| யார் யார் யார்...? |
|
|
|
பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் லாகூரிலுள்ள மாடல் டவுன் மசூதி மற்றும் கார்ஹி சாஹு மசூதிகளில் வெள்ளிக்கிழமை பிற்பகல் தொழுகை நடந்துகொண்டிருந்தது. இரு மசூதிகளிலும் தலா 1,500-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் தொழுகை நடத்திக் கொண்டிருந்தனர். இதில் பெண்கள், குழந்தைகளும் அடங்குவர். பாகிஸ்தான் நேரப்படி பிற்பகல் 1.45 மணியளவில் இரு மசூதிகளுக்குள்ளும் பயங்கரவாதிகள் புகுந்தனர். மசூதிகளின் வாயிலில் நின்றுகொண்டிருந்த போலீஸார், பாதுகாப்பு அதிகாரிகளை சுட்டுத் தள்ளிவிட்டு உள்ளே புகுந்த பயங்கரவாதிகள், தங்களிடமிருந்த அதிநவீன துப்பாக்கிகளால் கண்மூடித்தனமாக சுட்டுத் தள்ளினர். போலீஸாருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த சண்டையின் முடிவில் 2 பயங்கரவாதிகளை போலீஸார் கைது செய்தனர்.
இதற்கெல்லாம் காரணம் யார்?. இஸ்லாத்தைப்பற்றி சரிவர புரியாத சில அவாம்களால் மூலை சலவை செய்யப்பட்டதன் விளைவு தான் இது, என்று சொல்வதில் என்ன தவறு இருக்க முடியும்! ''ஜும் ஆ'' தொழுகை நடக்கும் நேரத்தில் முஸ்லீம்களை கொத்துக் கொத்தாக கொன்று குவிக்கும் ஈனச்செயலை புரிந்துவிட்டு இதற்கும் ஜிஹாத் என்று தப்பர்த்தம் கொள்ளும் இக்கூட்டதுக்கு, இஸ்லாத்தை போதித்தது யார்? யார்? சமாதான மார்க்கம் என்று வாய்க்கிழிய சொல்லிக்கொண்டு இதுபோல் அனீதமிழைக்கும் கொடூரமானவர்களை, வளர்த்துவிட்டது யார்? யார்? யார்? சிந்தியுங்கள் சகோதரர்களே ! ஸாலிகான மனிதர்கள் போல் உலகில் நடமாடிக்கொண்டு இஸ்லாத்தை குழி தோண்டிப்புதைக்கும் இவர்களை முஸ்லீம் சமுதாயம் இனிமேலும் இனங்கண்டு கொள்வது காலத்தின் கட்டாயம் என்பதை உணருங்கள்.
|




பாகிஸ்தானிலுள்ள 2 மசூதிகளில் சுமார் 8 முதல் 10 பயங்கரவாதிகள் புகுந்து கண்மூடித்தனமாக சுட்டதில் 80 பேர் பலியாயினர்; 100 பேர் காயமடைந்தனர் என்பதை சில தினங்களுக்கு முன் கேள்விபட்டிருப்போம்.