Home இஸ்லாம் ஹஜ் தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்
தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள் Print E-mail

தந்தை இப்றாகிம்

வழிவந்த திருநாள்

உயிர் தியாகத்தை

உணர்த்தும் நன்நாள்.

ஈதுல் அல்ஹா
ஹஜ்ஜுப் பெருநாள்!

 

நினைத்துப் பார்க்கையிலே

நனைந்துப் போகும்

விழிகள்;

காலம் கடந்துப் போனாலும்

கனத்துப் போகும்

தியாகம்!

 

இறைக் கொடுத்த

வஹிக்கு

பலிக் கொடுக்கச் சென்று

வரலாற்றில் பதிக்கப்பட்ட

தியாகம்!

 

பெற்றெடுத்தப் பிள்ளையை

விட்டுக் கொடுத்த மாண்பு;

துணிந்த போதும்

தணிக்கைச் செய்த

அல்லாஹ்வின் அன்பு!

 

வெற்றிப்பெற்றச் சோதனைக்கு

இன்னும் ஒரு பெருநாள்;

தியாகத்தை நினைத்துப் பார்க்க

அறுத்து பலியிடும் திருநாள்!

 

முகம் ஒளிர அகம் மலர

வாழ்த்துக்கள் பரிமாற்றம்;

புத்தாடைகளும் இனிப்புகளும்

காட்டட்டும் புதுத் தோற்றம்!

 

கசப்புகளைக் கசக்கிவிட்டு;

வெறுப்புகளை உமிழ்ந்துவிட்டு

முத்தமிட்டு அணைப்போம்

சகோதரனை!

எட்டுத் திக்கும் தெரியட்டும்

நம் தோரணை!