாதிகள், அலர்ஜி, அக்குள், கழுத்து, தொடை பகுதிகளில் வியர்வை, 3 மணிக்கு விழிப்பு வந்து விடும், தூக்கத்தில் நெஞ்சை அடைப்பது போன்று மூச்சு முட்டுவது போல் இருக்கும், உட்கார்ந்து சாய்ந்தபடி தூங்குவார்கள், கைகளை அகற்றி வைத்து குப்புறப்படுத்துக் கொண்டு தூங்குதல்.

பெருங்குடல்:

அடிவயிற்றுவலி, மலச்சிக்கல், வயிற்றுப் பொறுமல், பல்வலி, வயிற்றுப் போக்கு, உதடு வறட்சி, நாக்கு வறட்சி, மூச்சுவிடச் சிரமம், தொப்புளைச் சுற்றிலும் வலி, தோல் வியாதிகள், இருமல், மூக்கு வழியாக இரத்தம் கசிதல், முகவாதம், தோள்பட்டை வலி, இடுப்புவலி, சைனஸ், நெஞ்சு எரிச்சல், புட்டமும் இடுப்பும் சேருமிடத்தில் சதை ஏற்படும்.

வரும் நேரம் : காலை 3 மணியிலிருந்து 7 மணி வர

மற்ற சூழ்நிலைகள்:

வேகமாக சிரிக்கும் போதும் மற்றும் ஓடும் போதும்

அவசர சிகிச்சை அளிக்க வேண்டிய இடம் : கை மணிகட்டு ரேகை ஓரத்திலிருந்து (சுண்டு விரல் பக்கத்திலிருந்து கீழ் நோக்கி மணிகட்டு பக்கம்) கீழ்நோக்கி 1ண இன்ஞ்சில் (பாதிக்கப்பட்டவரின் விரலில் அளவு எடுக்கவேண்டும்) ஆட்காட்டி விரலால் அழுத்தி லேசாக மசாஜ் செய்ய வேண்டும்.

சிறுநீரகம் (Kidney) சிறுநீர் பை (Urine Bladder) சம்பந்தப்பட்ட ஹார்ட் அட்டாக்:

ஆரம்ப கால அறிகுறிகள்:

சிறுநீரகம்:

பயம், சிறுநீரகக் கல், மூட்டு வலி, கால்களில் வீக்கம், முகத்தில் வீக்கம், முகம் கருப்பாக மாறுதல், பிறப்பு உறுப்பில் வலி, பல் வலி, கால் பாதங்கள் சூடாக இருப்பது, முதுகு வலி, நாக்கு உலர்ந்து விடுதல், தொண்டைப் புண், வீக்கம், மலச்சிக்கல், மூச்சுத் திணறல், தசைகள் சுருங்குதல், சிறுநீரகங்களில் ஏற்படும் வலி, தலைமுடி கொட்டுதல், மாதவிடாய்ப் பிரச்னைகள், ஆண்மைக் குறைவு, மனநோய், இரவில் வியர்த்தல், விதைகளில் ஏற்படும் வலி மற்றும் வீக்கம், கர்ப்பப்பை இறங்குதல், டான்சில், மார்பக அழற்சி, கழுத்தில் முன்புறம் சதை போடுதல், மாலை நேரத்தில் 5 மணிக்கு மேல் உடல் சோர்ந்து விடுதல், உடல் மிகவும் பலவீனமாய் மாறுதல், கைகள் நடுக்கம், இவர்கள் குப்புறப்படுத்துத் தான் தூங்குவார்கள். அப்போது தான் இவர்களுக்கு தூக்கம் வரும்.

சிறுநீர்பை:

சிறுநீர் பிரியாமை, சிறுநீர் அடக்க முடியாமை, இரு கண்களுக்கு நேர்மேல் பக்கமாக ஏற்பட்டு பின்னால் போகும் தலைவலிகள், கண் நோய்கள், இடுப்புவலி, முதுகுவலி, கழுத்துவலி, சிறுநீர்ப் பையில் கல், முழங்கை வலி, குதிகால் வலி, உடம்பு அசதி, பய உணர்ச்சி, இரண்டு புட்டங்களிலும் அதிகமான சதை போடுதல், தொடைகளின் பின்புறம் அதிக சதை போடுதல், அடிக்கடி மலம் கழித்தல், தூக்கத்தில் மாறி மாறி புரண்டு கொண்டிருத்தல், இவர்களின் கழுத்துக்குப் பின்புறம்சதை போடும்

வரும் நேரம் : மாலை 3 மணியிலிருந்து இரவு 7 மணி வர

மற்ற சூழ்நிலைகள்:

உணவை மென்று சுவைத்து சாப்பிடாமல் மிக வேகமாக அப்படியே விழுங்குபவர்கள். மருந்து மாத்திரைகள் அதிகம் சாப்பிடுபவர்கள்.

அவசர சிகிச்சை அளிக்க வேண்டிய இடம்:

கையை செங்குத்தாக (90 டிகிரி) மடக்கும் போது முழங்கைக்கு மேலே சுண்டு விரலிருந்து நேர் கீழே முழங்கைக்கு மேற்புறத்திலிருந்து வரும் கோடு முடியும் இடம்.

உங்களோடு சில நிமிடங்கள்:

முதல் உதவி என்பது ஆபத்திலிருந்து ஒருவரை காப்பாற்ற நாம் எடுக்கும் அவசரமான முயற்சி, இந்த முதல் உதவியே முழுமையான சிகிச்சையாக மாறி பூரண நலம் பெற அதிக வாய்ப்புகள் இருக்கின்றது, இருந்தாலும் உடனடியாக தரமான டாக்டர்களை சந்தித்து தெளிவு பெற்று அவசியம் ஏற்பட்டால் சிகிச்சை எடுத்து கொள்வது மிக சிறந்தது.

ஆபத்தில் சிக்குண்டவரை இத்தொடரில் நாம்; எழுதியிருப்பது போல் அறிகுறிகள் தென்பட்டுயிருந்திருந்தால் நீங்களும் அதற்கான சிகிச்சை அளித்து அவரை ஆபத்திலிருந்து காப்பாற்றிவிடலாம் (இன்ஷா அல்லாஹ்). அதன் பிறகு அவரிடம் உனக்கு வந்தது ஹார்ட்அட்டாக் நான் சிகிச்சை அளித்ததினால் நீங்கள் ஆபத்தான் சூழ்நிலையிலிருந்து நலம் பெற்றீர்கள் என்று சொன்னால் அவர் நம்பமாட்டார். காரணம் நர்சுகள் சூழ பின் தொடர்ந்து வந்து இன்டன்ஷிவ் கேரில் சில நாட்கள் தங்கவைக்கப்பட்டு ஒரு பெரிய தொகையினை பில் போட்டால் தான் தனக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டது என்று நம்பும் சூழ்நிலை உருவாகி பலகாலமாகிவிட்டது.

எப்படி இருப்பினும் மனம் தளராதீர்கள் பாதிக்கப்பட்டவருக்கு நீங்கள் செய்யும் உதவிக்காக எல்லாம் வல்ல அல்லாஹ் அதற்குறிய வெகுமதிகளை வழங்க தவறமாட்டான்.

5000 வருடங்களுக்கு முற்பட்ட அக்குபஞ்சர் மருத்துவம் ஹார்ட்அட்டாக்கிற்கு தரும் மதிப்புமிக்க சிகிச்சை முறைதான் மிகமிக சுருக்கமாக அழகாக உங்கள் முன் தெரிகின்றது. பயன் படுத்திக்கொள்ளுங்கள்.

தேவையுள்ளவர்கள் மட்டுமே இதில் மேற்கூறிய படி சிகிச்சை செய்து நலம் பெறுங்கள், தேவையில்லாமல் இதில் குறிப்பிட்டுள்ள இடங்களில் சிகிச்சை கொடுத்தால் வீண் வம்மை விலைகொடுத்து வாங்கியது போல் ஆகிவிடும். இது இதயத்தோடு சம்பந்தப்பட்டது என்பதால் மிக கவனமாக செயல்படவேண்டும்.

எல்லா புகழும் வல்ல இறைவனுக்கே. இத்தொடரை படிப்பவர்கள் என் தாய், தந்தையின் இம்மை மறுமை நல்வாழ்வுக்காக துஆ செய்யுங்கள்.

எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே.

– டாக்டர் A.ஷேக் அலாவுதீன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 1 = 1

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb