Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

மேலைநாட்டு பெண்கள் பெற்றிருப்பது சுதந்திரமா?

Posted on August 16, 2008 by admin

o பெண்களும் மதங்களும்

o பெண்களின் விடுதலை இயக்கங்கள் வளர்ந்த வரலாறு

சமீபத்தில் இணையச் செய்தி ஒன்றைப் படிக்க நேர்ந்தது. அதில் இஸ்லாமும் மற்ற மதங்களைப் போலவே பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கின்றது என்று மக்கள் கலை இலக்கியக் குழவைச் சேர்ந்த நண்பர்கள் விமர்சனம் எழுதி இருந்தார்கள்.

அவர்களது விமர்சனத்திற்குப் பதில் கூறுமுகமாகவும், இஸ்லாத்தில் உள்ள பெண்களின் உரிமைகள் பற்றியும், அந்த உரிமைகள் யாவும் அவர்கள் கேட்டுப் பெற்றதோ அல்லது போராடிப் பெற்றதோ அல்ல என்றும், ஆனால் 1400 வருடங்களாக இன்னும் சொல்லப் போனால், பெண்களை இன்னும் போகப் பொருளாகவும், கடைச்சரக்காகவும், பண்டமாற்றைப் போலவும் அவர்களை நடத்தி வரும் சமூகங்களுக்கு மத்தியில் இஸ்லாம் அவர்களை எந்தளவு கண்ணியமான இடத்தில் வைத்துள்ளது என்பது புரிய வரும்.

இஸ்லாம் அவர்கள் மீது விதித்துள்ள கட்டுப்பாடுகள் யாவும், அவர்களின் பெண்மைக்கு இயைந்த மற்றும் பாதுகாப்பு என்ற நிலையிலே அல்லாது, அவர்கள் பெண்கள் என்ற காரணத்திற்காக என்றுமே அவர்களை தாழ்த்தி வைத்ததில்லை மற்றும் அடக்கி வைத்ததில்லை என்பதை சகோதரர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக இந்தக் கட்டுரையைத் தருகின்றோம்.

செய்தித்தாள்களில் நம் கவனத்தைச் செலுத்தினோம் என்றால், உலகப் பெண்கள் தினம், பெண்கள் அடையாள ஊhவலம், பெண்கள் உரிமை கேட்டுப் போராட்டம், பெண்கள் கோரிக்கை தினம் என பல்வேறு தலைப்புகளில் உலகப் பெண்களின் உரிமைகள், போராட்டங்கள் பற்றிய செய்திகளை நாம் பார்க்கலாம்.

என்ன இது அநியாயம்? பெண்கள் அனைவரும் முழுச் சுதந்திரம் பெற்று விட்டார்கள். பெண்கள் இன்று சுவாசிக்கின்றார்கள் என்றால் அந்த சுவாசக் காற்றில் சுதந்திரத்தைக் கலந்து விட்டதே நாங்கள் தான் என மார்தட்டிக் கொள்ளும் இன்றைய மேலைநாடுகளிலும் சரி, இந்தியா போன் நாடுகளிலும் சரி பெண்கள் தினத்தன்று பெண்கள் மீண்டும் கோரிக்கைப் பேரணி நடத்துகிறார்கள் என்றால் அவர்கள் இன்னும் முழுச் சுதந்திரம் பெறவில்லை என அல்லவா கருத வேண்டியுள்ளது?

எனவே இது பற்றியதொரு மீள் பார்வையும், குற்றம் சாட்டியே பழக்கப்பட்டுப் போன இஸ்லாமிய எதிர்வாதம் புரியும் மக்களுக்கு விளங்கும் வகையிலும், இன்று போராடும் இந்த பெண்கள் போராட்டத்தின் கால அளவு என்ன என்பதையும், அதே நேரத்தில் போராட்டம் இன்றியே 14 நூற்றாண்டுகளுக்கு முன்னால் முஸ்லிம் பெண்கள் சுதந்திரம், சமூக, பொருளாதார நிலைகளில் எவ்வாறு அடைந்தனர் என்பதை ஞாபகமூட்ட வேண்டிய அவசியமும் உண்டாகிறது.

பெண்களும் மற்ற மதங்களும்

இஸ்லாத்தில் பெண்களுக்கு இருக்கின்ற உரிமைகள் பற்றிப் பேசுவதற்கு முன் பெண்களை மற்ற சமூகத்தினர் எப்படி நடத்திக் கொண்டிருந்தார்கள் என்பதைத் தெளிவுபடுத்துவது அவசியமாகும்.

கிரேக்கர் பெண்களை வியாபாரப் பொருட்களாகவே கருதினர். அவர்களுக்கென எந்த உரிமையும் கிடையாது. உரிமைகள் அனைத்தும் ஆண்களுக்கே என்றனர். இன்னும் அப்பெண்களுக்குச் சொத்துரிமை, கொடுக்கல், வாங்கல், போன்ற உரிமைகள் தடுக்கப்பட்டிருந்தன. அவர்களில் பிரபல்யமான தத்துவ ஞானி சாக்ரடீஸ் என்பவர் பெண்கள் இருப்பது உலகின் வீழ்ச்சிக்கு மிகப் பெரும் மூல காரணமாகும். மேலும் பெண்கள் விஷமரத்திற்கு ஒப்பானவர்கள். அம்மரத்தின் புறத்தோற்றம் அழகாக இருக்கும். எனினும் அதன் கனிகளை சிட்டுக் குருவிகள் தின்றவுடனேயே இறந்து விடுகின்றன என்று கூறியுள்ளார்.

ரோமானியர்கள் பெண்களை உயிரற்ற பொருளாகவே கருதி வந்துள்ளனர். அவர்களிடம் பெண்களுக்கு எந்த மதிப்பும் உரிமையும் இருந்ததில்லை. பெண்கள் உயிரற்ற பொருளாகக் கருதப்பட்டதால் தான் அவர்களைக் கொதிக்கின்ற எண்ணெணை ஊற்றியும், தூண்களில் கட்டியும் வேதனை செய்தார்கள். இது மட்டுமின்றி குற்றமற்ற பெண்களை குதிரைகளின் வால்களில் கட்டி அவர்கள் மரணித்து போகின்ற அளவிற்கு மிக விரைவாக ஓட்டி விடுவார்கள்.

பெண்கள் விஷயத்தில் இந்தியர்களின் கண்ணோட்டமும் இவ்வாறு தான் இருந்துள்ளது. அவர்கள் இன்னும் ஒரு படி அதிகமாக கணவன் இறந்து விட்டால் அவனின் சிதையுடன் மனைவியையும் எரித்து விடுபவர்களாகவும் இருந்திருக்கின்றனர்.

சீனர்கள் பெண்களை நற்பாக்கியத்தையும், செல்வங்களையும் அழித்து விடக் கூடிய தண்ணீருக்கு ஒப்பாக்கினர். அவர்கள் தம் மனைவியரை உயிரோடு புதைத்து விடுவதற்கும் விற்று விடுவதற்கும் உரிமை பெற்றிருந்தனர்.

பெண்கள் சாபத்திற்குரியவர்களென யூதர்கள் கருதுகின்றார்கள். ஏனெனில் அவள் தான் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை வழிகெடுத்து மரக் கனியை சாப்பிடச் செய்து விட்டாள். மேலும் பெண்ணுக்கு மாதவிடாய் வந்து விட்டால் அவள் அசுத்தமானவள், வீட்டையும் அவள் தொடும் பொருளையும் அசுத்தப்படுத்தி விடக் கூடியவன் எனவும் கருதுகிறார்கள். பெண்ணுக்கு சகோதரர்களிருந்தால் அவள் தன் தந்தையின் சொத்தில் சிறிதும் உரிமை பெற மாட்டாள் எனவும் கருதுகிறார்கள். கிறிஸ்தவர்கள் பெண்களை ஷைத்தானின் வாசலாகக் கருதுகிறார்கள். கிறிஸ்தவ அறிஞர்களில் ஒருவர் பெண் மனித இனத்தைச் சார்ந்தவளல்ல எனக் கூறினார். இன்னும்

