|
பழமை காலம் பொற்காலமா? |
|
|
|
Wednesday, 23 May 2012 05:47 |
|

பழமை காலம் பொற்காலமா?
டாக்டர் ஏ.பீ. முஹம்மது அலி, ஐ,பீ.எஸ்(ஓ)
வயதானவர்களுடன் இளைஞர்கள் தனிமையில் உரையாடினால் அவர்களுடைய ஐம்பது வருட கால அனுபவங்கள் சொல்லி அவைகளெல்லாம் மிக சிறந்தவை என்றும் , இன்றைய நடப்பினை தரம் குறைந்தது என்றும் கதை கதையாக தன் பொக்கை வாயினை ஆசைப் போட்டுக் கொண்டு கூறக் கேட்கலாம்.
ஒருவருடைய மனைவிகூட தன் பிறந்த வீட்டில் குறைந்த வசதி இருந்தாலும் அன்டிய கணவர் வீட்டிற்கு வந்தாலும், தன் வீட்டுப் பெருமையினை வாய் நிறைந்து சொல்வதினைக் காணலாம். ஆனால் அக்கரை எல்லாம் பசுமையில்லை, இன்றைய உலகம் தான் இனிமை, பசுமை நிறைந்தது என்ற கருத்துடன் இந்தக் கட்டுரை வரையப் பட்டுள்ளது.
வயதானவர்கள் தங்கள் இளமைக் காலத்தினை சிறந்தது என்று சொல்வதிற்கு கீழ்க்கண்ட காரணங்களை கூறுகின்றனர்:
1) அந்தக் காலத்து கூரைப் பட்டுசேலை சிறந்தது என்று பெட்டியில் மூடி மூடி வைத்து பேத்திகளிடம் பீற்றிக் கொள்ளும் பெண்களிடம் இன்றைய ஐம்பது டிசைன் கொண்ட ரூபாய் ஐம்பது ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை மதிப்புள்ள பரம்பரா பட்டுச் சேலை போன்று அன்று தயார் செய்ய முடிந்ததா என்று கேளுங்கள் இல்லை என்பார்கள்.
|
|
Read more...
|
|
இருபதாண்டு திருமண வாழ்வு |
|
|
|
Wednesday, 23 May 2012 06:32 |
|
இருபதாண்டு திருமண வாழ்வு
[ பலதார மணம் அருமருந்து. உடல் வலிமை, பண வலிமை மிக்கவர் இரண்டாவது, மூன்றாவது திருமணத்துக்கு ஒப்ப வேண்டும். வெட்கப்பட ஏதுமில்லை. இல்லையேல் கள ஒழுக்கம் புரளும். தவறான பாலியல் உறவுகள் பரவும். தோல், மர்ம உறுப்பு நோய்கள் வாழ்வை கண்ணியத்தை சீரழிக்கும். ஆண் சம்பாதிக்க வேண்டும்.
மகளிர் பூரண நிறைவுடன் குடும்ப பராமரிப்பை ஏற்கலாம். இருவரும் வெளியே சென்று சம்பாதிப்பது, வலம் வருவது குடும்ப நிம்மதியை கெடுக்கும். போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து. பரக்கத் வரும். சுகம் வாழ்க்கையில் கிட்டும். குடும்பக் கட்டுப்பாடு, சிறுகுடும்ப யோசனை மேற்கத்திய தரித்திரச் சித்தாந்தம். இறைநம்பிக்கை பாழாகும். இறை பாதுகாப்பிலிருந்து வெளியேற நேரிடும்.]
|
|
Read more...
|
|
அல்லாஹ்வுக்காக அழகிய கடன் வழங்குவோம் |
|
|
|
Sunday, 14 June 2009 07:45 |
|

அல்லாஹ்வுக்காக அழகிய கடன் வழங்கும் திட்டம்
''...தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுங்கள்! உங்களுக்காக நீங்கள் முற்படுத்தும் நன்மையை அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்வீர்கள். அதுவே சிறந்தது. மகத்தான கூரி. அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.'' (திருக்குர்ஆன்.73:20)
''இஸ்ரவேலர்களில் ஒருவர் மற்றொருவரிடம் தமக்கு ஆயிரம் தங்கக்காசுகள் கடனாகக் கேட்டார். கடன் கேட்கப்பட்டவர் 'சாட்சிகளை எனக்குக் கொண்டு வா! அவர்களைச் சாட்சியாக வைத்துத் தருகிறேன்' என்றார். கடன் கேட்டவர் 'சாட்சிக்கு அல்லாஹ்வே போதுமானவன்!' என்றார். 'அப்படியானால் ஒரு பிணையாளியை என்னிடம் கொண்டுவா!' என்று கடன் கேட்கப்பட்டவர் கூறினார். அதற்குக் கடன் கேட்டவர் 'பிணை நிற்க அல்லாஹ்வே போதுமானவன்' என்று கூறினார்.
கடன் கேட்கப்பட்டவர் 'நீர் கூறுவது உண்மையே!' என்று கூறி, குறிப்பிட்ட தவணைக்குள் திருப்பித் தர வேண்டும் என்று ஆயிரம் தங்கக் காசுகளை அவருக்குக் கொடுத்தார். கடன் வாங்கியவர் கடல் மார்க்கமாகப் புறப்பட்டு, தம் வேலைகளை முடித்துவிட்டு, குறிப்பிட்ட தவணையில் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்பதற்காக வாகனத்தைத் தேடினார். எந்த வாகனமும அவருக்குக் கிடைக்கவில்லை. உடனே, ஒரு மரக்கட்டையை எடுத்து, அதைக் குடைந்து அதற்குள் ஆயிரம் தங்கக் காசுகளையும் கடன் கொடுத்தவருக்கு ஒரு கடிதத்தையும் உள்ளே வைத்து அடைத்தார்.
|
|
Read more...
|
|
ஈமானின் ஒளி விளக்கு |
|
|
|
Saturday, 18 July 2009 06:36 |
|
மவ்லானா மவ்லவி K.செய்யிது முஹம்மது மதனீ D.P.S
களா கதர் [அல்லாஹ்வுடைய ''களாகதர்'' என்று சொல்லக்கூடிய ''விதி''யை ஒவ்வொரு முஸ்லிமும் உறுதியாக நம்பிக்கை கொள்ளவேண்டும்.] ஈமானின் ஆறாவது பர்ளு களாகதர் பற்றி ஈமான் கொள்வதாகும். களாகதர் என்ற அரபி வார்த்தைக்கு நிர்ணயம் என்றோ விதி என்றோ தமிழில் விளக்கம் கூறலாம். இன்னும் இதைப்பற்றி தெளிவாகக் கூறுவதென்றால் அல்லாஹ் தஆலாவால் அவனியி;ல் படைக்கப்பட்ட அனைத்திற்கும் ஒரு நிர்ணயத்தை(விதியை) வரையறுத்துவிட்டான். மனிதர்கள் முதல் உலகில் வாழும் ஜீவராசிகள் வரை அனைவற்றிற்கும் பிறப்பு முதல் இறப்புவரை அவற்றிற்கு வழங்கப்படும் ரிஜ்கு, ஏற்றத்தாழ்வுகள்,வெற்றிதோல்விகள், அவன் ஈமான் கொள்வது அல்லது ஈமான் கொள்ளாமலிருப்பது மற்றும் ஒவ்வொரு வினாடியும் ஏற்படும் நிகழ்வுகள் அனைத்தைப்பற்றியும் அல்லாஹ் ஒரு நிர்ணயத்தை(விதியை) தெளிவாக விதித்துவிட்டான். இதனையே களாகதர் என்று அரபியில் கூறுகிறோம். எனவே ஒரு மனிதன் அல்லது மற்ற உயிரினங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தி;ல் பிறக்கும் அல்லது இறக்கும் என்றோ, அல்லது ஒரு குறிப்பிட்ட இன்ன நாளில் பரம ஏழை ஒருவன் பணக்காரனாகிவிடுவான் என்றோ அல்லது பணக்காரன் பரம ஏழையாகிவிடுவான் என்றோ அல்லாஹ் விதித்து விட்டால் அச்செயல் நடப்பதை எத்துனை பெரிய சக்தியாலும் மாற்ற இயலாது. அது நடைபெற்றே தீரும். |
|
Read more...
|
|
விபச்சார குற்றத்திற்கு மன்னிப்பு உண்டா? |
|
|
|
Tuesday, 22 May 2012 21:42 |
|
விபச்சார குற்றத்திற்கு மன்னிப்பு உண்டா?
கேள்வி : திருமணம் செய்து கொண்ட ஆணும், திருமணம் செய்து கொண்ட பெண்ணும் அறியாமையாலும் பெரும்பாவம் என்று தெரியாத காரணத்தினாலும் விபச்சாரத்தில் ஈடுபட்டுவிட்டார்கள். இந்த விபச்சாரம் மரணதண்டனை கிடைக்கக்கூடிய பெரும்பாவம்.
தண்டனை பெறாமல் இருவரும் மரணமடைந்து விட்டார்கள். இருவரும் மணரமடைந்த பின் இவ்விஷயம் இருவரின் பெற்றோர்களுக்கும தெரிய வந்தன. பெண் கணவனுக்கும், கணவன் மனைவிக்கும், இரு பெற்றோர்களும் எப்படிப்பட்ட பிரார்த்தனை செய்தால் அந்தப் பாவத்தை இறைவன் மன்னிப்பான்?
திருமணம் செய்து கொண்ட ஆணும், திருமணம் செய்து கொண்ட பெண்ணும் அறியாமலும், விபச்சாரம் பெரும் பாவம் என்பதை தெரியாமலும் விபச்சாரத்தில் ஈடுபட்டு விட்டார்கள். எப்படிப்பட்ட பிரார்த்தனையால் இந்த பெரும் பாவம் இறைவனால் மன்னிக்கப்படும்?
|
|
Read more...
|
|
"கெடு" முடிந்துவிட்டால்.... |
|
|
|
Thursday, 17 May 2012 05:34 |
|

கெடு முடிந்துவிட்டால்...
தாழை ஷேக்தாஸன்
[ மனிதன் குழந்தையாய்ப் பிறப்பதற்கு முன்பே அவனது ஆட்டம் பாட்டங்களுக்கு காலக்கெடுவை அல்லாஹ் நிர்ணயம் செய்து விட்டான். மனிதர்களே! நீங்கள் மய்யித்துக்களைத் தான் அடக்கம் செய்ய முடியும். மரணத்தை அடக்கம் செய்ய முடியாது. சடலங்களைத்தான் புதைக்க முடியுமே தவிர சாவை புதைக்க முடியாது.
விஞ்ஞானியால் சுனாமியை ஏன் நிறுத்த முடியவில்லை? இறைவன் வைத்திருந்த கெடு கடலடிக்குள் முடிந்து விட்டது. மண் அடுக்குகள் தளர்ந்து விட்டது. எல்லாம் இறைவன் செயல், அவன் போட்ட கெடு முடிந்ததால் நடந்தது. நாம் வாழும் இந்த பூமிப்பந்தும்கூட ''கெடு'' முடியும் அந்த ஒரு நாளில் வெடித்துச் சிதறத்தானே போகிறது.
மனிதர்களே! சிந்தித்துப் பாருங்கள். உலக வாழ்க்கை மெல்லினமானது. மறுமையே வல்லினமானவை என ஏன் இன்னும் நீங்கள் உணராமல் படைத்தவனை மறந்து பள்ளிகளை பேச்சு மேடைகளாக்கி வாழும் உங்களுக்கு அறிவு எங்கே போனது?
இருந்தவருக்கு கெடு முடிந்து விட்டது, இறந்து விட்டார். இனி, புதைக் குழிக்குள் போயே தீர வேண்டும். ஆறடி நிலம் மட்டுமே சொந்தமாகிவிடுகிறது. அந்த ஆறடி நிலம் கூட நிரந்தரமல்லவே! சில ஆண்டுகளுக்குப்பிறகு புதைத்த இடத்தில் மறுபடியும் பள்ளம் தோண்டப்பட்டு வேறொருவரை அடக்கம் செய்து விடுகிறோம்.]
|
|
Read more...
|
|
திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம் |
|
|
|
Monday, 21 May 2012 16:16 |
|

திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்
நியாயமான அரசாங்க சேவைகளைப் பெறுவதற்குக் கூட இன்று லஞ்சம் கொடுக்காமல் எதையும் நாம் சாதித்துவிட முடியாது என்ற சூழ்நிலையில்தான் நாம் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். கொடுக்கப்பட்டது எவ்வளவு லஞ்சம் என்ற வகையில்தான் நாம் அடுத்தவர்களோடு நம்மை ஒப்பிட்டுப் பார்த்து ஆறுதல் அடைய வேண்டியிருக்கிறது.
லஞ்சம் வாங்கி வாழ்பவனே பிழைக்கத் தெரிந்தவன் என்ற இந்திய மனப்பான்மைக்கு நாம் ஒவ்வொருவரும் நம்மை அறியாமலே மாறிக்கொண்டு இருக்கிறோம்! என் வேலை எனக்கு சீக்கிரம் முடிய வேண்டும்! அதற்கு நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் எவ்வளவு லஞ்சம் வேண்டுமானாலும் கொடுப்பேன் என்றுதான் ஒவ்வொருவரும் இந்திய நேர்மையில் இருந்து ஒவ்வொரு செங்கலாக உருவிக் கொண்டிருக்கிறோம்!
என்றாவது ஒட்டுமொத்தமாக தலையில் விழும்போது காப்பாற்ற யாருமே இருக்கப்போவதில்லை என்பது மட்டும் நிதர்சனம்! சரி.. இந்த கதையெல்லாம் வேணாம் தலைப்புக்கு வாங்கன்னு சொல்றீங்களா? அதுவும் சரிதான்... சமீபத்தில் சிங்கையில் இருந்து இந்தியா சென்றிருந்தேன், என்னைப்போல தென் மாவட்டங்களில் உள்ளவர்களுக்கெல்லாம் திருச்சி விமான நிலையம்தான் முதல் தேர்வு!
|
|
Read more...
|
|
அமெரிக்க முஸ்லிம் பெண்மணி வென்றெடுத்த வெகுமதி! |
|
|
|
Monday, 21 May 2012 16:03 |
|
அமெரிக்க முஸ்லிம் பெண்மணி வென்றெடுத்த வெகுமதி!
[ சூசன் பஷீர் - எப்பொழுது இவர் முஸ்லிமாக மாறி, ‘ஹிஜாப்’ அணிந்து வேலைக்குச் செல்லத் தொடங்கினாரோ, அன்று முதல் இவருடன் பணியாற்றியவர்கள் இவரைப் பார்த்துக் கேலியும் கிண்டலும் செய்யத் தொடங்கினர்.
சூசனின் மேலதிகாரி ஒரு நாள் அவரருகில் வந்து நின்று, ஆத்திரத்துடன் அவருடைய ஹிஜாபைப் பிடித்திழுத்தார்! அவ்வளவுதான்! பெண் சிங்கம் கர்ஜிக்கத் தொடங்கிற்று! AT&T நிறுவனத்தை எதிர்த்துக் குரலெழுப்பினார் சகோதரி சூசன் பஷீர்!
"இந்த மேலதிகாரியைப் பணி நீக்கம் செய்யவேண்டும். அல்லது என்னை இந்த அலுவலகத்திலிருந்து வேறிடத்திற்கு மாற்றவேண்டும்." நியாயமான கோரிக்கை. இவற்றுள் ஒன்றும் நிகழவில்லை. ஆண்டுச் சம்பளம் 70,000 டாலர் கிடைத்துவந்த தனது பணியைத் தொடர மனமின்றி, ஒன்பது மாதங்கள் வீட்டில் இருந்துவிட்டார் சூசன். அதன் பின் ஒரு நாள் அலுவலகம் வந்தவருக்கு, தன்னையே பணி நீக்கம் செய்த எழுத்தாணை ஆயத்தமாக இருந்தது!
அடுத்து சூசன் செய்தது, நீதிமன்ற முறையீடு! இதைச் செய்துவிட்டு, அமெரிக்காவின் கடைக்கோடிக்குப் போய், ‘ஆன்கரேஜ்’ என்ற ஊரில் ஒரு சிறு பணியில் அமர்ந்து, தனது வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறார்.
வந்தது ‘ஜாக்சன் கவுன்டி’ நீதித் துறையின் சட்டத் தீர்ப்பு! AT&T நிறுவனம் சகோதரி சூசனுக்கு ஐந்து மில்லியன் டாலர் இழப்புத் தொகை கொடுக்கவேண்டும்! அது மட்டுமன்று. சூசன் இழந்த வேலைக்குப் பகரமாக அந்த நிறுவனம் 1,20,000 டாலர் சூசனுக்குக் கொடுக்க வேண்டும்; இது தவிர, வழக்கறிஞருக்குக் கொடுக்கவேண்டிய தொகை பற்றிப் பின்னர் அறிவிக்கப்படும்!]
|
|
Read more...
|
|
மனிதா! உன்னுடைய எதிரியைத் தெரிந்து கொள் |
|
|
|
Monday, 21 May 2012 17:39 |
|
மனிதா! உன்னுடைய எதிரியைத் தெரிந்து கொள்
அல்லாஹ் கூறுகிறான்: ''ஷைத்தான் உங்களுக்கு எதிரியாவான். அவனை எதிரியாகவே ஆக்கிக் கொள்ளுங்கள்! நரகவாசிகளாக ஆவதற்காகவே அவன் தனது கூட்டத்தாரை அழைக்கிறான்.'' (அல்குர்ஆன் 35:6)
"பின்னர் அவர்களின் முன்னும், பின்னும், வலமும், இடமும் அவர்களிடம் வருவேன். அவர்களில் அதிகமானோரை நன்றி செலுத்துவோராக நீ காண மாட்டாய்'' (என்றும் ஷைத்தான் கூறினான்). (அல்குர்ஆன் 7:16,17)
இடது கையால் சாப்பிடுவான்
நீங்கள் சாப்பிடும் போது வலது கையால் சாப்பிடுங்கள் குடிக்கும் போது வலது கையால் குடியுங்கள். ஏனெனில் ஷைத்தான் தான் இடது கையால் சாப்பிடுவான். குடிப்பான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 3764)
தொழ விடமாட்டான்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒரு மனிதர் பொழுது விடியும் வரை (தொழுகைக்கு எழாமல்) உறங்கிக் கொண்டேயிருப்பது பற்றிக் கூறப் பட்டது. அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "அவரது காதில் ஷைத்தான் சிறுநீர் கழித்துவிட்டான்'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 1144)
|
|
Read more...
|
|
நபி صلى الله عليه وسلم அவர்கள் எழுதிய கடிதங்கள் (1, 2) |
|
|
|
Sunday, 29 November 2009 07:41 |
|
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடன்படிக்கையை முடித்து ஹுதைபிய்யாவிலிருந்து திரும்பிய பின் ஹிஜ்ரி 6ஆம் ஆண்டின் இறுதியில் பல அரசர்களுக்குக் கடிதம் எழுதி இஸ்லாமின் பக்கம் அவர்களை அழைத்தார்கள். நபியவர்கள் அரசர்களுக்குக் கடிதம் எழுத முற்பட்டபோது ''முத்திரை இல்லாத கடிதங்களை அரசர்கள் படிக்க மாட்டார்கள்'' என்று அவர்களிடம் கூறப்பட்டது. ஆகவே, நபியவர்கள் வெள்ளியினாலான மோதிரம் ஒன்றைத் தயார் செய்தார்கள். அதில் 'முஹம்மது ரஸூலுல்லாஹ்' என்று பதித்தார்கள். அது மூன்று வரிகளாக இருந்தது. முஹம்மது என்று முதல் வரியிலும், ''ரஸூல்'' என்று அடுத்த வரியிலும், அல்லாஹ் என்று அதற்கடுத்த வரியிலும் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது. (ஸஹீஹுல் புகாரி) நபியவர்கள் இப்பணிக்காக தங்களது தோழர்களில் நன்கு அனுபவம் வாய்ந்தவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களைத் தூதுவர்களாக அரசர்களிடம் அனுப்பினார்கள். நபியவர்கள் எழுதிய கடிதங்களின் விவரங்கள் பின்வருமாறு: |
|
Read more...
|
|
அன்னை உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா (1) |
|
|
|
Wednesday, 09 June 2010 08:26 |
|
உம்மு ஸலமா பின்த் அபூ உமைய்யா ரளியல்லாஹு அன்ஹா அன்னையவர்களின் இயற்பெயர் ஹிந்த் பின்த் உமைய்யா என்றிருந்த போதும், உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா என்றே மிகப் புகழோடு அழைக்கப்பட்டு வந்தார்கள். வரலாறு அவ்வாறே அவர்களது பெயரைப் பதிவு செய்து வைத்திருக்கின்றது. பிறப்பு மற்றும் வம்சா வழிச் சிறப்புகளின் அடிப்படையில், இயற்கையிலேயே புத்திக் கூர்மையுள்ள, கல்யறிவுள்ள, நேர்மையான மற்றும் உறுதியான செயல்பாடுகள் கொண்டவர்களாக அன்னையவர்கள் திகழ்ந்தார்கள். அன்னையவர்களின் முதற் கணவரின் பெயர், அபூ ஸலமா என்றழைக்கப்படக் கூடிய அப்துல்லா பின் அப்துல் அஸத் மக்சூமி ரளியல்லாஹு அன்ஹு என்பவராவார். இவர் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தந்தை வழி மாமியான பர்ரா பின்த் அப்துல் முத்தலிப் அவர்களின் மகனுமாவார். இஸ்லாத்தினைத் தங்களது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்ட ஆரம்ப கால முஸ்லிம்களின் பட்டியலில் அபூ ஸலமா ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் இடம் பிடித்த, சிறப்புக்குரியவர்களாவார்கள். அந்த கால கட்டத்தில் இஸ்லாத்தினைத் தழுவிய 11 நபர்களில் இவரும் ஒருவர். இன்னும் இவர் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பால் குடிச் சகோதரரும் ஆவார். |
|
Read more...
|
|
பிள்ளை பெறுவது பெரிதல்ல...! |
|
|
|
Sunday, 06 December 2009 08:42 |
|

பிள்ளை பெறுவது பெரிதல்ல! அதைப் பேணி வளர்ப்பது தான் பெரிது என்று பெரியவர்கள் சொல்வார்கள். இன்று நாம் நமது பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்று பள்ளிக்கு அனுப்புகிறோம். காலையில் செல்லும் பிள்ளைகள் மாலையில் திரும்புகின்றனர். தினமும் பள்ளிக்குப் போய் படித்து விட்டு வருகின்றனர் என்று நாம் திருப்திப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
யாரேனும் ஒரு பள்ளி மாணவி, யாருடனோ ஓடி விட்டாள் என்று தகவல் வரும் போது, நம் பிள்ளை அப்படியெல்லாம் போகாது; நம் பிள்ளை தங்கக் கட்டி என்று ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் மீது தளராத நம்பிக்கை வைத்திருக்கின்றனர். பிள்ளைகள் மீது இப்படி ஒரு நம்பிக்கை வைத்திருப்பதில் தவறில்லை. இருக்க வேண்டியது தான். ஆனால் தன் பிள்ளைகளின் நடவடிக்கை மீது ஒரு கண் வைக்காமல் இருப்பது, கவனிக்காமல் இருப்பது மிகப் பெரிய ஆபத்தை வரவழைத்து விடுகின்றது.
குறிப்பாக இன்றைய காலத்து சினிமாக் கலாச்சாரம் மாணவ, மாணவியரைப் பல தவறான பாதைக்கு அழைத்துச் செல்கின்றது. பள்ளி விட்டு வந்ததும் நமது பிள்ளைகள் பாடம் படிப்பதை விட்டு விட்டு, படம் பார்க்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். சீரியல்களின் பிடியில் கட்டுண்டு இருக்கும் நாம் டி.வி.யைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது நமது பிள்ளைகளும் சேர்ந்தே பார்க்கின்றனர்.
|
|
Read more...
|
|
குழந்தைகளின் குணாதிசியங்களும் அவர்களைக் கையாள வேண்டிய முறைகளும் |
|
|
|
Wednesday, 15 December 2010 08:21 |
|

குழந்தைகளின் குணாதிசியங்களைத் தெரிந்து கொள்ள வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கட்டாயக் கடமை. அவ்வாறு புரிந்து கொண்டால்தான் நல்ல வாரிசுகளாக அவர்களை வளர்க்க - வார்த்தெடுக்க முடியும்.
குழந்தைகள் என்றாலே குதூகலம் தான். ஆனால் அவர்களை வளர்த்து ஆளாக்குவது அத்தனை சுலபமல்ல. குழந்தைகள் வளர்ச்சி என்பது தொடர்ச்சியான பல்வேறு செயல்களை கொண்டது. அவர்கள் குறிப்பிட்ட வயதில் குறிப்பிட்ட செயல்களைச் செய்ய வேண்டும். இவைகளைத்தான் வளர்ச்சி படிநிலைகள் என்கிறோம்.
குழந்தை அந்தந்த வயதுக்கேற்ற செயல்களைச் செய்தால்தான், சரியான வளர்ச்சி பெறுகிறது என்று அர்த்தம். ஆனாலும் ஒரு குழந்தை வளரும் விதத்திலேயே மற்ற குழந்தையும் வளர வேண்டும் என்பது அவசியமில்லை. இதை பெற்றோர் உணர வேண்டும்.
o பக்கத்து வீட்டு குழந்தை செய்வதை எல்லாம் நம்முடைய குழந்தையும் செய்ய வேண்டும் என்று பெற்றோர் எதிர்பார்பதும், புலம்புவதும் தேவையற்றது. குழந்தைகள் எந்தெந்த வயதுகளில் என்னென்ன செய்யும் என்பதை அறிந்து கொண்டால்தான் அதன்படி குழந்தைகளின் செயல்பாடுகளை கவனிக்க முடியும்.
பெற்றோர் கண்காணிக்க வேண்டிய குழந்தைகளின் வளர்ச்சி நிலைகள் நிறையவே உள்ளன. பிறந்த குழந்தையானது, 2 மாதங்களில் சிரிக்கத் தொடங்கும். 4 மாதங்களில் கழுத்து தலைசுமக்கும்படி உறுதியாகும். 8 மாதங்களில் குழந்தை எவ்வித உதவியுமின்றி சுயமாக உட்காரும், 12 மாதங்களில் எழுந்து நிற்கும்.
|
|
Read more...
|
|
வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உள்ள பெற்றோர்களே எச்சரிக்கை! |
|
|
|
Wednesday, 21 September 2011 09:00 |
|

வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உள்ள பெற்றோர்களே எச்சரிக்கை!
16 வயது... பெண்களுக்கு ஒருவிதமான மனரீதியான ரசாயன மாற்றத்தை கொடுக்க கூடிய ரெண்டும் கெட்டான் வயது, நல்லதும் தெரியாது, கெட்டதும் புரியாது என்பார்கள்.. வெழுத்ததெல்லாம் பால் மின்னுவதெல்லாம் பொன் என்று நினைத்து விடுகிறார்கள்.
இந்த வயதுடைய பள்ளிக்கு செல்லும் மாணவிகள் சிலர் விளக்கில் விழுந்த விட்டில் பூச்சிகளாய் காதல் வலையில் விழுந்து வாழ்க்கையை தொலைத்து விடுகிறார்கள். ஓரக்கண்ணால் பார்த்து… தயங்கி தயங்கி பேசி சத்தமில்லாமல் கடிதம் கொடுத்து… காதல் வளர்த்த காலம் போயே போச்சு.
நறுக்கு சுறுக்குன்னு ஒருபார்வை.. உங்க செல்போன் நம்பர் என்ன? என்று கேட்டு ஒரு சிரிப்பு.. அவ்வளவு தான் மறுநாளில் இருந்து அந்த செல்போன் நம்பருக்கு மணி கணக்கில் பேச்சு… 3 மாதம் கழித்து அந்த பையனுடன் ஓட்டம். இது தான் இன்றைய பள்ளி மாணவிகளின் தறிகெட்ட நிலை. இதில் பலர் முதல் திருமணம் செய்த வாலிபர்கள் என்பது வெளியே தெரியாத கொடுமை.
செல்போன் வசதி இல்லாத மாணவிகள் காதலனின் செல்போனுக்கு 1 ரூபாய் நாணய தொலைபேசியில் இருந்து தங்களது அழகை நீட்டி முழக்குகின்றனர். நேற்று இரவு டி.வி.யில் பார்த்த சினிமா காதல் காட்சிகள் முதல் சுவற்றில் ஒட்டப்பட்டிருக்கும் ஆபாச சுவரொட்டிகள் வரை அவர்களது பேச்சில் கலந்து மூச்சை சூடாக்குகிறது.
|
|
Read more...
|
|
பெண்ணுக்குள் இருக்கும் அதிசயம்! |
|
|
|
Friday, 20 May 2011 10:53 |
|
பெண்ணுக்குள் இருக்கும் அதிசயம்!
அழகில் சிறந்தவர்கள், ஆண்களா? பெண்களா?, தாம்பத்ய ஆசை யாருக்கு அதிகம்?, பெண்கள் எந்த விஷயத்தில் சிறப்பாக செயல்படுவார்கள்?, ஆண்கள் எந்த விஷயத்தில் கோட்டைவிடுகிறார்கள்?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை தெரிந்துகொள்ள ஆர்வமா?
உளவியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்த சில அடிப்படை உண்மைகள் இங்கே...
o பெண்கள் பலதிறன் கொண்டவர்கள். அவர்களால் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளை பார்க்க முடியும். போனில் பேசிக் கொண்டே அலுவலக வேலையையும் கவனம் சிதறாமல் செய்துவிடக் கூடியவர்கள் பெண்கள். அதற்கேற்ப அவர்களின் மூளையும் வடிவமைந்துள்ளது. ஆனால் ஆண்களால் இப்படி ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்ய முடியாது.
o ஆண்கள் பொய் பேசினால் பெண்கள் உடனே கண்டுபிடித்து விடுவார்கள். ஆண்களின் முகபாவனை, அங்க அசைவுகள், வார்த்தை உச்சரிப்பு இவற்றை வைத்தே அதை கண்டுபிடிக்கிறார்கள். ஆண்களால் இப்படி கண்டுபிடிக்க முடிவதில்லை. அதனால்தான் அவள் என்னை ஏமாற்றிவிட்டாள் என்று தாடி வைத்துக் கொண்டு புலம்பித் திரிகிறார்கள்.
|
|
Read more...
|
|
உலகில் மனிதன் புரியும் பாவங்களிலேயே மிகப்பெரியது, அல்லாஹ்வுக்கு இணை வைத்தலே! |
|
|
|
Saturday, 26 March 2011 08:19 |
|
Jafar Ali
"ஒவ்வொரு சமூகத்திலும் திட்டமாக நாம் தூதர்களை அனுப்பி இருக்கிறோம்। (அத்தூதர்கள் அச்சமுகத்தவர்களிடம்) அல்லாஹ்வையே வணங்குங்கள் (ஷைத்தான்களாகிய) தாகூத்துகளிடமிருந்து விலகிக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்." (அந்நஹ்ல்: 36)
"உமக்கு முன்னர் நாம் அனுப்பிய நம்முடைய தூதர்களிடம் அர்ரஹ்மானையன்றி வணங்கப்படும் வேறு தெய்வங்களை நாம் ஆக்கியிருந்தோமா? என்று கேட்பீராக!." (அல்ஜுக்ருஃப்: 45)
"எவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ அப்பொழுது அவன் வானத்திலிருந்து (முகங்குப்புற) விழுந்து பறவைகள் அவனைக் கொத்திக்கொண்டு சென்றதைப் போன்றோ அல்லது (பெருங்)காற்று அவனை வெகுதூரத்தில் உள்ள இடத்திற்கு அடித்துச் சென்றதைப் போன்றோ இருக்கின்றான்." (அல்ஹஜ்: 31)
"நிச்சயமாக அல்லாஹ் இணைவைக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான்." (அந்நிஸா: 48)
"மனிதர்களே! நீங்கள் உங்களையும், உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும், தூய்மையும்) உடையோராகலாம்.’ (அல்பகரா: 21)
|
|
Read more...
|
|
ரகசிய ஞானம் எனும் மூடநம்பிக்கை! |
|
|
|
Thursday, 02 June 2011 09:39 |
|
ரகசிய ஞானம் எனும் மூடநம்பிக்கை!
சில ரகசிய ஞானத்தை, சிலருக்கு மட்டும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுக்கொடுத்தாக ஹதீஸ் உள்ளதாக முரீது கொடுப்போர் கூறுகின்றனர். ரகசிய ஞானம் என்று கூறிப்பாமர மக்களை ஏமாற்றுவது அதிகரித்துள்ளது. அதனால் இது பற்றிக் கொஞ்சம் விரிவாகவே பார்ப்போம்.
''நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து. இரண்டு (கல்விப்)பைகளை அறிந்தேன். அதில் ஒன்றை (மக்கள் மத்தியில்) வெளிப்படுத்திவிட்டேன். இன்னொன்றை மக்கள் மத்தியில் நான் வெளிப்படுத்திவிட்டால் எனது குரல் வலை வெட்டப்பட்டுவிடும்'' என்று அபூஹுறைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் (நூல்: புகாரி).
அவர்களிடமிருந்து கற்ற மார்க்கம் சம்பந்தப்பட்ட எந்த ஒரு விஷயத்தையும் மறைக்காது பிறருக்கு எடுத்துச் சொல்லும்படி கட்டளை இடப்பட்டிருக்கும்போது, அதற்கு மாற்றமாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மார்க்கத்தின் ஒரு பகுதியை மக்களிடம் சொல்லாமல் எப்படி மறைத்திருப்பார்கள்?
அவர்கள் கூறிய ஹதீஸ், அஹ்மத், திர்மிதீ ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கல்வியை மறைப்பது பயங்கரமான குற்றம் என்று இந்த ஹதீஸ் உணர்த்தப்படுகின்றது. இந்த ஹதீஸை அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்களே அறிவிக்கின்றார்கள்.
''என்னிடமிருந்து (பெற்ற) சிறு வசனமாக இருந்தாலும், பிறருக்கு சொல்லி விடுங்கள்.'' (நூல்: புகாரி) இது நபிமொழி.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்; ''எவன் ஒருவன் தான் கற்ற கல்வியை மறைக்கிறானோ, அவனுக்கு நெருப்புக் கடிவாளம் போடப்படும்''
|
|
Read more...
|
|
தமிழை வெறுக்க வேண்டாம்! |
|
|
|
Sunday, 20 May 2012 22:08 |
|

தமிழை வெறுக்க வேண்டாம்!
[ மத அடிப்படை அதி முக்கியம். தனது தாய் மொழி மீதான ஆளுமையும் அவசியம். ரேஷன்கார்டு வேணும். பாஸ்போட்வேணும். அடையாள அட்டை வேணும். வாழும் உரிமை வேண்டும். தமிழ¢ மட்டும் வேண்டாம். மன்னிக்காது தமிழ்ச் சமூகம். தனிமைப்படுத்தப்படுவோம். கோமா நிலைக்குச் செல்லும் நோயாளிக்கு தான் என்னவாக விருக்கிறோம். என்ன ஆகப்போகிறோம். தெரியாது. இந்த தன்மைக்கு சமூகம் தள்ளப்பட முஸ்லிம்கள் காரணமாகக் கூடாது.
தமிழை ஏற்கமாட்டோம். அலுச்சாட்டியம் செய்வோர் குர்ஆனிலாவது ஆளுமை பெற்றிருக்கின்றனரா? இல்லை. ஒருசில ஆயத்துகள் கூட நாவில் வர மறுக்கிறது. யாசின் ஓதத் தெரியாது. சின்ன துஆ கூட தெரிவதில்லை. தமிழையும் வெறுத்து குர்ஆனையும் அறை முன் பார்வைக்கு மட்டும் வைத்து வெகு தூரம் பயணம் சென்றிருக்கின்றோம்.
முஸ்லிம்! அவருக்கு தமிழ் தெரியாது. "நிம்மில்கி இன்னா சொன்னாங்கோ". நம்மிள் செய்தாங்கோ" இவ்வாறு தமிழ் பேசுவது போலவும், கறி வெட்டுபவர், சாம்பிராணி தட்டு வைத்து புகை போட்டுபிச்சை எடுப்பவர் போலவும், குண்டு வைப்பவராகவும் ஊடகங்கள் அனைத்தும் வேறு பாடுன்றி முஸ்லிம்களைக் கேவலப்படுத்துகின்றன.]
|
|
Read more...
|
|
உடலின் மீதான திருப்தியின்மை! |
|
|
|
Sunday, 20 May 2012 10:12 |
|
உடலின் மீதான திருப்தியின்மை!
இருவருக்கும் உடல் அளவில் இருக்கும் வேறுபாடுகள்..
திருமணம் முடிக்க போகும் ஆண், பெண் இருவருக்கும் உடல் பொருத்தம் இருக்க வேண்டியது மிக அவசியம். ஒரு பாட்டு கூட உண்டு "ரெட்டை மாட்டு வண்டி வரும்போது நெட்டை குட்டை என்றும் இணையாது.....!" வண்டி ஓடவே இரண்டு மாட்டின் உடல் பொருத்தம் தேவை படும்போது, இந்த வாழ்க்கை வண்டி ஓட கணவன் மனைவி உடல் பொருத்தம் என்பது மிக அவசியம். (ஒரு சிலர் விதிவிலக்கு)
முன்னாடி எல்லாம் பெண்ணையோ பையனையோ வரன் பிடித்து இருக்கிறதா என்று பெற்றோர்கள் கேட்க மாட்டார்கள். ஆனால் இப்போது அப்படி இல்லை, இருவரும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சிருக்கு என்று சொன்ன பிறகு தான் திருமணமே நடக்கிறது. ஆதலால் தங்கள் மனதிற்கும் தங்கள் உடம்பு அமைப்புக்கும் ஏற்றபடி அமைந்திருக்கிறதா துணை என்று பார்ப்பது மிக அவசியம்.
பணம், படிப்பு, அழகு, சொத்து, அந்தஸ்து எல்லாம் திருமணத்தின் ஆரம்ப சில வருடங்களுக்கு மனதிற்கு மகிழ்ச்சியையும், சமூகத்தில் ஒரு மதிப்பையும் கொடுக்கலாம். ஆனால் வருடம் சில கடந்த பின் ஆணோ பெண்ணோ இருவருக்கும் அது மட்டுமே போதுமானதாக இருப்பது இல்லை. துணைக்கு தன் மீதான கவனம் எந்த அளவில் இருக்கிறது, தனக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் துணையிடம் இருக்கிறது என்பதை பொறுத்தே வீட்டிலும் வெளியிலும் அவர்களின் நடவடிக்கைகள் இருக்கும். இச்சூழ் நிலையில் தான் உடல் பற்றிய யோசனைகளும் ஏற்படுகிறது.
|
|
Read more...
|
|
மன்னருக்காகக் கூட மக்கள் எழக் கூடாது! |
|
|
|
Sunday, 20 May 2012 19:08 |
|
மன்னருக்காகக் கூட மக்கள் எழக் கூடாது!
வயதில்பெரியவர், ஆசிரியர், தலைவர்கள், முதலாளிகள், நிர்வாகிகள், மேலதிகாரிகள் போன்றோருக்காக மற்றவர்கள் எழுந்து நின்று மரியாதை செய்வதை உலகமெங்கும் காண்கிறோம்.
மேல் நிலையில் உள்ளவர்கள் இந்த மரியாதையை உளமாற விரும்புவதையும் நாம் காண்கிறோம். ஆனால் இஸ்லாத்தில் இதற்கு அனுமதி இல்லை.
எந்த மனிதரும் எந்த மனிதருக்காகவும் மரியாதை செய்யும் விதமாக எழுந்து நிற்கக் கூடாது என்று நபிகள் நாயகம் கட்டளை பிறப்பித்தார்கள்.
நபிகள் நாயகத்துக்குப் பின் முஸ்லிம் சாம்ராஜ்யத்தின் ஐந்தாவது அதிபராகத் திகழ்ந்தவர் முஆவியா ரளியல்லாஹு அன்ஹு அவர் வெளியே வந்த போது அவரைக் கண்ட அப்துல்லாஹ் பின் ஸுபைர் அவர்களும், இப்னு சஃப்வான் அவர்களும் எழுந்து நின்றனர். உடனே முஆவியா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் 'அமருங்கள்' என்றனர். 'தனக்காக மக்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று யார் விரும்புகிறாரோ அவர் தனது தங்குமிடத்தை நரகத்தில் ஏற்படுத்திக் கொள்கிறார்' என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதை நான் செவியுற்றுள்ளேன் என்றும் முஆவியா ரளியல்லாஹு அன்ஹு, கூறினார்கள். (நூல்கள்: திர்மிதீ 2769 அபூதாவூத் 4552)
|
|
Read more...
|
|
மரணம் வாழ்க்கையின் வேகத் தடை! |
|
|
|
Sunday, 20 May 2012 22:00 |
|
மரணம் வாழ்க்கையின் வேகத் தடை!
மௌலானா வஹிதுத்தீன்கான்
[ ''ஒவ்வொரு நோய்க்கும் மருந்துண்டு. ஆனால் மவுத்துக்கு மருந்து இல்லை.'']
உலகில் இரண்டு சக்திகள் உள்ளன. இரண்டு படைப்பாளன்களல்ல. இரண்டு படைப்புகள். அல்லாஹ் மனிதனை படைக்கும் போது இரண்டு இனங்கள் இருந்தன.
ஜின், மலக்கு
ஜின் இனத்தை சேர்ந்தவன், ஷைத்தான். பூமியை மனிதன் வசம் அல்லாஹ் ஒப்படைத்தான் "கான மினல் ஜின்னி" சூரா கஹ்ஃபு 18, வசனம் 50.
பூமியின் பொறுப்பு மனிதனிடம் வழங்கப் பட்டது. இன்னீ ஜாயிலுன் ஃபில் அர்ளி கலீஃபா அத்தியாயம் 2, பகரா வசனம் 30 மனிதன் பூமியின் உரிமையாளனல்ல. மனிதன் சோதிக்கப்படுகிறான். தாவூது அலைஹிஸ்ஸலாம் கூறுகிறார்கள் நான் நன்றி செலுத்துகிறேனா. சோதிக்கவே ஆட்சி எனக்கு வழங்கப்பட்டது. துனியா பரீட்சைக் களம். மனிதனுக்கு வழங்கப்பட்ட ஒவ்வொரு பொருளும் வசதியும் டெஸ்ட் பேப்பர். இன்னமா அம்வாலகும் வ அவ்லா துகும் ஃபித்னா. இங்கு ஃபித்னா பொருள் வாயிலாகவும் பரீட்சை நடைபெறுகிறது. மரணம் வரை சோதனை நீடிக்கும். பூமியில் மனிதன் இரண்டு சக்திகளுக்கிடையில் வசிக்க வேண்டியுள்ளது.
|
|
Read more...
|
|
நயவஞ்சகர்களின் குணங்களும் தண்டனைகளும் |
|
|
|
Sunday, 20 May 2012 19:24 |
|
நயவஞ்சகர்களின் குணங்களும் தண்டனைகளும்
என்.ராஜ் முஹம்மது எம்.ஐ.எஸ்.ஸி,
இனிமையாகப் பழகித் தீங்கு விளைவிப்பதையும், பழகிக் கெடுக்கும் சூழ்ச்சியையும் செய்பவரை நயவஞ்சகன் என்கிறோம். அரபி மொழியில் இந்த தீய செயல்கள் உள்ளவர்களை முனாஃபிக் என்று கூறுவர். இவர்கள் வெளித்தோற்றத்தில் முஸ்லிம்களைப் போன்று நடித்துக் கொண்டு, அந்தரங்கத்தில் மறுப்பாளனாக வாழ்பவர்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது காலத்தில் மதீனா நகரில் இத்தகைய நயவஞ்சகர்கள் சிலர் இருந்தனர். அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் என்பவன் அவர்களுக்கு தலைவனாக செயல்பட்டான். இவன் தலைமையில் பல நயவஞ்சகர்கள் இஸ்லாத்தில் இருப்பதாக கூறி உண்மையான முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் எதிராக செயல்பட்டு வந்தார்கள்.
இவர்களைப் பற்றி திருக்குர்ஆனிலும் நபிமொழிகளிலும் கூறப்பட்ட தகவல்களை இங்கு தொகுத்து தருகிறோம். இவர்களிடம் இருக்கும் கெட்ட பண்புகள் நம்மிடம் வராமல் இருப்பதற்கும் தீய குணம் கொண்டவர்களை அடையாளம் கண்டுகொள்ளவும் இந்த தகவல்கள் உதவும்.
|
|
Read more...
|
|
''மருந்தை'' நாடும் பெண்கள் - சிக்கலில் தாம்பத்யம்!!! |
|
|
|
Wednesday, 15 September 2010 19:47 |
|
[ பெரும்பாலான பெண்களின் ஆர்வத்தைத் தூண்டும் மருந்துகள் தோல்வியிலேயே முடிந்தாலும் பல்வேறு விதங்களில், பெயர்களில் போலியான மருந்துகள் பெண்களை ஏமாற்றிக் கொண்டு தான் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை மன அழுத்தத்தைக் குறைக்கும் மருந்துகள் என்பதே உண்மையாகும்.
செக்ஸ் ஆர்வத்தைத் தூண்டுவது என்பதே தப்பான சிந்தனை என்கிறார் டாக்டர் லெனோர் டிஃபர். நியூயார்க் மருத்துவக் கல்லூரியின் உளவியல் நிபுணர் இவர். மக்கள் மக்களோடு தான் ஆர்வம் கொள்ளவேண்டுமே தவிர செக்ஸ் ஆர்வத்தை வலுக்கட்டாயமாகத் தூண்டக் கூடாது.
ஆர்வமும் விருப்பமும் யாரும் கட்டளையிடுவதால் வராது என்பதே உண்மை. அதனால் தான் மருத்துவம் பெண்களின் செக்ஸ் ஆர்வத்தைத் தூண்டும் முயற்சியில் பின்னடைவைச் சந்திக்கக் காரணம். சொல்லப் போனால் ஆண்களின் ஆர்வத்தையும் எந்த மருந்தும் அதிகரிப்பதில்லை. அவர்களுடைய ஆண்மைக் குறைவை நிவர்த்தி செய்கிறது அவ்வளவு தான்.
தாம்பத்ய உறவு என்பது கணவன் மனைவியரிடையேயான புரிதலின் மூலம் வரவேண்டும்.
பெண்களுக்கான மருந்தை எப்படியேனும் கொண்டு வந்தே தீருவேன் என மருந்து கம்பெனிகள் மூக்கால் உழுவதற்கு ஒரே ஒரு காரணம் தான். பணம்!]
|
|
Read more...
|
|
|