வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைக்கின்றன. மேலும் அவன் வல்லவனும் நுட்பமான ஞானம் உடையவனும் ஆவான்

- அல்குர்ஆன் 57:1     

Home

விற்பனையில் 

 

விரைவில்

Links 3

Link - 5

Latest Topics

EID MUBARAK Print E-mail
Friday, 10 September 2010 10:23

 
ரமளான் ஒரு மாதத்தோடு விலகுவதற்கல்ல! Print E-mail
Friday, 10 September 2010 11:02
திருச்சி.A.M.அப்துல் காதிர் ஹஸனி M.A.,

அன்பு சகோதரனுக்கு ஒர் பெருநாள் செய்தி

மகிழ்ச்சி பொங்குக

பெருநாள் காலை

அன்பு சகோதரனே

உன்னை பார்க்க

ரொம்பவே வியப்பு எனக்கு

ரமளான் முழுவதும்

உனக்குள்

அத்தனை மாற்றம்

ஃபஜர் தொழுகைக்கு

கூட எழாமல்

போர்த்திக்கொண்டு உறங்கும் நீ

தஹஜ்ஜத் கூட

தவறவிட வில்லையே

Read more...
 
மிஸ்வாக்கின் முக்கியத்துவம் Print E-mail
Friday, 10 September 2010 11:36

முகவை எஸ்.அப்பாஸ்

இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் ஆய்வுகள்!

ஒழுங்காக பல் துலக்கவேண்டும். இல்லையேல் வாயில் துர்நாற்றம் ஏற்படுத்தி பல் வழியை உண்டாக்கும் எனக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் ஒழுங்காக பல் துலக்காவிட்டால், வாயில் பாக்டீரியாக்கள் ஏற்பட்டு இதயநோயை ஏற்படுத்தும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

பிரிஸ்டல் பல்கலைக்கழகம் மற்றும் அயர்லாந்து ராயல் அறுவைச்சிகிச்சை கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் இணைந்து ஒரு ஆய்வை மேற்கொண்டனர். சரிவர பல் துலக்காதவர்களின் வாயில் ஸ்டெப்ரோ காகங் என்ற பாக்டீரியா உருவாகிறது. அது ஈறுகளில் ரத்தக் கசிவை ஏற்படுத்தி அதன் வழியாக ரத்தத்தில் கலக்கிறது.

பின்னர் ரத்தத்தை உறையவைத்து மாரடைப்பு போன்ற இதய சம்மந்தப்பட்ட நோய்களை ஏற்படுத்துகிறது என கண்டறிந்துள்ளனர். ஆகவே இதய நோயிலிருந்து தப்பிக்க ஒழுங்காக பல் துலக்கவேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

இத்தகைய பல் துலக்குதலை அன்றே வலியுறுத்தியுள்ளது வல்ல நாயனின் மார்க்கமான இஸ்லாம்;ஒவ்வொரு தொழுகைக்கும்இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்" ''என் சமுதாயத்திற்குச் சிரமமாகி விடும் என்று இல்லாவிட்டால் ஒவ்வொரு தொழுகைக்கும் பல் துலக்குமாறு நான் கட்டளையிட்டிருப்பேன்." (புகாரி எண் 887)

Read more...
 
பலஸ்தீனம் - பயாஸ்கோப்பு.... ஈரான் - ஆக்கிரமிப்பு..... Print E-mail
Friday, 10 September 2010 12:29

வழக்கறிஞர் வெ. ஜீவகிரிதரன்

உலகெங்கும் உள்ள ஊடகங்களில் மிக அதிகமாக கையாளப்பட்ட செய்தி "இஸ்ரேல்-பலஸ்தீன பேச்சு வார்த்தை தான். செப்டம்பர் 2-ம் தேதி அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இந்த பேச்சுவார்த்தை துவக்கப்பட்டது. அமெரிக்கா, ஐ.நா. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ரஷ்யா ஆகியவை இணைந்து மேற்கொண்ட முடிவின் படி இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹும், பலஸ்தீன தலைவர் மஹ்மூத் அப்பாஸும் அப்பம் பங்கிட்ட குரங்காக அமெரிக்காவை நடுவராக வைத்துக் கொண்டு பேச்சுவார்த்தைகளை துவக்கி விட்டன.

இது சுமார் ஒரு வருடம் நீடிக்கும் என அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. ஒரு சுதந்திரமான, ஜனநாயக, குடியரசாக பலஸ்தீனம் இப்பேச்சு வார்த்தையின் முடிவில் மலர்ந்து விடும் என ஜிகினாக்கள் தூவப்பட்டுள்ளன.  

பல ஆண்டு காலமாக மத்திய கிழக்கு பகுதியிலே இருந்து வந்த மிகப் பெரிய சவாலை இஸ்ரேல் - பலஸ்தீன பதட்டங்களை தணிக்க அமெரிக்கா முன் நின்றுள்ளதாக சில அரபு நாடுகளும் பெருமை கொள்கின்றன. காரணம் அமெரிக்காவுக்கும் இந்த அரபு நாடுகளுக்கும் உள்ள நெருக்கம் நியாயப்படுத்தப்பட வேண்டிய நிலை தற்போது உள்ளது என்பதுதான்.

Read more...
 
சிரிப்புதான் எத்தனை வகை! Print E-mail
Friday, 10 September 2010 14:57

ஓயாமல் சிரிப்பவன் பைத்தியகாரன்

ஓட விட்டு சிரிப்பவன் வஞ்சகன்

இருக்குமிடமெல்லாம் சிரிப்பவன் கோமாளி

இடம் பார்த்து சிரிப்பவன் எத்தன்

கண்பார்த்து சிரிப்பவன் கஞ்சன்

கற்பனையில் சிரிப்பவன் கவிஞன்

மோகத்தில் சிரிப்பவன் வெறியன்

மகிமையில் சிரிப்பவன் மன்னன்
Read more...
 
அதிகாலை நிகழ்த்தும் அற்புதங்கள் Print E-mail
Thursday, 09 September 2010 14:35

அதிகாலையில் துயில் எழும் பழக்கம் நமக்கு பல்வேறு நன்மைகளைத் தருகின்றன. ''அதிகாலையில் எழுவது ஆரோக்கியம்'' என்பதுமட்டுமின்றி அறிவையும் வளப்படுத்தும்.

அதிகாலையில் எழுந்து ''ஸுப்ஹுத்தொழுகையை தொழுது விட்டவர்களுக்கு அன்று முழுவதும் நல்ல நாளே'' என்றல்லவா இஸ்லாம் கூறுகிறது. இதில்தான் எவ்வளவு கருத்துக்கள் அடங்கியுள்ளன! மனிதர்கள் சிந்திக்க வேண்டாமா?

o அதிகாலை நிகழ்த்தும் அற்புதங்கள் பல. உதித்து உயர்ந்தெழும் சூரியன், மலர்களை மட்டுமா மலரச் செய்கிறது. வாழ்க்கையில் உயர விரும்பும் பலரையும் மலரச் செய்யும் பொழுதல்லவா அது!

நீங்கள் நேற்றுவரை நித்திரையில் ஆழ்ந்திருந்தால் இனியாவது அதிகாலையின் அதிசயங்களை அனுபவிக்க விடி காலையிலேயே விழித்தெழுங்கள்.

அதிகாலை நிகழ்த்தும் அற்புதங்கள்

o சீக்கிரம் எழுந்தால் அதிகாலையை போன்ற அமைதி உங்களிடமும் ஒட்டிக் கொள்ளும். வாகன இயக்கம், ரேடியோ, டி.வி. இரைச்சல், பக்கத்து வீடுகளின் கூச்சல், குழந்தைகளின் அழுகுரல் என்று எதுவும் உங்களுக்குத் தொந்தரவு செய்யாது.

o எங்கும் அமைதி நிலவ நீங்கள் நிம்மதியாக செயல்படலாம். அதிகாலையை போன்ற அருமையான பொழுதை வேறு எப்போதும் அனுபவிக்கவே முடியாது. அந்த வேளைதான் சிந்திக்க, செயல்பட, படிக்க, சுவாசிக்க என பலவற்றுக்கும் ஏற்றது.

Read more...
 
கண்கள் குளமாகுதம்மா நோன்பு நேர சகோதர யுத்தம் காணயிலே! Print E-mail
Friday, 10 September 2010 12:09

டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, பிஎச்.டி, ஐ.பீ.எஸ்(ஓ)

இஸ்லாமிய மதம் சாந்தியினையும்-சமாதானத்தினையும் ஹ_தபிய்யா உடன்படிக்கை மூலம் உலகிற்கு பறை சாட்டிய மதம், ஒருவர் மற்றொருவரை சந்திக்கும் போது உங்கள் மீது சாந்தியும், சமாதானமும் உண்டாவதாகுக என்று முகமன் கூறும் பழக்கம் உள்ள மதம், சகோதரத்தினை வலியுறுத்தும் மதம், ஈகை என்ற பசிபோக்கும் சீரிய வறியவர் வலி தீர்க்கும் நிவாரணி உள்ள மதம் இஸ்லாம், ஒற்றுமை என்ற பாசக் கயிறினை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள் என்று போதித்த மதம் இஸ்லாம்.

பார் போற்றும் புனிதராக வந்து தன் துணைவியார் அன்னை கதிஜா பிராட்டியார் ஒருவரால் ஏற்றுக்கொண்டு இன்று 150 கோடி மக்களை உலகில் கொண்ட மதம் இஸ்லாம் நோன்புப் பெருநாளை நேக்கி வீறுநடை போட்டுக்கொண்டு இருக்கும் நேரத்தில் தஞ்சை மாவட்டம் குத்தாலம் வட்டம் திருவிடாக்குறிச்சியில் சகோதர யுத்தகளமாகி இருவர் இறந்தும், பலர் படுகாயம் அடைந்திருப்பதினைக் கண்டு முஸ்லீம்கள் அனைவருடைய கண்களும் குளமாகுவது இயற்கைதானே!

Read more...
 
யாருக்குப் பெருநாள்? Print E-mail
Thursday, 09 September 2010 14:22

கலீல் பாகவீ

உண்ண வசதியிருந்தும் உண்ணவில்லை.

பருக பலவித பானங்களிருந்தும் பருகவில்லை.

காலையில் எழுந்து டீ அல்லது காஃபி

குடித்தால் தான் அன்றைய வேலையே ஓடும்...

என்ற பழக்கமிருந்தும் குடிக்கவில்லை.