புனித யூனபெஃன்துரா என்பவர் கூறினார் : நீங்கள் பெண்களைக் கண்டால் அவளை மனித இனத்தைச் சார்ந்தவள் எனக் கருதி விடாதீர்கள். அது மட்டுமல்ல அவளை ஒரு உயிருள்ள ஜீவனாகக் கூட கருதாதீர்கள். மாறாக நீங்கள் காண்பது நிச்சயமாக ஐஷத்தானின் உருவத்தைத் தான். இன்னும் நீங்கள் செவியேற்கும் அவளது சப்தம் பாம்பின் சீற்றம் தான்.

மேலும் கடந்த 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை ஆங்கிலேய பொதுச்சட்டப்படி பெண்கள் பிரஜா உரிமை கொடுக்கப்படாதவர்களாக இருந்தனர். இதுபோன்றே பெண்களுக்கென எநத தனிப்பட்ட உரிமைகளும் கிடையாது. இன்னும் அவள் அணியும் ஆடை உட்பட எந்தப் பொருளையும் சொந்தப்படுத்திக் கொள்வதிலும் உரிமையில்லை. 1567 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்துப் பாராளுமன்றன் பெண்களுக்கு எந்த அதிகாரமும் கொடுக்கக் கூடாதென சட்டம் இயற்றியது. இவ்வாறே எட்டாவது ஹென்றியின் காலத்தில் ஆங்கிலேயப் பாரளுமன்றம் பெண்கள் அசுத்தமானவர்கள் என்பதால் இன்ஜீலைப் படிக்கக் கூடாதென சட்டம் இயற்றியது.

பிரஞ்சுக்காரர்கள் 586 ஆம் ஆண்டில் பெண்கள் மனித இனத்தைச் சார்ந்தவர்களா? இல்லையா? என ஆய்வு செய்து முடிவெடுக்க ஒரு சபையை அமைத்தனர். அச்சபை பெண்கள் மனித இனத்தைச் சார்ந்தவர்கள் தான். எனினும் அவர்கள் ஆண்களுக்குப் பணிவிடை செய்வதற்காகவே படைக்கப்பட்டவர்களென முடிவு செய்தது. 1805 ஆம் ஆண்டு வரை ஆங்கிலேயரின் சட்டத்தில் ஒரு கணவன் தனது மனைவியை விற்பது கூடுமென்றே இருந்துள்ளது. மனைவியின் விலை ஆறு பெணி (அரை ஷில்லிங்) என நிர்ணயமும் செய்யப்பட்டது. (பெனி, ஷில்லிங் என்பது ஆங்கிலேய நாணயத்தின் பெயர்கள்).

இஸ்லாத்திற்கு முன்பு வரை அரேபியர்களிடத்தில் பெண்கள் இழிந்த பிறவிகளாக இருந்தனர். அவளுக்கு சொத்துரிமையோ, வேறு எந்த உரிமையோ கிடையாது. மட்டுமல்ல அவர்களில் பெரும்பாலோர் தம் பெண் மக்களை உயிருடன் புதைப்பவர்களாக இருந்தனர்.

இவ்வனைத்து அநியாயங்களைப் பெண்களை விட்டும் நீக்கவும், நிச்சயமாக ஆண்களும் பெண்களும் சமமானவர்கள் தாம் என விளக்கவும் தான் இஸ்லாம் வந்தது. எனவே ஆண்களுக்கு உரிமைகளிருப்பது போலவே பெண்களுக்கும் உரிமைகளிருக்கின்றன என்று கூறிவிட்டதோடு நில்லாமல், அவற்றைப் பட்டியலிட்டும் காட்டுகின்றது.

