Home செய்திகள் உலகம் சவுதி அரேபியா-கனமழைக்கு 77 பேர் பலி!
சவுதி அரேபியா-கனமழைக்கு 77 பேர் பலி! Print E-mail
சவுதி அரேபியாவில் கனமழையில் பலியானோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடுமையான வெள்ளத்திற்கு இதுவரை 77 பேர் பலியாகி உள்ளதாக அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர். சவூதியைச் சேர்ந்த 21 பேருடைய உடல்கள் அவர்களது குடும்பத்தார்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளத்தில் சிக்கியிருந்த சுமார் 900 பேர் மீட்கப்பட்டுள்ளனர். சாலைகள் ஆறுகளாக காட்சியளிக்கிறது. வீடுகள், கடைகள் மிதக்கின்றன. புதனன்று தொடர் மழையின் காரணமாக மக்காவிலும் ஜித்தாவிலும் மின்சாரம் தடைப்பட்டது.

உலகின் பல பாகங்களிலிருந்தும் சுமார் 30 இலட்சம் பயணிகள் ஹஜ் கடமையை நிறைவேற்ற வந்துள்ளனர். ஹஜ் நடைமுறைகள் புதன் கிழமை முதல் தொடங்கி உள்ளதை அடுத்து இலட்சக் கணக்கான பயணிகள் குழுமியுள்ள நிலையில், இதுவரை பலியாகி உள்ள எவரும் ஹஜ் பயணிகள் இல்லை என்று சவுதி உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

புதன் கிழமை வரை வெள்ளத்தினால் நிகழ்ந்த மரணங்கள் மக்கா, ஜித்தா மற்றும் ரபீக் ஆகிய நகரங்களில் ஏற்பட்டதாக சவுதி செய்தி நிறுவனம் கூறியுள்ளனது. வெள்ளத்தினால் வீடுகள் இடிந்ததே பலி எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்கான காரணம் என்றும் அந்நிறுவனம் கூறுகிறது. மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. முன்னதாக கடுமையான மழையை அடுத்து மக்கா செல்லும் வழி முழுமையாக தடுக்கப்பட்டிருந்ததாகவும், இதனால் ஹஜ் பயணிகள் மக்கா சென்றடைய முடியவில்லை என்றும் செய்திகள் தெரிவித்தன.  

மேலும் இது குறித்த செய்திகளுக்கு Arab News/KSA  

 

தொடரும் மற்ற செய்திகள்...

ஐடி துறையில் அடுத்த ஆண்டுக்குள் 2.5 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று ஐடி துறையின் இரண்டாவது பெரிய நிறுவனமான இன்ஃபோஸிஸ் தெரிவித்துள்ளது. மேலும் இன்போஸிஸ் மட்டுமே 20000 புதிய பணியாளர்களை வேலைக்கு எடுக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 'அடுத்த நிதியாண்டின் தொடக்கத்திலேயே நல்ல மாறுதல்களைக் காணலாம்' என்று இன்ஃபோஸிஸ் நிறுவனத்தின் இயக்குநர் மோகன்தாஸ் பெங்களூரில் தெரிவித்தார்

இந்திய மாணவர்கள் இனி அமெரிக்க போய் உலக புகழ்பெற்ற பல்கழை கழகங்களில் படிக்க தேவையில்லை. இந்தியாவிலேயே படிக்கலாம். அதற்கான வசதிகள் மற்றும் வாய்ப்புகள் விரைவில் வர இருக்கின்றன. அமெரிக்காவின் புகழ்பெற்ற பலகழைகழகங்களான, யேல், பாஸ்டன், எம்ஐடி, ஹார்வார்ட் போன்றவைகள் தங்களின் வளாகங்களை இந்தியாவில் நிறுவ ஆர்வத்துடன் இருக்கின்றன. -  மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபல்.

மத்திய அரசின் திட்டப்படி பெண் குழந்தைகள் எட்டாவது வகுப்பு தேர்ச்சி பெற்று ஒன்பதாவது சேரும் பட்சத்தில், அவர்களது பெயரில் 3,000 ரூபாய் முதலீடு செய்யும் திட்டத்திற்கு தமிழக கல்வித் துறை, 36 கோடியே 38 லட்சம் ரூபாய் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை மருத்துவக் கல்லூரிக்கு மிகச்சிறந்த கட்டிட வடிவமைப்பில் சுமார் 70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்படும் என்று தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. சென்னை மத்திய சிறைச்சாலை அமைந்திருந்த இடத்தில் அமையவிருக்கும் இந்தக் கட்டிடம் 8 அடுக்கு மாடிகளுடன் 10 ஏக்கர் நிலப்பரப்பில் உவருவாக்கப்படும் என்று அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கான அனைத்து வசதிகளும் இந்தக் கட்டிடத்தில் அமைக்கப்படும். மருத்துவக் கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட பின் தற்போதைய கல்லூரி கட்டிடங்கள் உள்ள பகுதிகள் பொது மருத்துவமனையின் விரிவாக்கத்திற்குப் பயன்படுத்தப்படும் என்றும், டிசம்பர் மாத இறுதியில் புதிய கட்டிடம் கட்டுவதற்காக டெண்டர்கள் கோரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வளைகுடாவில் அமைதிக்கு ஊறுவிளைக்கும் இஸ்ரேல் அமெரிக்காவின் கொலைகாரக் கூலிப்படை - வெனீசுலா அதிபர் ஹுகோ சாவேஸ்.