புகை பிடித்தால்தான் சிந்தனை செயலாற்றும்

என்ற நிலையிருந்தும் புகை பிடிக்கவில்லை.

இவருக்குத்தான் இனிய பெருநாள்...!
Read more...
 
பெண்களும் பெருநாள் தொழுகையும் Print E-mail
Thursday, 09 September 2010 14:01
உம்மு அதிய்யா ரளியல்லாஹு அன்ஹா அறிவித்தார்.

பெருநாளில் (தொழும் திடலுக்கு) நாங்கள் புறப்பட வேண்டுமெனவும்

கூடாரத்திலுள்ள கன்னிப் பெண்களையும்

மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும்

புறப்படச் செய்ய வேண்டுமெனவும்

நாங்கள் கட்டளையிடப் பட்டிருந்தோம்.

பெண்கள் ஆண்களுக்குப் பின்னால் இருப்பார்கள்.

ஆண்களின் தக்பீருடன் அவர்களும் தக்பீர் கூறுவார்கள்.

ஆண்களின் துஆவுடன் அவர்களும் துஆச் செய்வார்கள்.

அந்த நாளின் பரக்கத்தையும் புனிதத்தையும் அவர்கள் எதிர்ப்பார்கள்.
(புகாரி பாகம் 1, அத்தியாயம் 13, எண் 971)
Read more...
 
இஸ்லாமிய வரலாற்றில் ஷவ்வால் மாதம் Print E-mail
Thursday, 09 September 2010 13:29

ஈதுல் ஃபித்ரு பெருநாள்

ஈது பெருநாட்க‌ள் க‌ட‌மையாக்க‌ப்ப‌ட்ட‌ கார‌ணம்

1. அல்லாஹுத்த‌ஆலா அடியானுக்கு இட்ட‌ க‌ட்ட‌ளையை ஏற்று, அவ‌னுக்கு முற்றிலும் அடிப‌ணிந்து அதை நிறைவேற்றிய‌ ம‌கிழ்ச்சியை அவ‌ன‌து தூத‌ர் காட்டிய‌ வ‌ழியில் வெளிப்ப‌டுத்துவ‌து.

2. இர‌த்த‌ ப‌ந்த‌ உற‌வின‌ர்க‌ளுக்கும், ஏழைக‌ளுக்கும், தேவையுடைய‌வ‌ர்க‌ளுக்கும் உத‌வி செய்து அவ‌ர்க‌ளையும் ம‌கிழ்ச்சிய‌டைய‌ச் செய்வ‌து.

அன‌ஸ் ரளியல்லாஹு அன்ஹு அவ‌ர்க‌ள் அறிவிக்கிறார்க‌ள்: அல்லாஹுடைய‌ தூத‌ர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவ‌ர்க‌ள் மதீனாவிற்கு (ஹிஜ்ர‌த் செய்து) வ‌ந்த‌ ச‌ம‌ய‌ம் ம‌தீனாவாசிக‌ள்(அன்சாரிக‌ள்) இர‌ண்டு நாட்க‌ள் விளையாடிக் கொண்டிருந்தார்க‌ள்.

இவ்விரு நாட்க‌ளில் ஏன் விளையாடுகிறீர்க‌ள் என்று ந‌பி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவ‌ர்க‌ள் கேட்ட‌த‌ற்கு, அறியாமைக்கால‌த்தில் இவ்விரு நாட்க‌ளில் விளையாடுவோம் என்று ப‌தில் கூறினார்க‌ள்.

அப்போது அண்ண‌ல் ந‌பி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவ‌ர்க‌ள் கூறினார்கள்: ''நிச்ச‌ய‌மாக‌ அல்லாஹ் இவ்விரு நாட்க‌ளை விட‌ சிறந்த‌ நாட்க‌ளை உங்களுக்கு ப‌க‌ர‌மாக்கி இருக்கின்றான். அதுதான் ஈதுல் அழ்ஹா, ஈதுல் ஃபித்ரு (ஆகிய‌ இரு பெருநாட்க‌ள்) ஆகும்.'' (அஹ்ம‌த்‍‍ந‌ஸ‌யீஇப்னு ஹிப்பான்)

இத‌ன்ப‌டி, முத‌ல் ஈதுல் ஃபித்ரு பெருநாள் ஹிஜ்ரி இர‌ண்டாம் ஆண்டு முத‌ல் க‌ட‌மையாக்க‌ப்ப‌ட்ட‌து.

ஈதுல் ஃபித்ரு பெருநாள் தின‌த்தில் க‌டைப்பிடிக்க‌ வேண்டிய‌ செய‌ல் பாடுக‌ள்:

1. குளிப்ப‌து

2. புதிய‌ ஆடைக‌ள் அணிந்து கொள்ளுத‌ல், அல்லது த‌ன்னிட‌ம் இருக்கும் ஆடைக‌ளில் சிற‌ந்த‌ ஆடையை அணிந்து கொள்ளுத‌ல்.

Read more...
 
வில்லன் இல்லாத சினிமா! Print E-mail
Thursday, 09 September 2010 15:12

ஹுஸைனம்மா

படம் ஓடிக்கொண்டிருந்தது. வழக்கம்போல ஒரு ஹீரோ, ஹீரோயின், வில்லன் கதைதான். வில்லனை ஜெயித்து, ஹீரோ ஹீரோயினைக் கைப்பிடிக்கும் கதை. இந்தப் படங்களிலெல்லாம் வில்லன் ஏன்தான் வர்றானோ? எப்பப் பாரு ஒரே மாதிரி கதை. ஒரு ஹீரோ, அவனுக்கு பிரச்னை கொடுக்கிறதுக்குன்னே ஒரு வில்லன்.

அதென்ன எல்லாப் படத்துலயும் ஒரு வில்லன்? வில்லன் இல்லாம ஏதாவது படம் வந்திருக்கா? ஆனா வில்லன் இல்லாத படத்துல என்ன சுவாரஸ்யம் இருக்கும், இல்லையா? வில்லன் இருந்தாத்தான் ஹீரோ அவனோட தீய எண்ணங்களையும், திட்டங்களையும் முறியடிச்சு, அவனை ஜெயிச்சு வெற்றி வாகை சூடி காதலியையோ, கம்பெனியையோ, நாட்டையோ கைப்பற்ற முடியும்.

இதுவே, வில்லன்னு ஒரு கேரக்டரே இல்லாம, ஹீரோவும், ஹீரோயினும் காதலிச்சு, கல்யாணமும் பண்ணி, குடும்பம் நடத்தி, வயசாகி.... இதுல என்ன சுவாரசியம் இருக்கு? படம்னா, ஒரு வில்லன் இருக்கணும், இருந்தாத்தானே விறுவிறுப்பு? அந்த வில்லன், எதிரி நாட்டவனா இருக்கலாம், இல்ல, சொந்த அக்கா புருஷனாவும் இருக்கலாம், ஏன், உடன்பிறந்த அண்ணனாகக் கூட இருக்கலாம். ஆனா வில்லன் வேணும்.
Read more...
 
''ஸூரத்துல் இக்லாஸ்'' அத்தியாயத்தின் சிறப்பு Print E-mail
Wednesday, 08 September 2010 14:48

'குல் ஹுவல்லாஹு அஹத்' எனும் (112 வது) அத்தியாயத்தின் சிறப்பு.

அபூ ஸயீத் அல் குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார். ஒருவர்'குல்ஹுவல்லாஹு அஹத்' எனும் (112 வது) அத்தியாயத்தைத் திரும்பத் திரும்ப ஓதிக்கொண்டிருந்ததை மற்றொரு மனிதர் செவிமடுத்தார். (இதைக்கேட்ட) அந்த மனிதர் விடிந்ததும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து அதைப் பற்றிக் கூறினார்.

அந்தச் சிறிய அத்தியாயத்தை(த் திரும்பத் திரும்ப அவர் ஓதியதை) இவர் சாதாரணமாக மதிப்பிட்டதைப் போல் தெரிந்தது. அப்போது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் , ''என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! அந்த அத்தியாயமும் குர்ஆனின் மூன்றில் ஒரு பங்கிற்கு ஈடானதாகும்'' என்று கூறினார்கள்.

அபூ ஸயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் தோழர்களை நோக்கி, 'ஓர் இரவில் குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதியை உங்களில் ஒருவரால் ஓத முடியாதா?' என்று கேட்டார்கள்.

அதனைச் சிரமமாகக் கருதிய நபித்தோழர்கள், 'எங்களில் யாருக்கு இந்தச் சக்தி உண்டு, இறைத்தூதர் அவர்களே!'' என்று கூறினார்கள்.

அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'அல்லாஹ் ஒருவனே. அல்லாஹ் தேவையற்றவன்' (என்று தொடங்கும் 112 வது அத்தியாயம்) குர்ஆனின் மூன்றிலொரு பகுதியாகும்' என்று கூறினார்கள்.

Read more...
 
அநாதைகளை ஆதரிப்போம் Print E-mail
Wednesday, 08 September 2010 13:56
எம்பெருமானார் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அநாதைகளை ஆதரியுங்கள் என்று கூறியுள்ளார்கள்.

அயலவர்களை ஆதரியுங்கள், நோயாளர்களை பார்வையிடுங்கள், அவர்களது சுகத்திற்காக பிரார்த்தனை புரியுங்கள், அண்டை வீட்டான் பசித்திருக்க தான் மாத்திரம் புசிப்பவன் என்னைச் சார்ந்தவன் அல்ல என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்.

அல்லாஹ்வின்  கயிற்றை பலமாக பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள் என அல்-குர்ஆன் கட்டளையிடும் போது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒற்றுமை பற்றி எவ்வளவோ வரைவிலக்கணங்களை விரிவாக விளக்கியுள்ளார்.

ஒரு முஸ்லிம் சகோதரனுக்கு துன்பம், நோய் இடையூறு ஏற்படுமிடத்து அதற்காக முன்னின்று உதவக் கூடியவன் மற்றுமொரு முஸ்லிமாகவே இருக்க வேண்டும்.

Read more...
 
தேடல்களும், விடைகளும்! Print E-mail
Wednesday, 08 September 2010 05:29

ஹுஸைனம்மா

சின்ன வயசுல, கள்ளங்கபடறியா எல்லாப் புள்ளைகளையும் போல, நானும் தெரியாம முழுங்கிட்ட பபிள்கம்மை வெளியே கொண்டுவர தலைகீழா நின்னுகிட்டே, "பபிள்கம் வெளியே வந்துரட்டும். வயித்துக்குள்ளேயே வெடிச்சிடக்கூடாது அல்லாவே"ன்னு பிரார்த்தனை செய்யிற அளவுக்குத்தான் எனக்கும் பக்திப் பரவசம் இருந்துது. ஆனா, இப்பவும் அப்படியேவா இருப்போம்? "ஆளும் வளரணும், அறிவும் வளரணும், அதுதாண்டா வளர்ச்சி"ன்னு தெரியும்தானே.

முஸ்லிம்கள் நிறைந்து வாழும் ஊரில் பிறந்ததால், என்னைச் சுற்றி எல்லாரும் முஸ்லிம்களே. எளியவர்களே அதிகம். தொழுகை, குர் ஆன், நோன்பு என்பவை வசதி படைத்தவர்களுக்கே உரியது என்ற அறியாமையால், ஓரளவு வசதி படைத்த வீட்டினர் மட்டுமே அவற்றைச் செய்து வந்தனர் (அப்போது). காலச் சுழற்சியில் ஏற்பட்ட மாறுதல்கள் பலரின் அறிவுக் கண்ணைத் திறந்தது. தொழுகை, வசதி பார்த்தோ, ஏற்றத்தாழ்வு பார்த்தோ செய்ய வேண்டியதல்ல; படைக்கப்பட்ட எல்லா உயிர்களுக்கும் உரியதே என்றும் அறிந்து கொண்டோம்.

எப்போதும் எல்லாவற்றிற்கும் ஒரு "ஏன்" என்ற கேள்வி வரும் என் மனதில். அது, நோன்பாகட்டும், தொழுகையாகட்டும், பள்ளிப் பாடங்கள் ஆகட்டும், செய்திகளாகட்டும், "ஏன்" என்ற கேள்வி வராமல் இருந்ததில்லை. வீட்டில் என் கேள்விகளுக்கு விளக்கமாகப் பதில் சொல்ல அதிகம் அறிந்தவர்கள் இல்லை; நர்கீஸ், முஸ்லிம் முரசு போன்ற புத்தகங்கள் அளிக்கும் தீனி பற்றாக்குறையாயிருந்தது.
Read more...
 
பெண் - உடல்மொழி Print E-mail
Wednesday, 08 September 2010 04:52

பெண்உடல்மொழி என்றால் என்ன? அதன் தத்துவ, வரலாற்றுப் பின்னணிகள் என்ன?

பெண்ணுடலை விவரிக்கும் விரிக்கும் மொழி பெண்ணுடல் மொழியா?

அல்லது பெண் உடலின் சைகைகள் சமிக்ஞைகள் நடவடிக்கைகள் செயல்பாடுகள் போன்றவை மூலம் அவள் சொல்வதாக புரிந்து கொள்ளப்படுவது பெண்ணுடல் மொழியா?

உடலும் மொழியும் ஒன்றா, வெவ்வேறா?

உடலை மொழி பிரச்சினையில்லாமல் அப்படியே பிரதிநிதித்துவப்படுத்துமா?

அப்படி பிரதிநிதித்துவப்படுத்த முடியுமா?

புரட்சி என்று உச்சரித்தால் புரட்சியாகி நடந்துவிடுமா?

இட்லி என்று எழுதிய காகிதத்தை உண்டால் பசி தீர்ந்துவிடுமா?

நிறைய கேள்விகள் முன்னே நிற்கின்றன."உடலை எழுதுதல்" என்பது பெண்ணியங்களின் முன்னெடுப்பில் ஒரு குறிப்பிட்ட வரலாற்றுத் தருணத்தில் நிகழ்கிறது. இவ்வரலாற்றுத் தருணத்துக்கும் "புத்துலகை உருவாக்குதல்" என்கிற கருத்தாக்கத்துக்கும் கனவுக்குமான தொடர்பை பெண்ணியல் ஆராய்ச்சியாளர்கள்,

குறிப்பாக செசிலி லிண்ட்சே போன்றவர்கள் விவரிக்கிறார்கள்."மாற்று உலகங்கள்", கடந்து முன்செல்லல்", "பெண்ணிய எதிர்காலங்கள்" போன்ற கற்பனைகளும் கனவுகளும் பெண்ணியப் பேச்சுகளில் எழுத்துகளில் உருவானதையும், இதில் ஒரு முக்கியமான அங்கமாக "உடல் எழுத்து" தொடங்கியதையும் பேசுகிறார்கள்.
Read more...
 
குடும்பக் கட்டுப்பாடும் கருச்சிதைவும் Print E-mail
Wednesday, 08 September 2010 04:35

குடும்பக் கட்டப்பாடு, கருச்சிதைவு போன்றன பற்றிய இஸ்லாமிய வரையறைகள்:

மனித இனம் நிலைபெற வேண்டுமென்பது திருமண அமைப்பின் அடிப்படை நோக்கங்களில் ஒன்றாகும். இனப்பெருக்கத்தின் மூலமே மனித இனம் நிலைக்க முடியும். இஸ்லாம் இனப்பெருக்கத்தை விரும்பி உற்சாகப்படுத்துகின்றது. ஆயினும், ஏற்புடைய நியாயமான காரணங்களுக்காகக் குடும்பக் கட்டுப்பாட்டிற்கு அனுமதி வழங்குகின்றது.

நபிகளாரின் காலத்தில் குடும்பக்கட்டுப்பாட்டிற்குரிய வழிமுறையாக அமைந்தது அஸ்ல்எனும் செயற்பாடாகும். ‘அஸ்ல்என்பது ஆண் தனது இந்திரியத்தைப் பெண்ணின் கர்ப்பவறையைப் போய் அடைய விடாது தடுத்துக் கொள்வதைக் குறிக்கும். நபித்தோழர்கள் இம்முறையைக் கையாள்வோராய் இருந்துள்ளனர். ‘அல்குர்ஆன் இறங்கிக் கொண்டிருந்த வேளையில் நாங்கள் அஸ்ல்செய்வோராய் இருந்தோம்.’ என ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு கூறியுள்ளார். (ஆதாரம் புஹாரி, முஸ்லிம்)

ஒருபோது ஒருவர் நபிகளாரிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! எனக்கொரு பெண் இருக்கிறாள். நான் அவளிடத்தில் அஸ்ல் செய்கின்றேன். அவள் கர்ப்பமுறுவதை நான் விரும்பவில்லை. ஆயினும், யூதர்களோ அஸ்ல் என்பது சிறிய கொலையாகும் என்கின்றனர் என்றார். இதனைச் செவிமடுத்த நபியவர்கள் யூதர்கள் பொய் கூறுகின்றனர். அல்லாஹ் படைக்க நாடினால் அதனை உம்மால் தடுக்க முடியாது (திர்மிதி, நஸாயி, இப்னு மாஜா)
Read more...
 
நன்மை பயக்கும் நபிமொழி - 74 Print E-mail
Tuesday, 07 September 2010 15:17
1) எவர் தன்னுடைய சகோதரனுடைய மானத்தை அவனறியாமலேயே காக்கிறாரோ அல்லாஹ் அவருடைய முகத்தை மறுமையில் நெருப்பிலிருந்து காக்கிறான் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ தர்தா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி)

2) நான் உங்களை சந்தேகப்பட வேண்டாமென்று எச்சரிக்கின்றேன். ஏனெனில், செய்திகளில் மிகவும் பொய்யானது சந்தேகமேயாகும் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

3) இரண்டு தொழுகைகள் முனாஃபிக்கீன்களுக்கு பாரமாக இருக்கிறது. ஃபஜ்ருடைய ஜமாஅத்தும், இஷாவுடைய ஜாமாஅத்தும். இந்த இரண்டிலும் உள்ள நன்மைகளை அவர்கள் அறிவார்களேயானால், பள்ளிக்கு தவழ்ந்து வந்தாயினும் தொழுகையில் கலந்து விடுவர் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, (நூல்கள்: புகாரி, முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், திர்மிதீ, நஸயி)

4) இறந்தவர் அடக்கம் செய்யப்பட்ட இடம் (கப்ரு) மற்றும் குளியலறையைத் தவிர, பூமி முழுவதுமே அல்லாஹ்வை தொழும் இடம் (மஸ்ஜித்) ஆகும். என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல் குத்ரி ரளியல்லாஹு அன்ஹு, நூல் :திர்மிதீ)

Read more...
 
இறைவனை நினைவு கூறும் வழிமுறைகள் Print E-mail
Tuesday, 07 September 2010 04:30
ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் உள்ளத்தை தூய்மைபடுத்த சிறந்த வழியை கேட்ட போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள் "நீ எங்கே இருந்தாலும் என்ன செய்தாலும் அல்லாஹ் உன்னுடன் இருக்கிறான் என்று நினைத்து கொள்" (திர்மிதி)

ஒரு நம்பிக்கையாளர் தன் இலக்கான சுவனத்தை அடைவதற்கு இறைவனை நினைவு கூறுபவராக இருத்தல் அவசியம்.

நமது தனிப்பட்ட வாழ்க்கை, அலுவலக வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, சமூக வாழ்க்கை ஆகிய அனைத்தும் எவ்வித பாதிப்புமில்லாமல் அதே சமயம் இறைவனை எந்நேரமும் நினைவு கூறக் கூடியவர்களாகவும் இருப்பது கடினமானதாக தோற்றமளிக்கலாம். ஆனால் அது எளிமையாக இருக்க வேண்டுமானால் கீழ்காணும் நான்கை நாம் முறையாக கடைபிடித்தால் இவ்வுலகும் மறுவுலக வாழ்வும் சிறப்பாக அமையும் என்பது எனது நம்பிக்கை. முயன்று தான் பார்ப்போமே?

Read more...
 
''இன்ஷா அல்லாஹ்'' (இறைவன் நாடினால்) Print E-mail
Monday, 06 September 2010 23:14

'

'நாளை நான் இதைச் செய்பவன்'' என்று எதைப் பற்றியும் கூறாதீர்!

அல்லாஹ் நாடினால் தவிர, (முஹம்மதே!) நீர் மறந்து விடும் போது உமது இறைவனை நினைவு கூறுவீராக! எனது இறைவன் இதை விட குறைவான நேரத்தில் இதற்கு வழி காட்டிவிடக் கூடும் என்று கூறுவீராக!' (அல்குர்ஆன் 18:23,24)

குகை வாசிகளின் வரலாற்றுக்கிடையே மேற்கண்ட கட்டளையையும் இறைவன் பிறப்பிக்கிறான்.

நாளை செய்யப் போவதாகக் கூறும் எந்தக் காரியமானாலும் 'அல்லாஹ் நாடினால்' என்பதையும் சேர்த்துக் கூற வேண்டும் என்று இவ்விரு வசனங்களும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குக் கட்டளையிடுகின்றன.

இதில் நாம் அறிந்து கொள்ள வேண்டிய பல செய்திகள் உள்ளன.
Read more...
 
தொழும் போது பேண்டை தூக்கி விடுங்க பாய்! Print E-mail
Monday, 06 September 2010 23:07

கமால் துபாய்

விடுமுறையில் சென்னை சென்றிருந்த நேரம்.... நானிருந்த ஏழுகிணறு பகுதியிலுள்ள ஒரு பள்ளி

தொழ நான் நிற்கிறேன்......

அப்போது வேகவேகமாக வந்த ஒரு நபர்..... அவருடைய பேண்ட்டை தொழுவதற்கு முன் மடித்துவிடுகிறார்

மடித்துவிட்டுக் கொண்டே என்னைப் பார்த்து "பாய் பேண்டை மடிச்சி விடுங்க பாய்" என்றார். என் பேண்ட் என்னவோ மடிக்கப்படாத போதிலும் கணுக்கால் வரை தான் இருந்தது. (அவர் பேண்டோ பாதத்திற்கு வெளியே கால் மீட்டர் தொங்கிக் கொண்டிருந்தது)

வரும்போது ரோடில் உள்ள சளி மூத்திரம் எச்சில் அசுத்தமான நீர் என அனைத்தையும் அந்த பேண்டின் அடிபாகம் வருடிக் கொண்டே வந்திருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.

இது போல் பள்ளியில் தொழ வருபவர்கள் பலர் தொழுவதற்கு முன் தங்கள் பேண்டை மடித்து விடுவதைக் காணலாம் (ஏதோ தொழ நிற்கும் போது மட்டுமே ஆடையை கணுக்காலுக்கு மேல் மடித்துவிட்டுக் கொண்டு தொழ வேண்டும் என்பது போல)

அப்படி மடித்து விடுபவர் ஒருவரை ''ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்'' என்று வினவியபோது ''இல்லை என்றால் தொழுகை கூடாது'' என்றார் ( அதாவது ஆடை கணுக்காலுக்கு கீழே இருந்தால் தொழுகை கூடாதாம்)

Read more...
 
பணத்தின் அருமையை உணர்வது, உணர்த்துவது எப்படி? Print E-mail
Monday, 06 September 2010 22:58

தேவையில்லாததையெல்லாம் வாங்குகிறவன் தேவையானதை விற்க வேண்டிவரும்.

பணத்தை மதியுங்கள். பணம் எவ்வாறு சம்பாதிக்கப்படுகிறது? எவ்வாறு சேமிக்கப் படுகிறது? எவ்வாறு வளர்கிறது?

சம்பாதிக்கத் தெரியாதவனுக்கு செலவு செய்யவும் தெரியாது.

அந்தப் பணக்கார தந்தைக்கு ஒரே கவலை. தன் மகன் சுயமாக பணம் சம்பாதிக்கும் வயது வந்தும் இன்னும் அதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்காமல் ஊதாரித்தனமாக ஊர் சுற்றிக் கொண்டிருப்பதை

எண்ணி எப்போதும் வருத்தப்பட்டார். ஒரு நாள் பொறுக்கமாட்டாமல் தினம் நூறு ரூபாய் சம்பாதித்துக் கொண்டு வந்தால்தான் இனி வீட்டில் தங்க முடியும் என்று கண்டித்தார்.

மறுநாள் வீட்டிற்குள் நுழையும்போது பையன் நூறு ரூபாய் எடுத்து நீட்டினான்.

அவனுடைய அப்பா அங்கே எரிந்து கொண்டிருந்த விளக்கில் காட்டி பணத்தை எரிய விட்டார். போய் சாப்பிடு என்றார். மறுநாளும் உள்ளே நுழையும்போது அவன் கொடுத்த நூறு ரூபாயை விளக்கில் எரியவிட்டார். மூன்றாவது நாள் பணத்தை விளக்கில் காட்டி எரிய விடும் போது மகன் தாவி அதை அணைத்தான். அப்பா என்ன செய்கிறீர்கள் என்று அலறினான்.
Read more...
 
நல்ல உறவுகளின் அஸ்திவாரம்! Print E-mail
Monday, 06 September 2010 22:32

நம்மை அன்பு செய்யுமாறு நாம்  யாரையும் வருத்திட முடியாது. நாம் செய்யக் கூடியதெல்லாம் அன்பு செலுத்த தகுந்தவனாக நம்மை மாற்றிக் கொள்வதுதான்.

நாம் ஒவ்வொருவருமே வாழ்க்கையில் சில விஷயங்களக் கற்றுக் கொண்டு, அதை மனதில் பத்திரப் படுத்திக் கொள்கிறோம். விவேக முள்ளவர்கள், அந்த அனுபவங்களை தகுந்த தருணத்தில் பயன்படுத்திக் கொள்கிறோம். நிறையப்

பேர், நட்பில், காதலில், அன்பில் வெற்றி பெற, அடுத்தவர் எதிர்பார்ப்புகளப் பூர்த்தி செய்யும் வகையில் தங்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொள் கிறார்கள். உண்மயில் நீங்கள் திருப்திப்படுத்த வேண்டியது மற்றவரை அல்ல. உங்களைத்தான்.மேலே

இது சுயநலமல்ல. தன் மீது அன்போ, மரியாதையோ கொண்டிராத ஒருவர் அடுத்தவருடய அன்பை, மரியாதையை உய்த்துணர முடியாது

அப்படியெனில், அன்போ, நட்போ தொடர்ந்து நிலைத்திருப்பதன் ரகசியம் என்ன?

அன்பு வற்றாமல் இருப்பதற்கு நாம் என்ன செய்யவேண்டும்!

உங்கள் அன்பு நன்கு மலர்ந்து நிலைத்திருக்க வேண்டுமெனில் மற்றவருக்கு உகந்த வகையில் நான் நல்லவனாக இருக்கவேண்டும். மிகுந்த ஆர்வம் காட்ட வேண்டும் என்ற எண்ணத்தை விட்டுவிட்டு, உங்கள் மீதே மரியாதை கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையையும், செயல்களையும் மகிழ்ச்சியாக, உற்சாகமாக செய்யுங்கள்.

உண்மயான அன்பு பணத்தை வைத்து எடை போடக் கூடாது. அல்ல பொருளை பகிர்வதோடு நின்று விடக் கூடாது.

உங்கள் உறவுகளில் நீங்கள் தவறிழைக்கும் போது மற்றவர்கள் உங்களை மன்னித்து விட்டால் மட்டும் போதாது. நீங்களும் உங்களை மன்னிக்க வேண்டும். மற்றவர்கள் உங்களை ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்க வேண்டும்.

Read more...
 
சுவனத்துத் தடாகம் ''ஹவ்ளுல் கவ்ஸர்'' Print E-mail
Monday, 06 September 2010 04:38

ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி

அல்லாஹு ஸுப்ஹானஹுதஆலா, அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஏராளமான நற்பாக்கியங்களை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறான். அவற்றில் ஒன்று, அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்காக சுவர்க்கத்தில் கவ்ஸர் என்னும் நதியை ஏற்படுத்திக் கொடுத்திருப்பது.

இது குறித்து திருக்குர்ஆனில், "(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு கவ்ஸர் (என்ற தடாகத்தை) கொடுத்திருக் கின்றோம்." என்று கூறப்பட்டுள்ளது. (ஸூரத்துல் கவ்ஸர், வசனம் – 1. )

"கவ்ஸர் என்றால் என்ன?" என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "(அது) சுவர்க்கத்திலுள்ள ஓர் ஆறாகும். அதனை என் இறைவன் எனக்காக கொடுத்திருக்கிறான்.

அதன் தண்ணீர் பாலைவிட அதிக வெண்மையானதாக இருக்கும்.

அதன் சுவையோ தேனைவிட அதிக இனிப்பானதாக இருக்கும்.

அதில் பறவைகளும் இருக்கின்றன. அவற்றின் கழுத்துகள் ஒட்டகத்தின் கழுத்துகளைப் போல் இருக்கும்" என்று கூறினார்கள்.

அப்போது உமர் ரலியல்லாஹுதஆலா அன்ஹு அவர்கள், "இந்தப் பறவைகள் மிகவும் உல்லாசமாக இருக்கும்" என்று கூறினார்கள்.

அதற்கு அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "அவற்றை உண்பவர்கள் அவற்றை விட உல்லாசமாக இருப்பார்கள்"

என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் ரலியல்லாஹுதஆலா அன்ஹு, நூல்: திர்மிதீ)

Read more...
 
தொழுகையை விடுவது இறை நிராகரிப்பு! Print E-mail
Monday, 06 September 2010 04:32

அல்லாஹ் கூறுகிறான்: ''நீங்கள் அவன் பக்கமே திரும்பியவர்களாக இருங்கள்; அவனிடம் பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள்; தொழுகையையும் நிலை நிறுத்துங்கள்; இன்னும் இணைவைப்போரில் நீங்களும் ஆகி விடாதீர்கள்.'' (அல்குர்ஆன் 30:31)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிமுக்கும் இணைவைத்தலுக்கும், இறை நிராகரிப்புக்கும் இடையில் உள்ள வேறுபாடு தொழுகையை விடுவது தான். ஆதாரம்: முஸ்லிம்.

முஸ்லிமுக்கும் காஃபிருக்கும் இடையே உள்ள உடன்படிக்கையே தொழுகை தான். அதனை எவன் விட்டு விடுகின்றானோ அவன் காஃபிராகி விட்டான். (ஆதாரம்: அஹ்மத், திர்மிதி)

தொழுகையைத் தவிர மார்க்க விஷயத்தில் எதை விடுவதினாலும் ஒருவன் காஃபிராகி விடுவான் என்று நபித்தோழர்கள் கருதவில்லை. (ஆதாரம்: திர்மிதி)

தொழுகையை விடுவோர் நரகில் நுழைவார்:
Read more...
 
More Articles...
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>

Page 1 of 78

மவ்லூத்-ஓர் ஆய்வு ஷம்சுத்தீன் காசிமி

Make sure you have at least Flash Player 7. If not,please download.

Links

Webnidur.info

Links2

Best Article

Best Articles 2

Best Articles 3

Best Articles 4

Audio

Video