பெண்களின் விடுதலை இயக்கங்கள் வளர்ந்த வரலாறு

பிரிட்டன் :

கடந்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு தான் பிரிட்டடினில் பெண் விடுதலை மற்றும் உரிமை கோரிப் போராட பெண் விடுதலை இயக்கங்கள் தோற்றுவிக்கப்பட்டன. அவ்வாறு தோற்றுவிக்கப்பட்ட பெண் விடுதலை இயக்கங்கள் யாவும் பெண் என்பவள், பாலியல் நிலையில் அவளை ஒரு கீழ்த்தரமான இனமாக எண்ணி, சமூக, பொருளாதார, அரசியல் நிலைகளில் அவர்களை ஒதுக்குவதை எதிர்த்தும், இத்தகைய நிலைகளில் அவர்களுக்கு இழைக்கப்படும் சமூகப் பாகுபாடு, துரோகங்கள் ஆகியவற்றை எதிர்த்தும், ஆணும் பெண்ணும் சமம், ஆணைப் போலவே பெண்ணுக்கும் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நிலைகளில் சம அந்தஸ்து வேண்டியும், இவற்றுக்கான சட்டப் பாதுகாப்பு வேண்டியும், இவற்றை பெண்ணினத்திற்குப் பெற்றுத் தரவும் தான் பெண்ணுரிமை இயக்கங்கள் தோற்றுவிக்கப்பட்டன.

1914-ஆம் ஆண்டு முதலாவது உலக மகா யுத்தம் தொடங்கியதால், போரின் போது நாட்டுக்கு உதவ வேண்டும் எனும் முடிவின் கீழ் போராட்டம் கைவிடப்பட்டு, யுத்தம் சம்பந்தமான தொழிற்சாலைப் பணிகளில் தம் ஒத்துழைப்பைத் தந்தார்கள். இதன் காரணமாக அரசாங்கத்தின் மூலம் தமக்கு ஏற்பட்ட எதிர்ப்பை மட்டுப்படுத்தி, தமக்கு சாதகமான சூழலை உருவாக்கினார்கள். இவர்கள் தொடர் போராட்ட முறைகளினால் 1918 ல் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு முதன் முதலாக ஓட்டுரிமை வழங்கப்பட்டது. 1928 ல் ஓட்டுப் போடும் வயது 21 ஆகக் குறைக்கப்பட்டது.

பிரிட்டன் நாடு ஒரு பெண்ணால் எலிசபெத் குடும்பத்தால் ஆளப்பட்டு வரும் ஒரு நாடு என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஒரு பெண் ஆளும் நாட்டிலே ஒரு பெண் ஓட்டுரிமை பெற்றுக் கொள்ள 2 நூற்றாண்டுகள் பிடித்துள்ளன. என்ன வேதனையான விஷயம்! இவர்கள் தான் பெண்ணுரிமை பற்றிப் பேசும் பெண்களின் காவலர்கள்?!

அமெரிக்கா :

அமெரிக்காவைப் பொறுத்தவரை, பெண்களுக்கான இயக்கம் என்பது முதன் முதலில் 1848 ல் எலிசபெத் கேடி ஸ்டேன்டன் என்ற பெண்மணியால் துவங்கப்பட்டது. இங்கு 1848 ல் கூடிய மாநாட்டில் நீக்ரோ அடிமைகள் விடுதலைப் பிரகடனத்துடன் (அமெரிக்காவில் இன்றும் இவர்கள் அடிமைகளாகவே நடத்தப்படுகின்றார்கள். நிறவேற்றுமை, நிறவெறி கொண்ட வெள்ளை சமூகம் இவர்கள் இன்னும் அடக்கியாண்டு வருகின்றது மட்டுமல்லாமல் படுபாதகமாகவும் கொலை செய்யப்படுகின்றார்கள்).பெண் விடுதலை மற்றும் பெண்ணுரிமை சம்பந்தமான பிரகடனமும் வெளியிடப்பட்டது.

அதன் பின் 1850 ல் லூசி ஸ்டோன் எனும் பெண்மணியின் தலைமையின் கீழ் தேசிய பெண்கள் உரிமை மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. அதன் பின் மேற்கண்ட இரண்டு பெண்மணிகளின் அமைப்பும் ஒன்றிணைந்து சூசன் பி. அந்தோணி எனும் பெண்மணியின் தலைமையின் கீழ் பெண்களின் தேசபிமானிகள் சங்கம் ஆரம்பிக்கப்பட்டு, 1878 ல் பெண்களுக்கு ஓட்டுப் போடும் உரிமை வேண்டும் எனக் கோரி, அதைச் சட்டமாக்க கோரிக்கை அனுப்பினார்கள்.

அமெரிக்காவில் உள்ள மாநிலங்களில் வியோமிங் மாநிலம் தான் முதன் முதலாக 1890 ல் பெண்களை ஓட்டுப் போட அனுமதித்தது. அமெரிக்க தேசியப் பெண்களின் ஓட்டுரிமைக் கூட்டமைப்பு என்ற அமைப்பு 1900 ல் கேர்ரி ஜேப்மேன் காட் என்ற பெண்ணின் தலைமையில் இதன் செயல்பாடுகள் முடுக்கி விடப்பட்டன. இந்த அமைப்பு நடத்திய பல போராட்டங்கள், கூட்டங்கள், மாநாடுகள் பல படித்த பெண்களையும், உயர்வர்க்கப் பெண்களையும் கவர்ந்தது.

அதே போல முழு நேர அரசியலில் ஈடுபடும் பெண்களையும், அமைப்புக்கான நிதிகளையும் அதிகரித்தது. இதன் காரணமாக பெண்களால் நடத்தப்படும் ஊர்வலங்களம், மாநாடுகளும் ஒவ்வொரு நகரிலும் அதிகமான அளவில் நடக்க ஆரம்பித்தன. மேலும் சூசன் அவர்களால் கொண்டு வரப்பட்ட பெண்ணுரிமை கோரும் சட்ட முன் வரைவு, 19 வது சட்ட வரைவு எனும் பெயரில் 1920 ல் அமெரிக்கப் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டு, அமெரிக்காவில் பெண்களும் ஓட்டுப் போடலாம் என்ற உரிமையை முதன் முதலாக அமெரிக்கப் பெண்கள் பெற்றார்கள்.

பெண்ணுரிமை சம்பந்தமாக முதன்முதலாக இயற்றப்பட்ட இந்தச் சட்டம் 1920 முதல் 1960 வரை பல பெண்ணுரிமை இயக்கங்கள் தோன்றக் காரணமாக அமைந்தன. இதில் முக்கியமானது 1920 ல் தோற்றுவிக்கப்பட்ட பெண் வாக்காளர்கள் சங்கம் மற்றும் 1935 ல் தோன்றி தேசிய நீக்ரோ பெண்கள் பேரவை ஆகும்.

மேற்கண்ட குழுக்கள் பெண்ணுரிமை சம்பந்தமான பல்வேறு விதமான கோரிக்கைகளை முன் வைத்தும், ஆண் பெண் சமத்துவம் மற்றும் விடுதலை வேண்டியும் தம் போராட்டத்தை ஆரம்பித்தன. மேலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை வேண்டும் என்னும் கோரிக்கையை 1923 ல் தேசியப் பெண்கள் சங்கள் முன் வைத்துப் போராட ஆரம்பித்தது. இக்கோரிக்கை 50 வருடங்களாக செயலற்றதாகவே ஆட்சியாளர்களால் கிடப்பில் போடப்பட்டது.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 3 = 3

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb