| நட்பு வாழ்வின் நறும் பூ! |
|
|
|
சகோதரி வெலிகம ரிம்ஸா முஹம்மத் தோளுக்கு துணையாகும் தோழன் - அவன் துன்பத்தை துடைக்க வரும் பண்பாளன்! அன்பைச் சொரிவதிலே மாரி - அவன் ஆபத்தில் வழங்கிடுவான் வாரி!நெருக்கடியில் கை கொடுக்கும் நேயன் - அவன் நேர்மையிலே தோய்ந்து விடும் தூயன்! பணம் பார்த்து பழகுவதல்ல நட்பு - நல்ல குணம் பார்த்து பழகுவதே நட்பு! இன்பத்தில் மட்டும் இணைவதல்ல நட்பு! துன்பத்திலும் தொடர்வதே நட்பு!!!
|




