Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

விஞ்ஞான தொழில்நுட்ப புரட்சி

Posted on August 23, 2008 by admin

எதுவுமேயில்லாமல் வந்தவன் ஒரு கஃபன் துணியை சுருட்டிக் கொண்டு போய் விடுகிறான். இந்தக் கஃபனுக்கு முன்னால் எதையெல்லாமோ தன்னுடன் இணைத்துக் கொள்கிறான். இந்த ஒட்டுதல் அரைஞாண் கயிற்றில் ஆரம்பமாகிறது. அரை டவுசர், மேலாடை, உள்ளாடை, கைக்கடிகாரம், வளையல், மோதிரம், காதணி, கழுத்தணி என எதெல்லாமோ அவனோடு-அவளோடு இணைந்து விடுகிறது. இந்த வகையான ஒட்டுதலில் செல்போன் அட்டையாய் அவனோடு ஒட்டிக்கொண்டு விட்டது. செல்லின்ன்றிச் செல்வதில்லை. அவன் சொல்லெல்லாம் செல்லிலே! கழிப்பறையில் கூட ‘ஹலோ” சொல்லுகிறான்.

உங்கள் பெயரென்ன? என்பதை விட ‘உங்கள் நம்பரைச் சொல்லுங்கள்” என நம்பரால் நபரை அடையாளம் வைக்கிறான். முகவரியில் முகம் தேடுகிறான்.

செல்போன் பயன்பாடு கோடிக்கணக்கில் பெருகி அங்கிங்கெனாதபடி ஆனந்தமாய் காட்சியளிக்கிறது. நல்லது தான். நம்முடைய வருத்தமெல்லாம் இவ்வளவு அற்புத அழகிய கண்டெடுப்பையும் இவனுக்கு கையாளத் தெரியவில்லையே என்பது தான். இதற்காக யாரேனும் ‘செல்போன் உபயோகிக்கும் அழகிய வழிமுறைகள்” என நூலொன்றை தமிழ் கூறும் நல்லுலகிற்கு யாத்துத் தந்தால் தேவலை. (சிறு தகவல் அனுப்புதல் (sms) குறித்து நல்ல வார்த்தைகளைக் கோர்த்து அரபுமொழியில் புத்தகம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள்.

செல்போன் நவீன தொடர்பு சாதனம். அவ்வளவு தான். அதெப்படி கௌரவத்தின் குறியீடாக மாறிப் போனது? தெரியவில்லை! தகவல் பரிமாற்றத்திற்காக 30 ஆயிரம், 40 ஆயிரம் ரூபாய் செல் வாங்கியதாகப் பெருமை பேசிக் கொள்கிறார்கள். என்னோடது தான் சின்னது என சந்தோசப்படுகிறார்கள்.

அடுத்த வேளை சோத்துக்கு வழியில்லாதவன் கூட தன்மானப் (!) பிரச்னையாகக் கருதி செல் வாங்கி விடுகிறான். செல் இல்லாதவர்களை வறுமைக் கோட்டிற்குக் கீழே சேர்த்து விட வேண்டும் என்கிறான் என் நண்பன். அவனோடு பேசிய அரை மணி நேரத்திலி; செல் குறித்த கிண்டல்களே அதிகம். (பார்த்து பேசுடா.. பயங்கர ஆயுதம் வைச்சிருக்கான். அவன் செல்போனைத் தூக்கி தலையில் போட்டா நம்ம கதி என்னாகும்..?)

புதுப்புது மாடல்களைப் போல சினிமா ட்யூன்களையும் போட்டி போட்டுக் கொண்டு வைத்துக் கொள்கிறார்கள். நமக்குத் தகவல் வருவதற்கான அடையாள ஒலி அது. நமக்கு மட்டும் தான் அந்த ஒலி என்பது புரியாமல் காதைப் பிளக்கும் சப்தத்தில் அலறுகிறது செல் ஹாரன்(!)கள்.

பொது இடங்களில், வழிபாட்டுத் தளங்களில், அறிஞர்களின் அவைகளில், கல்விக் கூடங்களில், முக்கியமானவர்களுடனான சந்திப்பின் பொழுது சம்பந்தா சம்பந்தமில்லாமல் இந்த ஒலி எழும்பி செல்போன் வைத்திருப்பவரை நெளிய வைக்கிறது.

செல்போனை பொதுஇடங்களிலும், இணக்கமான சூழல் மட்டுமின்றி இறுக்கமான சூழலிலும் பயன்படுத்துவதைக் கவனத்தில் கொண்டு ட்யூன்களை அமைத்துக் கொள்ளத் தெரியவில்லை பலருக்கு..!

(மரணச் செய்தியை சொல்வதற்காகவா இத்தனை ரம்மியமாய் குரலெழுப்பினாய் நீ!)

இந்தக் கதறல்களினாலேயே ‘காலணிகளை வெளியே கழற்றி விட்டு உள்ளே வரவும்” என்பது போல செல்போனை செயலிழக்கச் செய்து விட்டு வரவும்” என அறிவிப்புச் செய்ய வேண்டிய அவசியமாகி விட்டது.

செல் உபயோகிப்பவர்கள் பொது ஒழுங்கை கருத்தில் கொண்டு சன்னமான, உறுத்தல் இல்லாத ஒலி அடையாளத்தை அமைத்துக் கொள்ளுதல் சாலச் சிறந்தது.

பேசும் ஒழுங்கு முறைகள், உரையாடலின் விதிமுறைகளை கேள்விப்படாதவர்கள் சகட்டு மேனிக்கு கத்தித் தொலைக்கிறார்கள். பயணத்தின் போதோ, பொது அவைகளிலோ மற்றவர்களின் மனநிலையைக் கருத்தில் கொள்ளாமல் சிரித்துச் சிரித்து இங்கிதம் தெரியாமல் பேசுபவர்களும் உண்டு.

மனமுடைந்து நொந்து போனவனை அருகில் வைத்துக் கொண்டு சிரித்துப் பேசி தன் புராணம் பாடுவது உணர்வுகளைக் கொல்லும் செயல். அதென்னவோ செல்லில் பேசும் போது அப்படியொரு பந்தா வந்து விடுகின்றது. அருகில் நாலு இளம் பெண்கள் இருந்தாலே போச்சு..!

தொலைபேசியில் பேசும் போது இடம் பெயர்ந்து செல்ல வாய்ப்பில்லை. பிறருக்குத் தொல்லை தராமல் ஆளற்ற இடத்தில் அமைதியாய் பேசுவதற்கான கண்டெடுப்பு செல் என்பதை உபயோகிப்பவர்கள் அறிவது நலம்.

சிறுதகவல் சேவை (sms)க்கு கட்டணம் வைத்தால் நல்லதென்று தோன்றுகின்றது. எதையெல்லாம் செய்தியாக அனுப்புவது என்ற வரைமுறையே இல்லை. தகவல் பரிமாற்றத்தின் சிறந்த வழிமுறை இச்சேவை! இதைக் கூட முறையாகப் பயன்படுத்துபவர்கள் குறைவு தான்.மதிப்பிற்குரிய என் நண்பரிடமிருந்து அவ்வளவு மட்டகரமான செய்தி வந்தபோது அதிர்ந்து போனேன். இதை எப்படி அனுப்பினாய்? என்ற போத எனக்கென்ன தெரியும்? எனக்கு வரும் செய்திகளை எல்லோருக்கும் அனுப்பி (sms) விடுவேன். சரியாக கவனிக்கவில்லை. அது இப்படியான செய்தி என்பது தெரியாது என மெனக்கெட்டு சத்தியமும் செய்தார் அவர்.

செல்லினால் பிரிந்த குடும்பங்கள் என்று புலானய்வு பத்திரிக்கையில் கட்டுரை போடுமளவுக்கு விவகாரமாகி விட்டது எஸ்எம்எஸ்.

படச்செய்திகள் (sms) அனுப்புவதிலும் விளையாட்டுத் தனமானவர்கள் பெரியவர்களுக்குக் கூட இத்தகைய படங்களை அனுப்பித் தொலைத்து விடுகிறார்கள்.(sms) அனுப்புபவர்கள் சிறு தகவல் ‘சேவை” என்பதை அவசியம் உணர வேண்டும்.தீமையான திருட்டு வழிக்கு, கள்ளக் காதலுக்கு, ஆபாசத்திற்கு, தவறான வியாபாரத்திற்கு செல்போன்கள் அதிகம் பயன்படுத்தப்படுவதாக ஒரு அறிக்கை தெரிவிக்கின்றது. காதலைச் சொல்ல (sms) போதுமாகிறது.

செல்போனில் பதிவு செய்யும் முறை உள்ளது. ஆர்வக் கோளாறில் ஏதேனும் உளறித் தொலைத்தால் பதிவு செய்து மிரட்டி விடுவதும் நடக்கிறது. பிறரைப் பற்றி நம் வாயைக் கிளறி அதைப் பதிவு செய்து சம்பந்தப்பட்டவரிடமே போட்டுக் காட்டிய செயல்களும் நடக்காமலில்லை.

குறுக்கு வியாபாரம், கள்ளத்தனமான சந்திப்புகள், வதந்தி பரப்புதல் ஆகியவற்றிலும் செல்லின் பங்கு அதிகம். சந்திப்பவர்களிடமெல்லாம் பெருமையாக நம்பரைச் சொல்லித் திரிவது தவறான நெருக்கடிகளுக்குத் தள்ளி விடும்.

தன்அமைதி என்பதை கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? பிறருக்குத் தொல்லை தருவது ஒரு புறமிருக்க தனக்குத் தானே தொல்லை தருவது மிகப் பெரும் ஆபத்தான காரியம். ஓய்வும்,அமைதியும் மனிதனுக்கு மிகவும் அவசியம். சற்றே தனிமை கூட அவனுக்குத் தேவை. தனிமை அவனைப் பற்றி அவனுக்குச் சொல்லும். தனக்குத்தானே சுதந்திரம் தராமல் கூட செல்லோடு தன்னைக் கட்டிப் போட்டு விடுகிறான்.

தன்னுடைய உணர்வுகளை அசை போடுவதற்குக் கூட அவனுக்கு அவகாசமில்லை. மோகமோ, கோபமோ கையிலே செல்லிருந்தால் உடனே சந்பந்தப்பட்டவரிடமே வெளிப்படுத்தி விடுகிறான்.

தொலைபேசி என்றால் அதற்கான சூழல், தேடிச் சென்று பேசுவதில் அவனுக்கு சிறு இடைவெளி கிடைக்கிறது. உணர்வு கொந்தளிக்கின்ற நேரத்தில் அந்த வினாடியே அவ்வுணர்வுகளை சம்பந்தப்பட்டவரிடம் கொட்டி விடுகிறான். மனமுறிவுகளும், தர்ம சங்கடங்களும் இதனால் அதிகமாகிறது.

எந்த நேரமும் செல்லுடனே அலையாமல் தேவைப்படும் போது மட்டுமே பயன்படுத்தும் மனோநிலை செல்லர்களுக்கு அவசியம்.

இருக்கின்ற 15 ரூபாயில் சாப்பிடுவதை விட அந்த ரூபாய்க்கு பேசி விடுகின்ற பேச்சு மயக்கத்திலிருந்து விடுபட செல் இடைவெளி அவசியம்.

செல் வைத்திருப்பவர்கள் மட்டுமின்றி செல்போன்களில் தொடர்பு கொள்பவர்களும் சில விசயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

எந்நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம் என்பதற்காக நேரம் கெட்ட நேரத்திலெலாம் தொந்தரவு செய்தல் ஆகாது. உங்களுடையதல்லாத வீடுகளில், அவர்களுடைய அனுமதியைப் பெறாமல் செல்லாதீர்கள் என்கிறது திருமறை. செல்போன்களில் ஒருவருடைய சூழலைத் தெரிந்து கொண்டே பேச வேண்டும்.

அவர் நெரிசலான சாலையில் பயணித்துக் கொண்டிருக்கலாம். வணக்க வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருக்கலாம். பல முக்கியஸ்தர்களுடன் பேசிக் கொண்டிருக்கலாம். இவற்றைக் கவனத்தில் கொண்டு முதலிலேயே அவரின் சூழ்நிலையையும், மனோநிலையையும் அறிந்து கொண்டே பேச வேண்டும்.

தொலைபேசுதலின் ஒழுங்கு முறையை அழகாகச் சொல்லுகிறார் சௌந்தர்ய முத்திரை கவிஞர் தண்ணன் மூசா அவர்கள். இடம் பெயர் முகமன் தொடுத்துடன் தொலைக்குழல் விடயம் பேசு.

செல் இறைவன் வழங்கிய அருட்கொடை. இந்த அருட்கொடை குறித்தும் நாளை மறுமையில் இறைவன் முன் பதில் சொல்ல வேண்டும். நம் ஒவ்வொரு சொல்லுக்கும் இந்த செல்லும் சாட்சி சொல்லும்.

ஆம். நபி ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்களும் அவர்களின் அன்புத் தோழரான அபூபக்கர் ரளியல்லாஹ¤ அன்ஹ¤, உமர் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களும் பசியின் காரணமாக வெளியே வருகிறார்கள். உணவு வேண்டி ‘அபுல் ஹைஸீம் பின் தீஹான்” என்ற அன்சாரித் தோழரின் வீட்டுக்குச் செல்கிறார்கள்.அந்தத் தோழர் பேரீத்தம் பழங்களும், தண்ணீரும் தருகிறார். பின்னர் விருந்து தருகிறார். பசி தாகம் தீர்ந்ததும் தோழர்களை நோக்கி நபி ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :

‘எனது உயிர் எவன் கைவசம் உள்ளதோ அந்த இறைவன் மீது சத்தியமாக! இப்பொழுது நாம் அனுபவித்த அருட்கொடைகள் பற்றி நிச்சயம் மறுமை நாளில் உங்களிடம் விசாரணை செய்யப்படும்.

எளிய பேரீத்தம் பழத்திற்கும் உணவுக்குமே விசாரணை என்றால் செல்போனுக்கு? ஆக்கப்பூர்வமாக செல்லைக் கையாள வேண்டும்.

என் நண்பர் ஒருவர் அதிகாலைக தொழுகைக்கு (பஜர்) எழுந்து நண்பர்களுக்கெல்லாம் (sms) கொடுத்து எழுப்புகிறார்.அது போல திருமறை வசனங்களை, நபிமொழிகளை, மறுமையை நினைவூட்டும் விதமாகவும் செய்திகளை நண்பர்களுக்கு அனுப்பலாம்.

நாம் வாசித்த நல்ல புத்தகங்கள், கலந்து கொண்ட நல்ல கூட்டங்கள், சொற்பொழிவுகள், நிகழ்ச்சிகள் குறித்த தகவல்களையும், வாழ்த்துக்களையும் செய்திகளாக அனுப்பி நட்புறவை வளர்த்துக் கொள்ளலாம்.

என் நண்பரிடமிருந்து வந்த செய்தி (sms) வந்திருக்கிறது :

இந்தச் செய்தி உன்வாழ்வின் ஒரு நிமிடத்தை குறைத்திருக்கும்..!

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

64 + = 66

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb