|
Tuesday, 21 May 2013 05:53 |
|
ஆணைவிட பெண்ணுக்கு ஆற்றல் அதிகமாமே...!
ஆற்றல் யாருக்கு அதிகம் ஆணுக்கா? பெண்ணுக்கா? பலத்த யோசனைக்குப்பிறகு "வேறு என்னத்தை சொல்ல? பெண்களுக்குத்தான்!" 2013 இன் மகா சரண்டர்.
சரி இது எவ்வளவுதூரம் உண்மை என்று விஞ்ஞானப் பூர்வமாகவும், அனுபவப்பூரவமாகவும் அறிந்ததை அலசுவோமா? அதுக்கு முன்னாடி இதனை காமெடியாக எடுத்துக்கொள்ளாத எதிர்பாலினர் மற்றுமின்றி என் பாலினர் சிலரும் தயவு செய்து மன்னிக்க!
1. உலகில் இனப்பெருக்கம் என்பது அத்தியவசியமானது. இது இல்லையேல் உலகமே ஸ்தம்பித்து விடும். இதற்கு பெரும் பங்கு வகிப்பது தங்கமணிகள்தான்.
2. அறிவை வளர்க்கும் புனித இடமான கல்வி ஸ்தலங்களில் பெரும்பான்மையினர் பெண்கள்தான். ஏனெனில் அவர்களுக்குத்தான் பொறுமை அதிகம் என்று கல்வி நிர்வாகத்தினரால் தேர்ந்தெடுத்து வெற்றியும் பெறுகின்றனர்.
3. ஆண் குழந்தையை விட பெண் குழந்தைகள் தான் எல்லாவற்றிலும் அதாவது குப்புறப்படுப்பது, சிரிப்பது, தவள்வது, நடப்பது, பேசுவது எல்லாம் முந்திக்கொண்டு செய்கின்றனர் என்பது விஞ்ஞான உண்மை. (எத்தனையோ வீடுகளில் "என் பிள்ளை பேசவே மாட்டேன்கிறான்" என்று ஒரு தாய் விசனப்படும் பொழுது "ஆண் பிள்ளை லேட்டாகத்தான் பேசும்" என்று சொல்லுவது வாடிக்கை.
4. ஒரே கேள்வியை பலவித கோணத்தில் அலுக்காமல் கேட்டு உண்மையை அறியும் வல்லமை இவர்களுக்கே உண்டு.
5. மற்றவர்கள் அறியக்கூடாது என்று குரலை தாழ்த்தி கிசுகிசுப்பது முதல், மற்றவர்களுக்கு எட்ட வேண்டும் என்று உச்சஸ்தாயியில் பேசுவதில் இவர்களுக்கு நிகரில்லை.
|
|
Friday, 04 February 2011 07:39 |
|

இறைநினைவு கமழும் இல்லம்
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ''அல்லாஹ்வை நினைவு கூறக் கூடிய இல்லங்கள் தான் விரும்பத்தகுந்த இல்லங்கள், அல்லாஹ்வை நினைவு கூறப்படாத இல்லங்கள், (இருளடைந்த) மண்ணறைக்குச் சமமானது.''
அனைத்து வழிகளிலும் நாம் ஒவ்வொருவரும் நம்முடைய இல்லங்களை இறைவனது விருப்பத்திற்குரிய இல்லங்களாக, அவனை நினைவுகூறக்கூடிய இடங்களாக மாற்றி அமைக்க வேண்டும்.
உள்ளத்தாலும், சொல்லாலும், தொழுகைகளின் மூலமாகவும் (விரும்பிச் செய்யக் கூடிய சுன்னத் மற்றும் நபிலான வணக்கங்கள்), திருமறையை ஓதுவதன் மூலமாகவும், இன்னும் இஸ்லாத்தைப் பற்றி கலந்தாலோசனை செய்யக் கூடிய தளமாகவும் அல்லது இன்னும் பல் வகையான இஸ்லாமிய நூல்களைப் புரட்டி வாசிக்கக் கூடிய தளமாகவும் அது திகழ வேண்டும்.
|
|
Sunday, 03 July 2011 08:44 |
|

புதுவலசை ஃபைசல்
[ அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா ரளியல்லாஹு அன்ஹு. உறுதியான நெஞ்சுடன் உரக்க முழங்கினார்கள், "உன்னிடமுள்ள செல்வங்கள் அனைத்தையும், அதனுடன் அரபிகளிடமுள்ள செல்வங்கள் அனைத்தையும் சேர்த்து மூட்டை கட்டி என்னிடம் கொட்டினாலும் சரியே! அதற்காகவெல்லாம் ஒரு நொடி கூட முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுத்தந்த மார்க்கத்திலிருந்து மாரமாட்டேன்" என்றார்கள்.
எண்ணெய் கொதிப்பதை போன்று கொதித்து போன மன்னன் "இழுத்துச் செல்லுங்கள் இவரை கொப்பரையில் தள்ளுங்கள்" என்று அலறினான். சேவகர்கள் அவரை எண்ணெய் கொப்பரையை நோக்கி அழைத்து செல்ல, எண்ணெயை நெருங்க, நெருங்க அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் கண்களில் இருந்து கண்ணீர் கசிய ஆரம்பித்தது. இதனை எதிப்பார்த்திராத அந்த சேவகர்கள் இச்செய்தியை மன்னனிடம் தெரிவித்தார்கள் மழிச்சியுற்றான் மன்னன். ஆஹா! மரண பயம் வந்துவிட்டது அவருக்கு அழைத்து வாருங்கள் என்னிடம் என்றான்.
''இப்பொழுது சொல் இஸ்லாத்தை விட்டு விடுகிறாய் அல்லவா?''
"நிச்சயமாக இல்லை"
''நீர் நாசமாய்ப் போக! பிறகு எதற்கு அழுதீர்?''
அவர் உரைத்த பதிலில் அப்படியே அதிர்ந்து போனான் அந்த பைஸாந்திய சக்கரவர்த்தி. "என் கவலைக்கும் பயத்திற்கும் உன் மரணம் பயம் அல்ல காரணம். அல்லாஹ்வின் அன்பை பெறுவதற்கு அவனுடைய பாதையில் தியாகம் புரிவதற்கு என்னிடம் இருப்பதோ ஒரே உயிர். அதற்கு பதிலாய் என் தலையில் இருக்கும் உரோமங்கள் அளவிற்கு உயிர்கள் பல இருந்தால் அவை அத்தனையும் ஒன்றன் பின் ஒன்றாய் மகிழ்ச்சி பொங்க இந்த கொப்பரையில் கொட்டித் தீர்க்கலாமே என்று எண்ணிப் பார்த்தேன்!! கைசேதம் கண்ணீராகி விட்டது!" ]
|
|
Monday, 31 January 2011 07:41 |
|
ஷேக் அப்துல்லாஹ் (கொடிக்கால் செல்லப்பா)
[ இஸ்லாம் என்றால் சாந்தி சமாதானத்தை போதிக்கும் மார்க்கம் என்று பொருள், முஸ்லிம் என்றால் சாந்தி, சமாதானத்தை கைக் கொண்டு முற்றிலும் இறைவனுக்கே (குர்ஆனின் சட்டத்திட்டங்களுக்கு) கீழ்ப்பட்டு நடப்பவர்கள் என்று பொருள்.
பரிசுத்த குர்ஆன் மனித சமூகத்திற்கு 'ஒன்றே இறைவன் ஒன்றே மக்கள்' என்ற மகத்தான தத்துவத்தை போதிப்பது மட்டுமல்ல. நடைமுறையில் ஒரு ஐக்கியமான சகோதர பாசத்தையும், சகிப்புத்தன்மையையும், தன்னம்பிக்கையையும் அது வலியுறுத்துகிறது.
இஸ்லாத்தின் நெறிமுறைகள், நடைமுறைகள், அகில உலக சாந்தி சமாதான, சகோதரத்துவத்தை உண்டுபண்ணி, உலகளவில் அது ஒரு ஜீவன் உள்ள இரத்த உணர்ச்சியை உறவை உண்டாக்கிவிடுகிறது.
இஸ்லாம் தவிர ஏனைய மதங்கள் மனித சுதந்திரத்தை வலியுறுத்தினாலும் நடைமுறையில் மனிதனுக்கு மனிதன் அடிமைப்படுத்துவதையும் உயர்வு தாழ்வு சாதி மனப்பான்மையை ஏற்படுத்துவதையும் தவிர்க்கமுடியவில்லை.
ஆனால் இஸ்லாத்தின் பரிசுத்த கிரந்தம் சொல்லுகிறது. மனிதனுக்கு மனிதன் வணங்கத் தேவையில்லை. மண்டியிட அவசியம் இல்லை. அல்லாஹ் ஒருவனுக்கே உங்கள் தலையினை சாய்த்து வணக்கம் செலுத்தவேண்டும் என்று கட்டளையிடுவதன் மூலம் பிற மனிதர்களின் ஆண்டான்-அடிமை, உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற ஏற்றத்தாழ்வுகள் மனித மூளையை அடகு வைக்கும் ஆதிக்கம் சுதந்திரச் சிந்தனையைத் தேய்க்கும் மனிதக் கட்டுப்பாடுகள் இங்கே தூள் தூளாக நொறுங்கி விடுகின்றன. அடிமைச் சங்கிலிப் பொட்டித் தெறிக்கின்றன.]
|
|
Thursday, 20 October 2011 07:37 |
|

இது ஓர் வரலாற்றுப் பொன்னேடு
(இக்கட்டுரையை முழுமையாகப் படியுங்கள்)
[ ஒரு கிறிஸ்துவப்பெண் ஒரு முஸ்லிமைத் திருமணம் செய்துகொள்ள நேர்ந்தால், அந்த மனைவி, மாதா கோவிலுக்கோ, தொழுகைக்கோ, போவதிலிருந்தும் அவர்களுடைய மதக்கட்டளைகளை நடைமுறையில் பின்பற்றுவதிலிருந்தும் அந்த முஸ்லிம் கணவன் தன் மனைவியின் விருப்பத்திற்கு விரேதமாக நடக்கலாகாது.
(யூத அல்லது கிறிஸ்தவத் தாய்க்குப் பிறந்த முஸ்லிம் மகன், தனது தாயை அவளுடைய வணக்கஸ்தலத்தின் கதவு வரை குதிரை, கோவேறு கழுதை போன்ற மிருகத்தின் மீதோ அல்லது ஏழையாயிருந்தால், அல்லது தாயார் கிழவியாகவோ முடமாகவோ இருந்தால், அவன் அவளைத் தனது தோளின்மீது சுமந்து கொண்டோ போக வேண்டும்.)
அவர்களது மாதா கோவில்களை அவர்கள் பழுது பார்க்கையில், அவர்களை முஸ்லிம்கள் எவரும் தடுக்கலாகாது. மாதா கோவில்கள், சந்நியாசி மடங்கள் அல்லது சமய சம்பந்தமான வேறு விஷயங்களில், கிறிஸ்தவர்களுக்கு உதவி தேவையானால், முஸ்லிம்கள் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
நான் அளித்த இந்த சாசனத்திற்கு விரேதமாக நடப்போனும், அதன் கருத்துக்கு மாறுபட்ட கருத்துடையோனும், அதை விளம்பரப்படுத்துவோனும், மெய்யாகவே, இறைவனையும் இறைத்தூதரையும் நிராகரித்தவனாவான்.]
|
|
Monday, 12 April 2010 14:34 |
|
திண்டுக்கல் பேகம்பூர் தாருல் உலூம் யூஸூஃபிய்யா அரபிக்கல்லூரியின் தீர்ப்பிலிருந்து:
அல்லாஹ்வுடைய நேசர்கள் கப்ரில் இருந்து கொண்டு நம்முடைய தேவைகளை நிறைவேற்றவும்,
ஆபத்துகளை நீக்கி வைப்பதற்கும் வல்லமை படைத்தவர்கள் என்றும்
அவர்கள் உலக நிர்வாகத்தில் தலையிட்டு தங்களை அழைப்பவர்களுக்கு சாதாகமாக உதவி செய்ய சக்தி படைத்தவர்கள் என்றும்,
நம்புவது ஈமானக்கு விரோதமானது.
குர்ஆன் கூறும் ஏகத்துவக் கொள்கைக்கு முரணானது.
சுன்னத் வல் ஜமாஅத்துடைய கொள்கைக்கு எதிரானது.
எந்த இமாம்களும் இதை ஆதரிக்கவில்லை.
|
|
Saturday, 14 April 2012 18:01 |
|

கேள்வி 1 : அவ்லியாக்களின் கப்றுகளுக்குச் சென்று அவைகளை வலம் வருவது, அவர்களிடம் உதவி தேடுவது, பரக்கத்துக்காக அதைத் தொடுவது, அவைகளிடம் நேர்ச்சை செய்வது, அவைகளைக் கட்டுவது, அல்லாஹ்விடத்தில் வாங்கித் தரும் இடைத்தரகர்களாக அவர்களை நினைப்பது ஆகியவைப் பற்றிய இஸ்லாமீய தீர்ப்பு என்ன?
பதில் : அவ்லியாக்களின் கப்றுகளுக்குச் சென்று அவர்களிடம் உதவி தேடுவது, அவர்களிடம் நேர்ச்சை செய்வது, அல்லாஹ்வின் முன்னிலையில் அவர்களை இடைத்தரகர்களாக எண்ணுவது இந்த அனைத்து செயல்களும் இஸ்லாமிய வட்டத்திலிருந்து ஒருவரைவெளியேற்றுவதும் மற்றும் மரணத்திற்குப் பின் நிரந்தர நரகத்தைப் பெற்றுத்தரும் பெரும் ஷிர்க்காகும்.
கப்றுகளை வலம் வருவதும், அவைகளைக் கட்டுவதும் வழிகெட்ட பித்அத்தாகும். அவர்களது (மரணித்தவரது) திருப்தியை நாடி இவ்வாறு செய்வது முழுமையாக தடுக்கப்பட்டுள்ளது. இதுவும் ஷிர்கில் சேரும் செயல்களாகும். அக்கப்றுகளை சுற்றி வலம் வருவதன் மூலம் அவர்களது (மரணித்தவரது) திருப்தி, அவர்கள் அருள் புரிவார்கள், நமக்கு துன்பங்கள் வருவதை விட்டுத் தடுப்பார்கள் என எதிர்ப் பார்க்கப்படுகிறது. எனவே இது தடை செய்யப்பட்ட ஷிர்க்காகும்.
கேள்வி 2 : அவ்லியாக்களுக்காக நேர்ச்சைசெய்து, அவர்களுக்காக பிராணிகளை அறுத்து, அச்செயல்களின் மூலம் அவர்களிடம் நன்மையை எதிர்ப்பார்த்து துன்பங்களிலிருந்து நீங்கியிருப்பதற்கு பிரார்த்தப்பது பற்றிய இஸ்லாமீய தீர்ப்பென்ன?
|
|
Tuesday, 04 October 2011 08:04 |
|
o அடக்கம் செய்யப்பட் உடலை வெளியில் எடுக்கலாமா?
o பிரேதப் பரிசோதனை செய்யலாமா?
o பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மையத்தை குளிப்பாட்டலாமா?
|
|
Friday, 26 November 2010 07:32 |
|
நம்மில் பலர், தங்களையும் அறியாமல் அல்லாஹ்வுக்கு இணையாக மனிதர்களில் சிலரைக் கருதிக் கொண்டிருப்பதும், அல்லாஹ்வுக்குச் சமமான ஆற்றல் எல்லாமே மனிதர்களில் சிலருக்கு இருப்பதாக நம்பி, அதன் வழியிலே தங்களின் வாழ்வை அமைத்துக் கொண்டிருப்பதும் அதிர்ச்சி தரும் உண்மைகளாகும்.
அறியாமல் செய்த தவறுகளை அல்லாஹ் மன்னிப்பான் என்பது இணை வைத்தலுக்கு பொருந்தாது. ஏனெனில் அல்லாஹ் தனது திருமறையிலே,
"நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை மன்னிக்கவே மாட்டான்;. இது அல்லாத(மற்ற பாவத்)தைத் தான் நாடியவருக்கு மன்னிப்பான். எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்." (அல்குர்ஆன் 4:116) என்று கூறுகிறான்
ஆனால் இன்றைக்கு இஸ்லாம் மார்க்கத்தை அறிந்துக் கொள்வதற்கான சகல வழிகளும் திறந்திருக்கும்போது, தெளிவான பாதை கண் முன்னே பளிச்சிடும் போது, முன்னோர் கொண்டு வந்ததுதான் மார்க்கம் என்று கண்களை இறுக மூடிக் கொண்டு, செல்லுமிடம் பற்றி கவலைக் கொள்ளாமல் தவறான பாதையில்தான் பயணிப்பேன் என்று அடம் பிடிப்பவர்களை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான்.
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்; "நான் உங்களை தெள்ளத் தெளிவான ஆதாரத்தின் மீது விட்டுச் செல்கின்றேன். அதன் இரவும் பகலைப் போன்றது. எனக்குப் பின்னால் அதைவிட்டும் திசை மாறுபவர் அழிந்தவர் ஆவார்." (அறிவிப்பாளர்: இர்பால் பின் ஸாரயா; ஆதாரம்: இப்னுமாஜா, முஸ்னத் அஹ்மத்)
சில நாட்களுக்கு முன் பத்திரிக்கைகளில் வெளியான ஒரு சம்பவத்தைப் பார்த்து, 'இவர்களுக்கு எந்தளவுக்கு மார்க்கம் எடுத்துச் சொல்லப்படாமல் இருந்திருந்தால் இந்த நிலைக்கு ஆளாகியிருப்பார்கள்! இம்மையில் கஷ்டப்பட்ட இவர்கள் தங்களின் மறுமை வாழ்வையும் தண்டனைக்குரியதாக ஆக்கிக் கொண்டார்களே!
|
|
Thursday, 29 January 2009 08:54 |
|
M U S T R E A D தொழுகையை விட்ட என் சோதரனே! தொழுகையை உரிய நேரத்தில் நிறைவேற்றுவதில் அலட்சியமாக இருக்கும் என் நன்பனே! நீ உன் மனதில் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கின்றாய்.. உன்னைப் படைத்து உணவளித்து இரட்சித்துக் கொண்டிருக்கும் உன் றப்புக்கு ஸுஜூது செய்யும் அவசியம் கூட இல்லாதளவுக்கு - அவனது அருளே தேவையில்லாத அளவுக்கு நீ உன் விடயத்தில் தன்னிறைவு கண்டு விட்டாயோ! உனக்கு ஏற்படும் இன்னல்களில் துன்பங்களில் அவனது உதவியே தேவைப்படாதளவுக்கு நீ அவ்வளவு ஆற்றல் பெற்று விட்டாயோ!. அல்லது உன்னைப் பிடித்திருக்கின்ற கர்வமும் ஆணவமும் படைத்தவனுக்கு சிரம் சாய்க்கத் தடையாக இருக்கின்றதோ! நீ பெற்ற பதவியும் சொத்து செல்வங்களும் படைத்தவனை நினைத்துப் பார்க்க அவகாசம் தராதிருக்கின்றனவோ! அல்லது உன்னிடம் இருக்கின்ற ஷைத்தான் உன்னை ஆக்கிரமித்து இறைவனை மறக்கச் செய்து விட்டானோ! உனது மனச் சாட்சியை சாகடித்து விட்டு உன் உள்ளத்தில் குடியேறி உன்னை வழிகெடுத்து நரகில் தள்ளத் திட்டமிட்டிருக்கின்றானோ!
|
|
Sunday, 20 November 2011 08:15 |
|
ஒவ்வொரு பெற்றோரும் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை
குழந்தைகள் பொய் பேசும் பொழுது!
பொய் என்பது வேண்டுமென்றே தவறான தகவல்களைத் தருவதைக் குறிக்கும். ஒரு மனிதன் உண்மையல்லாத ஒன்றைக் கூறும் பொழுது, தான் கூறுவதை அவன் உண்மை என்று நம்புகின்றான் எனில், ஆனால் இங்கு அவன் ஒரு தவறைச் செய்து விடுகின்றான். இந்த விஷயத்தில் அவன் தவறான வழிகாட்டப்பட்டு விட்டான் அல்லது தவறான தகவல்களைப் பெற்று விட்டான் என்றே பொருள் கொள்ள வேண்டும், அவன் பொய்யானதைக் கூறவில்லை என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.
அதிகமான குழந்தைகள் தங்களது நினைவுப் பகுதிகளில் எதனை நினைக்கின்றார்களோ அதனை அவர்கள் பேச ஆரம்பித்து விடுகின்றார்கள். அவர்கள் எதனை நினைத்தார்களோ அதனை அங்க அசைவுகளோடு, அதனை உண்மையிலேயே நடந்தவாறு அதனை விவரிக்க ஆரம்பித்து விடுகின்றார்கள். விரிவான நம்முடைய பார்வைக்கு இவைகள் பொய்கள் அல்ல.
ஒரு குழந்தையானது தன்னால் எதனையும் சரி எது அல்லது தவறு எது என்பதையும் இன்னும் எது கற்பனையானது அல்லது எது உண்மையானது எனப் பிரித்தறியக் கூடிய தன்மையைப் பெற்றிருக்கா விட்டாலும், அதற்கென ஒரு பார்வை, கனவு, எதிர்பார்ப்பு மற்றும் விருப்பு ஆகியவற்றைப் பெற்றிருக்கும். இதனடிப்படையில் அவை பேசக் கூடியவைகள் பொய்கள் என்பதை விட, பேசக் கூடியவர்கள் குழந்தைகள் என்றே கணிக்க வேண்டும். குழந்தைகளிடம் மட்டுமே இருக்கக் கூடிய இந்தத் தனித்துவமான இந்தக் குணங்கள், அவர்களுடைய வாழ்வில் ஒரு அங்கம் என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
|
|
Sunday, 20 November 2011 07:16 |
|

பருவமானவர்கள் தமது உரிமைக் கோரிக்கைகள் வரம்பை மீறிவிட்டனவென்று அறிவதெப்படி?
ஒருவழி இருக்கிறது. உங்கள் கோரிக்கைகள் நியாயமற்றவை என்று கருதினால் சற்று பொறுத்துச் சிந்தித்துப் பெற்றோரின் இடத்தில் நீங்கள் இருந்தால் எப்படி அணுகிச் செயல்படுவீர்களென ஆராயுங்கள்.
நீங்கள் பெற்றோரின் ஸ்தானத்திலிருந்து பார்க்கும் போது ஒன்றும் இதற்குச் செய்து கொள்ள இயலாது என்று கருதுவீர்களாயின் நீங்கள் கோரியது அதிகப்படியானது என்ற முடிவுக்கு எளிதில் வரலாம். ஆகவே எழுந்துள்ள பிரச்சினைகளுக்குக் காரணமானவர் பெற்றோர் அல்லர் நீங்கள் தான்.
எமது பாட்டனார் காலத்திலோ அல்லது எமது கிராம மக்களிடையேயோ இத்தகைய பிரச்சினை இருக்கவில்லை ஏன்?
இரண்டு காரணங்கள்!
முதலாவதாக இத்தகைய முரண்பாடுகள் வெளிவர பெற்றோருடன் ஒளிவு மறைவின்றி விஷயங்களை அணுக வேண்டும். முன்னாளில் கிராம மக்களின் அதிகாரப் பிரயோகம் எல்லாவித எழுச்சியையும் அடக்கிக் கட்டுப்படுத்தக் கூடியது. இதனால் பருவமானவரின் புரட்சிகள் அனைத்துமே நசுக்கப்பட்டு விடும்.
|
|
Thursday, 14 June 2012 06:25 |
|
பலமுறை எடுத்துச் சொல்லியும் மசியாத குழந்தைகளை என்ன செய்வது?
டாக்டர். ராஜ்மோகன்
"டிவி பார்க்காதேன்னு சொல்லி முடிக்கிறதுக்குள்ள மூணு சேனல் மாத்திடறான். ஃபிரிட்ஜை திறக்காதேடான்னா அதைத்தான் செய்வேன்னு அடம்பிடிக்கிறான்... தண்ணியிலே விளையாடாதே, சளி பிடிக்கும்னு கரடியா கத்துனாலும் காதே கேட்காதமாதிரி தண்ணியில விளையாடுறா என் பொண்ணு... எதை செய்யாதேன்னு சொன்னாலும் அதைத்தான் செய்வேன்னு அடம்பிடிக்கிறா...
பெரியவங்க பேசும்போது வாயைப் பார்த்துக்கிட்டு நிக்காதேன்னு எத்தனையோ முறை சொல்லியாச்சு... திருந்தறதாவே இல்லை... இவங்களை எப்படி வழிக்குக் கொண்டுவர்றதுன்னே தெரியலை" - பெரும்பாலான பெற்றோரின் புலம்பல் இதுதான்.
|
|
Thursday, 02 February 2012 07:42 |
|

உடலுறவின்போது விலகிக் கொள்ளுதல் அப்பட்டமான மோசடியாகும்:
[ நரம்புகள் நல்ல உச்சஸ்தானத்தில் துடிப்புடன் இருக்கும்போது விலகிக்கொள்வது பெண்ணுக்கு ஏமாற்றம் மட்டுமல்ல, ஆனந்தத்தை எட்டிப்பிடிக்கும் நேரத்தில் தலைகீழாக குப்புறத் தள்ளிய மாதிரியும் இருக்கும். இவ்வாறு தொடர்ச்சியாக செய்துவந்தால் நரம்புத்தலர்ச்சி நோய் சாதாரணமாகவே ஏற்பட்டுவிடும்.
மேலும் சரீர இன்பம் அனுபவிக்கும் விஷயத்தில் மனைவிக்கு ஆவேசத்தையும், ஆர்வத்தையும் ஊட்டிவிட்டு, அவள் திருப்தி அடையக்கூடிய ஆனந்தநிலையை அடையவிடாமல் தடுத்துவிட்டால் இந்த ஏமாற்றம் அவளுடைய தேகநலனை மட்டுமல்ல ஆன்மாவுக்கே தீங்கிழைத்துவிடும்.
ஆணின் பசியைத் தீர்த்துக்கொள்ள மனைவியின் உடம்பு ஓசியில் கிடைப்பதால் அதன் அருமை பெருமை சில மண்டுகளுக்குப் புரிவதில்லை.]
பெண்கள் கர்ப்பம் தரிக்காமல் இருக்க கையாளப்படும் பல முறைகளில் ஆணின் ‘உயிரணு’ வெளியாகும் அந்த உச்ச நேரத்தில் விளகிக்கொள்வது! இந்த உபாயத்தை அதிகமாக பின்பற்றக்கூடியவர்கள் பிரெஞ்சுக்காரர்கள் என்று ஒரு குறிப்பு உண்டு. அதனாலேயே இதை பிரெஞ்சு முறை என்று கூட அழைப்பார்கள். இது சரியான முறைதானா? பார்ப்போம்!
|
|
Monday, 20 May 2013 06:42 |
|
வீடுகள் அமைதிக்குரியதாகவும் நிம்மதிக்குரியதாகவும் அமைய வேண்டுமா?
உங்கள் வீடுகளில் உங்களுக்கு அல்லாஹ் நிம்மதியை ஏற்படுத்தினான். (16:80) வீடுகள் அமைதிக்குரியதாகவும் நிம்மதிக்குரியதாகவும் அமைய வேண்டும் என்றே எல்லோரும் எதிர்பார்க்கின்றனர். வீட்டை விட்டு வெளியில் செல்லக் கூடிய எவரும் தங்களுடைய வேலைகளை முடித்து விட்டு வீடு திரும்பி அமைதி பெற வேண்டும் என்றே விரும்புகின்றனர்.
வீட்டுக்குள் இருப்பவர்களாலோ அயலவர்களாலோ அல்லது சூழலில் உள்ளவர்களாலோ எந்த பிரச்சினையுமில்லாமல் நிம்மதியாக இருக்க வேண்டும் என்றே பெரிதும் விரும்புகின்றனர்.
நிம்மதி மற்றும் அமைதியை மனிதன் விலைகொடுத்து வாங்க முடியாது. அமைதியான வாழ்வை, நிம்மதியான சுவாசத்தை அவனே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கான வழிகளை இஸ்லாம் காட்டித் தந்துள்ளது.
|
|
Friday, 19 October 2012 21:29 |
|
அவர் ஓர் இஸ்லாமிய சொத்து
[ குடந்தை-மேலக்காவேரியில் ஒரு மேடை சொற்பொழிவில்... சகோ.மவுலவி பிஜே அவர்களை நேரில் சந்தித்து சலாம் சொல்லி அருகருகே மேலக்காவேரி பள்ளியில் இஷா தொழுத அன்று (2002) அவர் மூலமாக அல்லாஹ் தந்த உத்வேகம்தான் புஹாரி ஹதீஸ் ஏழு வால்யுமையும் ஒரே நேரத்தில் என்னை வாங்க வைத்தது.
அன்று அவர் கூட்டத்தில், 'யார் யாரிடம் ஏதாவது ஒரு குர்ஆன் தர்ஜுமா உள்ளது, கைதூக்குங்கள்' என்றார். நான் உட்பட ஏராளமானோர் கை தூக்கினோம். 'மாஷாஅல்லாஹ்' என்றவர், 'வாங்காதவர்கள் யார் என்று கேட்டு இருக்கனுமோ' என்று கூறி விட்டு.. அடுத்து, 'இம்மாதம் வெளிவந்த புகாரி ஏழாவது பாகம் யாரிடம் உள்ளது..?' என்றார்..? எவரிடமும் இல்லை. 'சரி, மற்ற ஆறு பாகம் உள்ளவர்கள்..?' எவரிடமும் இல்லை. இப்படியே குறைத்து குறைத்து வந்து 'ஒரு பாகமாவது யாரிடம் உள்ளது..?' என கேட்க ஒரு சிலர் மட்டும் கை தூக்கினர்.
இந்த மாதிரியான மோசமான நிலையிலா நாம் இருக்கிறோம்... என்று அவருக்கு வந்த நியாமான வருத்தத்தில்... முன்வரிசையில் அமர்ந்து இருந்த நான் வெட்கி தலைகுனியும் அளவுக்கு அடுத்து அவரின் உரை என்னை மிகவும் பாதித்தது.
ஆமாம்..! அவர் உரையின் படி... நான் சினிமாவுக்கு செலவழித்துள்ளேன். காமிக்ஸ், நாவல், விகடன், குமுதம், தினதந்தி, தினமணி, தி ஹிந்து, எக்ஸ்ப்ரஸ்... என்று எதற்கெல்லாமோ... எவ்வளவோ செலவு செய்து உள்ளேனே..! அந்த பணத்தில் எழென்ன... எழுநூறு பாகம் நான் வாங்கி இருக்கலாமே..! ஏன் எனக்கு வாங்க மனம் வரவில்லை..? மறுமைக்காக வாழும் எண்ணம் எனக்கு இல்லையா..? மார்க்கத்தை அறியும் ஆவல் எனக்கு இல்லையா..? இதுபோல யாராவது வந்து எதயாவது மார்க்கம் என்று சொன்னால், 'சொல்பவர் சொல்வது சரியா' என்று எப்படி நான் உரசிப்பார்ப்பது..?
அதே ஊட்டத்தில்... அடுத்த நாளே... குடந்தையில் அலைந்து புஹாரி கிடைக்காமல்... தஞ்சாவூர் ஹாஜியார் புக் டிப்போ சென்று ஏழு வால்யுமையும் ஒரே நேரத்தில் வாங்கி தூக்க முடியாமல் தூக்கி வந்தேன். அடுத்து, முஸ்லிம், திர்மிதி என்று என்னை சரியான பாதையில் இவரின் இந்த மனதை தொட்ட உரை மூலம் என்னை சரியான பாதையில் பயணிக்கவைத்த இறைவனுக்கே புகழனைத்தும்.
அவர் அடிக்கடி சொல்லும் அறிவுரையில் எனக்கு மிகவும் பிடித்தது யாதெனில்... "நான் சொல்கிறேன் என்பதால் அப்படியே நம்பி பின்பற்றாமல், நீங்களும் கற்று ஆய்வு செய்து சரிபார்த்து விட்டு விளங்கி பின்பற்றுங்கள்" என்பதே..!
ஒருவர் மார்க்க விஷயத்தில் முனைந்து கஷ்டப்பட்டு பல நாட்கள் பல நூல்களை ஆய்வு செய்த பின்னரும், இப்படியும் சொல்ல ஒரு கர்வமற்ற மனப்பக்குவம் வேண்டுமே. மாஷா அல்லாஹ்.
'குர்ஆன் ஹதீஸ் மட்டுமே தனது வாழ்வியல் மார்க்கம், என்று யாரெல்லாம் எனது தலைமுறையில் வாழ தலைப்பட்டனரோ, அவர்கள் ஒவ்வொருவரின் வாழ்வினுள்ளும் மார்க்க ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தியவர் மவுலவி சகோ.பீஜே' என்று கூறினால் அது மிகை அல்லதான்..!]
|
|
Tuesday, 03 April 2012 15:05 |
|
சொர்க்கத்தில் ஓர் வசந்த மாளிகை
இஸ்லாமியர்களின் பார்வையில் இவ்வுலகம் விரைவில் அழியக்கூடியதும், நிலையில்லாததுமாகும். ஒவ்வொரு இஸ்லாமியர்களும் இந்த உலகை, உலக வாழ்க்கையை இவ்வாறே மதிப்பீடு செய்ய வேண்டும் என இறைவனும், இறைத்தூதரும் நமக்கு கற்றுத்தருகிறார்கள்.
நிலையில்லா இவ்வுலகில் மனிதர்கள் பல்வேறு ஆசைகளுடனும், கனவுகளுடனும் வாழ்கிறார்கள். பலர் தங்கள் ஆசையை அடைவதற்காக பெரும் முயற்சிகளை மேற்கொள்ளவும் செய்கிறார்கள். அவ்வாறு ஒவ்வொரு மனிதர்களும் விரும்பும் ஆசைகளுள் நமக்கென ஒரு இல்லத்தை எழுப்ப வேண்டும் என்பதும் ஒன்று என்பதை நாம் நன்கறிவோம்.
பலரும் எப்படியாவது இந்த உலகில் ஒரு (வீட்டை) மாளிகையை கட்டிவிட வேண்டும் என்ற வேட்கையோடு அலைகின்றனர். இந்த எண்ணத்தை நிறைவேற்றிட எண்ணிலடங்கா துன்பத்தை அடைகின்றனர். பலர் வெளிநாடுகளில் அவதிப்படுவதற்கான காரணங்களில் இந்த இலட்சியமும் ஒன்றே.
இவ்வுலகில் நமக்கு சொந்தமாக ஒரு மாளிகை இருப்பதின் மகிமையை நாம் உணர்வதாலே அதற்காக எதையும் சந்திக்க, சகிக்க தயாராக உள்ளோம். மார்க்க விதிகளை மீறாமல் ஒருவர் இவ்வாறு ஒரு இல்லத்தை எழுப்புகிறார் என்றால் அதை குற்றம் கூற முடியாது.
அழியும் இந்த உலகிலேயே நமக்கு சொந்தமாக ஒரு மாளிகை வேண்டும் எனில் நாம் என்றென்றும் தங்கக்கூடிய, நிலையான மறுமையில் நமக்கென்று ஒரு மாளிகை வேண்டாமா? என்று சிந்திக்க வேண்டும்.
|
|
Wednesday, 02 November 2011 17:11 |
பையத்தா? மையத்தா?
தெள்ளத் தெளிவாக குர்ஆனுக்கும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நடைமுறைக்கும் முரணாக மார்க்கத்தின் பெயரால் முஸ்லிம்களிடையே பிர்- முரீது வியாபாரம் நடந்து வருகிறது. அந்த வியாபாரத்தில் இரகசியம்! இரகசியம்! என்று சொல்லியே மக்களை ஏமாற்றி வருகிறார்கள். அந்த ரகசியம் என்ன? என்பதை இந்தச் சம்பவம் அம்பலப்படுத்துகிறது. யாரையும் கேவலப்படுத்தும் நோக்கத்துடன் அல்ல. மக்களுக்கு சத்திய மார்க்கத்தை உணர்த்த இக்கட்டுரை இடம் பெறுகிறது.
எனது மாமனார் வீட்டிற்கு எதிர் வீட்டில் உள்ள பெரியவர் ஒருவர் முரீது பெற்றுள்ளார் எனத் தெரிந்து அவரை சந்தித்து முரீது பெற்றுள்ளதைப் பற்றி விசாரித்தேன். அப்பொழுது அவர் சொன்னதாவது;
‘தம்பி’ நான் தற்போது கலவைக்கு 1 கீ.மீ. முன்னுள்ள அகரம் என்னும் காலனியில் குடியிருக்கும் ஷைகு அப்துல் கரீம் காதிரி என்பவரிடம் முரீது பெற்றேன். எனக்கு ஒரு வருடம் முன்பே என் மூத்த மகன் முரீது வாங்கினான். நான் என் மகனிடம் ஷைகு என்ன சொல்லிக் கொடுத்தார் எனக் கேட்டேன்.
|
|
Wednesday, 17 October 2012 05:34 |
|
அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஆளுமை
அது கி.பி. ஆறாம் நூற்றாண்டு!
உலகின் மையப்பகுதியான அரேபிய தீபகற்பத்தில் ஒரு பகுதி தனித்து விடப்பட்டிருந்தது. அண்டை நாடுகளை வேட்டையாடி அடிமைப்படுத்துவதில் மும்முரமாக இருந்த ரோம, பாரசீகப் பேரரசுகள்கூட அந்தப் பகுதியைப் பற்றி சிந்தித்தது கிடையாது. காரணம் அங்கு வசித்த மக்களும் அவர்கள் வாழ்ந்த சூழலும். அந்த நகரம் மக்கா.
அந்த மக்கள் காட்டுமிராண்டிகளாக, கல்வியறிவற்றவர்களாக, நாகரீகம் என்றால் என்னவென்றே தெரியாதவர்களாக வாழ்ந்து வந்தனர். கொலை, கொள்ளை, மது, விபச்சாரம், நிர்வாண வழிபாடுகள், பரம்பரைச் சண்டைகள் என்று அவர்களது வாழ்வின் எல்லா நிலைகளிலும் தீமைகளும் அனாச்சாரங்களும் நிரம்பி வழிந்தன.
ஆனால் வெறும் 23 ஆண்டுகளில் அம்மக்களைப் பண்பட்டவர்களாக, இன்றைய நவீன உலகிற்கு நாகரிகத்தின் அடிப்படையக் கற்பிக்கக் கூடியவர்களாக, உலகின் பெரும்பகுதியை ஆட்சி செய்யும் தகுதியுடையவர்களாக மாற்றிக்காட்டினார் ஒரு தனி மனிதர்! அவர்தான் இறைவனின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
|
|
Tuesday, 02 October 2012 21:06 |
|
நெஞ்சை நிமிர்த்தி நடக்காதீர்!
மௌலானா செய்யது அலிம் அஷ்ரப் ஜெய்ஸி
குர்ஆன் நோக்கம் மனிதனை சிறந்தவனாக்குவதாகும். ஸயின்ஸ் டெக்னாலஜி அறிவியல் தொழில் நுட்பம் இதனை செய்ய இயலாது.
பறவைகளை விட வேகமாக பறக்கலாம். கடலில் மீனை விட வேகமாக நீந்தலாம். நீர் மூழ்கி கப்பல், சூப்பர் சோனிக் விமானம் தொழில் நுட்ப அறிவியல் கற்றுத் தரும்.
பூமியில் மனிதனாக வாழ்வதற்கு குர்ஆன், சுன்னத் கற்றுத் தரும்.
மனிதனின் உச்சி பறப்பதல்ல, நீந்துவதல்ல. மனிதனின் மேன்மை பூமியில் அல்லாஹ்வின் அடிமையாக வாழ்வது, நடப்பதாகும்.
சூரா புர்கான் 25, வசனம் 63 "வ இபாது ரஹ்மானில்லதீன யம்ஷ§ன அலல் அர்னி ஹவ்னன் வ இஜா காத்தப ஹ§முல் ஜாஹிலூன காலூ ஸலாமன்"
இந்த ஆயத்தில் சொல்லப்பட்டவர்கள் சிறப்பான அடிமைகள். அல்லாஹ் தன்னுடன் தொடர்புபடுத்திக் கூறுகிறான், "இபாதுர் ரஹ்மான்."
"பூமியில் பணிவுடன் நடப்பவர்கள் சிறப்பானவர்கள்." நெஞ்சை நிமிர்த்தி நடக்கமாட்டார்கள் ஆணவம், அகந்தை இல்லை. பார்வையை தாழ்த்தி, தலையை தாழ்த்தி நடப்பார்கள். நடப்பவர்கள் இன்று குறைவு. மோட்டார் பைக் ஓட்டுபவர் பாதசாரிக்கு வழிவிட வேண்டும். ஆயத் அமுலாகும். தேவையற்ற ஹார்ன் சத்தம் "சைலண்ட் ஜோன்" பகுதியில் கட்டுப்பாடு, சேறு பாதசாரி மீது வீசாமல் அடங்கி நடப்பதாகும்.
|
|
|