ஹாருன் யஹ்யாவின் ஆக்கங்கள்
ஹாருன் யஹ்யாவின் ஆக்கங்கள் இது வரை 41 உலக மொழிகளில் மொழிப்பெயர்க்ப்பட்டுள்ளன.
இது வரைக்கும் அவரது புத்தகங்கள் 8 மில்லியன் புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன. அதேயளவு மக்கள் பல்வேறு பத்திரிக்கைகள் மற்றும் சஞ்சிகைகள் மூலம் இலவசமாக படித்து பயனடைந்துள்ளனர்.
இது வரை ஆசிரியரின் ஆக்கங்களை மையமாக கொண்டு 180 திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு பல்வேறு மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளன. அவை 200 வெவ்வேறு நாடுகளில் 100 தொலைக்காட்சிகளில் இன்றுவரை ஒளிபரப்பபட்டு வருகின்றன.
மேலும் 13 மில்லியன் VCD திரைப்படங்கள் உலகம் முழுவதும் திரையடப்பட்டுள்ளன. கலந்துரையாடல், நிகழ்ச்சிகள் மற்றும் ஒலி நிகழ்ச்சிகள் 20 VCD,வேறு நாடுகளிலுள்ள அதிகமான வானொலி நிலையங்களில் ஒலிபரப்பட்டுள்ளன.
ஆசிரியரின் ஆக்கங்களை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்ட 40 மொழிகளிலுள்ள 200 மேற்பட்ட இணையதளங்கள் மாதந்தொரும் 160 நாடுகளிலிருந்து 30 லட்சம் மக்களால் பார்வையிடப்படுகின்றன.
மாதந்தம் 4,45000 திரைப்படங்கள், 190,000 புத்தகங்கள் மற்றும் 60,000 ஒலி புத்தகங்கள்பார்வையாளர்கள் தங்களது கணிணியில் பதிந்து கொள்கின்றனர்.
இன்றுவரை, ஹாருன் யஹ்யாவின் ஆக்கங்களை மையமாக கொண்டு சுமார் 60 லட்சம் சஞ்சிகை பிரதிகள் அச்சடிக்கப்பட்டுள்ளன.
உலகம் முழுவதும் அவுஸ்திரேலியா முதல் கனடா வரையும், பிரித்தானியா முதல் மலேசியா வரையிலுமுள்ள, பல முன்னனி பல்கலைகழகங்களில் பெருளமவு கருந்தரங்குகள் நடைபெற்று வருகின்றன. இன்றுவரை துருக்கியில் மட்டும் 1500 கலந்துரையாடல் நடைபெற்றுள்ளன. பத்திரிக்கைகளில் இன்று வரை பல்வேறு நாடுகளில் ஹாருன் யஹ்யாவின் 5000 மேற்பட்ட கட்டுரைகள் வெளியாகியுள்ளன.
மறைக்கப்பட்ட டார்வினிஸ பொய்கள்
பரிணாம வளர்ச்சி வெளியிடப்பட்ட நாள் முதல், அது சண்டைகள், யுத்தங்கள், நன்னடத்தை அழிதல் தவிர வேறு எதையும் கொண்டுவரவில்லை. அதனால் இந்த விடயத்தை பற்றி நன்கு தெளிவாக அறிந்து கொள்வதுடன் இதற்கு எதிராக அறிவார்ந்த யுத்தத்தை மேற்கொள்வதை பற்றி மிகவும் அத்தியவசியமான ஒன்றாகும்.
நாத்திக சிந்தனையின் அடிப்படையில் உலகை பார்பதால் உண்டாகும் நோய்களான காட்டுமிராண்டித்தனம், அன்பின்மை மற்றும் சுயநலம் போன்றவற்றிலிருந்து மனித இனத்தை காப்பாற்ற வேண்டும். ஏனெனில் நாத்திக சிந்தாந்தம் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டில் மாத்திரமே சார்ந்துள்ளது.
இந்த சிந்தனையின் பிழைகள் பலமுறை முழுமையான விஞ்ஞான ஆதாரங்களை கொண்டு நிராகரிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் சிறுபிள்ளைதனமான பிரச்சார உத்திகள் மற்றும் பல்வேறு பொய்களை கொண்டு அவை அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கின்றன. பெரும்பாலான மக்கள் அதை நிராகரித்து விட்டனர்.
ஹாவார்ட் பல்கலைகழகத்தினால் வெளியிடப்பட்ட புதிய புத்தகத்தில் ஹாருன் யஹ்யாவின் ஆக்கங்கள் சேர்த்து கொள்ளப்பட்டுள்ளன.
உலகிலுள்ள அனைத்தும் இறைவனால் படைக்கப்பட்டவை என்ற சிந்தனை படிபப்டியாக வலுப்பெற்று வருவதாகவும் அதற்கு முக்கிய காரணியாக திகழ்வது விஞ்ஞான ஆய்வு கழகம் (BAV)என்று விஞ்ஞான ஆய்வுகளில் உலகின் மிக முக்கிய நிறுவனங்களின் ஒன்றாக கருதப்படும் ஹாவார்ட் பல்கலைகழகம் உறுதிபட கூறியுள்ளது. Creationists, from Scientific Creationism to Intelligent Designஎன்ற புத்தகத்தின் சமீபத்திய பதிப்பில் படைப்பின் உண்மைநிலை என்ற தலைப்பின் கிழ் BAV- க்காக பிரத்தியேகமாக ஒரு பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிக்கு “Creation Museums and the Rise of Global Creationism”என்ற தலைப்பு இடப்பட்டுள்ளது.ஒரு வித்தியாசமான நிகழ்வு, அதாவது படைப்புகளின் அருங்காட்சியகம் ஒன்று சற்று தாமதமாக தலைதூக்கியுள்ளது.
அமேரிக்காவில் கென்டகி நகரத்தில் முதன் முறையாக இது திறக்கப்படவுள்ளது. 26.4 மில்லியன் டாலர் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இதில் டைனசோரஸ் மற்றும் அதி நவீன தொழிநுட்பமான SFX திரையரங்கு போன்ற வசதிகள் உள்ளன. இவற்றின் மூலம் பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள செய்திகளை போன்றே இறைவன் அனைத்தையம் படைத்தான் என்று பார்வையாளர்களை ஏற்றுகொள்ள வைப்பதற்காக வடிவமைப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மட்டுமல்ல. மற்றவைகள் போன்று அனைத்தும் படைக்கபட்டவை என்ற பிரச்சாரம் உலகெங்கும் பரவுகிறது. துருக்கி முழுவதும் சிறிய அருங்காட்சியகங்கள் (துருக்கியிலுள்ள இஸ்தான்புல் நகரில், சாதாரண கெபாப் கடை, அதில் சார்ள்ஸ் டார்வினின் இரத்தம் தோய்ந்த உருவம் வரவேற்கிறது) திறக்கப்பட்டுள்ளன.
மேட் மோசன் இந்த மாத SEED சஞ்சிகையியல் இவ்வாறு எழுதுகிறார் : சமீபத்திய பிரச்சாரங்களில், BAV [Bilim Arastirma Vakfiஅல்லது விஞ்ஞான ஆய்வு மையம்) துருக்கி முழுவதும் இத்தகைய அருங்காட்சியகங்களை உணவகங்கள், அங்காடிகள் (Shopping Malls) மற்றும் நகர மண்டபங்களில் திறந்துள்ளது. அவைகள் படிமங்கள், சுவரொட்டிகள், துடிப்பான தன்னார்வ தொண்டவர்களை கொண்டு நிரம்பி வழிகிறது. ஓக்தாரின் சீடர்கள், கலிபோர்னியாவிலுள்ள படைப்புகளின் ஆய்வு மையம் போன்றவற்iறை பின்பற்றி பரிணாம கோட்பாட்டால் உயிரியலையும் நிரூபிக்க முடியாது, அது இறைவனுக்கு எதிராக இருக்கிறது என்று அவ்விடத்தை கடந்து செல்பவர்களை அறிவுறுத்துகிறது.
BAVமிகவும் சாமர்தியமாக செயலாற்றுகிறது என்பதை அதன் இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம். அத்தளத்தில் காணப்படும் பதிவிறக்ககூடிய பவர் பொயின்ட் தொகுப்புகளை (Ms PowerPoint presentations)கொண்டு, பரிணாமத்தை விரும்பும் விஞ்ஞான ஆசிரியர்களை நோக்கி மாணவர்கள் கேள்விகனைகளை தொடுத்து திணறடிக்கின்றனர் என்று மொஸ்மேன் கூறுகிறார். அமேரிக்காவுடனான நெருக்கம் தற்செயலானதல்ல. கடந்த வருடம் BAVயின் பேச்சாளர் ஒருவர் அமேரிக்காவிற்கு பயணம் செய்து கன்சாஸ் கல்வி பணியகத்தின் அறிவார்ந்த வடிவமைப்பு (intelligence design)என்ற கருத்தரங்கில் பங்கு பற்றியுள்ளார்.
அமேரிக்கா துருக்கியை தவிர்ந்து பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியா (இங்கு பலத்துடன் செயல்படுவதாக கருதப்படுகிறது) போன்ற நாடுகிளிலுள்ள அனைத்தும் படைக்கபட்டவை என்ற சிந்தனையுடைய நிறுவனங்கள் வளர்ச்சியடைந்துள்ளன. ரோனால்ட் நம்பர்ஸ்(Ronald Numbers)இன,The Creationists: From ScientificCreationism to Intelligent Designஎன்ற ஆக்கம் சிலகாலமாக அனைத்தும் படைக்கபட்டவை என்ற சிந்தனையுடையவர்களுக்கு உதவி வருகிறது. நவம்பர் மாதத்தில் ஹாவார்ட் பதிப்பகம்(HUP)அதன் இணைக்கப்பட்ட பதிப்பில் இந்த நூற்றாண்டில் அனைத்தும் படைக்கபட்டவை என்ற சிந்தனையின் வளர்ச்சி பாதையை காட்டுகிறது. இரண்டு புதிய அத்தியாயங்கள் அறிவார்ந்த வடிவமைப்பு அமைப்பு மற்றும் மேலே குறிப்பிடப்பட்ட உலகலாவிய அனைத்தும் படைக்கபட்டது என்ற சிந்தனையுடையவர்களின் வளர்ச்சி பற்றியும் எடுத்துரைக்கிறது.
நீரிலிருந்து நிலத்திற்கு மாறியது என்ற பரிணாமவாதிகளின் வாதம் ஒரு பெரும் பொய்:
டிக்டாலிக்ரோசியா : மற்றொரு வீணான முயற்ச்சி
அண்மையில் நேச்சர்(Nature)என்ற சஞ்சிகையில் வெளிவந்த படிமத்தை விடுபட்ட தொடர்பு என்று சித்தரிப்பதற்காக டார்வின் சிந்தனை மீடியாக்கள் புதிய பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன. இந்த கேள்விக்குறிய மீன் படிமம் ஆர்டிக் கனடா பிரதேசத்தில் நீல் சுபின் (Neil H. Shubin)மற்றும் எட்வர்ட் டெஸ்லர் (Edward B. Daeschler)ஆகிய இரண்டு ஆய்வாளர்களால் 2004ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. டிக்டாலிக் ரோசியா என்ற விஞ்ஞான பெயரிடப்பட்ட இந்த படிமம் சுமார் 385 மில்லியன் ஆண்டுகள் பழமைவாய்ந்தது. நீரிலிருந்து நிலத்திற்கு மாற்றமடையும் போது அவ்விடத்தில் விடுபட்ட தொடர்புக்கு தகுந்த வேட்பாளரை தேடிக் கொண்டிருந்த பரிணாமவாதிகள் இந்த படிமத்தை அதன் தெளிவற்ற தன்மைகளை மறைத்து, இதை அவர்கள் நிரூபிக்க திணறிக்கொண்டிருந்த இடத்தில் பொருத்தி விடுபட்ட தொடர்பு (missing link)என்று காட்ட முயற்சிக்கின்றனர்.
இருப்பினும் நீரிலிருந்து நிலத்திற்கு மாற்றமடைதல் என்பது கற்பனை கதையாகும். ஏனெனில் நிலத்தில் வாழும் உயிரினங்களுக்கும் மீன்களுக்கும் இடையில் காணப்படும் உடல்ரீதியான பெரும் வித்தியாசங்களை பரிணாம வளர்ச்சி கோட்பாட்டின் கற்பனை தொழிற்பாடுகளை கொண்டு ஒரு போதும் நிரூபிக்க முடியாது. விஞ்ஞானத்திற்கும் எதிராக இருந்த போதிலும், பரிணாம வளர்ச்சி கோட்பாட்டின் மீது அவர்கள் கொண்டுள்ள கண்மூடித்தனமான ஆதரவின் காரணமாகவும் இறைவனை மறுக்க வேண்டும் என்பதற்காகவும், இந்த இடத்தில் டிக்டாலிக் ரோசியா படிமத்தை பிழையான தரவுகளை கொண்டு பொருத்த முற்படுகின்றனர்.
டார்வின் சார்பு மீடியாக்கள் பிரச்சாரம் செய்யும் டிக்டாலிக் ரோசியா படிமத்தில் அவர்கள் வேண்டுமென்றே மறைத்தவற்றை கீழே தருகிறோம்: டிக்டாலிக் ரோசியா : பரிணாம வளர்ச்சிக்கு சான்றாக கொள்ள முடியாதுடிக்டாலிக் ரோசியா சம்பந்தமான நன்கு பாதுகாக்கப்பட்ட மூன்று படிமங்கள் காணப்படுகின்றன. மூன்று மீட்டர் நீளமுள்ள சில படிமங்கள் மோசயிக் பண்புகளை (mosaic characteristics) கொண்டுள்ளன. (மொசயிக் உயிர் அமைப்புகள் பல்வேறு வித்தியாசமான உயிரினங்களின் பண்புகளை கொண்டிருக்கும்). மீன்களில் உள்ளதை போன்று அதற்கு செதில் மற்றும் ஸ்கேல்கள் உள்ளன. நிலத்தில் வாழும் உயிரினங்களை போன்ற தட்டையான தலை, உறுதியான எலும்பு மற்றும் நகரும் கழுத்து காணப்படுகின்றன. இந்த உயிரினத்தின் பெயர் இனுய்ட்(Inuit language)என்ற மொழியிலிருந்து
பெறப்பட்டுள்ளது. அந்த மொழியில் இனுக்டிடுட்(Inuktitut)என்பதன் கருத்து பெரிய, நன்னீPர் மீன் என்பதாகும். அதற்கு செதிலில் முள் என்ற கருத்தும் உண்டு. பரிணாமவாதிகள் இந்த மொசாயிக் பண்புகளை மறைத்து அவர்களுக்கு ஏற்றவாறு வடிவமைத்து மீனிலிருந்து நில உயிரினங்கள் தோன்றின என்ற அவர்களது கற்பனை கதைக்கு தேவையான விடுபட்ட தொடர்பு என்பதை நிரூபிக்க முற்படுகின்றன.மொசாயின் உயிரினங்கள் என்பது பரிணாம வளர்ச்சி கோட்பாட்டிற்கு தேவையான விடுபட்ட தொடர்பை(missing link)விட மிக தொலைவில் உள்ளது. தற்போது அவுஸ்திரேலியாவில் வாழ்ந்துவரும் பிளடிபஸ் என்ற ஒரு வகை மிருகம் ஊர்வன, நீர் வாழ் உயிரினம் மற்றும் பறவைகளின் பண்புகளை ஏக காலத்தில் ஒரே நேரத்தில் கொண்டுள்ளது. இருப்பினும் அதை பரிணாம வளர்ச்சி கோட்பாட்டிற்கு சான்றாக கொள்ள முடியாது.
பரிணாமவாதிகள் அவர்களது கூற்றுகளை மெய்பிக்க மொசாயிக் பண்புகளை கொண்ட உயிரினங்களை தேட தேவையில்லை. அதற்கு பதிலாக அவற்றுக்கு இடைப்பட்ட தொடர்புகைள(intermediate forms)தான் தேடி கண்டுபிடிக்க வேண்டும். அதாவது பாதி வளர்ச்சியடைந்த ஆனால் நன்கு செயல்பட முடியாத உறுப்புகளை கொண்ட உயிரினங்களை தான் கண்டுபிடித்து காட்ட வேண்டும். இருப்பினும் மொசாயிக் உயிரினங்களின் ஒவ்வொரு உறுப்பும் நன்கு நிறைவாக செயல்படக்கூடியதும் எவ்வித குறைபாடுகளும் அற்றதுமாகும். அவற்றின் உடலில் பாதி வளர்ச்சியடைந்த எந்த உறுப்பும் இல்லை. அவைகள் வேறு உயிரினங்களிலிருந்து பரிணாம வளர்ச்சியடைந்தது என்பதை காட்டக்கூடிய எந்த படிம தொடர்புகளும் (intermediate forms) இல்லை.
பரிணாம வளர்ச்சி கோட்பாடு ஒழுங்கில்லாத இணைப்பில் நம்பிக்கை வைத்துள்ளது. வேறு வகையில் சொல்வதென்றால் அவைகள் தற்செயலாக இணைந்தன என்பதாகும். இந்த வாதத்தின் அடிப்படையில் பார்க்கும் போது, உலகிலுள்ள பல கோடி உயிரினங்கள் தற்செயலாக இணைந்ததன் விளைவாக, அவை உரு மாற்றமடைந்து, வித்தியாசமான அமைப்பை கொண்ட, இடைப்பட்ட நிலைகளைகள்(intermediate forms)என்று அவர்கள் அழைக்கின்ற பல்லாயிரக்கணக்கான படிமங்கள் இருந்திருக்க வேண்டும். வேறு வகையில் சொல்வதென்றால், இயற்கையின் விளையாட்டு; என்று வர்ணிக்க கூடிய இடை நிலை உயிரினங்களின் (அதாவது இரண்டு உயிரினங்களுக்கு இடைப்பட்ட ஒரு கலப்பு உயிரினம்) படிமங்கள் நிறைந்து காணப்பட வேண்டும். இருப்பினும் அவ்வாறு நிகழவில்லை. உயிரினங்கள் தோன்றியபோது அவை திடீரெனவும் அவற்றின் தனித்துவமான பண்புகள் நன்கு வளர்ச்சியடைந்த நிலையில், எவ்வித குறைபாடுகளுமின்றி தோன்றின.
ஆக்ஸ்போர்ட் பல்கலைகழக அருங்காட்சியகத்திலுள்ள உயிரியல் சேகரிப்பு தலைவர், டோம் கெம்ப் (Tom Kemp)1999ம் ஆண்டு வெளியிட் அவரது Fossils and Evolution என்ற புத்தகத்தில், இவ்வாறு கூறுகிறார்: படிம தகவல்களில் முதன்முறையாக புதிய உயிரினங்கள் படியும் போது அதன் மிகவும் தனித்துவமான பண்புகள் எல்லா நிலைகளிலும் புதிதாக பதிவதுடன், நடைமுறையில் அதில் எமக்கு தெரிந்த எந்த ஒரு மூதாதையர் குழுவும் தொடர்புபடவில்லை. (Tom Kemp, Fossils and Evolution, Oxford University, Oxford University Press, 1999, p. 246)
பொதுவான பண்புகளை மறைத்த பரிணாமவாதிகள
படிம தகவல்கள் தங்களது கட்டுக்கதையை உண்மைபடுத்துகிறது என்ற சிந்தனையை பரிணாமவாதிகள் சித்தரிக்க முயற்சிக்கின்றனர். படிமங்களிலுள்ள தகவல்கள் அவர்களுக்கு உதவாத போதிலும் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை நிரூபிப்தற்கான நிர்பந்தம் காரணமாக இடை நிலை (intermediate forms)என்ற ஒரு நிலை உருவாக்கப்பட்டது. அவர்களின் கட்டுக்கதையில் ஒவ்வாரு உயிரினத்தையும் மற்ற உயிரினத்தோடு இணைக்கும் படிமங்கள் டார்வின் காலம் முதலே இன்று வரை காணப்படாமை அவர்களை பெரும் கவலை கொள்ள செய்கிறது.
டார்வின் காலம் முதல் ஆய்வாளர்கள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் அவர்களது கட்டுக்கதையை நிரூபிக்க தவறிவிட்டது. அது பரிணாம வளர்ச்சி கோட்பாட்டில் பெரும் பின்னடைவை காட்டுவதுடன் உயிரினங்களுக்கு இடையில் இடை நிலை (intermediate forms)என்ற நிலை இல்லவே இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.RETHINKING ANTHROPOLOGY என்ற புத்தகத்தில் ஆசிரியரான லீச் (E. R. Leach), Natureசஞ்சிகைக்கு எழுதிய கட்டுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: படிம தகவல்களில் விடுபட்ட தொடர்பு njhlh;G (missing link)சம்பந்தமான தகவல்கள் காணப்படாமை டார்வினை கவலை அடையச்செய்தது.
அவரது ஆதரவாளர்கள் அவற்றை கண்டுபிடிப்பார்கள் என்று அவர் உறுதியான நம்பினார். இருப்பினும் அவர்களால் இன்று வரை கண்டுபிடிக்க முடியவில்லை, இந்நிலை மேலும் தொடரும் என்று நினைக்கிறேன்;. (E. R. Leach; Nature, 293: 19, 1981) Nuhkh; (A. S. Romer), அவருடைய காலத்தில் மிக பிரபல்யமான ஆய்வாளராக கருதப்பட்டார். அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்:மிகவும் அத்தியவசியமான இடத்தில் (உயிரினங்களுக்கு இடையில் மாற்றமடையும் புள்ளியில்) தொடர்புகள்; (Links) விடுபடுவது, எதிர்காலத்திலும் தொடர்புகள் தொடர்ந்து விடுபட்டே இருக்கும். (A. S. Romer, in Genetics, Paleontology and Evolution, 1963, p. 114)ஒக்லஹோமா பல்கலைகழகத்தின் விஞ்ஞான மற்றும் புவியியல் வரலாற்று பேராசிரியர். டேவிட் கிட்ஸ்(David B. Kitts)பரிணாம வளர்ச்சிக்கு தேவையான இடைநிலைகள் கண்டுபிடிக்க தவறியமையை ஒப்புக்கொள்கிறார்.
பரிணாம வளர்ச்சிக்கு இடைநிலைகள் தேவை அனால் அவற்றை அகழ்வாராய்ச்சிகள் தரவில்லை.(David B. Kitts, “Paleontology and Evolutionary Theory,” Evolution, Vol. 28, September 1974, p. 467) படிமங்கள் ஆய்வு செய்யப்பட்ட போது அவை அனைத்தும் இறைவனால் படைக்கப்பட்டதற்கான சான்றுகளை கொண்டிக்கின்றன. அத்தகைய தகவல்கள் அனைத்தும் உயிரினங்கள் திடீரென தோன்றி எவ்வித மாற்றமும் இன்றி ஒரு பெரும் காலம் வாழ்ந்துள்ளதை காட்டுகின்றன. அமேரிக்க ஆய்வாளர் வெசன் (R. Wesson) 1991ம் ஆண்டு வெளியிட்ட அவரது beyond Natural Selection.என்ற புத்தகத்தில் பரிணாமத்தை ஆதரிக்கும் படிமங்களை ஆய்வு செய்து அதன் உண்மை நிலையை தெளிவாக விளக்கியுள்ளார். படிமங்களுக்கு இடையில் காணப்படும் இடைவெளி உண்மையானவை என்று குறிப்பிடுகிறார்.
பரிணாமத்தின் ஒவ்வொரு கிளையிலும் அதன் பரிணாமம் தொடர்பான ஆதாரங்களை நிரூபிக்க தவறியமை மிக தெளிவானது என்று வெசன் மேலும் குறிப்பிடுகிறார். உயிரினங்கள் பொதுவாக ஒரு பெரும் காலப்பகுதி எவ்வித மாற்றமும் இன்றி இருந்துள்ளன. உயிரினங்களும் (Species)உயிரின குடும்பமும் (genera)வேறொரு புதிய உயிரினமாகவோ அல்லது உயிரின குடும்பமாகவோ பரிணாமம் அடையவில்லை, ஆனால் அவை வேறு ஒரு உயிரினத்தால் இடமாற்றப்பட்டுள்ளது. பரிணாம மாற்றங்களுக்கு பொதுவாக தடை ஏற்பட்டுள்ளது. (R. Wesson, Beyond Natural Selection, MIT Press,Cambridge, MA, 1991, p. 45)இன்றுவரை சுமார் 2,50,000 படிமங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றில் கூட இடைநிலை சம்பந்தமாக எந்த தடயமும் இல்லை. பரிணாமவாதிகள் மடமைiயின் காரணமாகவும், இறைவனை மறுக்க வேண்டும் என்பதற்காகவும், விஞ்ஞானத்திற்கு எதிராகவும், விடுபட்ட தொடர்பு சம்பந்தமாக பிரச்சாரம் செய்கின்றனர்.
எலும்பு தடயங்களில் உயிரியில் பிழைகள்
முள்ளந்தண்டுள்ள உயிரினங்கள் படிமங்களாக படியும் போது அவை எலும்புகளை தவிர வேறு எதையும் விட்டு வைப்பதில்லை. இருப்பினும் எலும்புகள் முள்ளந்தண்டு உயிரியலின் மிகச்சிறிய அளவு தடயங்களையே விட்டு வைக்கும். அதாவது 1 சதவீதம். ஒரு உயிரினத்தின் படிமங்களை ஆய்வு செய்யும் போது அதன் உயிரியல் சம்பந்தமான பெருமளவு தகவல்கள் அழிந்து போகின்றன. பரிணாமவாதிகள் உயிரினத்தின் மிக மெல்லிய திசுக்களின் உயிரியல் தகவல்கள் இன்மையால், அவர்கள் ஏற்கனவே திட்டமிட்டபடி, பரிணாம கோட்பாட்டினால் மூளை சலவை செய்யப்பட்ட அறிவை கொண்டு அந்த இடைவெளிகளை நிரப்புகின்றனர். பரிணாமவாதிகள் எலும்புகளை மாத்திரம் பார்த்து இடைநிலைகளை உருவாக்குகின்றனர். அவை அனைத்தும் மிகவும் பலவீனமான சிந்தனையே.
மூலக்கூறு உயிரியலாளர் மைக்கல் டென்டன் அவரது A Theory in Crisis என்ற புத்தகத்தில் இதை மிக தெளிவாக குறிப்பிடுகிறார்: அழிந்து போன குழுக்களில் மெல்லிய உயிரியலை உறுதியாக அறிந்து கொள்ள முடியாது. ஆகவே மிக சரியானதாக தோன்றக்கூடிய இடைநிலைகள் உறுதியற்றதாகி விடுகிறது. (Michael Denton, Evolution: A Theory in Crisis, Burnett Books: London, 1985, p. 180) பரிணாமவாதிகள் மிக சரியானதாக தோன்றக்கூடிய இடைநிலைகள் கூட அவர்களை ஏமாற்றிவிட்டது. இதற்கு சிறந்த உதாரணம், கொலகான்ந்த் (Coelacanth phenomenon)நிகழ்வாகும். கொலகான்ந்த் நிகழ்வுகளிலிருந்து பரிணாமவாதிகள் எந்த பாடத்தையும் படிக்கவில்லை என்பதை தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.தற்போதய டிக்டாலிக் ரொசியா படிமத்தை போன்று, சில ஆண்டுகளுக்கு முன்பு கொலகான்ந்த் என்ற மீனை நீரிலிருந்து நிலத்திற்கு மாற்றமடைந்த விடுபட்ட தொடர்பு என்பதாக கருதி மகிழ்ச்சியடைந்தனர்.
முன்பு அழிந்த போன உயிரினமாக கருதிய பரிணாமவாதிகள் 4000 லட்சம் ஆண்டுகள் பழமைவாய்ந்த கொலகான்ந்த் படிமங்களை ஆய்வு செய்து அதிலிருந்து பல பரிணாம திட்டங்களை வரைந்தனர். உதாரணமாக, அதன் செதிலிலுள்ள எலும்பு போன்ற அமைப்பானது அந்த உயிரினத்தை நீரிலிருந்து நிலத்தை நோக்கி நடக்க உதவியது என்றனர். மேலும் அதற்கு இரப்பை இருந்தது என்றும் கூறினர். இங்கு கவனிக்கப்பட வேண்டிய மிக முக்கிய கருத்து இதுதான்: இந்த முடிவுகள் அனைத்தும் கொலகான்ந்த் படிமத்தின் மெல்லிய திசுக்கள் பற்றிய எந்த தகவல்களும் இல்லாத நிலையில் கற்பனை செய்யப்பட்டது.
உயிரினத்தின் மெல்லிய திசுக்கள் சம்பந்மாக தகவல்கள் இல்லாத நிலையில் பரிணாம கற்பனைகளை கட்டவிழ்த்து விடும் தவறான போக்கு 1938ம் ஆண்டு இடம்பெற்ற முக்கியமான கண்டுபிடிப்பு மூலம் தெரியவந்தது. உயிருள்ள கொலகான்ந்த் இன மீன் ஒன்று பிடிபட்டதன் மூலம், அவை முன்பு அழிந்து போன உயிரினம் என்ற பரிணாமவாதிகளின் கற்பனை பெரும் பொய் என்பது தெரியவந்தது. மேலும் அதனை தொடர்ந்து மேலும் பல அதே இன மீன்கள் பிடிக்கப்பட்டன. உடனே பரிணாமவாதிகள் மீனின் உடலமைப்பை ஆராய்ந்து அதன் இயற்கையான சூழ்நிலையில் அதன் நடமாட்டத்தை ஆய்வு செய்து, அவர்கள் முன்பு கற்பனை செய்த இடைநிலை என்ற நிலை தவறானது என்பதை புரிந்து கொண்டனர்.
ஆழம் குறைந்த இடத்தில் வாழ்ந்து நீரில் தவழ்ந்து சென்ற மீன் என்று அவர்கள் கற்பனை செய்த மீன், உண்மையில் 180 அடி ஆழத்தில் வாழ்ந்து வருகிறது. மேலும் அதன் செதில்கள் ஒரு போதும் கடல் ஓரங்களை தொடவில்லை என்பதை அவர்கள் கண்டு பிடித்தனர்;. இரைப்பை என்று அவர்கள் கற்பனை செய்தது உண்மையில் கொழுப்புகள் நிறைந்த நீந்த உதவியதே தவிர, அது சுவாசத்துடன் எவ்வகையிலும் தொடர்பு படவில்லை.முன்பு பரிணாமவாதிகளின் இடைநிலைக்கு நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த கொலகான்ந்த், ஒரு சாதாரணமான மீனினம் என்பதை போன்று அவர்கள் தற்போது கற்பனை செய்யும் படிமமும் அதே நிலையை அடையும். ஏனெனில் இந்த புதிய படிமமும் முற்று முழுதாக கற்பனையில் கட்டியெழுப்பட்டுள்ளது.
கொலகான்ந்த் போன்று அழிந்து போன உயிரினத்தின் இந்த படிமத்தின் மெல்லிய திசுக்கள் கற்பனை தகவல்களை கொண்டு நிரப்பட்டுள்ளது. சுருங்க சொல்வதாயின், தற்போது மீடீயாக்கள் மூலம் பரப்பப்படும் இந்த கற்பனை கதையானது விஞ்ஞானத்தின் தெளிவற்ற கூற்றுகளை மையமாக கொண்டு பரிணாம கனவுகளை அடிப்படையாக கொண்டு வரையப்பட்டுள்ளது பரிணாமவாதிகளின் விடுபட்ட தொடர்பு (missing link) என்ற பிரச்சாரம் அவர்களின் சிந்தனைக்கு எதிரானது. விடுபட்ட தொடர்பு சம்பந்தமான கண்டுபிடிப்புகள் என்று கூறப்பட்டவுடன், பரிணாம மீடியாக்கள் மிகவும் அரிதான கண்டுபிடிப்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றன.
உண்மையில் இது அவர்களின் பரிணாமம் தொடர்பான வாதங்களை மறுக்கிறது.பரிணாம வளர்ச்சி கோட்பாடு உண்மையாக இருந்தால், உலகம் முழுவதும் இடைநிலை தொடர்பான படிமங்களால் நிறைந்து காணப்பட வேண்டும். அதன் எண்ணிக்கை இதற்கு முன்பு வாழ்ந்த மற்றும் இன்று வாழும் உயிரினங்களின் எண்ணிக்கையை விட பல மடங்கு அதிகமாக இருக்கும். ஆகவே விடுபட்ட தொடர்பு சம்பந்தமான செய்திகள் அன்றாட செய்தியாக இருப்பதால் – அதற்கு எந்த மதிப்பும் இருக்காது.
புவியீர்ப்பை போன்று பரிணாமத்திற்கும் பல ஆதாரங்கள் இருப்தாக பரிணாமவாதிகள் கூறுவது உண்மையென்றால், விடுபட்ட தொடர்பு சம்பந்தமான கண்டுபிடிப்புகள் வானை நோக்கி எறியப்படும் கல்லை போன்று மடமையான நிகழ்வாக இருக்கும். நாம் வானை நோக்கி கல்லை எறிந்தோம். அது மீண்டும் பூமியை நோக்கி வந்தது என்று செய்தியில் வரும் வரிகள் எவ்வளவு முக்கியத்துவம் இல்லையோ அதை போன்று ஆய்வாளர்கள் புதிய விடுபட்ட தொடர்பை கண்டுபிடித்துள்ளனர் என்ற செய்தியும் முக்கியத்துவம் இல்லாததாகும். சுருங்க சொன்னால் பரிணாம வளர்ச்சி உண்மையென்றால் விடுபட்ட தொடர்பு சம்பந்தமான பிரச்சாரம் தேவையற்றது.
பரிணாம தொடரில் டிக்டாலிக் ரோசியா ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளது
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள படிமம் அகன்தொஸ்டெகா (Acanthostega) மற்றும் இயுஸ்தெனொப்டெரன் (Eusthenopteron) என்பவற்றுக்கு இடையில் நுழைக்கப்பட்டுள்ளதை பத்திரிக்கைகளில் படித்திருப்பீர்கள். இவ்வாறு செய்வதன் மூலம் இந்த படிமம் பரிணாமம் அடைவதை உண்மை படுத்துவதாகவும் ஒவ்வொரு நாளும் சான்றுகள் குவிந்த வண்ணம் உள்ளதை போன்ற மாயையை பரிணாமவாதிகள் காட்ட முற்படுகின்றனர். உண்மையில் உயிரினங்கள் இவ்வாறு பரிணாமம் அடைவதற்கு இந்த தொடரில் எந்த சான்றும் இல்லை. உதாரணமாக திருகாணிகளை(row of screwdrivers)அதன் அளவுக்கு ஏற்ப அடுக்கி வைப்பதால் அது ஒன்றிலிருந்து மற்றயது தோன்றியதற்கான சான்றாக எடுத்து கொள்ள முடியாது.
உண்மையில் இயுஸ்தெனொப்டெரன் முதல் டிக்டாலிக் ரோசியா வரையும் அல்லது அகன்தொஸ்டெகா முதல் டிக்டாலிக் ரோசியா வரையும் பரிணாம தொடர்பு இல்லை. இந்த உயிரினங்கள் ஒவ்வொன்றுக்கும் இடையில் பல மில்லியன் வருடங்கள் கால வித்தியாசம் மற்றும் பல வேறுபாடுகளும் காணப்படுகின்றன. பரிணாமவாதிகள் அவர்களது கற்பனைக்கு ஏற்ற வகையில் தொடரை வரைந்து அதில் டிக்டாலிக் ரோசியாவை நுழைத்துள்ளனர். நேச்சர் சஞ்சிகையின் ஆசிரியர் ஹென்றி கீ (Henry Gee) விடுபட்ட தொடர்புகளும் பரிணாம தொடரும் ஏற்கனவே தீட்டிய திட்டம் என்பதை ஒப்புக் கொள்கிறாh:
புதிய படிம கண்டுபிடிப்புகள் ஏற்கனவே உள்ள கதையில் பொறுத்தப்படுகிறது. நாம் இந்த புதிய கண்டுபிடிப்புகளை விடுபட்ட தொடர்பு என்று அழைக்கிறோம். மூதாதை மற்றும் பின் தோன்றல்களும் எமது கற்பனைக்கு உண்மையானது என்று கூறப்பட்ட போதிலும் அது உண்மையில் அவ்வாறு இருக்கவில்லை. இந்த உண்மைகளை மனிதன் முழுவதுமாக உருவாக்கி, அவனது கற்பனைக்கு எற்ப அதை வடிவமைத்தான். ஓவ்வொரு படிமமும் ஒரு வெற்றிடத்தை காட்டுகிறது, அது வேறு எந்த படிமத்துடனும் தொடர்பு படவில்லை. அவற்றுக்கு இடையே கடலளவு இடைவெளி காணப்படுகிறது.(Henry Gee, In Search of Deep Time, Beyond the Fossil Record to a New History of Life, p. 32)
நீரிலிருந்து நிலத்திற்கு மாற்றமடைதல் என்பது கட்டுக்கதை : அது ஒரு மாயை
குறிக்கோள்களற்று மாற்றடைந்த (random mutations)இணைப்புகளால் ஏற்பட்ட நன்மையான வேறுபாடுகளின் காரணமாகவே உயிரினங்களில் மாற்றங்கள் ஏற்பட்டன என்று பரிணாம வளர்ச்சி கோட்பாடு வாதிடுகிறது. இருப்பினும் மாற்றங்கள் நன்மையளிக்காது என்பது உலகறிந்த உண்மை. உயிரினங்களிலிலுள்ள மரபணுக்களுக்குள்(DNA) புதிய தகவல்களை இணைப்பதன் மூலம் பரிணாமம் அடைய செய்ய முடியாது. அவ்வாறு புகுத்தப்படும் மாற்றங்கள் உயிரினங்களிலிலுள்ள மரபணு தகவல்களை நாசமாக்கிவிடும். இதன் முடிவு உடல் உருகுலையும் அல்லது மரணம். இதற்கு காரணம் மரபணு தரவரிசை மிகவும் நுனுக்கமானது. இதில் மாற்றங்கள் ஏற்பட்டால் அது தீங்காகவே அமையும்.
உதாரணமாக ஒரு இலத்திரனியல் கருவியில் பதியப்பட்டுள்ள எழுத்துகளை மாற்றுவதன் மூலம் அது ஒரு இலக்கிய புத்தகமாக மாற்றமடையாது. அது அந்த கருவியிலுள்ள தகவல்களையும் அதன் செயற்பாடுகளையும் அழித்துவிடுகிறது. அதைப்போன்றே ஒரு மீனின் மரபணுவில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக அதன் எலும்பு கூடு சுமை தாங்க கூடியதாக மாறுவதோ, வெப்பநிலை சீராக்கும் அமைப்பையோ அல்லது தண்ணீரை பயன்படுத்தும் அமைப்பு (சிறுநீரகத்தை போன்ற மிக சிக்கலான அமைப்பாக) அல்லது செதில்கள் இரப்பையாக மாற்றமடைவது ஒருபொதும் சாத்தியப்படாத ஒன்று.
மீன் பல வழிகளில், அதாவது அதன் சுவாச தொகுதி(respiratory system),அதன் வெளியேற்றும் தொகுதி(excretory mechanism)மற்றும் எலும்பு அமைப்புகள் போன்றவை வேகமாக மாற்றமடைவதில்லை என்பது தெளிவாக தெரிகிறது. அவ்வாறு ஏற்பட்டால் அது இறந்துவிடும். அத்தகைய மாற்றமடையும் வரிசை ஏற்பட வேண்டும் என்றால் மீனுக்கு உடனே ஒரே நேரத்தில் இரப்பை ஏற்பட்டு, அதன் செதில்கள் கால்காளாகவும், அதில் சிறுநீரகம் உருவாகி, அதற்கு நீரை தக்கவைத்து கொள்ளும் அமைப்புடைய தோலும்; உருவாக வேண்டும்.
உயிரினங்களில் அத்தகைய மிக முக்கிய அமைப்புகள் ஒரே நேரத்தில் மாற்றமடைய வேண்டும் அல்லது அவ்வாறு ஒரு போதும் நடைபெறக்கூடாது. இவ்வாறு ஒரே நேரத்தில் மாற்றங்கள் ஏற்படுவது பரிணாம வளர்ச்சி கோட்பாட்டிற்கு எதிர்மாற்றமானது, ஏனெனில் பரிணாமம் என்பது தற்செயலாகவும் எவ்வித குறிக்கோள்களும் இன்றி இடம் பெறவேண்டும். பகுத்தறிவுடைய ஒருவர் மீனும் இதர உயிரினங்களும் தனித்தனியே படைக்கப்பட்டன என்பது தான் ஏற்று கொள்ளக்கூடிய விளக்கம் என்பதை புரிந்து கொள்வார்.சுருங்க சொன்னால், நீரிலிருந்து நிலத்திற்கு மாற்றமடைதல் என்ற கற்பனை அதன் முடிவை அடைந்து விட்டது. இதை விளக்ககூடிய உறுதியான எந்த படிமத்தையும் இதுவரை பரிணாமவாதிகள் காட்டவில்லை.
பரிணாமவாதியான பார்பரா ஸ்டாஹ்ல் (Barbara J. Stahl) அவரது Vertebrate History: Problems in Evolution என்ற புத்தகத்தில் இவ்வாறு எழுதுகிறார்: எமக்கு தெரிந்த எந்த மீனும் முந்தய நிலத்தில் வாழ்ந்த முள்ளந்தண்டுள்ள உயிரினங்களின் நேரடி மூதாதையாக இல்லை. அவற்றில் அதிகமானவைகள் முதல் அம்பிபியன்சுகள் (amphibians) தோன்றிய பிறகே வாழ்ந்துள்ளன. அதற்கு முன்னர் வந்தவைகளில் டெட்ரபொட்களை (tetrapods) போன்ற உறுதியான உறுப்புகளை தோன்pயதற்கான எந்த சான்றும் இல்லை.(Barbara J. Stahl, Vertebrate History: Problems in Evolution, Dover, 1985, p. 148
முடிவுரை :
ஹிட்லர் விட்டு சென்ற பொய்யான பிரச்சார வழிதுறைகள் மூலம் வெற்றி பெறமுடியாது என்பதை பரிணாமவாதிகள் உணர்ந்து கொள்ளவேண்டும்.
மேலே குறிப்பிடப்பட்டதை போன்று விடுபட்ட தொடர்பு என்ற சிந்தனை படிமங்களில் எந்த உதவியும் இன்றி விஞ்ஞானத்திற்கு எதிரானது மட்டுமல்ல பரிணாம வளர்ச்சி கோட்பாடு வாழ வைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக உபயோகிக்கப்படுகிறது.
இந்த கட்டுக்கதைகளில் டார்வினிஸ்டுகளின் மீடீயாக்கள் மிக உறுதியாக பிரச்சாரம் செய்வது பொதுமக்கள் மத்தியில் அவர்களின் பரிணாம சிந்தனையை பரப்ப வேண்டும் என்பதற்காகவாகும்.