வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைக்கின்றன. மேலும் அவன் வல்லவனும் நுட்பமான ஞானம் உடையவனும் ஆவான்

- அல்குர்ஆன் 57:1     

Home

Links 3

Link - 5

Link -7

Latest Topics

நீடூர்-நெய்வாசல் நிர்வாக தேர்தல் தேதி அறிவிப்பு & வேண்டுகோள் Print E-mail
Friday, 18 May 2012 16:02

நீடூர்-நெய்வாசல் நிர்வாக தேர்தல் தேதி அறிவிப்பு & வேண்டுகோள் 

   அல்ஹம்துலில்லாஹ்  

இன்று (18-05-2012) ஊர் நிர்வாக போர்டில் நீடூர்-நெய்வாசல் ஜமாத்தினரின் இறுதி வாக்காளர் பட்டியலை ஒட்டிவிட்டு, தேர்தல் தேதியையும் அறிவித்துள்ளது வக்பு போர்டு. தேர்தல் தேதியை அறிவிக்காமல் தள்ளிபோட்டுகொண்டே போன வக்பு போர்டின் இந்த அறிவிப்பால் ஜமாத்தார்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர். அதன் விபரம் கீழே:

18-05-2012 - இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

28-05-2012 - வேட்பு மனு தாக்கல் ஆரம்பம்

29-05-2012 - வேட்பு மனு பரிசீலனை, அன்றே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

04-06-2012 - வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாள்

04-06-2012 - வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்குதல்

16-06-2012 - காலை 9 மணி முதல் மாலை மணி வரை ரகசிய வாக்கெடுப்பு

16-06-2012 - அன்றே வாக்கு எண்ணி முடிவு அறிவித்தல்

Read more...
 
அல் ஹதீஸ் - தும்மினால்.... Print E-mail
Thursday, 17 May 2012 21:31

  தும்மினால்.... 

அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்:

நிச்சயமாக அல்லாஹ் தும்மலை விரும்புகிறான். கொட்டாவியை வெறுக்கிறான். உங்களில் ஒருவர் தும்மி, ''அல்ஹம்துலில்லாஹ்'' கூறினால், அதைக் கேட்ட அனைத்து முஸ்லிமின் மீதும் அவருக்காக ''யர்ஹமுகல்லாஹ்'' (அல்லாஹ் உனக்கு அருள் புரிவான்) என்று கூறுவது கடமையாக உள்ளது. கொட்டாவி விடுதல் என்பது, ஷைத்தானின் செயல்களில் உள்ளதாகும். உங்களில் ஒருவர் கொட்டாவி விட்டால், அதை முடிந்த அளவுக்கு தடுத்துக் கொள்ளட்டும். உங்களில் ஒருவர் கொட்டாவி விட்டால், அவரைக் கண்டு ஷைத்தான் சிரிக்கிறான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (நூல்: புகாரி)

அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்:

''உங்களில் ஒருவர் தும்மினால் அவர், ''அல்ஹம்துலில்லாஹ்'' எனக் கூறட்டும்! அவரின் சகோதரர் அல்லது அவரது நண்பர் அவருக்கு ''யர்ஹமுகல்லாஹ்'' என்று கூறட்டும்! யர்ஹமுகல்லாஹ் என அவருக்கு ஒருவர் கூறினால், தும்மியவர், ''யஹ்தீகுமுல்லாஹ் வயுஸ்லிஹுபாலகும்'' (அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டுவானாக! உங்கள் நிலையை சீராக்குவானாக) என்று கூறட்டும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (நூல்: புகாரி)

Read more...
 
குர்ஆனை விளக்கும் ஹதீஸ்கள் Print E-mail
Thursday, 17 May 2012 21:46

  குர்ஆனை விளக்கும் ஹதீஸ்கள் 

''உங்கள் வீடுகளில் ஓதப்படும் அல்லாஹ்வுடைய வசனங்களையும் (குர்ஆன்) ஞானங்களையும் (ஹிக்ம்) நினைவில் வையுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நுண்ணறிவுடையோனும் (யாவையும்) நன்கறிந்தோனுமாக இருக்கின்றான்.''  (அல்குர்ஆன் 33:34)

மேற்கண்ட இறை வசனத்தில் ‘கிதாப்’ என்ற குர்ஆனைக் குறிக்க இறைவன் கூறிய சொல்லோடு இணைத்து ‘ஹிக்ம்’ என்ற சொல் ஸுன்னாவையே குறிக்கும் என்று எல்லா அறிஞர்களின் முடிவாகும். அல்லாஹ்வின் வழிகாட்டுதல் பொதிந்துள்ள குர்ஆனை அல்லாஹ் ஒரே நேரத்தில் அருளவில்லை. அதை ஓதிக் காண்பித்து அதன் வசனங்களை மக்களுக்கு விளக்கிக் காட்ட ஒரு தூதர் மூலமாகவே அருளப்பட்டது. குர்ஆனின் கருத்துக்கள் அந்த இறைத்தூதரின் வாழ்விலும், செயலிலும் நடைமுறைப் படுத்தப்பட்டன.

Read more...
 
"கெடு" முடிந்துவிட்டால்.... Print E-mail
Thursday, 17 May 2012 05:34

கெடு முடிந்துவிட்டால்...

  தாழை ஷேக்தாஸன் 

[ மனிதன் குழந்தையாய்ப் பிறப்பதற்கு முன்பே அவனது ஆட்டம் பாட்டங்களுக்கு காலக்கெடுவை அல்லாஹ் நிர்ணயம் செய்து விட்டான். மனிதர்களே! நீங்கள் மய்யித்துக்களைத் தான் அடக்கம் செய்ய முடியும். மரணத்தை அடக்கம் செய்ய முடியாது. சடலங்களைத்தான் புதைக்க முடியுமே தவிர சாவை புதைக்க முடியாது.

விஞ்ஞானியால் சுனாமியை ஏன் நிறுத்த முடியவில்லை? இறைவன் வைத்திருந்த கெடு கடலடிக்குள் முடிந்து விட்டது. மண் அடுக்குகள் தளர்ந்து விட்டது. எல்லாம் இறைவன் செயல், அவன் போட்ட கெடு முடிந்ததால் நடந்தது. நாம் வாழும் இந்த பூமிப்பந்தும்கூட ''கெடு'' முடியும் அந்த ஒரு நாளில் வெடித்துச் சிதறத்தானே போகிறது.

மனிதர்களே! சிந்தித்துப் பாருங்கள். உலக வாழ்க்கை மெல்லினமானது. மறுமையே வல்லினமானவை என ஏன் இன்னும் நீங்கள் உணராமல் படைத்தவனை மறந்து பள்ளிகளை பேச்சு மேடைகளாக்கி வாழும் உங்களுக்கு அறிவு எங்கே போனது?

இருந்தவருக்கு கெடு முடிந்து விட்டது, இறந்து விட்டார். இனி, புதைக் குழிக்குள் போயே தீர வேண்டும். ஆறடி நிலம் மட்டுமே சொந்தமாகிவிடுகிறது. அந்த ஆறடி நிலம் கூட நிரந்தரமல்லவே! சில ஆண்டுகளுக்குப்பிறகு புதைத்த இடத்தில் மறுபடியும் பள்ளம் தோண்டப்பட்டு வேறொருவரை அடக்கம் செய்து விடுகிறோம்.]

Read more...
 
ஆலோசனையின் அவசியம் Print E-mail
Thursday, 06 January 2011 10:49

மவ்லவி, மு.ஷேக் முஹ்யித்தீன், உடன்குடி

இவ்வுலகில் எண்ணிலடங்கா உயிரினங்களைப் படைத்து அதில மனித இனத்தை மேன்மையாக்கிய இறைவன் மனிதன் வழி தவறாதிருக்க சில வழிமுறைகளையும் தானே கற்றுத்தருவதோடு, தமது தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் அதன்படி நடக்கச்செய்து அவ்வழிமுறைகள் நடைமுறைக்கு ஏற்றதுதான் என்பதை உறுதி செய்கிறான்.

இவ்வரிசையில் இடம்பிடிப்பதுதான் ஒருவருக்கொருவர் ‘ஆலோசனை’ செய்து கொள்ளல் வேண்டும் என்ற நடைமுறை. இதன்மூலம் பற்பல இடையூறுகள் தவிர்க்கப்படுகின்றன. கருத்துவேற்றுமை ஏற்படாமலிருக்கின்றன. எக்காரியத்தையும் இலகுவாக சாதிக்க ஏதுவாகின்றது. இதுபோன்ற மேலும் பல நற்பயன்களும் இதில் புதையுண்டு கிடக்கின்றன.

அல்லாஹ்வின் ஆலோசனை

எக்காரியமாக இருந்தாலும்சரி, ஆலோசனையின் பின்பே நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நியதி நேற்றின்று உருவானதல்ல. மனித அறிவினால் உருவாக்கப்பட்டதும் அல்ல. இத்தரணியையும், தரணிவாழ் மக்களையும் படைத்து நிர்வாகம் செய்கின்ற அல்லாஹ்வே எதுவாக இருந்தாலும் ஆலோசனையுடன் செயல்படுத்து என்று கற்றுத்தருவதற்காக தானும் அதை நடைமுறைப்படுத்திக் காட்டுகிறான்.

Read more...
 
கலப்படமற்ற அன்பு Print E-mail
Thursday, 30 December 2010 09:46

மவ்லவி, S. லியாகத் அலீ மன்பஈ

[ எல்லா அன்பிலும் சுயநலம் உண்டு. உலகில் எத்தனை வகையான நேசம் இருப்பினும் அவற்றிற்கெல்லாம் மிக உயர்ந்தது அல்லாஹ்வுக்காக நேசிப்பதுதான். ஏனெனில், இந்த நட்பில் மட்டும்தான் சுயநலம் என்ற கலப்படம் இருக்காது.

எவ்வித உலகியல் நோக்கமுமின்றி நம்மைப் படைத்திட்ட அல்லாஹ்வுக்காக மட்டுமே யாரையும் நேசிப்பது – பெற்றோரையும் மனைவி மக்களையும் உற்றாரையும், உறவினரையும் மட்டுமின்றி மனித இனம் முழுவதையும், பிற உயிரினங்கள் அனைத்தையும்கூட இந்த வரையறைக்குள் நாம் கொண்டு வந்துவிட்டால், அது கலப்படமற்ற அன்பாக மிளிரும்.]

உலகில் மனித இனம் மட்டுமல்ல. எல்லா உயிரினங்களும் ஒன்றையொன்று நேசிப்பதும், பாசத்தைப் பகிந்து கொள்வதும், காதலில் தோய்ந்து கனிந்துருகுவதும் முற்றிலும் இயல்பான விஷயங்களே.

பெற்றோர் தம் பிள்ளைகளிடம் காட்டும் பாசமும், பரிவும் சகோதர சகோதரிகளிடையே காணப்படும் இரத்த பாசமும், கணவன் மனைவியிடையே தோன்றும் பந்த பாசமும் வியப்புக்குரியவை அல்ல.

Read more...
 
அதிகம் கேட்க வேண்டியது எதை? Print E-mail
Sunday, 26 December 2010 09:01

மவ்லவி எஸ். லியாகத் அலீ மன்பஈ

‘மேலும் அவர்கள் கூறுவார்கள்: ‘எங்கள் இரட்சகா! ஜஹன்னம் எனும் நரகத்தின் வேதனையை எங்களை விட்டும் திருப்பி விடுவாயாக! நிச்சயமாக அதன் வேதனை தாங்கிக்கொள்ள முடியாததாக உள்ளது. நிச்சயமாக அது (ஜஹன்னம்) நிலையாகத் தங்கியிருப்பதற்கும், சற்று நேரம் தங்குவதற்கும் மிகக் கெட்டதாகவும் இருக்கிறது.’ (அல்குர்ஆன் 25: 65,66)

வெற்றி பெற்ற நல்லடியார்களின் பண்புகளில் ஒன்றாக அல்லாஹ் குறிப்பிடும் இந்த பிரார்த்தனை செய்யும் பண்பு, நல்லோர்களின் இயல்பாகவே இருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

பிரார்த்தனை தான் வணக்கத்தின் மூளை – சத்து என்று கூறிய நபிகள் திலகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்நாள் முழுவதும் கேட்டுப்பெற வேண்டிய இம்மை, மறுமை சம்மந்தப்பட்ட அனைத்துக் கோரிக்கைகளையும் அல்லாஹ்விடமே கேட்குமாறு நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். இறை வேதமாம் திருக்குர்ஆனும் மனிதர்கள் தங்களது அனைத்துத் தேவைகளையும் அல்லாஹ்விடமே கேட்குமாறு அறிவுறுத்துகிறது.

அற்புதத் திருக்குர்ஆன் சுமார் 60 க்கும் மேற்பட்ட துஆக்களைப் பதிவு செய்து வைத்துள்ளது. மேலே இடம்பெற்றுள்ள துஆதான் எல்லா நல்லடியார்களின் முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும் என்பதை பின்வரும் நிகழ்ச்சியின் மூலம் நாம் உணர முடியும்.

Read more...
 
உறவுக்குப் பின்...! Print E-mail
Thursday, 17 May 2012 14:43

உறவுக்குப் பின்...! 

தம்பதியர் இருவரும் தங்களுக்கு தேவையானவற்றை விவாதித்தால் தாம்பத்ய உறவில் எந்த வித சிக்கல்களும் எழ வாய்ப்பில்லை என்கின்றனர் நிபுணர்கள். தாம்பத்ய உறவு விஷயத்தைப் பற்றி எப்போது, எப்படி விவாதிப்பது உங்களுக்குப் பிடிக்கும் என்பதை இருவரும் மனம் விட்டுப் பேசிக்கொள்ளலாம். உடலுறவு முடிந்ததும் பேசுவது சிலருக்கு இதமாக இருக்கும். சிலருக்கு மறுநாள் ஓய்வு நேரத்தில் பேசுவது பிடிக்கும்.

திருப்தி அடைந்ததை மனைவி கணவனிடம் காட்டுவது அல்லது அதிருப்தியை காட்டுவது தவறு என்று எண்ணுகிறார்கள் பெண்கள். இந்த எண்ணம் கணவனுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் என்பது பல பெண்களுக்கு தெரிவதில்லை.

திருப்தியை வெளிப்படுத்தும்போது கணவனுக்கு மனைவி மீது கூடுதல் அன்பும், பாசமும், நேசமும் உண்டாகிறது. அதிருப்தியைச் சொல்லும் போது, கணவனிடம் செல்லமாக அனுசரணையுடன் கூறவேண்டும். இது போன்றே கணவனும் மனைவியிடம் தனது திருப்தி, அதிருப்தியைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

தாம்பத்ய உறவைப் பொறுத்தவரையில், புரிதல் என்பது சமமாக இருக்கும் என்று சொல்வதற்கில்லை. இரண்டு பேருக்கும் புரிதல் இருக்கலாம். இதனை ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசிக்கொள்வதன் மூலம் தீர்க்கலாம்.

Read more...
 
சோர்வை விரட்டுவோம்! Print E-mail
Tuesday, 19 January 2010 09:51

 

[''சோர்வு ஏற்படும்போது புத்தகங்களே புத்துணர்ச்சி தருகின்றன'' - அப்துல் கலாம்

மனச் சோர்வு என்பது மன அழுத்தம் என்றும் வழங்கப்படுகின்றது. உறக்கமும் அசதியும் சோர்வும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தது. மனச் சோர்வு பல வகைப்படும். இது ஏன் ஏற்படுகின்றது? அறிவியலாளர்க்கே விடை தெரியாத கேள்வி இது!

எதை கெடுத்தாலும் சோர்வுதான்! அடிப்படையாக, உள்ளே இருக்கும் உயிர்சக்தியை கெடுத்தால் நேரடியாக சோர்வுதான். அப்படி இல்லாவிட்டாலும், உற்சாகத்தை கெடுத்தாலும் சோர்வுதான்.

கேட்க சாதரணமாக தோன்றினாலும், இது வாழ்க்கை அடிப்படையையே மாற்றும் ஒரு விஷயம். கோர்வையாக ஒரு கணம் தாண்டி இன்னொரு கணம் வருவது தானே வாழ்க்கை. உற்சாகம் இல்லாவிட்டால் எப்படி?]

ஒரு துறையில் வேகமாய் முன்னேறிக் கொண்டே செல்கிறபோது தெரியாமல் ஏற்படும் பின்னடைவுகள் ஒரு மனிதனை சோர்வடையச் செய்கிறது. ஏன்? எதனால்?. ஒரேயொரு காரணம்தான் உண்டு. மற்றவர்கள் பார்க்கும் அதிர்ச்சிமிக்க பார்வை, ஒரு சிலரின் ஏளனப் பார்வை.
Read more...
 
சூடான கோடைக்கு குளிர்ச்சியான தர்பூசணி Print E-mail
Friday, 02 April 2010 18:02

[ 100 டிகிரி வெப்பத்தைத்தாண்டி கோடைக்காலம் மக்களை வாட்டி எடுக்கும் இந்நேரத்தில் குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய ஒரு குளு குளு பழம் சந்தேகமில்லாமல் தர்பூசணிதான் என்று சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

இதில் ஆச்சர்யமான விஷயம் ஒன்று உண்டு என்றால் அது; நம் ஊரில் சர்வசாதாரணமாக கிடைக்கும் தர்பூசணி பழத்துக்கு ஆண்மையை அதிகரிக்கும் சக்தி உண்டு என்பதை அமெரிக்காவில் உள்ள இந்திய டாக்டர் தலைமையிலான மருத்துவக் குழு மேற்கொண்ட ஆராய்ச்சி முடிவில் தெரிவித்துள்ளதுதான்.

ஆண்மையை தூண்டும் சக்தியை பொருத்தவரை, மேலை நாட்டு வயாகரா மாத்திரைக்கு நிகராக இன்னும் ஏன் அதனையே விஞ்சக்கூடிய தன்மை தர்பூசணி பழத்துக்கு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.]
Read more...
 
கிருமிகள் - கண்ணுக்கு தெரியாத வில்லன்கள் Print E-mail
Thursday, 17 May 2012 19:04

கிருமிகள் - கண்ணுக்கு தெரியாத வில்லன்கள்

நம்மைசுற்றி எல்லா இடங்களிலும் கோடிக்கணக்கான கண்ணுக்குத்தெரியாத நோய்கிருமிகள் நிறைந்திருக்கிறது. நம் நோயெதிர்ப்பு சக்தி வலுவிழக்கும் நேரம் பார்த்து இவை நம்மை தாக்கி நோயாளியாக்கக் காத்திருக்கின்றன. பொதுவாக எங்கெங்கே இந்த கிருமிகள் கூடாரம் போட்டு தங்கக் கூடும் என்று பார்ப்போம். அவற்றை இல்லாது ஒழிப்பதன் மூலம் உடல் நலத்தைக் காப்போம்.

o சமையல் அறையும் சுற்றுப்புறமும் சுத்தமாக வைத்துக்கொள்ளவும்.

o சமையலறையில் பாத்திரம் துலக்க உதவும் ஸ்பாஞ்ச் அதிக அளவு கிருமிகள் இருக்கும் இடம். அதன் ஒரு சதுர இஞ்ச் பரப்பில் 134,000 பாக்டீரியாக்கள் இருக்கலாம் என சோதனை முடிவுகள் காட்டுகின்றன. அதன் ஈரப்பதம் கிருமிகள் பல்கி பெருகுவதற்கு ஏற்ற சூழ்லைக் கொடுக்கிறது. வயிற்றோட்டட்டம் மற்றும் வயிற்று வலி உருவாக்கும் Salmonella , Campylobacter போன்ற கிருமிகள் அதில் இருக்கலாம்.

o சமையலறை ஸ்பாஞ்சுகளை வாரம் ஒரு முறை மாற்றவும். அல்லது ப்ளீச் கலந்த நீரில் 15 நிமிடம் ஊற வைத்து கழுவி உபயோகப்படுத்தவும்.

o சமையலறை பாத்திரங்கள் கழுவும் தொட்டி கிருமிகள் நிறைந்திருக்கும் மற்றொரு இடம். சமையலறை கழிவு நீர் குழாய்களில் ஒரு சதுர இஞ்ச் இடத்தில் சுமார் 500,000 பாக்டீரியாக்கள் சாதாரணமாக காணப்படுமாம்.

Read more...
 
எப்படி எல்லாம் தொழுவதை விட, இப்படித்தான் தொழுவது என்பதே மேல்! Print E-mail
Thursday, 17 May 2012 10:48

எப்படி எல்லாம் தொழுவதை விட, இப்படித்தான் தொழுவது என்பதே மேல்!

  டாக்டர் ஏ.பீ. முஹம்மது அலி, ஐ.பீ.எஸ் (ஓ) 

வாழ்வியல் நெறியினை பின்பற்றி வாழ்வது எவ்வாறு என்று அணைத்து மதங்களும், இஸ்லாமிய மார்க்கமும் சில கட்டளைகளையும், விதி முறைகளையும் விதித்துள்ளன. ஆனால் எப்படி எல்லாமும் வாழெல்லாம் என்று சிலர் நினைப்பதால் சமுதாயத்தில் ஒழுக்கக் கேடுகள் நடக்கின்றன.

அதே போன்று தான் அகிலத்தினைப் படைத்து, அனைத்துக் கண்டங்களையும் அதன், அதன் இடங்களிலேயே நிறுத்தி, கடலைப் படைத்து மனிதன் பயணம் செல்லும் கப்பலையும், எண்ணெய், வாயு, ஆபரண முத்து போன்றவையினயும், உணவு வகைகளையும் படைத்து, மனிதன் பூமியில் வசதியாக வாழ பொன்னும், பொருளும் வாரி வழங்கிய, ஏக இறைவனுக்கு நன்றி செலுத்த வசதியாக தொழுகையினை அல்லாஹ் கட்டாயப் படுத்தியுள்ளான்.

வீட்டில் இருந்து தொழுவதினை விட பள்ளிக்கு நடந்து வந்து ஜமாத்துடன் தொழுபவர்களுக்கு அல்லாஹ் பல நன்மையினை வழங்குவதாக இமாம் புகாரி சொல்லி உள்ளார்கள்.

தொழும்போது நெற்றி, இருக்கைகள், இரண்டு கால்கள், இரண்டு கால் மூட்டுகள் ஆகிய ஏழு உறுப்புகள் சஜ்தா செய்யும் அளவிற்கு தொழ வேண்டும் என்று இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்.

Read more...
 
காது குத்துவது ஹராமா? Print E-mail
Wednesday, 16 May 2012 17:26

  காது குத்துவது ஹராமா? 

சமீபகாலமாக ஃபத்வா ஒன்று காது குத்துவது ஹராம் என்று சிலர் கூறுகின்றனர். காது குத்துவது சமுதாயத்தில் உள்ள பெண்களின் பழக்கமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்திற்கு முன்பே இருந்தது.

இந்த பழக்கம் முஸ்லிம் பெண்களால் இன்றளவும் தொடரப்பட்டுள்ளது. மேலும் காது குத்தக்கூடாது என்பவர்கள் கீழ் வரும் வசனத்தையும் ஹதீதையும் ஆதாரமாக கூறுகின்றனர்.

"இன்னும் நிச்சயமாக நான் அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களிடம் வீணான எண்ணங்களையும் உண்டாக்குவேன்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளின் காதுகளை அறுத்து விடும்படியும் அவர்களை ஏவுவேன். இன்னும் அல்லாஹ்வின் படைப்புகளையுடைய கோலங்களை மாற்றும்படியும் ஏவுவேன்" என்றும் ஷைத்தான் கூறினான்; எனவே எவன் அல்லாஹ்வை விட்டு ஷைத்தானை உற்ற நண்பனாக ஆக்கிக் கொள்கிறானோ, அவன் நிச்சயமாக பகிரங்கமான பெரு நஷ்டத்தை அடைந்தவன் ஆவான். (அல்குர்ஆன் 4: 119)

Read more...
 
ஹராத்தைச் செய்வதற்கு தந்திரமான வழிகளைக் கையாள்வதும் ஹராமாகும் Print E-mail
Wednesday, 17 August 2011 12:02

o ஹராத்தைச் செய்வதற்கு தந்திரமான வழிகளைக் கையாள்வதும் ஹராமாகும்

o ஹராத்திற்கு வழிவகுக்கும் (இட்டுச் செல்லும்) அனைத்தும் ஹராமாகும்

o ஹலாலாக்குவதும் ஹராமாக்குவதும் அல்லாஹ்வுக்கு மட்டுமுரிய ஏக அதிகாரமாகும்

o ஹலாலை ஹராமாக்குவதும் ஹராத்தை ஹலாலாக்குவதும் அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் ஷிர்க்காகும்.

Read more...
 
தற்பெருமையும், ஆணவமும் கொண்ட ஒவ்வொருவரும் நரகவாதியே! Print E-mail
Friday, 19 August 2011 09:46

அதிரை ஃபாரூக்

[ பூர்வீக பணக்காரர்களை விட புது பணக்காரர்களின் அல்டாப் அறவேத் தாங்க இயலாது. புதிதாக பணத்தைக் கண்டவர்கள் தங்களிடம் வசதி வந்துவிட்டதைப் பிறருக்குக் காட்டுவதற்காக அவர்கள் அமைத்துக் கொள்ளும் நடை, உடை பாவனை பூமியேப் பிளந்து விடுமோ எனும் அளவுக்கு இருக்கும்.

நரகவாதிகளை உங்களுக்கு அறிவிக்கட்டுமா? தற்பெருமையும், ஆணவமும் கொண்ட ஒவ்வொருவரும் தான். என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஹாரிஸா இப்னு வஹப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இறையச்சம் எவரிடத்தில் இல்லையோ அவரே முறையற்ற வழிகளில் பொருளாதாரத்தை ஈட்டி அவற்றை முறையற்ற வழிகளிலும் செலவிடுகின்றார். அதனால் மேற்காணும் தீயபண்புகள் குடிகொண்டு விடுகின்றது.

இறையச்சம் எவரிடத்தில் இருக்குமோ அவர் முறையான வழிகளில் பொருளீட்டுவதுடன், பாட்டன், முப்பாட்டன் விட்டுச் சென்ற செல்வத்தையும் முறையாக பராமரிப்பார் செல்வத்திற்கு மேல் செல்வம் குவிந்தாலும் மேற்காணும் பகட்டும், பந்தாவும் வரவே வராது.

''பூமியில் ஆணவத்தையும், குழப்பத்தையும் விரும்பாதவர்களுக்காக அந்த மறுமை வாழ்வை ஏற்படுத்தியுள்ளோம். நல்ல முடிவு (இறைவனை) அஞ்சுவோர்க்கே.'' - திருக்குர்ஆன் 28: 83 ]

Read more...
 
பெண்களுக்கு முதுமை வேகமாக எட்டிபார்ப்பதற்கான காரணம்?! Print E-mail
Wednesday, 17 August 2011 12:42

இன்றைய கணினி யுகத்தில் ஐ.டி. பணியாளர்கள் மட்டுமல்ல, ஏறக்குறைய அனைத்து துறைகளிலுமே கணினி பயன்பாடு என்பது இன்றியமையாததாகிவிட்டது.

இதில் ஐ.டி. எனப்படும் தகவல் தொழில்நுட்ப துறை போன்ற குறிப்பிட்ட சில துறைகளில் பணியாற்றுபவர்கள்,அதிக நேரம் கணினி முன்னர் அமர்ந்து வேலை பார்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

இவ்வாறு அதிக நேரம் கணினி முன்னர் அமர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு, முதுமை வேகமாக எட்டிபார்ப்பதற்கான காரணம் கணினி முன் நீண்ட நேரம் அமர்ந்து வேலை பார்ப்பதே என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக பிரிட்டனை சேர்ந்த அழகியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மைக்கேல் ப்ரகர், ஏராளமான பெண்களிடம் மேற்கொண்ட ஆராய்ச்சியில் இது உண்மை என்று நிரூபிக்கப்பட்டுள்ளதாம்.

கணினி முன்னர் ஒருவர் நீண்ட நேரம அமர்ந்திருந்தால் அவரது கீழ் தாடை தொங்கி போய்விடும் என்றும், இதற்கு காரணம் ஒரே நிலையில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதுதான் என்றும் அவர் தெரிவிக்கிறார். இவ்வாறு வேலை செய்யும் பெண்கள் பெரும்பாலான நேரம் சிடு சிடுவென இருப்பதற்கு, நீண்ட நேரம் கணினி முன்னர் அமர்ந்து மிக அதிகமாக கவனம் செலுத்தி வேலை செய்வதுதான் காரணம் என்பதை அவர்கள் உணரவில்லை.

Read more...
 
ரப்பர் செருப்பு கண்டுபிடிப்பும் ஈமானிய பலவீனமும்! Print E-mail
Monday, 15 August 2011 12:38

டாக்டர் ஏ.பீ. முஹம்மது அலி, பிஎச்.டி, ஐ.பீ.எஸ் (ஓ)

2011 ஜூன் மாதத்தின் இரண்டாம் வாரத்தில் பரபரப்பாக பத்திரிக்கைகளில் ஒரு இஸ்லாமிய சிறுவன் சென்னை சிந்தாதரிப்பேட்டைப் பகுதியில் காணாமல் போனது பற்றிய செய்தி வெளியானது. அதாவது தெருவோர சிக்கன் பக்கோடா விற்கும் ஹாரிப் பாஷாவின் பதினோரு வயது மகன், தனது பாட்டியின் பராமரிப்பில் வீட்டிலிருந்தவன், பாட்டி தனது மகன் கடைக்குச் சென்று வந்த ஐந்து நிமிடத்தில் காணாமல் போய் விட்டான். அந்தச் சிறுவனைக் காணாது பெற்றோரும், உற்றாரும் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என அறிந்து காவல் நிலையத்தில் புகாரும் செய்யப்பட்டது. காவல் துறையினரும் வழக்கம் போல பல குழுக்கள் அமைத்து சிறுவனைத் தேடி வருவதாக செய்திகள் வந்தன.

இந்த இடைப்பட்ட காலத்தில் அந்தச் சிறுவனின் பெற்றேரும், உற்றாரும் ‘அறிவு சால்’ புதிய இன்டர் போல் போலீஸையும் தோர்க்கடிக்குமளவிற்கு ஒரு புதிய புலன் விசாரணையினை மோற்கொண்டதாக ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டது. அது என்ன என்று கேட்பதிற்கு ஈமானுள்ள அனைவருக்கும் ஆவல் இருப்பது நியாயமே! அது தான், ‘ரப்பர் செருப்பு’ கண்டு பிடிப்பு. அதாவது ஒரு ரப்பர் செருப்பினை எடுத்து நடுவில் ஆனியால் ஓட்டைப் போடுவார்கள்.

பின்பு பெற்றோர் சந்தேகத்திடமான நபர்களின் பெயர்களை எழுதி துண்டு சீட்டுகளில் வைத்து அந்த செருப்பில் வைத்து சுற்றுவார்கள். எந்த நபரின் சீட்டு கீழே விழாமல் கடைசி வரை இருக்கிறதோ அவர் தான் சந்தேகத்திற்குள்ளான நபராக கருதி விசாரணை நடக்குமாம். அதே போல ரப்பர் செருப்பினை சுற்றி விட்டதில் கடைசியாக இருந்த சீட்டிற்கு சொந்தமானவர் அழுக்கு உடையுடன் அந்தப் பகுதியில் சுற்றிக் கொண்டு பிளேட்பாரத்தில் படுத்துக் கொள்ளும் வயதான பிச்சைக்காரர் பெயர் இருந்ததாம். எவ்வளவு விஞ்ஞானப் பூர்வமான கண்டு பிடிப்பு? இதன் மூலம் ‘பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம் போய் விடாதா’ சகோதர, சகோதரிகளே?

Read more...
 
திருமண வாழ்க்கையில் உற்சாகமே இல்லையா? Print E-mail
Thursday, 04 August 2011 12:17
திருமண வாழ்க்கையில் உற்சாகமே இல்லையா? என்னத்த சம்பாதிச்சு, என்னத்த வாழ்ந்து... என்று அடிக்கடி புலம்புகிறீர்களா? கவலையே வேண்டாம். இந்த சின்ன வைத்தியத்தை செய்து பாருங்கள். எல்லா பிரச்சினைகளும் போயே போச்சு!

அது தான் கட்டிப்பிடி வைத்தியம்.சும்மா இறுக்க அணைத்து ஒரு உம்மா கொடுங்கோ...

கணவன்-மனைவிக்குள் இந்த கட்டிப்பிடி வைத்தியம் இருந்தால் நோ டென்ஷென், நோ ப்ராப்ளம் என்கிறது ஒரு ஆய்வு.

அதாவது ஒரு நாளைக்கு குறைந்தது நான்கு தடவையாவது கணவன்-மனைவியர் கட்டிப்பிடிக்க வேண்டும். அவ்வாறு கட்டிப்பிடி வைத்தியம் செய்யும்போது `இச்` மழை பொழிய வேண்டும். அப்போது தான் அந்த வைத்தியத்திற்கு `பவர்` இருக்குமாம்.

இப்படி கட்டிப்பிடி வைத்தியத்தின் பயன்களை அள்ளித்தருகிறது அந்த ஆய்வு.

Read more...
 
திருக்குர்ஆன் பாமரர்களுக்கு விளங்காதா? Print E-mail
Thursday, 04 August 2011 11:48

முஹம்மத் அர்ஷாத் அல் அதரி

[ அறியாமை எனும் இருளை அகற்றி அறிவொளி பெருக்கிட, அகிலத்தின் இரட்சகன் அருளாளன் அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்ட அதி அற்புதமே அருள்மறைக் குர்ஆன் ஆகும்.

அல்குர்ஆன் அனைத்து துறைகளைப் பற்றியும் அனைவரும் விளங்கிக் கொள்ளக்கூடிய வகையில் எளிமையாகவும், அதே வேளை உயர்ந்த இலக்கிய நயத்துடனும் பேசுவதன் மூலம் தன்னிகரில்லா வாழ்வியல் வழிகாட்டியாக திகழ்ந்து கொண்டிருக்கின்றது. ஆனால், இஸ்லாமிய சமுதாய மக்களோ அல்குர்ஆனை படித்து விளங்கி, அதன்படி செயற்படுவதை விடுத்து தகடு, தட்டு, தாயத்துக்களில் எழுதிக் கொள்வதற்கும், இறந்தவர்களுக்காக ஓதுவதற்காவும் அல்குர்ஆனை பயன்படுத்தி அல்லாஹ்வின் சாபத்தை பெற்று வருகின்னர்.

அருள்மறைக் குர்ஆன் பாமரர்களுக்கு விளங்காது, திருக்குர்ஆன் முஸ்லிம்களுக்கு மாத்திரம் உரிய வேதம் என்கின்ற போலிவாதங்களை விடுத்து, நாம் ஒவ்வொரும் திருமறையை படித்து விளங்கி, அதன்படி செயற்படுவதுடன், திருமறையின் உயரிய போதனைகளை முஸ்லிம் அல்லாதவர்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டிய பாரிய பொறுப்பு நம்மீது உள்ளது என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும்.]

‘இக்குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கியுள்ளோம். படிப்பினை பெறுவோர் உண்டா?’ (அல்குர் ஆன் 54:17)

Read more...
 
ஓடிப்போகும் பெண்களை அடித்து திருத்த நினைப்பது சரியா? Print E-mail
Tuesday, 02 August 2011 12:11

Q. ஓடிப்போகும் பெண்களை அடித்து திருத்த நினைப்பது சரியா? (குறிப்பாக மாற்று மதத்தவருடன்) ஓடிப்போகும் பெண்கள் அல்லது தவறான நடத்தை உடைய இஸ்லாமிய பெயர் தாங்கி பெண்கள் பிடிபடும்போது அவர்களை அடித்து திருத்த நினைப்பது சரியா? இதற்கு என்னதான் தீர்வு?

பதில் :   முதலில் உங்கள் கெள்வி பற்றிய சில முக்கிய தகவல்களை இங்கு தருகிறோம். அதாவது, இன்றைய கால கட்டத்தில் ஓடிப்போகும் பெண்கள் பலரை நாம் காண முடிகிறது.

இப்படி அவர்கள் ஓடிப்போவதற்கு அவர்கள் மாத்திரம் காரணம் அல்ல.

ஒரு ஆணும், பெண்ணும் ஓடிப்போய் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்றால் அதற்குப் பின்னணியாக அவர்களுடைய வளர்ப்புடன் தொடர்புடையவர்கள் தான் பொருப்பாக இருக்கிறார்கள்.

Read more...
 
அறிவுச்சுடர் இமாம் ஷாஃபிஈ ரஹ்மதுல்லாஹி அலைஹி Print E-mail
Wednesday, 16 May 2012 10:01

இமாமாவர்கள் தனது பாடத் திட்டத்தை வகைப்படுத்தி, முதலில் குர்ஆன் மற்றும் அதன் விரிவுரை என்றும், அதற்குப் பின் ஹதீஸ் கலை, அதனையடுத்து, இஸ்லாமிய (ஃபிக்ஹு) சட்டக் கலை, அதனை அடுத்து உச்சரிப்பு மற்றும் அரபி மொழி ஆகியவற்றைக் கற்றுக் கொடுத்தார்கள். எகிப்தில் இருக்கும் காலத்தில் தனது எழுத்துப் பணியை விடாது செய்து வந்தார்கள், இஸ்லாமியச் சட்டக் கலை மற்றும் அதன் சட்ட திட்டங்கள் பற்றியும், இன்னும் அவரது மிகப் பிரபலமான நூலான அல் உம்மு நூலையும் இங்கு வைத்துத் தான் எழுதினார்கள்.

இமாமவர்களின் வாழ்வினை நாம் கூர்ந்து கவனித்தோமென்றால், கல்விக்காக அவர்கள் பல நாடுகள் சென்று, அங்குள்ள மார்க்க அறிஞர்களிடம் கல்வி கற்றதோடு, அதன் மூலம் மார்க்கத்தில் நல்ல புலமையையும் பெற்றுக் கொண்டதைக் காண முடிகின்றது. எனவே தான் மதீனாவில் அவர் பெற்றுக் கொண்ட கல்வியையும், இன்னும் ஈராக் கில் வாழ்ந்த அறிஞர்களின் விவேகத்தையும் இணைத்து, அதன் மூலம் பெற்றுக் கொண்ட அறிவை இஸ்லாமிய உலகுக்கு வழங்க முடிந்தது. அவரது கல்விப் பணியை அடுத்து, அவரது தன்மைகள், நேர்மை, நற்பண்புகள் போன்றவற்றை நாம் காண முடிகின்றது.

இமாம் அவர்களுக்கு அல் குர்ஆனைப் பற்றி எந்த அளவுக்கு ஆழமான விளக்கம் இருந்தது என்பதை நாம் பார்தால் ஒருமுறை சூரா வல்அஸர் அத்தியாயத்தைப் பற்றி சொல்லும்போது இமாம் அவர்கள் சொன்னார்கள், ''அல்லாஹ் திருமறையின் வேறு அத்தியாயங்களை இறக்காமல் இந்த அத்தியாயம் ஒன்றை மட்டும் இறைக்கி இருந்தாலும் இது மனித குலத்துக்குப் போதுமானதாகும்'' என்றார்கள்.

''காலத்தின் மீது சத்தியமாக. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்த, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை)''. (திருக்குர்ஆன்: 103 : 1,2,3)

Read more...
 
பர்தா என்ன சாதிக்கவில்லை? Print E-mail
Tuesday, 15 May 2012 18:04

பர்தா என்ன சாதிக்கவில்லை?

  சகோதரி, ஆமினா முஹம்மத் 

முஸ்லிம் பெண்ணாக இருந்ததால் என்ன விதத்தில் என் வாழ்க்கை குறைந்து விட்டது? எங்கள் வீட்டில் 3 பிள்ளைகள். இரண்டு சகோதரர்களும் நானும். மூவரில் யாருக்கும் பாரபட்சம் பார்த்ததில்லை எங்கள் பெற்றோர். எனினும் என் தந்தைக்கு, எல்லா தந்தைகளையும் போல மகளான என் மீது பாசம் ஜாஸ்திதான். அதனால் இஸ்லாத்தை விட்டுவிட்டாரா? இஸ்லாமில்லாமல் எங்களை ஒதுக்கி வைத்தாரா?!

பள்ளிப்படிப்பில் சிறந்த படிப்பாளி என்று வெள்ளி மெடல் வாங்குவதற்கு நான் கஷ்டப்பட்டேனோ இல்லையோ, என் தந்தை மிகவுமே கஷ்டப்பட்டார். பெண்பிள்ளைக்கு படிப்பு எதற்கு என்றோ, வீட்டு வேலை கற்றுக்கொள் என்றோ பெற்றோர் இருவருமே ஒதுக்க வில்லை.

ஒன்று முதல் 5-வரை தமிழ் மீடியத்திலேயே படித்தாலும் 6-வதை ஆங்கில மீடியத்தில் படிக்க வைக்க வேண்டுமென்று அவர் விரும்பியதால் 5-ஆம் வகுப்பின் முழுப்பரீட்சை லீவ் முழுவதும் என்னை ஆங்கிலம் கற்க ஒரு ஹிந்து வக்கீலின் வீட்டிலேயே விட்டுவிட்டார். அப்பொழுது கஷ்டமாக இருந்தது, இப்பொழுது அதன் பலனை அனுபவிக்கிறேன்.

அந்த வக்கீல் சாரும் அவரின் அண்ணன் பெண்ணையும் என்னையும் ஒன்றாகவே நினைத்தார். நான் முஸ்லிம் என்பதால் தனி சலுகையோ, தனி கண்டிப்போ கிடையாது. அவளுக்கு பழனிப்பிரம்பில் ஒன்று போட்டால் எனக்கும் அதே பிரம்பில் கிடைக்கும். கணக்கு சரியாக வரவில்லை என்றால் பாலில்லாத கடுங்காபி இருவருக்குமே உண்டு...!!!!

Read more...
 
ஆரியர்களின் பூர்வீக நாடு எது? Print E-mail
Wednesday, 16 May 2012 05:57

 ஆரியர்களின் பூர்வீக நாடு எது?

யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்றார் கனியன் பூங்குன்றனார். இது தமிழர்களின் பரந்த மனப்பான்மையைக் குறிக்கின்றது. தென்னிந்தியரின் நாகரிகத்திற்கு மாறானது ஆரிய நாகரிகம்.

ஆரியர் உருவாக்கியது வேதமதம். இந்த மதத்தின் வேதங்களை ஆரியர் தவிர மற்றவர்கள் படித்ததால் கொடுந்தண்டனை. வேதமதத்தில் ஆரியர்களே முதல் வர்ணத்தினர். ஆரியர்கள் உருவாக்கிய கடவுள்களுக்கு ஆரியர்களே அர்ச்சனை செய்ய வேண்டும். ஆரியர்களின் கடவுள்களுக்கு ஆரிய மொழியான சமஸ்கிருதத்தில்தான் அர்ச்சனை செய்ய வேண்டும்.

சமஸ்கிருதம் தவிர இதர மொழிகள் மிலேச்ச மொழிகள் என்று கூறப்பட்டது. ஆரியர்கள் அல்லாதார் மிலேச்சர்கள், தஸ்யூக்கள், தாசர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். இவ்வாறு பல சிறப்புகளை உடைய ஆரியர்களால் இந்தியர்களுக்கு கிடைத்த பயன்கள் என்ன? இந்த ஆரியர்கள் இந்திய நாட்டை முன்னேற்ற எந்த நாட்டிலிருந்து வந்தவர்கள்? இது குறித்த பல செய்திகளைக் கீழே காணலம்.

Read more...
 
கண்ணால் காண்பதும் பொய்.. காதால் கேட்பதும் பொய்.. தீர விசாரித்தறிவது..? Print E-mail
Tuesday, 15 May 2012 17:52

கண்ணால் காண்பதும் பொய்.. காதால் கேட்பதும் பொய்.. தீர விசாரித்தறிவது..?

ஆங்கிலத்தில் paradigm என்றொரு வார்த்தை உண்டு. அதற்கு தமிழில் அர்த்தம் சொல்வதென்றால் 'ஒரு மனிதரைப் பற்றியோ, ஒரு பொருளைப் பற்றியோ, ஒரு சம்பவத்தைப் பற்றியோ நாம் நம் மனதிற்குள் ஏற்படுத்தி வைத்திருக்கும் மனப்பிம்பம், அல்லது அதைப்பற்றிய நமது கண்ணோட்டம், கருத்து' எனலாம்.

அவ்வாறு நாம் ஏற்படுத்தி வைத்திருக்கும் கருத்து சரியானதாகத்தானிருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை. கண்ணால் காண்பதும் பொய்.. காதால் கேட்பதும் பொய்.. தீர விசாரித்தறிவதும்கூட 100% மெய் என்று சொல்வதற்கில்லை, அதற்குரிய தெளிவான அறிவை அல்லாஹ் நமக்கு வழங்கினாலேயொழிய!

Stephen Covey என்பவர் எழுதிய "The 7 Habits of Highly Effective People" என்ற நூலில் ஒரு சம்பவத்தை உதாரணமாகக் காட்டி இதை விளக்குகிறார். ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை வேளையில் அவர் நியூயார்க் நகர சுரங்க ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார். பயணிகளில் சிலர் செய்தித்தாள்களை புரட்டிக் கொண்டிருந்தனர். சிலர் ஏதோ சிந்தனைகளில் ஆழ்ந்திருந்தனர். வேறு சிலர் கண்களை மூடிக்கொண்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். சூழ்நிலை மிக அமைதியாக இருந்தது.

Read more...
 
More Articles...
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>

Page 1 of 67

Links

Links 2

Best Article

Best Articles 2

Best Articles 3

Best Articles 4

Audio