Home இஸ்லாம் ஹதீஸ் நன்மை பயக்கும் நபிமொழி - 78
நன்மை பயக்கும் நபிமொழி - 78 Print E-mail

நன்மை பயக்கும் நபிமொழி

o "(உம்முல் முஃமினீன்) மைமூனா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் குளித்து விட்டு எஞ்சிய தண்ணீரில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குளித்தார்கள்" என இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள் (நூல்: முஸ்லிம்)

o நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது மனைவியரில் ஒருவர், ஒருபெரிய பாத்திரத்தில் குளித்தார். அப்போது அங்கு வந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதில் குளிக்க விரும்பியபோது, "நான் நிச்சயமாக குளிப்பு கடமையானவளாக இருந்தேன்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மனைவி கூறினார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்," (இதன் காரணமாக)தண்ணீர் ஒருபோதும் அசுத்தமாகாது" என்று கூறினார்கள். (நூல்கள்: அபூதாவூத், நஸயி, இப்னுமாஜா, திர்மிதி) 

o "உங்களில் எவரும் ஓடாமல் தேங்கி நிற்கும் தண்ணீரில் சிறுநீர் கழித்துவிட்டு, பின்னர் அதில் குளிக்க வேண்டாம்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி)

o "உங்களுடைய பாத்திரத்தில் நாய் வைத்துவிட்டால், அதை(சுத்தப் படுத்துவதற்காக) ஏழு முறை கழுவுங்கள். அதில் முதல் முறை மண்ணால் சுத்தம் செய்யுங்கள்" " என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: முஸ்லிம்)

o நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்ப் பூனையை பற்றி கூறும் போது, "அது அசுத்தமானதல்ல, உங்களிடையே சுற்றி வரக்கூடியதுதான்" என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ கதாதா ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா)

o ஒரு நாட்டுபுறத்தார் பள்ளிக்கு வந்து பள்ளியின் ஒரு பகுதில் சிறுநீர் கழித்துவிட்டார். மக்கள் அவரை அதட்டினார்கள்.அதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்து அவர் சிறுநீர் கழித்து முடித்த பின்னர் ஒரு வாளி தண்ணீர் கொண்டு வருமாறு கட்டளை இட்டார்கள். அது அதன் மீது ஊற்றப் பட்டது.என்று அனஸ் இப்னு மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள் நூல்கள்: முஸ்லிம், புகாரி)

o "செத்தவை இரண்டும், இரத்தம் இரண்டும் நமக்கு உண்ண(ஹலால்) அனுமதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் செத்தவை வெட்டுகிளி மற்றும் மீனாகும்.. அந்த இரத்தம், ஈரல் மற்றும் கல்லீரல் ஆகும்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: அஹ்மத், இப்னு மாஜா)

o "உங்கள் குடிபானத்தில் ஈ விழுந்து விட்டால், அதை உள்ளே மூழ்கடித்துவிட்டு பின்னர் வெளியில் எறிந்து விடவும். ஏனெனில் அதன் ஒரு இறக்கையில் நோயும், மற்றோர் இறக்கையில் நிவாரணமும் உள்ளது" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி, அபூதாவூத்)

o தங்க பாத்திரங்களிலும் வெள்ளி பாத்திரங்களிலும் பருகாதீர்கள், இன்னும் தங்க, வெள்ளி தட்டுகளில் சாப்பிடாதீர்கள். ஏனெனில், அவை உலகில்(இறைமறுப்பாலர்களான)அவர்களுக்குரியதாகும். மறுமையில் உங்களுக்குரியதாகும்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஹுதைஃபா இப்னு அல்யமான் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

o "எவர் வெள்ளி பாத்திரங்களில் பருகுகின்றாரோ அவரது வயிற்றில் நரக நெருப்பு குமுறிக்கொண்ண்டு இருக்கும்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் (அறிவிப்பவர்: உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா, நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

o "தோல் பதனிடப்பட்டுவிட்டால் அது தூய்மையாகிவிடும்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: முஸ்லிம்)

o "இறந்து போன கால்நடைகளின் தோல்கள் பதனிடப்பட்டுவிட்டால் அது தூய்மையாகிவிடும்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் (அறிவிப்பவர்: ஸலமா இப்னு அல் முஹய்யிக் ரளியல்லாஹு அன்ஹு)

o இறந்து போன ஆட்டை இழுத்து சென்றோரை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கடந்து சென்ற போது"அதனுடைய தோலை நீங்கள் எடுத்து கொள்ளலாமே?" என்று கூறினார்கள். அதற்கவர்கள் "அது தானாக செத்ததாயிற்றே" பதிலளித்தனர். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "அதைத் தண்ணீர் மற்றும் ஆவாரம்பட்டை சுத்தம் செய்து விடும்" என்று கூறினார்கள் என மைமூனா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கின்றார்கள். (நூல்கள்: அபூதாவூத், நஸயீ)

o "அல்லாஹ்வின் தூதர் அவர்களே! முன்னர் வேதம் கொடுக்கப் பட்டோரின் நாட்டில் நாங்கள் வசிக்கின்றோம். எனவே, அவர்களது பாத்திரங்களில் நாங்கள் உண்ணலாம?" என்று நான் கேட்டேன். அதற்கு "அவற்றில் நீங்கள் உண்ணாதீர்கள், உங்களுக்கு வேறு பாத்திரங்கள் கிடைக்கவில்லையெனில், அவற்றை நன்கு கழுவிவிட்டு அவற்றில் உண்ணுங்கள்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஸலபா அல் குஷனிய்யீ ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

o "(இறைவனுக்கு) இணவைக்கும் ஒரு பெண்ணுடைய(தோல்) தண்ணீர் பையிலிருந்த தண்ணீரை கொண்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அவர்களது தோழர்களும் உளூ செய்தார்கள்" என இம்ரான் இப்னு ஹுசைன் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார் (நீண்ட ஹதீஸின் சுருக்கம்) (நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

o நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பாத்திரம் ஒன்று உடைந்து விட்டது. அவர்கள் ஓட்டை விழுந்த இடத்தில் வெள்ளித்துண்டினால் அடைத்தார்கள்" என அனஸ் இப்னு மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள் (நூல்: புகாரி)

o "உங்களில் எவரும் ஓடாமல் தேங்கி நிற்கும் தண்ணீரில் சிறுநீர் கழித்துவிட்டு, பின்னர் அதில் குளிக்க வேண்டாம்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி)

o "நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்ர்கள் கூறினார்கள், குளிப்புகடமையாக இருக்கும் நிலையில் உங்களில் எவரும் தேங்கி நிற்கும் தண்ணீரில்(இறங்கி) குளிக்க வேண்டாம்" (நூல்கள்: முஸ்லிம், அபூ தாவூத்)

o "நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்ர்கள் கூறினார்கள், குளிப்புகடமையாக இருக்கும் நிலையில் உங்களில் எவரும் தேங்கி நிற்கும் தண்ணீரில்(இறங்கி)குளிக்க வேண்டாம்" (நூல்கள்: முஸ்லிம், அபூ தாவூத்)

தொகுப்பு: தோப்புத்துறை ஹாஜாதீன், துபாய்.