Home கட்டுரைகள் கவிதைகள் தலையில் குட்டு வைப்போம்!!
தலையில் குட்டு வைப்போம்!! Print E-mail

யாசர் அரஃபாத்

 

அன்பைப் போதித்த

அழகிய மார்க்கத்திற்க்கு

அடையாளமிட்டுள்ளது

அயல் நாடுகள்

தீவிரவாதம் என்று!!

 

மூலைக்கு மூலை துரத்தி அடிக்கப்பட்டாலும்

மூலதனமாய் எங்களிடம் உள்ளது

ஒன்றே ஒன்றுதான்;

ஒரிறைக்கொள்கைதான்!!

 

அணைத்துவிடலாம் என்றெண்ணி

ஊதியவருக்கெல்லாம்

பேரிடியாக;

அமுங்கி இருந்த

கங்குகள் இப்போதுதான்

சூடு பிடிக்கத்துடங்கி உள்ளதை எண்ணி!!

 

ஒழிப்பதற்க்கு முன்

ஒன்றுபடு !

உறங்கியதுப் போதும்

உயர்திப் பிடிப்பதற்கு வா

கொள்கையை!!

 

குனிந்து குனிந்து

குப்புற வீழ்ந்ததும் போதும்;

இனி

சீண்டிப்பார்க்கும் தருதலையை

தட்டிவைப்போம்;

தலையில் குட்டு வைப்போம்!!

 

வரலாறும் மங்கியது.

தகராறுதான் பெருகியது;

வித்திட்ட விஷமிகளுக்கு

மாற்று மருந்தொன்று உண்டு;

மார்க்கம் சொன்ன போதனைகளைக் கொண்டு!!

 

வன்முறை இல்லை

வரைமுறை உண்டு;

கர்வம் இல்லை;

கருணை உண்டு;

மொத்தத்தில்

சுவர்க்கம் உண்டு

மறுமையில் சோதனை இல்லை!! (இன்ஷா அல்லாஹ்)

 www.nidur.info